என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா

’என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா - அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. சாதாரணமாய், காதலர்கள் மாதிரியா பழகினோம்? கணவன் மனைவி போலல்லவா இருந்தோம். புருசா என்றும் பொண்டாட்டி என்றுமல்லவா அழைத்துக்கொண்டோம். மொபைலில் கூட பெயருக்கு பதில் அப்படித்தானே பதிந்து வைத்திருந்தோம். நீதாண்டா என் உயிர், நீ இல்லாம என் வாழ்க்கைய நெனச்சுக்கூட பாக்க முடியலடா, என்றெல்லாம் சொன்னாளே! இப்போது உயிராவது, மயிராவது என்றல்லவா போய்விட்டாள்’.

’எத்தனை முறை என்னுடன் படுத்திருப்பாள்? உன் நெஞ்சு என் மஞ்சம் என்றும், உன் மடி என் சொர்க்கம் என்றெல்லாம் கொஞ்சினோமே! கொஞ்சம் கூட வெக்கம், மானம் இல்லையா இந்தப் பெண்களுக்கு?’, அவள் மேல் உள்ள கோபம், மொத்தப் பெண்ணினத்தின் மீதே பாய்ந்தது.

’அப்பனுக்கு ஹார்ட் அட்டாக், அம்மா தற்கொலை பண்ணிக்கப் போறாங்க... இப்போ பல காரணங்கள் சொல்கிறாளே! எல்லாம் பொய்யாயிருக்கும். மொதல்லயே திட்டம் போட்டுத்தான் பண்ணியிருப்பா. என்னுடையது எல்லாவற்றையும் அனுபவித்தாளே, உடல் உள்ளம் உட்பட! வீட்டிற்குக் கூட பணம் அனுப்பாமல் எல்லாவற்றையும் இவளுக்காகவே செலவு செய்தோமே, சண்டாளி!’

‘இருக்கட்டும், நீ மட்டும்தான் இன்னொருவனுடன் படுப்பாயா? நானும் இன்னொருத்தியுடன் உல்லாசமாய் இருப்பேன். அதே நாள், அதே இரவு’, கோபம், ஏமாற்றம், குரோதம் என எல்லா சாத்தான்களும் அவன் மனதில் பிளாட் போட்டு தங்கிவிட்டன.

எல்லாம் ஏற்பாடு செய்தாயிற்று. ரூமுக்கு தனி, பிகருக்கு தனி, மாமாவுக்கு கன்சல்ட்டிங் பீஸ் தனி, வழிகாட்டியவனுக்கு குவாட்டர் செலவு வேறு. உள்ளே வந்தாள் அவள், அவனுக்கோ அதுவே குறி, ‘இன்றோடு இவளை மறந்துவிட வேண்டும்’... மனதுக்குள்... காமமும் புகுந்தது. ஆரம்பித்தான்... அவளது முகமே மனதில், அவளுடனான கலவையின் உணர்ச்சித் ததும்பல்களே உடலில்... அதற்கு மேல் முடியவில்லை.

‘நமக்கே கஷ்டமாய் இருக்கே, அவ எப்படி அடுத்தவன் கூட...’, இப்போது அவன் மனது வெற்றாய் இருந்தது, அழுகையைத் தவிர ஏதுமில்லை அவனிடம்.
--
உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது
--
லக்கிலுக்குக்கு நன்றி
--

Share/Bookmark

159 ஊக்கங்கள்: