குரங்கு அருவிக்கு ஒரு குட்டி விசிட்.........


ஜூலை 29-ம் தேதி கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு நானும் என் மனைவியும்
மற்றும் 2 தம்பிகளுமாக இரண்டு இரண்டுசக்கர வாகனத்தில் சென்றோம் .சென்றது
தம்பிகளில் ஒருவனுக்கு மண்டையில் உள்ள மசாலா பாக்கெட் சேதமடைந்துள்ளதா
என்பதை CT SCAN செய்து பார்ப்பதற்காக. அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று
தெரிந்ததும் சந்தோஷத்தை கொண்டாட என்ன செய்யலாம் என யோசித்தோம்.

மனைவி கூட வந்ததால் டாஸ்மாக் செல்ல முடியவில்லை. எனவே
பொள்ளாச்சியிருந்து வால்பாறை செல்லும் வழியில் 30-வது கிலோமீட்டரில்
உள்ள குரங்கு அருவிக்கு ஒருகுட்டி விசிட் அடிக்கலாம் என முடிவெடுதோம்.

முடிவெடுத்தபடி உடனே புறப்பட்டோம்.செல்லும் வழி பச்சை பசேல் என
கண்ணுக்கு விருந்தளித்தது. அதன் செயற்கைகோள் படம் பார்வைக்கு


ஆழியார் அணையை ஏற்கனவே பார்த்துவிட்டபடியால் அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த
திரைப்பட படப்பிடிப்பைக்கூட பார்க்காமல் நேராக குரங்கு அருவிக்கு
விரைந்தோம்.செல்லும் வழியில் வனத்துறை சோதனை மற்றும் அனுமதி
மையத்தில் அனுமதிச்சீட்டு வாங்க வாகனத்தை வலப்புறமாக நிறுத்தினோம்.
உடனே கடமை உணர்வு நிறைந்த வனத்துறையினர் ஏன் இப்படி வண்டி
நிறுத்துகிறீர்கள் என அறிவுறுத்தினர். அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அனுமதிச்சீட்டு
பெற்று சென்றோம்.

ஆனால் அருவிக்கு சென்றபின்தான் வனத்துறையினரின் கடமையுணர்ச்சி என்
கண் கலங்க வைத்துவிட்டது??!!

குரங்கு அருவி தங்களை இனிதே வரவேற்கிறது என்ற அறிவிப்பு பலகையை கண்டததும்
புரிந்தது வனத்துறையினரின் கடமையுணர்ச்சி.

அந்த அறிவிப்பு பலகைநுழைவு மற்றும் பராமரிப்பு கட்டணமாக தலைக்கு 15 ரூபாய் (உடம்புக்கு கட்டணம்
இல்லை) வசூலிக்கும் வனத்துறை ஒரு அறிவிப்பு பலகையைக்கூட பராமரிப்பதில்லை.

அறிவிப்பும் நடப்பவையும்
  1. நுழைவுக்கட்டண அனுமதிச்சீட்டு இல்லாமல் உள்ளே செல்ல அனுமதியில்லை-ஆனால்அனுமதிச்சீட்டை பரிசோதிக்க அங்கு ஒருவரும் இல்லை.50% பேர் இலவசமாக நுழைகிறார்கள்
  2. மதுபானங்களை எடுத்துசெல்லவோ அருந்தவோ கூடாது-ஆமாம் யாரும் எடுத்துச்செல்வதில்லை, அங்கேயே அருந்துகிறார்கள்.
  3. பாலிதீன் பைகளை எடுத்துச்செல்லகூடாது-ஆமாம் யாரும் எடுத்துச்செல்வதில்லை, அங்கேயே போட்டு விடுகிறார்கள்.
  4. தீயினைத்தூண்டும் பொருட்களை எடுத்துச்செல்லகூடாது-அதையும் அங்கேயே போட்டு விடுகிறார்கள்.
  5. எண்ணை தேய்த்து குளிக்ககூடாது-அப்புறம் அப்படியேவா வீட்டுக்கு போவார்கள்.
  6. குரங்குகளுக்கு தின்பண்டங்களை கொடுக்காதீர்கள்-யாரும் கொடுப்பதில்லை கீழேதான் போடுகிறார்கள்.
  7. வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படிமேலே கூறியவற்றை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கபடும்-அப்படியா????? சொல்லவே..... இல்ல...... அப்படின்னா இதை பாதுகாக்காத வனத்துறையினருக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை கொடுப்பார்கள்????
அறிவிப்பு பலகையின் அனைத்து அறிவிப்புகளையும் மீறியவர்கள்.இவர்களுக்கு என்ன தண்டனை.?!!
ஆனால் அங்கு குப்பைத்தொட்டி இல்லையே........!!


அருவிக்காட்சி .வீடியோவாக பார்க்க இங்கே க்கிளிக்கவும்

அருவிக்கருகில் கிடந்த குப்பை , மதுபாட்டில் மற்றும் அருவிக்காட்சி


வீடியோவாக பார்க்க இங்கே க்கிளிக்கவும்http://www.youtube.com/watch?v=_EIVGkb74cM

தன்அழகை சோதிக்கும் வானரம்

வாகனங்களை சொந்தம் கொண்டாடும் வானரங்கள்.
மாருதியின் மேல் ஒரு குட்டி மாருததி.இந்த விழுது முன்பு ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டிருந்தது , இப்பொழுது கீழே விழுந்து கிடக்கிறது
.
நம் முன்னோர் ஆலோசனையில்
நாங்கள் ஆலோசனையில்இங்கே பெண்களுக்கு தனியக குளிக்கும் பகுதி இல்லை, பாதுகாப்பு இல்லை, உடை மாற்றும் அறை தற்போது உறை மாட்டும் (condom)அறையாக காட்சி அளிக்கிறது. சுகாதார வளாகம் சுமாராக கூட இல்லை.

இவ்வளவு இல்லைகள் இருப்பினும் இயற்கை விரும்பிகளுக்கு கண்ணுக்கு விருந்தாக அமையும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


---கி.கிShare/Bookmark
Read More!

அன்று ஓரு இரவில்.........(2)

..............வெளிச்ச புள்ளிகள் என்னை நெருங்க நெருங்க, என் உடலெல்லாம் சிறிது
நடுங்க துவங்கியது.

//குறை ஒன்றும் இல்லை !!! said... அப்புறம் அந்த ரெண்டு வெளிச்ச் புள்ளி
ஏதாவடு மிருகம் தானே? இல்ல வண்டியா?\\

நண்பர் நினைததுபோல் ஏதாவது மிருகமா..? இல்ல எதாவது வண்டியா..? என
பலவாறு யோசித்து பார்த்தேன் ஆனால் அப்படி தோன்றவில்லை. ஏனென்றால்
அந்த வெளிச்சப்புள்ளிகள், ஒரே நேர்க்கோட்டில் வராமல் வளைந்தும், நெளிந்தும்,
மேலும், கீழுமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. திரும்பி வந்த வழியே சென்று
விடலாமா என்று ஒரு கணம் யோசித்து அந்த எண்ணத்தை அப்படியே கைவிட்டேன் .
காரணம் பிடிவாதம், போட்டியில் வெல்ல வேண்டும் என்ற பிடிவாதம்.


சிறிது தூரம்கூட சென்றிருப்பேன், அந்த வெளிச்சத்தின் நடுவிலிருந்து ஒரு
வெள்ளை உருவம் சற்று வேகமாக முன் வருவதுபோல் தோன்றியது.
கண்ணை கூர்மையாக்கி பார்த்தேன் அந்த உருவம் உண்மையிலேயே
என்னை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருந்தது. அதுவும் 2.5 அடி
உயரத்தில் மிதந்து வந்துக்கொண்டிருந்தது. அதைப்பார்த்ததும் என் எல்லா
நரம்புகளும் ஜில்லிட்டது. அந்த வெளிச்சம் தூரமாகவே தெரிந்த்து.

வெள்ளை உருவம் 400mtr, 300mtr, 200mtr, 100mtr என குறைந்து 50mtr
தூரம் ஆனபோது, சட்டென்று டிடிங் டிடிங், டிடிங் டிடிங் என்ற சத்தம்
என் வயிற்றில் பாலை வார்த்தது. அப்போதுதான் புரிந்தது வந்தது
வெள்ளை வேட்டியை மடித்து கட்டிய சைக்கிள்காரர் என்று.அவர்
வேட்டியை மடித்து கட்டி சைக்கிள்ஓட்டி வந்ததால் இருட்டில் அவருடைய
சைக்கிள் என் கண்ணுக்கு புலப்படாமல் இருந்திருக்கிறது.

நான் அவரிடமே கேட்டேன், அங்கே அது என்ன வெளிச்சம் என்று.
“அதுவா, சுடுகாட்டில் பிணத்தை எரித்து விட்டு சிலபேர் கையில்
தீப்பந்தத்துடன் வர்ராங்கோ” என்றார்.(ஓ அதுதான் அந்த வெளிச்சப்புள்ளிகள்
ஒரே நேர்க்கோட்டில் வராமல் வளைந்தும், நெளிந்தும்,மேலும், கீழுமாக
வந்ததோ???)

அதன் பின் சுடுகாடு நோக்கி வேகமாக நடக்க துவங்கினேன்.சுடுகாட்டிலிருந்து
வருபவர்களின் அருகில் சென்றபோது அவர்கள் பேசுவது காதில் விழுந்தது.
“சே என்ன பொண்ணு இது, ஒரு கொலுசு தொலைஞ்சுபோய் திட்டினதுக்கு
போய் தற்கொலை செஞ்சிடுச்சே” என ஒருவர். இன்னொருவர் “யாருக்குத்
தெரியும் தற்கொலையா கொலையான்னு” சொல்ல “சும்மா பொத்திட்டு
போவியா?! அவ அப்பன் பின்னாடி வந்திட்டிருக்கான்”என ஒருவர் அவர்
வாயை மூடினார்.அப்புறம் என் காதில் அவர்கள் பேச்சு சரியாக விழவில்லை

சுமார் 12.15 மணியளவில் சுடுகாட்டையடைந்தேன். அப்போது அந்த
இளம்பெண்ணின் பிணம் எரிந்துக்கொண்டிருந்தது.அதனருகில் 2 பேர் கையில்
பெரிய கழியுடன் நின்றுக்கொண்டிருந்தனர்.ஏனோ அந்த முகம் தெரியாத பெண்ணின்
மேல் ஒரு பரிதாபம் தோன்றியது.இருப்பினும் காரியத்தில் கண்ணாக பூ பறிக்க
அந்த மரத்தின் அருகில் சென்றபோது “என்னப்பா அங்க அர்த்தசாமத்தில”
என்றனர் அவ்விருவரும். “ஒண்ணுமில்லங்க ஒரு மருந்துக்கு இந்த பூ வேண்டும்”
என்றேன். “சரி சரி சட்டுனு எடுத்து கெளம்பு” என்றனர்.

உடனே மரத்தில் ஏறி பூ பறித்து கிளம்பினேன்.அப்பாடா நான் ஜெயித்துவிட்டேன்
என மனதில் நினைத்து கிளம்பினேன்.ஆனால் அதன்பின் தான் என்னை குலை
நடுங்கவைத்த அந்த சம்பவம் நடந்தது.

அது என்னான்னா...........................................?


(தொடரும்)


Share/Bookmark
Read More!

மண்ட காஞ்சு போச்சு...

காலை 7 மணிக்கு முழிப்பு. ஆபீஸ் கிளம்பி 9.30 க்கு அஜர். நெறைய வேலைகள், கொஞ்சம் பின்னூட்டங்கள். மதிய உணவுக்கு அலைச்சல். மீண்டும் ஆபீஸ். மாலை 7/8 மணிக்கு மீண்டும் வீடு. கொஞ்சம் டிவி. இரவு உணவு. அப்புறம் தனியே எடுக்கும் ஆர்டர்களுடன் மல்லுக்கட்டல். நிறைய அழைப்புகள் மொபைலில். கிடைக்கும் நேரத்தில் பதிவுகள். 1/2 மணிக்கு படுத்தவுடன் தூக்கம். மீண்டும் 7 மணிக்கு முழிப்பு, வந்த கனவுகள் கூட ஞாபகமில்லாமல். ஆபீஸ் கிளம்பி....

இப்படியே கடந்த மூன்று வாரங்கள் ஓடுகின்றன. மண்டை காய்ந்துவிட்டது. இப்படி சில நேரங்களில் மூளை வறண்டுவிடுவது போன்ற உணர்வு வரும். அப்போதெல்லாம், சிந்தனை ஊற்று வற்றிவிட்டது போன்ற ஒரு உணர்வு, வாழ்க்கை கருகி விட்டது போன்ற பயம், சிறிது நாட்களில் ரோபாட்டாக மாறிவிடுவேனோ என்கிற சந்தேகம் போன்றவை சூரியனைச் சுற்றும் கிரகங்ககள் போல என்னைச் சுற்றி வருவது போன்ற பிரம்மை ஏற்படும்.

இந்த கிரகங்களைக் கலைக்க எங்காவது வெளியூர் செல்வது வழக்கம். கடந்த மூன்று முறை கொஞ்சம் வித்தியாசம். பைக்கை எடுத்துக்கொண்டு நேரே பாண்டிச்சேரி சென்றேன். போகும்போதே மனது சிறிது தெளிந்துவிடும். ஒரு சிங்கிள் ரூம் போட்டுவிட்டு கொஞ்சமாய் குடித்துவிட்டு தூங்கிவிட்டேன். காலை எழுந்து கொஞ்சம் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பி வந்துவிட்டேன்.

இந்த முறை வீட்டிற்கு செல்லலாமெனெத் தோன்றியது. கிளம்பிவிட்டேன். 4 நாள் பயணம், திருச்செந்தூர் மற்றும் சிவகாசி. நம்ம ஊரு பரோட்டா சால்னா மணம் இப்பவே எட்டிப் பார்க்கிறது. எனது வசந்த கால நினைவுகள் புத்துயிர் பெறுவது போன்ற ஓர் உணர்வு இப்போதே எழுகிறது. நண்பர்களிடம் சொல்லியாயிற்று, சமாளிக்க முடியவில்லை, இப்போதே ஆளாளுக்கு ஒரு பிளான் சொல்கிறார்கள், அன்புத் தொல்லைகள்.

அதெல்லாம் சரி. திங்கள் திரும்பி வந்து பார்த்தால் புதிய பதிவுகள் எப்படியும் 300ஆவது இருக்கும். எப்படி அனைத்தையும் உட்கார்ந்து வாசிக்கப் போகிறேன் என நினைத்தால் இப்பவே கண்ணக் கட்டுது. வர வர எல்லாருமே நல்லா எழுதுறாங்க, முக்கியமா நிறைய எழுதுறாங்க. அது போக சில வலைப்பூக்களுக்கு நான் ரெகுலர் கஸ்டமர் வேற. எல்லாம் வந்துதான் பார்க்கனும்.

ஆகவே,
நண்பர்களே, மச்சான்ஸ், மாம்ஸ், அண்ணன்மார்களே... ஒரு நாளு நாள் இருக்க மாட்டேன். என்னிடமிருந்து பதிவுகளோ பின்னூட்டங்களோ வராது. மத்தபடி நம்ம அண்ணன் கிகி கிறுக்கிக்கொண்டே இருப்பார். வரும்போது சுவையான அனுபவங்களுடனும், படங்களுடனும் வந்து உள்நாட்டு நரகங்களில் இருப்பவர்களையும், வெளிநாட்டில் இருப்பவர்களையும் வெறுப்பேத்துகிறேன்.

நன்றி.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

பள்ளிக்கூடம் 3 - பம்பரம்

பள்ளிக்கூடம் 2 - உப்புமூட்டசண்ட இதன் தொடர்ச்சி...

---

சின்ன வயதில் பல விளையாட்டுக்கள் விளையாண்டபோதும், இந்தப் பம்பரமும், கோலிக்காயும்தான் வீரவிளையாட்டுக்களாக கருதப்பட்டது எங்களால். அதிலும் பம்பரத்தின்மீது கொஞ்சம் ஈர்ப்பு அதிகமே. முந்தைய பதிவில் உப்புமூட்டசண்ட விளையாடுவது எப்படி என்பது பற்றி பார்த்தோம் (டேய்.... ச்சூ ச்சூ...), இங்கு பம்பரம் விளையாடுவது எப்படி என்பது பற்றி பார்க்கலாம். (இதில் நிறைய விடுபட்டிருக்கலாம், முடிந்தவரை ஞாபகப்படுத்தி எழுதியிருக்கிறேன்)


பம்பரத்தில் வட்டம் பொடியர்களின் விளையாட்டாகக் கருதலாம், இதில் பம்பரத்திற்கு ஆபத்து கம்மிதான். முதலில் ஒன், டூ, த்ரீ சொல்லி எல்லாரும் ‘கோஸ்’ எடுக்க வேண்டும். கடைசியாக எடுப்பவன்/எடுக்க முடியாதவன் பம்பரம் வட்டத்திற்கு உள்ளே வைக்க வேண்டும். அடுத்து மற்றவர் ஒவ்வொருவராக உள்ளே இருப்பதை குத்தி(பம்பரம் விட்டு) வெளியே எடுக்க வேண்டும். உள்ளே இருக்கும் பம்பரம் வெளியே வந்தால் அனைவரும் கோஸ் எடுக்க வேண்டும். மீண்டும் கடைசியாக எடுப்பவன் பம்பரம் உள்ளே. இப்படியே போய்க்கொண்டிருக்கும். இது மட்டுமல்ல, இதிலே இன்னும் பல ரூல்ஸ் இருக்கு. உள்ளே இருக்கும் பம்பரத்தைக் குத்தி வெளியே எடுக்கும்போது, விடுபவன் பம்பரம் ஆடாமல் போய்விட்டால், அதுவும் உள்ளே வந்துவிடும். உள்ளே ஆடிக்கொண்டிருக்கும் பம்பரத்தை, உள்ளேயே அமுக்கிவிட்டால் அதுவும் உள்ளே. உள்ளே இருப்பவற்றுள், குத்தும்போது ஒரு சில மட்டும் வெளியே வந்தால் அவர்கள் ஆட்டத்தைத் தொடரலாம். அனைத்தும் வெளியே வரும் பட்சத்தில் மீண்டும் கோஸ், மீண்டும் கடைசி உள்ளே... இப்படி போய்கிட்டே இருக்கும்.

இங்க நமக்குனு ஒரு ரசிகர் படை இருக்கும். நாம அடிக்கடி குத்துறதே கிடையாது. குத்தும்போது உள்ள மாட்டிக்குவோமோனு பயம். கோஸ் எடுக்க மட்டுந்தான் ரெடியா இருப்போம். உள்ள நம்மாலு இருந்தா எதுவும் சொல்ல் மாட்டான். அதே எதிர் கோஸ்டி இருந்தா, ‘இவன் விடவே மட்டேங்குறாண்டா’ அப்டினு குத்தச் சொல்லி நம்ம பம்பரத்த அமுக்கி உள்ள போடுருவானுங்க. நம்ம பசங்க சும்மா இருப்பானுங்களா? கரெக்டா நம்ம பம்பரத்த மட்டும் குத்தி வெளிய எடுத்துருவானுக. ஏன் அப்படினு யோசிக்கிறீங்களா? நாம கொஞ்சம் அதிகமா மார்க் எடுக்குறதால நமக்கு அடுத்த ரேங்க்ல உள்ள பசங்க கொஞ்சம் பாசமா இருப்பானுக. எதிர் கோஸ்டினு சொன்னது பெயில் ஆகுற கேசு. நம்மள கண்டுக்கவே மாட்டானுக. நா எவ்ளோ மார்க் எடுத்தா அவனுவளுக்கு என்ன?

பம்பரத்துல ரெண்டு உண்டு. சாதா பம்பரம், சட்டி பம்பரம். இதுல சட்டி பம்பரத்துக்குத்தான் கொஞ்சம் மவுசு, கொஞ்சம் காஸ்ட்லி. பம்பரம் வாங்கும்போது அதுல சின்ன ஆணிதான் இருக்கும். அதெல்லாம் வச்சு நாம விளையாட மாட்டோம். வாங்குன உடனே நேரா பட்டரைக்குத்தான் போவோம். அங்க பம்பரத்துக்கு ஆணி வைக்கிற எக்ஸ்பர்ட்டு ஒருத்தர் இருப்பாரு. இந்த ஆணிய எடுத்துட்டு, ’நாலு மூக்கு ஆணி’ வச்சி குடுப்பாரு. இது எதுக்குனு கேக்குறீங்களா? அப்பத்தான் ஆக்கர் விளையாடும்போது குத்திக் கிழிக்க முடியும்.

ஆக்கர்... இதுதான் நம்ம வீர விளையாட்டு. வட்டம் மாதிரிதான், ஆனா இதுல கட்டம். அதே மாதிரி கோஸ் எடுத்து எடுத்து விளையாடனும். ஆனா இதுல கோஸ் மூனு தடவதான். கடைசியா மாட்டுற பம்பரத்த, குத்தி குத்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை எடுத்துட்டு போகனும். அப்படி குத்தும்போது 3 முறை தொடர்ந்து அந்தப் பம்பரத்துல படலன்னா, அவங்க பம்பரம் அந்த இடத்துக்கு வந்துரும். டார்கெட் வர எந்த பம்பரம் வருதோ அத எடுத்து ஆளுக்கு கொஞ்சம் வசமா குத்திக்கலாம் (ஆட்டைக்கி இத்தன குத்துன்னு இருக்கும்). கல்லத்தூக்கிப் போட்டாவது அந்த பம்பரத்த ரெண்டா பொளந்துருவானுக. அப்படியும் அது தப்பிச்சுச்சுனா, பைரேட்ஸ் ஆஃப் த கரிபியன்ல வர்ற மாதிரி பாதி மூஞ்சி காணாமப் போயிருக்கும்.

---

கோலிக்கா, சிகரெட் அட்ட, லக்கி பிரைஸ்... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா நமக்கே கொஞ்சம் போரடிக்கிது. அதனால, மத்ததெல்லாம் மெதுவா எழுதுறேன். ஆனா, அடுத்த பதிவுல இன்னும் ஒரு இண்ட்ரஸ்டிங் மேட்டரோட இந்த பள்ளிக்கூடத்த முடிச்சிக்கிறேன்.

---

அப்புறம் மத்தவங்க எழுதுன பள்ளிக்கூடத்துல எல்லாம் அவங்க அவங்க ஸ்கூல் பேரு, டீச்சர் பேரு, டாவடிச்ச பொண்ணுக பேரெல்லாம் போட்டுருந்தாங்க. அட இதெல்லாம் நமக்கு தோனாம போச்சேனு ஒரே ஃபீலிங். நம்ம ஸ்கூல் பேரையாவது சொல்லனுமில்லையா?
நான் படித்த பள்ளி, ஸ்ரீ சரவணைய்யர் நடுநிலைப் பள்ளி, திருச்செந்தூர். மிகவும் பழமைவாய்ந்த பள்ளி, 1895ல் தொடங்கப்பட்டது.

---

அடுத்து (மற்றும் முடிவு) - டிவி டெக் வாடகைக்கு.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

நட்பே... நீ எனக்கு நட்பாக வேண்டும்.

மழலைப் பருவத்தில்
ர்மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...


குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...


நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...


தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...


துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...


மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்.
பி.கு:-

எனக்கு ஆர்குட் -ல் வந்த கவிதை


...கி.கி


Share/Bookmark
Read More!

அன்று ஒரு இரவில்..........

நான் சத்தியமங்கலத்திற்கு அருகாமையில் உள்ள தூக்கநாயக்கன் பாளையத்தில் பட்டய
படிப்பில் காலடி எடுத்து வைத்த முதலாம் ஆண்டு (1994) நடந்த திகில் சம்பவம்.

நான் அங்கு படிக்க சென்ற காலத்தில் என் சக நண்பர்களிடம் “நான் நாகர்கோவில்காரன்
எனக்கு பயம் என்பது கிடையாது, இரவானாலும் பகலானாலும் எவ்விடத்திற்கும்
செல்ல அஞ்சமாட்டேன், சுடு காட்டிற்கு வேண்டுமானாலும் இரவில் செல்வேன்”
என பிதற்றி திரிவேன் (உண்மையும் கூட)

இதை அடிக்கடி கேட்ட நண்பர்கள் என்னை என்றாவது சோதித்து பார்க்கும் திட்டத்தில்
இருந்திருக்கின்றனர்.அந்த நாளும் வந்தது....

அன்று இரவு ஏதோ ஒரு (சத்தியமா ஞாபகம் இல்ல) ஹிந்தி திகில் திரைப்படம் பர்த்த்து
விட்டு இரவு 9:30 ம்ணியளவில் அறைக்கு வந்தோம். அந்த அறை நான் தங்கும்
அறையில் இருந்து சுமார் 2 km தூரம் இருக்கும். இடையில் ஒரு சுடு காடும் உண்டு.

சுமார் 11:15 மணியளவில் நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள் “நீ 11:45 மணிக்கு மேல்
இங்கிருந்து புறப்பட்டு சுடுகாட்டுக்கு சென்று அங்குள்ள சுடுகாட்டு பூ (ஏதோ ஒரு
வகை பூ அந்த சுடு காட்டில் மட்டும் பூத்து கிடப்பதை பார்த்திருக்கிறோம்)சிலவற்றை எடுத்துக்கொண்டு, பாலிடெக்னிக் கட்டிடத்தின் பின்புறம் உள்ள தேக்கு தோப்பின் வழியாக உன்னுடைய அர்றைக்கு சென்று அங்குள்ள நண்பர்களை எழுப்பி அந்த பூவை
கொடுக்க வேண்டும்” என்று கூறி என் தைரியத்திற்கு சோதனை வைத்தார்கள்.

ஏற்கனவே திகில் திரைப்படம் பார்த்து, அதை குறித்து ஒன்றரை மணி நேரம் விவாதித்து
எல்லோருமே சிறிது திகிலாக இருந்த நேரம் இப்படி ஒரு சோதனையை அளித்த
நண்பர்களின் செயல் வெகு அருமை.(ரூம் போட்டு யோசித்திருப்பார்கள்) இருந்தாலும்
சோதனைக்கு ஒப்புக்கொண்டேன் சிறிது தைரியத்துடன்.

நான் புறப்படும் நேரத்தில் என்னுடைய கை விளக்கையும் அருமை நண்பன் ஒருவன்
மறைத்து வைத்து விட்டான். வேறு வழியில்லாமல் சுடுகாடு நோக்கி என் கால்கள்
செல்ல துவங்கியது....

அதுவரை இருளுக்கு பயப்படாத நான் அன்று சிறிது தடுமாறினேன். அது அன்று பார்த்த படத்தினாலோ,இல்லை நண்பர்களின் பயமுறுத்தனினாலோ தெரியவில்லை. சிறிது தூரம் நடந்திருப்பேன் 2 நாய்களின் ஊளை கர்ண கொடூரமாய் கேட்க ஆரம்பித்தது, அன்று வரை
சாதரணமாக தோன்றும் சில் வண்டுகளின் ரீங்காரம், அன்று பயங்கரமாய் தோன்றியது.
ஏனோ தெரியவில்லை அடி முதல் முடி வரை சில்லிட்டது போன்ற உணர்வு. இருப்பினும்
நடந்துகொண்டிருந்தேன். கௌரவத்தை காப்பற்ற வேண்டும் அல்லவா......??

இன்னும் சிறிது தூரம் நடந்திருப்பேன், சற்று தூரத்தில் ஒரு வெளிச்ச புள்ளி தெரிந்தது.
என்னடா இது இந்தப்பக்கம் வீடு கீடு எதுவும் கிடையாதே..? அப்புறம் அது என்ன வெளிச்சம்
சுடுகாட்டிற்கும் 1/2 km தூரம் உள்ளதே என்று எண்ணும் போதே ஒரு வெளிச்ச புள்ளி 2
வெளிச்ச புள்ளி ஆனது. அவை என்னை நோக்கி வருவது போல் தோன்றியது, இல்லை
இல்லை உண்மையிலேயே வந்து கொண்டிருந்தது. வெளிச்ச புள்ளிகள் என்னை
நெருங்க நெருங்க, என் உடலெல்லாம் சிறிது நடுங்க துவங்கியது.

அதை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. எனவே மீதி சம்பவத்தை அடுத்த
பதிவில் தொடர்கிறேன்.

(தொடரும் என் நடுக்கம் தீர்ந்தால்........??????)


--கி.கி.Share/Bookmark
Read More!

எனக்கு வந்த கு.த.சே.கள் - 7

1)
நான் லூசு
நான் லூசு
நாந்தான் லூசு
நான் மட்டுமே லூசு
நான் லூசு
நான் எப்போதுமே லூசு
ஓக்கே ஒக்கே, நீ இவ்வளவு தூரம் சொல்ற...
நான் ஒத்துக்கிறேன்.

2)
விண்ணைத் தொடுவதற்கு
சக்தி இருந்தால்
அங்கும் உன் பெயரை எழுதுவேன்
நீ ஒரு

ஃப்ராடு என்று

அய்யய்யோ!
சாரி, என் ஃப்ரெண்ட் என்று.

3)
காலேஜ் லொல்லு:
1: டேய் மச்சி, உனக்கு எஸெமெஸ் ஃப்ரீதான? எனக்கு மெசேஜ் அனுப்புடா...
2: தோடா... எனக்கு இன்கமிங் கூடத்தான் ஃப்ரீ, எனக்கு கால் பண்ணு பாக்கலாம்.

4)
போலீஸ்; எதுக்கு உன் லவ்வர கிணத்துல தள்ளிவிட்ட?
காதலன்: அவதான் மூனு மாசம் முழுகாம இருக்கேன்னு சொன்னா, அதான் சரி போய் முழுகுனு தள்ளி விட்டேன்.

5)
ஒரு நாள் வரும்
அப்போ ஒரு பொண்ணு உன்ன ரொம்ப லவ் பண்ணுவா


கழுத்த கட்டி புடுச்சி
கிஸ் பண்ணிக்கிட்டே சொல்லுவா...


‘ஐ லவ் யூ டாடி!’

ஓவரா திங்க் பண்ணாதடா.

6)
நெருப்பு மட்டுமல்ல
சிரிப்பும் காயப்படுத்தும்
காதலித்துப் பார்.
-வைரமுத்து

7)
எல்லாப் பெண்களுக்கும்
என்னைப் பிடிக்கும்
ஆனால்
யாரிடமும் இதுவரை சொன்னதில்லை

ஐ லவ் யூ

இப்படிக்கு,
ரோஜாப்பூ.

8)
உண்மையான அன்பிற்காக
உயிரையும் விடு

ஆனால்

உயிர் போகும் நிலை வந்தால் கூட
உண்மையான அன்பை விட்டுவிடாதே.

9)
நண்பர்களின் பிறந்த நாளை மறப்பது கூட தவறில்லை,
நண்பர்களுடன் இருந்த நாட்களை மறந்து விடாதே.

10)
இறைவன் பெயரை உச்சரிக்கும் உதடுகளை விட
மனிதனுக்கு சேவை செய்யும் கைகள் புனிதமானவை.
-அன்னை தெரசா.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

பள்ளிக்கூடம் 2 - உப்புமூட்டசண்ட

பள்ளிக்கூடம் - இதன் தொடர்ச்சி...
---
வற்றுள் முக்கியமானது உப்புமூட்டசண்ட. கொஞ்சம் கட்டுமஸ்தான பசங்க, பொடிப்பசங்கள உப்புமூட்டயா தூக்கிகுவாங்க. நாம எப்பவும் மேலதான். மரத்தடியில் சுற்றி நின்றுகொண்டு ‘ரெடி... ஸ்டார்ட்’ என சொன்னவுடன் ஓடி வந்து ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக்கொள்வோம். அடுத்தவரை இடித்து கீழே விழச்செய்வதுதான் ஒரே குறி. குதிரை கீழே விழுந்தாலோ, உப்பு கீழே விழுந்தாலோ அவுட். அந்த ஜோடி ஒதுங்கிக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் ரெண்டுமே சேர்ந்து குடைசாயும். இதில் எப்போதும் முக்கியமான நேரம் ஒன்று வரும். அத்ற்காகவே பல பேர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பர். கடைசியாய் நாலு பேர் இருப்பர். ரெண்டு ரெண்டாக சண்டை நடந்துகொண்டிருக்கும். அதில் ஒரு ரெண்டில் ஒருவன் விழுவான். அதில் ஜெயித்த குதிரை அப்படியே ஸ்லோ மோசனில் திரும்பிப் பார்க்கும். சற்று தூரத்தில் அந்த இன்னொரு இரண்டு ஆக்ரோஷமாக மோதிக்கொண்டிருக்கும். தனியே இருக்கும் இந்தக் குதிரையின் முதுகில் இருப்பவன் காலை 180 டிகிரிக்கு நீட்டி வைத்துக்கொள்வான். அப்படியே தூரத்திலிருந்து ஓ....டி வந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ஜோடி மீது ஒரே இடி. இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், ஓடி வந்தவன் மற்ற இருவரையும் வீழ்த்தலாம், இருவரில் ஒருவரை வீழ்த்தலாம், மூன்று ஜோடியுமே விழலாம் அல்லது ஹீரோ மாதிரி ஓடி வந்தவன் தடுக்கி விழுந்து காமெடி பீஸ் ஆகலாம்.

முடிந்து மதிய வகுப்புக்குச் செல்லும்போது, சட்டை வேறு நிறத்தில் இருக்கும். சில பட்டன்கள் இருக்காது. என் அம்மா அதிகம் பட்டன் வாங்கியது இந்த நேரத்தில்தான். சில நேரங்களில், டௌசர் பட்டன் கூட காணாமல் போய்விடும்.

மாலை கடைசி வகுப்பில் பாடம் பக்கம் மனசே செல்லாது. எப்படா பெல்லடிக்கும் என்று பார்த்துக்கொண்டே இருப்போம். பெல் அடித்தவுடன், ஓஓஓஓ என் கத்திக்கொண்டே வெளியே ஓடி வருவோம். (ஆனால் உள்ளே செல்லும்போது ஆமை வேகம்தான்). வாசலில் ஒரு பாட்டி, இனிப்புமாவு, மாங்காய், நெல்லிக்காய் எல்லம் ஒரு கூடையில் வைத்து விற்றுக்கொண்டிருப்பார். பிள்ளைங்க எல்லாம் ஈ மொய்ப்பது மாதிரி சுத்திக்குவோம். அந்தப்பக்கம் ஒரு ஆள் , சைக்கிளில் வெள்ளரிக்கய் வைத்திருப்பார். சில நேரங்களில் எலந்தப்பழம், நவாப்பழம் ஆகியவையும் கிடைக்கும். என்னோட ஃபேவரிட் எப்போதுமே மாங்காய்தான், சிறிது உப்புடன்.

பாக்கெட்மணி பத்து பைசாவிலிருந்து, நாலனாவுக்கு மாற வெகு காலம் பிடித்தது. இன்று ஒரு ரூபாய்க்கு விற்கும் கடலை மிட்டாய், அன்று அஞ்சு பைசாவுக்கோ, பத்து பைசாவுக்கோ வாங்கிய ஞாபகம். பெரிய்ய்ய்ய சைஸ் ஆரஞ்சு மிட்டாய் கூட அஞ்சு பைசாதான். காலம் மாற மாற அதோட சைஸ் குறைந்தும், விலை கூடியும் வந்தது நமது பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பித்தது. இதை விட தேன் மிட்டாய் எனக்கு ரொம்ப புடிக்கும். இவற்றை எல்லாம் விட நாங்கள் விரும்பும் மிட்டாய் ஒன்று இருக்கிறது. கல்கோனா. கோலிகுண்டு மாதிரி உருண்டையாய் இருக்கும் ஒரு மாவுருண்டை. சீக்கிரத்தில் கரையாது. வகுப்பில் வாயில் போட்டு உட்கார்ந்தால் ஒரு பீரிடு ஃபுல்லா போகும். அதை உடைக்கும் போட்டி கூட நடத்துவோம்.

மாலை ஆறு மணிக்கு ட்யூசன். இதுதான் ஒரு நாளில் வெறுத்து ஒதுக்கும் பிடிக்காத நேரம். பள்ளியிலாவது கூட்டத்தோடு, கூட்டமாய் சமாளித்துவிடலாம். அடி வாங்கினால் கூட துணைக்கு ஒருத்தன் இருப்பான். இங்கு அப்படியல்ல. தனியேதான் அடி வாங்கனும். கட்டாயம், படித்து, ஒப்பித்துக் காண்பித்தால்தான் வீட்டிற்குச் செல்ல முடியும். வீட்டில் செய்த சேட்டைக்கெல்லாம் இங்கேதான் அடி விழும். அப்பவே எங்க வீட்டுல என்னை ஆள் வச்சு அடிச்சிருக்காங்க!

லீவு ஃபுல்லா ஒரே விளையாட்டுதான். அப்போதெல்லாம் மணல் தெருதான். இப்போதுதான் சிமெண்ட் ரோடெல்லாம் போட்டு நமது பாரம்பரிய(!) விளையாட்டுக்களை அழித்து விட்டார்களே. இவை மறைந்ததற்கு கிரிக்கெட்டும் ஒரு முக்கிய காரணி. பம்பரம், கோலிக்காய், சிகரெட் அட்டை, குச்சி கம்பு, லக்கி ப்ரைஸ் - இப்படி சீசன் தோறும் மாறி மாறி வரும். அப்போதெல்லாம் இருட்டிய பின் கரண்ட் அடிக்கடி போகும். அந்த நேரங்களில்தான் கண்ணாமூச்சி மிகவும் சுவாரஸ்யம் பிடிக்கும். லீவு விட்டால் போதும், தெருவே அல்லோலப்படும். ஒவ்வோரு வீட்டு வாசலையும் பம்பரம் விளையாண்டு குழியாக்கி விரட்டியடிக்கப்படுவோம். அடுத்து இன்னொரு வீட்டு வாசல்....

(தொடரும் - அடுத்து வருவது: பம்பரம்)
---
ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

பள்ளிக்கூடம்

அன்பர் ஜோதி அவர்கள் தொடக்கப்பள்ளி தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறார். நன்றி ஜோதி. உண்மையை சொல்லப்போனால் சிறு வயது ஞாபகங்கள் சில மட்டுமே ஞாபகம் இருக்கின்றன. ஆயினும் நினைவில் நிற்பவை யாவுமே பசுமை என்னும் சொல்லை ஞாபகப்படுத்தும் விதமாகவே உள்ளன.

எழுத ஆரம்பித்த புதிதில், என்னதான் எழுதுவது என தினமும் யோசித்துக்கொண்டே இருப்பேன். ’எவ்வளவுதான் எழுத முடியும் நம்மால்?’ என்ற கேள்வியும் உண்டு. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் அதைப் பற்றி கவலைப்படவே தேவையில்லை போலிருக்கிறது. தொடர் தொடர் என்று தொடர்ந்து அழைப்பு. இது போதாதென்று அழைக்காமலேயே ஆளாளுக்கு பத்து பத்தாகப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால் ’எதைப் பற்றி என்ற கவலை இனி இல்லை எங்களுக்கு’, என விளம்பரத் தோரனையில் மொத்தமாக நின்று சொல்லிக்கொள்ளலாம் போலிருக்கிறது.
இனி மேட்டருக்கு வருவோம்...
---
காக்கி டிராயரும் வெள்ளை சட்டையும்தான் பசங்க. நீல நிற தாவனி பாவாடை, வெள்ளை சட்டை பொண்ணுக. தொடக்கப் பள்ளியில் பொம்பளப் புள்ளயலப் பத்தி பேச ஒன்னுமே இல்ல. இது பூரா நம்மளப் பத்திதான்.
பள்ளி செல்வதற்கு முரண்டு பிடித்ததாய் ஞாபகம் இல்லை. ஆனால் காலையிலேயே எந்திரிக்கத்தான் ரொம்ப கஷ்டமா இருக்கும். பள்ளி நாட்களில், காலையில் எழுப்பும்போது கண்ணைத் திறக்க முடியாது. ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏந்தான் தூக்கமே வரலையோ தெரியல. ஒரு வழியா எழுந்து, குளித்து ஒரு ஜோல்னாப் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு ஒரு நடை. வீட்டிற்கு அருகிலேயே பள்ளி. அந்த ஜோல்னாப் பையைத் தலையில் மாட்டிக்கொள்வோம். அப்போதெல்லாம் தோளில் மாட்டும் பை இருந்ததாய் ஞாபகம் இல்லை. இந்த ஜோல்னாப் பையையே, தோள்கள் வழியே விட்டு, தலை வழியே ஒரு வழியாகத் தூக்கி, முதுகுக்குப் பின்புறம் வருமாறு மாட்டிச் செல்வது அன்று ஃபேசன். வசதியான வீட்டுப் பிள்ளைகள் சிலர், வெள்ளை உலோகத்தினாலான பெட்டியைக் கொண்டுவருவர். அதற்காக மிகவும் ஏங்கி, அடம்பிடித்து வாங்கி, பின், ஜோல்னாப்பை போல சௌகரியம் இல்லாதது கண்டு, பெட்டி கிடப்பில் போடப்பட்டு ஏச்சு வாங்கியது தனிக்கதை.

வீடு அருகில் இருப்பதால் மதியம் வீட்டிற்கு சென்றுதான் சாப்பாடு. ஆயினும், பள்ளியில் வழங்கும் சத்துணவு சாப்பிட முகவும் ஆசைப்படுவேன். அந்த பருப்பு சாம்பார் சுவை இன்னும் என் மூக்கிலேயே இருக்கிறது. நண்பர்களுடன் கூடி உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுவதும், அது பிடித்ததற்கு ஒரு காரணமாய் இருக்கலாம். மாதம் ஒரு முறை போடும் முட்டைக்கு தவறாமல் க்யூவில் நின்று, வாங்கியவுடன் நைசாக வீட்டிற்கு எடுத்து வந்துவிடுவேன்.

சாப்பாடு முடிந்ததும், மதியம் ஒரு அரைமணி நேரம் கேப் கிடைக்கும். அதுதான் ஒரு நாளில் முகவும் விரும்பி எதிபார்த்து காத்துக்கிடக்கும் நேரம். பள்ளி மைதானத்தில் ஒரே விளையாட்டுதான். இதுதான் விளையாடுவோம் என்றில்லை. நாங்கள் விளையாண்ட பல விளையாட்டுக்கள் பள்ளியில் தடை செய்யப்பட்டன. கோலிக்காய், குச்சிகம்பு, சிகரெட் அட்டை, உப்புமூட்டை சண்டை - இதெல்லாம் எங்களால் பள்ளிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள்.

அவற்றுள் முக்கியமானது உப்புமூட்டசண்ட...
(தொடரும்)
---
ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

இன்னும் இன்னமும்.......

உன்னை என் முன்னால்
மண்டியிட வைத்திருப்பேன்
மந்திரம் தெரிந்திருந்தால்.......!


எனக்காய் நீ
தவமிருக்கச் செய்திருப்பேன்
தந்திரம் தெரிந்திருந்தால்.......!


என்னிடம் உன்னை
சரணடைய வைத்திருப்பேன்
சாதுரியம் தெரிந்திருந்தால்.......!


என்னை நீ
சுற்றி வர செய்திருப்பேன்,
சூழ்ச்சி தெரிந்திருந்தால்.......!


ஆனால்....
உன்னை காதலிக்க மட்டுமே
தெரிந்திருக்கிறேன்?!


ஆகையால்
என் காதல் கை கூடுமோ
என்னும் நினைவில்
நிமிடங்கள் யுகங்களாய்
சுகங்கள் இழந்து வாழ்கிறேன்,
இன்னும் இன்னமும்......


பி.கு:-

இது நான் காதலிக்கும் முன் 1995-ம் ஆண்டு
கல்லூரி முதலாமாண்டு ஆங்கில வகுப்பு நடக்கும் போது
குப்புற இருந்து கிறுக்கியது


---கி.கி.


Share/Bookmark
Read More!

ஏதாவது கெடச்சுதா?

இந்த மொக்கை, மொக்கைவிரும்பி ஜெகநாதன் அண்ணன் அவர்களுக்கு சமர்ப்பனம்.
---
நா: ஏண்டா, கல்யாணமாகி மூனு மாசந்தான் ஆகுது... அதுக்குள்ள நைட்டுல வெளிய குடிக்க வந்துட்டியேடா!

ஜெ: அவ்ளோதாண்டா மாப்ள.

நா: அவளுக்குத் தெரியுமா?

ஜெ: அவளுக்கு தெரியும்... ஆனா அம்மாக்குதான் தெரியாது. எங்கம்மாவப் பொறுத்தவர இப்ப நா ஆபீஸ்ல இருக்கேன். மத்தத அவ சமாளிச்சிக்குவா.

நா: ச்ச... இந்த மாதிரி பொண்ணு எனக்கு எனக்கு கெடக்குமாடா?

பெரியண்ணன்: அவனாவது பரவால்ல... இவனப்பாரு, ஒரு மாசந்தான் ஆகுது, பொண்டாட்டி ஊர்ல இருக்கா, இவன் வீட்டுக்குள்ளயே கச்சேரி நடத்திட்டு இருக்கான்.

ரா: ஒரு மாசம்லாம் இல்லண்ணே... ஒன்னா சேந்து இருந்தது 16 நாள்தான், அதுக்குள்ள ஆடி கீடின்னு பிரிச்சிட்டானுவ.

பெ: சரி சரி, உங்க அத்தான் வற்ர வர நமக்கு பொரும கெடயாது, கொழந்தய எவ்ளோ நேரம் வச்சு பாத்துட்டே இருக்குறது? ஒரு ரவுண்ட ஊத்து...

ஜெ: உனக்கு என்னிக்கித்தான் பொரும இருந்திச்சி, இந்தா... நாங்க வெய்ட் பண்றோம்...

.
.
.
நா: வாங்க அத்தான், உங்களுக்காத்தான் வெய்ட்டிங்.

பெ: உங்களுக்கு கம்பெனி குடுக்கவேனா? எனக்கும் ஊத்து...

ஜெ: இதுக்கு ஒரு காரணமா? ஊத்தி குடிக்கவேண்டியத்தான...

.
.
.
ரா: அண்ணே, உங்க மூளைய டெஸ்ட் பண்ணனுமா?

பெ: வயசாகிப்போச்சு... உடம்புல இருக்குற எல்லாத்தையுமே டெஸ்ட் பண்ணனுண்டா... எதுக்கு?

ரா: அந்த புக்குல ஜிகே கொஸ்டின்ஸ் இருக்கு, அத ஃபில்லப் பண்ணி டெஸ்ட் பண்ணிக்கலாம்.

நா: ஓ! அந்த புக்குல அந்த மேட்டர்தான் இருக்கா?

ஜெ: என்னது? மேட்டர் புக்கா?

நா: டேய்! மேட்டர் புக்கு இல்லடா... மேட்டர் உள்ள புக்கு.

.
.
.

நா: அத்தான், நீங்க சென்னைல சரக்கு வாங்கி அடிச்சிருக்கீங்களா? எல்லாம் டூப்ளிகேட்டு.

அ: நமக்கு அதெல்லாம் தெரியாதுப்பா, ஜானிவாக்கர் அடிச்சாலும் எம்சி அடிச்சாலும் ஒரேமாரித்தா இருக்கு.

ரா: ஸ்டார் ஓட்டல்ல பீர் குடிச்சா நல்லா இருக்கு அத்தான். ஆனா டாஸ்மாக்குல எல்லாம் டீப்ளிகேட்டு... இவன் கூட ஒரு தடவ கம்லெண்ட் பண்ணான் அத்தான்.

நா: ஆமா அத்தாங்... டாஸ்மாக், அப்புறோ கொஞ்சம் பார்ல மட்டும் சரக்கு சரில்லன்னு கிங் பிசர் கம்பெனிக்கு ஒரு மெயில் பண்ணேன், அடுத்த ஒருமண்ணேரத்துல போன் பண்ணிட்டானுவ.

பெ: அப்புறோ?

நா: இங்க சரக்கு ஒன்னும் சரில்ல சார்னேன், அதுக்கு அவென் ஸ்டார் ஓட்டல்ல பிரிச்சில வச்சிருப்பாங்க, டாஸ்மாக்ல வெக்கல, அதன்ன்னான். அப்போ தூத்துக்குடி டாஸ்மாக்குல மட்டும் எப்படி நல்லாருக்குன்னேன். நாங்க நல்லாத்தான் தயாரிக்கிறோம், வேன்னா, பேக்டரிக்கு வந்து பாருங்க, ஏற்பாடு பண்றேன்னான். அதெல்லா வேனா, உங்க தயாரிப்புல ஒன்னும் சந்தேகம் இல்ல, சப்லைல ஏதோ ப்ராப்லொ, அத சரி பண்ணுங்கனு சொல்லி வெச்சிட்டேன்.

அ: நல்லவேல போவல, போருந்த... உள்ள வெச்சி கும்ரு கும்ரு கும்ரிப்பானுவ.

பெ: எனக்கெல்லாம் அப்படி ஒன்னுந்த் தெர்ர்லயே!

ஜெ: அதெல்லாம் மினிஸ்டர் பேக்டரிலர்ந்து வர்தாம்ணே.

ரா: அதெல்லாம் இல்லடா... பெரிய கடைக்கி தனி சரக்கு, சின்ன கடக்கி குவாலிட்டி கம்மியான சரக்குனு சப்லை பண்றானுவலாம்.

அ: அப்படியெல்லாம் இருக்காதுப்பா.

ரா: ஏண்டா... இப்போ ஏதோ நெட்டுல எழுதுறியே... இதெல்லாம் அதுல எழுதுவியோ?

நா: ச்சச்ச... இதெல்லாம்போயி எழுதுவேனா? ஏதாவது உருப்புடியா சொல்லு, எழுதுரேன்.

ரா: உருப்புடியானா?

நா: ஒரு ஜோக் சொல்லேன்.

ரா: ....... ஓக்கெ. இப்படித்தாண்டா, சங்கர்னு ஒருத்தரு, சரியான நக்கல் பார்டி, ஓட்டலுக்குப் போனாரு. சர்வர் பொங்கலக் கொண்டுவந்து வெச்சிட்டு, ‘பொஙகலுக்கு என்ன வேனும்னாரு’, இவரு ‘பொங்கலுக்கு ஒரு சட்ட மட்டும் எடுத்துகுடுங்க போதும்னாரு’... எப்டி?

நா: பர்வால்ல...

ரா: ஆமா... இதுல எழுதுறியே, ஏதாவது கெடச்சுதாடா?

ரா: கெடச்சது கெடச்சது. ஆரம்பிச்ச ரெண்டு மாசத்துலயே ஒரு அவார்டு கெடச்சதுடா. கீழ பாரு.---
இண்ட்ரஸ்டிங் பிலாக்கா? அப்படியா சொல்றீங்க? இதுக்கு எனக்கு தகுதி இருக்கோ இல்லையோ தெரியாது. இண்ட்ரஸ்டிங் அவார்டா இல்லன்னாக் கூட பரவால்ல, இத ஒரு என்கரேஜிங் அவார்டா நெனச்சிக்கிறேன். என்ன இருந்தாலும் பாராட்டுறதுக்கும், பரிசு குடுக்குறதுக்கும் ஒரு மனசு வேணும்ல. அந்த வகைல, சங்கா அண்ணனுக்கு நா பெரிய நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். நன்றி அண்ணே.

---
அதே மாதிரி, எனது நண்பர்களையும் நான் ஊக்குவிக்க (ஊக்கு விக்கிறவங்க குறுக்க வராதீங்க) கடமைப்பட்டிருக்கேன். இதை ராஜ், எழில் மற்றும் ஜோதி அவங்களுக்கு என்கரேஜ்மெண்ட் அவார்டா குடுக்குறேன்.
ராஜ் - கவுண்டர் அட்டாக்கில் வல்லவர். சமீபத்தில் ஏதோ மன உழைச்சலின் காரணமாய், எழுதுவதில்லை என முடிவு செய்துவிட்டார். இதைக் கொடுப்பதன் மூலம், மீண்டும் அவரை எழுதுவதற்கு அழைக்கிறேன்.
எழில் - மச்சான் எழில், 2007 ல் எழுத ஆரம்பித்து, சிலவற்றுடன் நின்றுவிட்டார். மீண்டும் இப்போது எழுத ஆரம்பித்துள்ளார். அவர் மீண்டும் நின்றுவிடாமல் இருக்க இந்த என்கரேஜ்மெண்ட் அவார்ட் உதவட்டும்.
ஜோதி - எதிர்பதிவையும் எதிர்ப்பவருக்குப் பிடிக்கும்விதத்தில் போட்டவர். பின்னூட்டத்தில் தனி கவனம் காட்டுபவர். இவரும் தொடர்ந்து எழுத இந்த ஊக்குவிப்பு.

நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவர்களை, நண்பர்களை இந்த அவார்டைக் கொடுத்து ஊக்குவிப்பீர்கள் என நம்புகிறேன்.

நன்றி.
---
-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

புரிதலில்லாக் காதல்

அன்று இளசுகள் நாம். காதலுக்கு அர்த்தம் தெரியுமா நமக்கு? நாம் செய்ததுதான் காதல் என நம்பிக்கொண்டிருந்தோம். நெடுநாள் வாழ்ந்த நம் நட்புக்குள், ஏதோ ஒரு இன்பம், மெல்லிதாகப் படர ஆரம்பித்தது. அது நமக்கும் பிடித்திருந்தது. லேசாகப் படர்ந்ததினை, உரம் போட்டு வளர்க்க நாமொன்றும் அஞ்சவில்லை. நமது நண்பர்கள் கூட அவரவர் பங்குக்கு லேசாக தண்ணீர் தெளித்தனரே! படர்ந்த அந்தக் கொடி, நம் காலைச் சுற்றிய பாம்பு என நமக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. சந்தேகம் வலுத்த சமயம், பெரிய சச்சரவு ஒன்று நமக்குள்ளே. அது நம் நட்பெனும் போர்வையைக் கிழித்தெறிய வாய்ப்பாய்ப்போனது. மறைமுகமாய் வளந்த அந்தக் கொடியில், முதல் பூ பூத்தது போன்ற உணர்வு. நாளொருமுறை தவறாமல் பார்ப்பதும், குறைந்தது ஒரு மணி நேரம் பேசுவதும் கடமைகளாக்கிக்கொண்டோம். பார்த்தோம், சிரித்தோம், பயணித்தோம், காதலித்தோம், களித்தோம், தோம், தோம், தோம்... பெற்றோரின் கடமை முடிந்து என் கடமை உலகம் திறந்த காலம் அது. புருசலட்சணம் தேடி நான் பிரிந்த நாள் ஞாபகம் இருக்கிறதா உனக்கு? ‘நாளை முதல் எப்படிப் பார்க்காமல் இருக்கப் போகிறேன்’ என்றாய். ‘பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு சென்றதாக நினைத்துக்கொள்’ என்றேன், அதையும் ரசித்தாய் அழுகையுடன். காலங்கள் மாறின. நாம் பேசும் நேரம் குறைந்தது. திடீரென ஒரு நாள் ‘மறந்து விடு’ என்றாய். அதற்கு என்னதான் நீ காரணங்கள் சொன்னாலும், புரிந்தது எனக்கு, நம், புரிதலில்லாக் காதல்.

காதலின் சக்தியை உணர்த்தினாய், ஏமாற்றத்தின் விளைவுகளைக் நீ கண்டிருக்க வாய்ப்பில்லை. பக்க விளைவுகளின் பக்க விளைவுகள், வாந்திகளாய்க் கொட்டின. நல்லவேளை, அப்போது நீ என் அருகில் இல்லை. ’இப்படிச் செய்த நீ நன்றாகவா இருக்கப் போகிறாய்? கடவுள் இருந்தால் உன்னைச் சும்மா விடுவாரா?’ என்றெல்லாம் நீ படப்போகும் துன்பங்கள் மனதில் கரு நிழல்களாக வலம் வந்தன. தொடரும் பயணம், நம்மை, கூடவே வரும் மனிதர்களின் வாழ்க்கையோடு தொய்த்து எடுக்கின்றது, அவர்தம் அனுபவங்களையும் நம்முடன் பிணைத்துக்கொள்கிறது. இன்னும் முழுமையாக உணரவில்லை உலகம், ஆயினும், இன்று எண்ணுகிறேன், நீயும் எங்காவது வாழ்ந்துகொண்டிருப்பாய், என்னைவிட நல்ல கணவனுடன், இன்னொரு உலகத்தை உனக்குக் காட்டும் உன் குழந்தையுடன், பழசை மறந்து உன்னுடன் உறவாடும் உன் குடும்பத்துடன் என்று. வெறுப்பேதும் இல்லை உன்மேல், நம்புகிறேன், இப்போது நீயும் என் நலம்விரும்பியே என்று. ஹ்ம்ம்... காதலில்லாப் புரிதல். நட்புடனே இருந்திருக்கலாம், நம் பிள்ளைகளாவது இருந்திருக்கும், புதுப் பெயர்களுடன்.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் - ஜூலை14

முதலில் கொஞ்சம் பயனுள்ள தகவல்கள்
1. கூகுல் மொழிமாற்றியில் (Google Translator) புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு இணையதளப் பக்கத்தின் லிங்கை கொடுத்து, தேவைப்படும் மொழிகளில் இப்போது பார்த்துக்கொள்ளலாம். அடுத்து, முன்பு எழுத்துக்களை காப்பி பேஸ்ட் செய்தே மொழிமாற்றம் செய்து பார்க்க முடியும். இப்போது ஃபைலை அப்படியே அப்லோடு செய்து மொழிமாற்றம் செய்து பார்க்கலாம்.
2. இமெயில்களை எப்படி கையாளுவது என்பது பற்றி இங்கே பார்க்கலாம் - http://gmail.com/tips
3. கூகுல் பாஸ்வேர்ட் ரெகவரியில் இப்போது எஸ்எம்எஸ் மூலம் பாஸ்வேர்டை மீட்டுக்கொள்ளும் முறை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு உங்களது அக்கவுண்டில் முன்னமே மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்.ஒருவர் இதைப் பற்றி ஒரு பதிவே போட்டிருக்கிறார்.
4. இப்போது ஜிமெயிலில் ஃபைல் அட்டாச் பண்ணும் அதிகபட்ச அளவு 10MB யிலிருந்து 25MB ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 10MBக்கு மேலே உள்ள ஃபைல்களை அனுப்ப http://yousendit.com தளத்தையே பயன்படுத்தினேன்.
5. ஜிமெயிலில் லேபில்கள் வந்தது ஏற்கனவே தெரியும். இப்போது மெயில்களை அதற்குள் இழுத்துப் போடும் வசதி (Drag and Drop) சேர்க்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட யாஹூவின் அனைத்து வசதிகளும் இங்கு வந்துவிட்டன.
6. Gmail, Google Calendar, Google Docs இவையனைத்தும் BETA வெர்சனிலிருந்து வெளியே வந்துவிட்டன (Gmail 2004ல் ஆரம்பிக்கப்பட்டது).
7. Google Chrome OS - 2010 ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8. கூகுல் இமேஜ் தேடுதலில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆபாசமான படங்கள் தேடுதலில் வராமல் இருக்க ஆப்சன் உள்ளது, அதையும் மீறி வரும் படங்கள் பற்றி ரிப்போர்ட் பண்ணவும் ஆப்சன் இருக்கிறது. (இது போன்ற படங்களையே தேடுவோர், இதைப் படிக்காமல் விட்டுவிடலாம்)
9. வரும் 22ம் தேதி, சூரிய கிரகணம் - சுனாமி வர வாய்ப்புள்ளது என, ஜோதிடர் ‘நம்புங்கள்’ நாராயணன் கணித்துள்ளார். இவர் பெயரைக் கேட்டவுடனேயே நம்பிக்கை போய்விட்டது. (டெக்னாலஜி பத்தி மட்டும் தெரிஞ்சிக்கிட்டா போதுமா?)

---

படிப்பு
போன வாரம், திநகர் GLM மொட்டைமாடியில், நண்பனுடன் ஒரு பீரைப் போட்டுவிட்டு வரும்வழியில் சிகரெட் வாங்குவதற்கு (ஏய், நானும் குடிகாரந்தான், நானும் குடிகாரந்தான்) ஒரு கடையில் நின்றோம். பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அங்கே இருந்தான்.
ரெண்டு கிங்ஸ்பா
வேறண்ணா?
அவ்ளோதான்.... படிக்கிறியாப்பா?
என்ன?
ஸ்கூலுக்குப் போறியானு கேட்டேன்
அவன் அப்படியே பக்கத்தில் இருந்தவரைப் பார்த்து இளித்தான். அவனது அப்பாவா இருக்கும். அவர் கேட்டார்
என்ன?
படிக்கிறானானு கேட்டேன்
’படிச்சாச்சு படிச்சாச்சு’
எதிர்பார்க்காத பதில். அந்த வார்த்தைகளில் எவ்ளோ அர்த்தம் இருக்கு பாருங்க.

---

எதிர்பார்க்காத பதில்
நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த போது வந்த இதே போன்ற எதிர்பார்க்காத பதில்
சாப்டீங்களாண்ணே?
சாப்டிருப்பேன்!
!?!?!?...............
வித்தியாசமா இருக்குள்ள பதில்?
நல்லா கிளம்பிருக்கீங்கய்யா... சாப்டீங்களான்னு கேட்டது ஒரு குத்தமா?

---

கடைசியா ஒரு மொக்கை
(அப்போ இவ்ளோ நேரம் போட்டது மொக்கை இல்லையா?)
எல்லாம் மொக்கைதான், இதான் கடைசி மொக்கைனு சொல்ல வந்தேன், இது மெயிலில் வந்தது...
(ரைட்டு விடு)
Sardar's letter to Bill Gates:
Dear Mr.Bill Gates, We have bought a computer for our home and we have found some problems which i want to bring to your notice:
1. There is a button "Start" But there is no stop button.
2. Is there any "Re-Scooter" is available in system? i find only "Re-Cycle", coz i own only a scooter.
3. My son learnt "Microsoft Word", now he wants to learn "Microsoft Sentence", when will you provide that.
4. There is "Microsoft Office", what about "Microsoft Home", since i use this at home only.

1 personal question:
How is that your name is Gates, but you are selling "windows"?

Awaiting reply.
---
நல்லா படிச்சிட்டு சாவுங்கடா(டி).

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

மோகன்லாலுக்கு லெப்டினண்ட் கர்னல் பதவியா?? அப்போ எங்களுக்கு....................?

திரைப்படங்களில் ராணுவ அதிகாரியாக திறம்பட நடித்ததாலும், ராணுவத்தில்
சேரவேண்டும் என்ற ஆசை இருந்ததாலும், சமீபத்தில் மலையாள பட நடிகர் பத்ம ஸ்ரீ
மோகன்லாலுக்கு கௌரவ லெப்டினண்ட் கர்னல் பதவி அளித்து கௌரவித்துள்ளது
இந்திய ராணுவம்.


இதை கேள்விபட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கும் தாங்கள் திறம்பட நடித்த வேடங்க்ளுக்கு
ஏற்ப தங்களுக்கும் பதவி கிடைக்கும் என்ற கனவில் மிதக்கின்றனர்.அந்த கனவுகளில் சில..

ரஜினி காந்த் -

ராகவேந்திர பக்தனாகிய நான் ராகவேந்திரராகவே நடித்துள்ளதால் தனக்கு
2-ஆம் ராகவேந்திரர்பதவி கிடைக்கும் என்ற கனவில் பாபாவிடம் செல்ல,
அவரோ உனக்கு 2-ஆம் பாபா பதவி கிடைக்க அருள் புரிகிறேன் என
கூற ஒரே குழப்பத்தில் ரஜினி காந்த்.

கமல்-

ஜார்ஜ் புஷ் வேடத்தில் நடித்ததால் தனக்கு அமெரிக்க கௌரவ ஜனாதிபதி பதவியாவது
கிடைக்கும் என்ற கனவில் முகத்தில் mask-குடன், நாக்கு நுனி ஆங்கிலத்தை மூக்கு
வழியாக பேசி திரிவதாக தகவல்.

விஜய்-

வில்லு படத்தில் ராணுவ அதிகாரியாக வந்து மக்களை திரையரங்கை விட்டே
விரட்ட முடிந்தது போல், தீவிரவாதிகளை விரட்ட முடியும் என்பதால் தனக்கு
கௌரவ தளபதி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விமானத்தில் இருந்து
குதித்து குதித்து பயிற்சி மேற்கொள்வதாக நம்பத்தகுந்த
நண்பரான ஓட்டேரி நரியிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது.

அஜீத்-

ஏகன் படத்தில் CID-யாக தலைக்காட்டினபடியால் தனக்கு CIP- பதவியாவது உறுதி (CIP-காலேஜிலேயே இருக்கும் போலிஸ்) என்ற கனவில் கையில் புத்தகத்தையும்,
‘கன்’னையும் சுற்றி சுற்றி பயிற்சி மேற்கொள்வதாக தவல்.

விஷால்-

ஒரு ஊரில் இருந்து வேறொரு ஊருக்கு சென்று காவல்+காதல் வேலை பார்ப்பதில்
கில்லாடி என்பதால் தனக்கு ஊர்க்காவல் படை தளபதி பதவி கிடைத்து விட்டதாக
விளம்பித் திரிகிறார் விஷால்.


அர்ஜூன் -

எப்படியும் ஒரு நாள் முதல்வர் பதவி தனக்கு தான் என்ற கனவில் ஒற்றைக் காலில்
நிற்கிறார்.

சரத்-

2011-ல் முதல்வர் ஆகிறேனோ இல்லையோ, உடனடியாக 18 பட்டிக்கு
சமத்துவ நாட்டாமை பதவி கிடைக்கும் என்ற கனவில் மீசை முறுக்குகிறார்.

சிம்பு-

விரல் வித்தையில் நான் வல்லவன் என்பதால், எனக்கு போக்குவரத்து போலீஸ்
கமிஷனர் பதவி கிடைக்கும் என்ற கனவில் விரலுடன் கையையும் காலையும்
ஆட்டி ஆட்டி பயிற்சி மேற்கொள்கிறார்.

ஜீவா-

மோகன்லாலுக்கு துணையாக நடித்ததால் தனக்கு துணை லெப்டினண்ட் கர்னல் பதவி
கிடைத்தேவிட்டதாக சொல்கிறார் இவர்.

சூர்யா-

எப்படியும் CRPF -ல் சேர்ந்துவிடும் நோக்கில் தன் கட்டுமஸ்த்தான உடலை மேலும் மேலும்
மெருகேற்றுவதாக தகவல்.

விஜய காந்த்-

பேசி பேசியே பாகிஸ்த்தான் தீவிரவாதிகளை விரட்டும் தனக்கு கண்டிப்பாக
பாகிஸ்த்தான்
தீவிரவாத எதிர்ப்பு தளபதி பதவி தந்தே ஆக வேண்டும் என கண் சிவக்க புள்ளி விவரம்
சேகரித்து வருகிறார்.


பி.கு:-
இவை எல்லாம் நான் மொக்கையாக கிறுக்கினாலும் என் உள்ளத்தில் ஒரு கேள்வி.
நடித்த நடிகனுக்கு பதவி கொடுத்து, போர்க்காலத்தில் போர் புரிய அனுமதியும்
அளிக்கும் ராணுவம், திறமை உள்ள குடிமகனுக்கு போர் காலத்தில் போர் புரிய
அனுமதி அளிக்குமா????????

தெரிந்தவர்கள் சொல்லவும்---கி.கி


நமது நண்பர் ஜெகநாதன் எல்லாம் சரி.. எங்கண்ணன் ஜி.​கே. ரித்திஷு பத்தி ஒரு வார்த்த கூட ​சொல்லலியே...? என்று ஜுலை 17 அன்று வருத்தத்துடன் பின்னூட்டத்தில் பின்னியிருந்தார்.

அவருக்காக........


ஜி.​கே. ரித்திஷு-


நான் மக்காளால் தெரிந்தெடுக்கப்பட்ட M.P. அதனால் ராணுவ மந்திரி பதவியை அளிக்க
வேண்டும் நம்பி,என மீசை முறுக்கி உள்ளார். அப்படி அளித்தால் முப்படையுடன் நான்காவதாக
கலர் சட்டை படை ஒன்றை ஏற்படுத்தி எதிரிகளை கண் கூசச்செய்தே விரட்ட முடிவெடுத்துள்ளார்


கி.கிShare/Bookmark
Read More!