காலை 7 மணிக்கு முழிப்பு. ஆபீஸ் கிளம்பி 9.30 க்கு அஜர். நெறைய வேலைகள், கொஞ்சம் பின்னூட்டங்கள். மதிய உணவுக்கு அலைச்சல். மீண்டும் ஆபீஸ். மாலை 7/8 மணிக்கு மீண்டும் வீடு. கொஞ்சம் டிவி. இரவு உணவு. அப்புறம் தனியே எடுக்கும் ஆர்டர்களுடன் மல்லுக்கட்டல். நிறைய அழைப்புகள் மொபைலில். கிடைக்கும் நேரத்தில் பதிவுகள். 1/2 மணிக்கு படுத்தவுடன் தூக்கம். மீண்டும் 7 மணிக்கு முழிப்பு, வந்த கனவுகள் கூட ஞாபகமில்லாமல். ஆபீஸ் கிளம்பி....
இப்படியே கடந்த மூன்று வாரங்கள் ஓடுகின்றன. மண்டை காய்ந்துவிட்டது. இப்படி சில நேரங்களில் மூளை வறண்டுவிடுவது போன்ற உணர்வு வரும். அப்போதெல்லாம், சிந்தனை ஊற்று வற்றிவிட்டது போன்ற ஒரு உணர்வு, வாழ்க்கை கருகி விட்டது போன்ற பயம், சிறிது நாட்களில் ரோபாட்டாக மாறிவிடுவேனோ என்கிற சந்தேகம் போன்றவை சூரியனைச் சுற்றும் கிரகங்ககள் போல என்னைச் சுற்றி வருவது போன்ற பிரம்மை ஏற்படும்.
இந்த கிரகங்களைக் கலைக்க எங்காவது வெளியூர் செல்வது வழக்கம். கடந்த மூன்று முறை கொஞ்சம் வித்தியாசம். பைக்கை எடுத்துக்கொண்டு நேரே பாண்டிச்சேரி சென்றேன். போகும்போதே மனது சிறிது தெளிந்துவிடும். ஒரு சிங்கிள் ரூம் போட்டுவிட்டு கொஞ்சமாய் குடித்துவிட்டு தூங்கிவிட்டேன். காலை எழுந்து கொஞ்சம் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பி வந்துவிட்டேன்.
இந்த முறை வீட்டிற்கு செல்லலாமெனெத் தோன்றியது. கிளம்பிவிட்டேன். 4 நாள் பயணம், திருச்செந்தூர் மற்றும் சிவகாசி. நம்ம ஊரு பரோட்டா சால்னா மணம் இப்பவே எட்டிப் பார்க்கிறது. எனது வசந்த கால நினைவுகள் புத்துயிர் பெறுவது போன்ற ஓர் உணர்வு இப்போதே எழுகிறது. நண்பர்களிடம் சொல்லியாயிற்று, சமாளிக்க முடியவில்லை, இப்போதே ஆளாளுக்கு ஒரு பிளான் சொல்கிறார்கள், அன்புத் தொல்லைகள்.
அதெல்லாம் சரி. திங்கள் திரும்பி வந்து பார்த்தால் புதிய பதிவுகள் எப்படியும் 300ஆவது இருக்கும். எப்படி அனைத்தையும் உட்கார்ந்து வாசிக்கப் போகிறேன் என நினைத்தால் இப்பவே கண்ணக் கட்டுது. வர வர எல்லாருமே நல்லா எழுதுறாங்க, முக்கியமா நிறைய எழுதுறாங்க. அது போக சில வலைப்பூக்களுக்கு நான் ரெகுலர் கஸ்டமர் வேற. எல்லாம் வந்துதான் பார்க்கனும்.
ஆகவே,
நண்பர்களே, மச்சான்ஸ், மாம்ஸ், அண்ணன்மார்களே... ஒரு நாளு நாள் இருக்க மாட்டேன். என்னிடமிருந்து பதிவுகளோ பின்னூட்டங்களோ வராது. மத்தபடி நம்ம அண்ணன் கிகி கிறுக்கிக்கொண்டே இருப்பார். வரும்போது சுவையான அனுபவங்களுடனும், படங்களுடனும் வந்து உள்நாட்டு நரகங்களில் இருப்பவர்களையும், வெளிநாட்டில் இருப்பவர்களையும் வெறுப்பேத்துகிறேன்.
நன்றி.
---
-ஏனாஓனா.
19 ஊக்கங்கள்:
என்ஜாய் பண்ணிட்டு வாங்க ..பதிவுலகம் பற்றிய நினைப்பு இல்லாமல்
பலருடைய வாழ்க்கை தங்களின் முதல் பத்தியை ஒத்தே அமைகிறது. என்ன செய்வது கடமை கண்ணியம் கட்டுப்பாடு. இப்ப நீங்க மனச தேத்திக்கலாம் ஏன்னா என்னுடைய அலுவலக நேரம் 9 டு 9 (பகல் மட்டுமே)
நிம்மதியா போய் சூட்ட தனிச்சிட்டு வாங்க !!!
நல்ல படியா என்சாய் பண்ணுங்க..
//வெளிநாட்டில் இருப்பவர்களையும் வெறுப்பேத்துகிறேன்.//
ரொம்ம்ம்ம்ம்ப,...............................
முட்டக்குடிச்சா முட்டிக்குமுட்டி பேத்துருவாய்ங்க
சூதானமா போட்டுவா தம்பி,.
//சிந்தனை ஊற்று வற்றிவிட்டது போன்ற ஒரு உணர்வு (ஒரு சின்டெக்ஸ் டாங்க் வச்சிருக்கலாம்) ரோபாட்டாக மாறிவிடுவேனோ என்கிற சந்தேகம் (மாப்ள உன் நெஞ்சு பிளேட்ல இன்வென்டட் பை மாம்ஸ் ஜெ-ன்னு போட்டுடு)
இந்த கிரகங்களைக் கலைக்க எங்காவது வெளியூர் செல்வது வழக்கம் (ச்சோசோ.. வெளியூருக்கு புதுசா ஒரு கெரகம் போயி இறங்கப் போவுது!) நாள் பயணம், திருச்செந்தூர் மற்றும் சிவகாசி (ஊர் மக்களுக்கு தெரிவிச்சிக்கறது என்னன்னா....) வர வர எல்லாருமே நல்லா எழுதுறாங்க (ஏய்.. உன்னை வச்சு நீயே காமடி கீமடி பண்ணலியே??) சில வலைப்பூக்களுக்கு நான் ரெகுலர் கஸ்டமர் வேற (இப்ப புரியுது ஏன் மாப்ள மண்டை காஞ்சுபோச்சுன்னு) வந்து உள்நாட்டு நரகங்களில் இருப்பவர்களையும், வெளிநாட்டில் இருப்பவர்களையும் வெறுப்பேத்துகிறேன் (இங்கதாப்பா நீ நிக்கிற! வாழ்த்துக்கள்)//
பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்!
ஓக்கே ஓக்கே வெயிட்டிங்க் ஃபார் பரோட்டாப் பதிவு!, இப்படிக்கு ரெகுலர்ஸ் சங்க சங்கா
எப்படா எங்க ஊட்டுக்கு வர்ரே????????
நண்பர்கள் தின வாழ்த்துகள்
வந்தாச்சு கிரி அண்ணே.
வாங்க பாலாஜி...
//இப்ப நீங்க மனச தேத்திக்கலாம் //
அட... இது வருத்தம் தலைவா...
நன்றி கார்த்திக்.
//குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்ல படியா என்சாய் பண்ணுங்க..//
நன்றி. தங்கள் விருப்பமே... அப்படியே என்ஜாய் பண்ண கவுண்டர் சார்பா ஏதாவது குடுத்துவுட்டுருந்தா நல்லா இருந்துருக்கும்...
மாம்ஸ் ஜெ,
முடியல... இப்படி வரிக்கி வரி விமர்சனமா...
//(இங்கதாப்பா நீ நிக்கிற! வாழ்த்துக்கள்)//
அதேதான்.
பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்!
நன்றி. இனிதே...
//jothi said...
வெளிநாட்டில் இருப்பவர்களையும் வெறுப்பேத்துகிறேன்.//
ரொம்ம்ம்ம்ம்ப,...............................
முட்டக்குடிச்சா முட்டிக்குமுட்டி பேத்துருவாய்ங்க
சூதானமா போட்டுவா தம்பி,.
//
சூதானமா வந்தாச்சு அண்ணே!
//சங்கா said...
ஓக்கே ஓக்கே வெயிட்டிங்க் ஃபார் பரோட்டாப் பதிவு!, இப்படிக்கு ரெகுலர்ஸ் சங்க சங்கா//
பரோட்டா ரெடிண்ணே, இருங்க பரிமாருறேன்...
நன்றி.
எனது நண்பர்கள் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்.
//கிறுக்கல் கிறுக்கன் said...
எப்படா எங்க ஊட்டுக்கு வர்ரே????????//
அடுத்து மண்ட காயும்போது அங்கதாண்ணே... மக்களே, கோயம்புத்தூர் பக்கத்துல இருக்குறவங்க ரெடியா இருங்க. அங்க ஒரு மீட்டிங் இருக்கும் கூடிய சீக்கிரம். கண்டிப்பா வரனும்.
ரொம்ப சாரி. நான் இந்த பதிவை படிக்காம விட்டுட்டேன் போல. அதான் எங்க ஆள காணோம்னு கேட்டேன்.
//ஒரு சிங்கிள் ரூம் போட்டுவிட்டு கொஞ்சமாய் குடித்துவிட்டு தூங்கிவிட்டேன்//
இது வேண்டாமே??? என்னம்மோ, பார்க்கும் நண்பர்கள் எல்லோரிடமும் கொஞ்சம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள்கிறேன்.
//என். உலகநாதன் said...
ரொம்ப சாரி. நான் இந்த பதிவை படிக்காம விட்டுட்டேன் போல. அதான் எங்க ஆள காணோம்னு கேட்டேன்.//
அதனால என்ன, பரவாயில்ல.
//இது வேண்டாமே??? என்னம்மோ, பார்க்கும் நண்பர்கள் எல்லோரிடமும் கொஞ்சம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள்கிறேன்.//
என்னைக் குடிக்கக் கூடாது என்று சொல்லும் உரிமை என் நண்பர்கள் அனைவருக்கும் உண்டு. ஆனால், சில விசயங்களை என்னால் யார் சொன்னாலும் கேட்க முடிவதில்லை. சரி என்றும் ஒப்புக்கும் சொல்ல மாட்டேன். (பொய்யே பேசக்கூடாது என்பது எனது கொள்கை). ஆனால், அப்படி சிலர் சொல்வதை மிகவும் எதிர்பார்க்கிறேன். அப்படிப்பட்டவர்கள் அருகிலிருக்கும்போது தம் அடிக்கக் கூட விடாமல் நம்மை (அன்பால்) பிடித்து வைப்பது ஒரு பக்கம் கஷ்டமாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஏதோ ஒரு இன்பம், சந்தோஷம் (அதை சரியாக சொல்லத் தெரியவில்லை) இருக்கும். அதையும் விரும்புகிறேன்.
Post a Comment