இந்த வாரம் வெளிமாநிலத்திற்குச் செல்வதால் roaming ல் booster ஏதாவது உள்ளதா என ஏர்டெல் தளத்தை மேய்ந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் அவை கண்களுக்குத் தட்டுப்பட்டன 3G என்ற எழுத்துக்கள். எவ்வளவு நாட்களாக காத்திருந்தேன் இந்த வசதிக்காக. அதன் விலை விபரங்கள் பார்த்ததும் மேலும் மகிழ்ச்சி. என்னால் உபயோகிக்கக்கூடிய விலைதான். ஒரு புறம் மகிழ்ச்சி, ஒரு புறம் கோபம், விளம்பரம் ஏதும் செய்து தெரியப்படுத்தவில்லையே என்று. அப்படி என்ன இருக்கிறது இதில் என்ற எண்ணமா? அதைக் கடைசியில் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டேன், சிறிது சந்தேகத்துடனேயே. கிடைத்த தகவல்கள் இதுதான். ஏர்டெல் 3ஜி சேவையைத் துவக்கிவிட்டார்களாம். ஆனால், சில நகரங்களில் மட்டுமே. இப்போது, சென்னையில் வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகுமாம். பரவாயில்லை, இபோதாவது வருகிறதே என நிம்மதியானேன்.
இப்போது Flashback...
கல்லூரி முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் (2001). வகுப்பில் ஒவ்வொரு மாணவனும் ஏதாவதொரு latest technology பற்றி முன் நின்று பேசவேண்டும். அப்போது நான் தேடிப்பிடித்தது இந்த 3ஜி. அப்போது UMTS எனப்படும் தொழில்நுட்பம் வரை வந்திருந்தது. இபோதோ அதையெல்லாம் தாண்டி எங்கேயோ சென்றுவிட்டது. அப்போது தெரியவில்லை அதன் பயன்பாடு. இந்த flashback ஐ பின்பு எப்போதாவது விரிக்கலாம்.
ஒரு வழியாக 3ஜி வரப்போகிறது. வந்தவுடன் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடவேண்டியதுதான். சும்மாவா, 3.6Mpbs வரை வேகம் இருக்குமாம் (அப்டின்னு படிச்சேன், இவங்க குடுக்குறது எவ்வளவு வேகமா இருக்கும்னு தெரியல). வீட்டில் 256kbps வரை உபயோகித்து இருக்கிறேன். இதை விட 14 மடங்கு கூடுதல் வேகம், கிட்டத்தட்ட அதே விலை. நல்லவேளை, 3ஜி உள்ள மொபைல் வைத்திருக்கிறேன்.
அடுத்து என்னவெல்லாம் நடக்கும்? வீட்டில் wireline இணைப்பு இருந்தால், அதைத் துண்டித்துவிட்டு, மொபைலை கணினியுடன் இணைத்து இணையத்தைப் பெற்றுக்கொள்ளலாம். பின்பு, வெளியே செல்லும்போது காண்பவற்றை படம் பிடித்து அப்படியே சுடச்சுட போட்டோ பதிவு போடலாம். அல்லது ஒரு சம்பவத்தை வீடியோ எடுத்து உடனுக்குடன் youtube ல் ஏற்றலாம், அல்லது பதிவில் போடலாம். இப்போது நடப்பது என்ன? படம் அல்லது வீடியோ எடுத்துவிட்டு, அதன்பின் கணினியில் எடுத்து, upload பண்ணி, பின்பு பதிவிடும் முறையில், சோம்பேறித்தனம் மற்றும் மறதியால் சில விசயங்களைப் பதிவிட முடியாமலேயே போகிறது. இனி அதன் விகிதம் குறையும். முடிந்தால் பதிவுகளையும் வீடியோவகவே பேசி ஏற்றிக்கொள்ளலாம். ம்ம்ம்... பார்க்கலாம். என்ன ஒன்று, இதனால் எழுதுவதுதான் குறைந்துபோகும்.
-அதி பிரதாபன்.
Read More!