அதி பிரதாபன்

அனுமந்தன்பட்டியில் பிறந்து, திருச்செந்தூரில் வளர்ந்து, சிவகாசியில் படித்து, தற்போது சென்னையில் இணையம் சார்ந்த துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒரு வாலிபன். தமிழ் கொஞ்சம் தெரியும் என்ற தைரியத்தில் எழுத வந்துவிட்டேன். நான் வந்த கதை சில பதிவுகள் மூலமும் என்னைப்பற்றி இன்னும் சில பதிவுகள் மூலமும் அறியலாம். மேலும் வரும் பல பதிவுகளும் என்னைப் பற்றி சொல்லும்.

அதுபோன்ற சில பதிவுகள் இதோ:
எவனோ ஒருவனின் வரலாறு
பிடிக்கும்... ஆனா பிடிக்காது
தீபாவளி சிறப்புப் பதிவு 2009
என்னையும் மதிச்சி.... கேள்வி பதில்

அனுபவம், கனவுகள், கற்பனைகள் மற்றும் கதைகள் சார்ந்து/பற்றி எழுதுவது எனக்கு விருப்பம். ஆரம்பத்தில் அனுபவம் மட்டுமே எழுத ஆரம்பித்தேன், பின்பு கொஞ்சம் மொக்கை. அதன் பிறகு கதை. பின்பு கவிதையும். இப்போது சினிமா பற்றி அதிகம் எழுதுகிறேன். அதுபோல இனி வரும் நாட்களில் அரசியல் பற்றி எழுதினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இலக்கணம் பற்றி அதிகம் எழுதவேண்டுமென்பது எனது விருப்பம். என்னுடைய பழைய, பள்ளித் தமிழ் இலக்கணப் புத்தகங்களைத் தேடுகிறேன்.

எவ்வளவு நாள் எழுதுவேன் எனத் தெரியாது. ஆனால் வாசிப்பது மட்டும் ஏதாவது ஒரு வடிவத்தில் பிரிந்துவிடாமல் இருக்கும் என்பது மட்டும் உறுதி. இணையம் தொடர்பான, வலைப்பூ வடிவமைப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு, என்னைத் தாராளமாகத் தொடர்புகொள்ளலாம். அதைப் பற்றி அறியும்பட்சத்தில், நேரம் கிடைக்கப்பெற்றால் உதவி செய்யத் தயார்.

அன்புடன்
அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!