ஏன் அலைய விட்டாய்...........

உனக்குரியவன்

கலத்திலும் சிறந்தவனாய்,

சாந்த குணத்தினனாய்,- நன்கு

சிரித்து பேசும் முகத்தினனாய்,- உன்னிடம்

சீற்றம் சிறிதும் கொள்ளாதவனாய்

சுத்த மனத்தினனாய்,

சூது வாது அற்றவனாய்,- எங்கும்

செல்வாக்கு மிக்கவனாய்,

சேனையையும் அடக்கும் திறத்தினனாய்,

சைத்தான்யம் விரும்பாதவனாய்,

சொல்லில் மாறாதவனாய்,- உனக்கு

சோகம் உருவாக்காதவனாய்,- சகல

சௌபாக்கியம் தருபவனாய் இருக்கின்றான்அப்படி இருந்த போதிலும்
உன் மனதை
ஏன்
அலைய விட்டாய்??
என்
இனிய தோழியே!!!!!!!!

பி.கு:-நல்ல கணவன் இருந்தும் மனதை அலையவிடும் தோழிகளுக்கு
எழுதியது (sep -1996)---கி.கி


Share/Bookmark

5 ஊக்கங்கள்:

Unknown said...

அப்பாடியோவ்!சகலகலாவல்லவன்?கிட்டதட்ட ராமாயண ராமன் சாயல் அடிக்குதே?

kanagu said...

நல்ல கவிதைங்க :)

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//கே.ரவிஷங்கர் said...
அப்பாடியோவ்!சகலகலாவல்லவன்?கிட்டதட்ட ராமாயண ராமன் சாயல் அடிக்குதே?
Sun Jul 12, 04:14:00 PM
kanagu said...
நல்ல கவிதைங்க :)
Sun Jul 12, 06:20:00 PM\\


கருத்துக்களுக்கு நன்றி

Laksh said...

நல்ல புருஷனுக்கு எவை எவை அழகு என்று நயம் பட எடுத்து இயம்பி உள்ளீர்கள்... தோழா!!!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//நல்ல புருஷனுக்கு எவை எவை அழகு என்று நயம் பட எடுத்து இயம்பி உள்ளீர்கள்... தோழா!!!\\

அப்படியா தோழி!! நன்றிகள்