இப்படியே கடந்த மூன்று வாரங்கள் ஓடுகின்றன. மண்டை காய்ந்துவிட்டது. இப்படி சில நேரங்களில் மூளை வறண்டுவிடுவது போன்ற உணர்வு வரும். அப்போதெல்லாம், சிந்தனை ஊற்று வற்றிவிட்டது போன்ற ஒரு உணர்வு, வாழ்க்கை கருகி விட்டது போன்ற பயம், சிறிது நாட்களில் ரோபாட்டாக மாறிவிடுவேனோ என்கிற சந்தேகம் போன்றவை சூரியனைச் சுற்றும் கிரகங்ககள் போல என்னைச் சுற்றி வருவது போன்ற பிரம்மை ஏற்படும்.
இந்த கிரகங்களைக் கலைக்க எங்காவது வெளியூர் செல்வது வழக்கம். கடந்த மூன்று முறை கொஞ்சம் வித்தியாசம். பைக்கை எடுத்துக்கொண்டு நேரே பாண்டிச்சேரி சென்றேன். போகும்போதே மனது சிறிது தெளிந்துவிடும். ஒரு சிங்கிள் ரூம் போட்டுவிட்டு கொஞ்சமாய் குடித்துவிட்டு தூங்கிவிட்டேன். காலை எழுந்து கொஞ்சம் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பி வந்துவிட்டேன்.
இந்த முறை வீட்டிற்கு செல்லலாமெனெத் தோன்றியது. கிளம்பிவிட்டேன். 4 நாள் பயணம், திருச்செந்தூர் மற்றும் சிவகாசி. நம்ம ஊரு பரோட்டா சால்னா மணம் இப்பவே எட்டிப் பார்க்கிறது. எனது வசந்த கால நினைவுகள் புத்துயிர் பெறுவது போன்ற ஓர் உணர்வு இப்போதே எழுகிறது. நண்பர்களிடம் சொல்லியாயிற்று, சமாளிக்க முடியவில்லை, இப்போதே ஆளாளுக்கு ஒரு பிளான் சொல்கிறார்கள், அன்புத் தொல்லைகள்.
அதெல்லாம் சரி. திங்கள் திரும்பி வந்து பார்த்தால் புதிய பதிவுகள் எப்படியும் 300ஆவது இருக்கும். எப்படி அனைத்தையும் உட்கார்ந்து வாசிக்கப் போகிறேன் என நினைத்தால் இப்பவே கண்ணக் கட்டுது. வர வர எல்லாருமே நல்லா எழுதுறாங்க, முக்கியமா நிறைய எழுதுறாங்க. அது போக சில வலைப்பூக்களுக்கு நான் ரெகுலர் கஸ்டமர் வேற. எல்லாம் வந்துதான் பார்க்கனும்.
ஆகவே,
நண்பர்களே, மச்சான்ஸ், மாம்ஸ், அண்ணன்மார்களே... ஒரு நாளு நாள் இருக்க மாட்டேன். என்னிடமிருந்து பதிவுகளோ பின்னூட்டங்களோ வராது. மத்தபடி நம்ம அண்ணன் கிகி கிறுக்கிக்கொண்டே இருப்பார். வரும்போது சுவையான அனுபவங்களுடனும், படங்களுடனும் வந்து உள்நாட்டு நரகங்களில் இருப்பவர்களையும், வெளிநாட்டில் இருப்பவர்களையும் வெறுப்பேத்துகிறேன்.
நன்றி.
---
-ஏனாஓனா.

Read More!