மீன் சாப்பாடு

நேற்று மதியம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் அருகே வேலை. எங்கு சாப்பிடுவதென்று தெரியவில்லை, தேடினேன். பேருந்து நிறுத்தம் பின்னாலேயே ஒரு சைவ உணவகம், வெரைட்டி ரைஸ் மட்டுமே இருந்தது. அருகிலேயே ஒரு அசைவ ஏசி உணவகம், பார்த்தவுடனேயே விலை அதிகம் என ஒதுங்கிகொண்டேன். பின் நண்பர் ஒருவருக்குப் போன் செய்து விசாரித்ததில் தெரிந்துகொண்ட இடம் இது.பேருந்து நிருத்தத்திற்கு சற்று தள்ளி, ஓட்டல் மேரியாட்டுக்கு நேர் எதிரே மீன் வளத்துறை அலுவலகம் உள்ளது. அதன் முன்னே சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட FISH STALL உள்ளது. அதன் உள்ளே செல்லவில்லை. வலது கடைசியில் ஒரு சிறிய வழி. உள்ளே வெட்டவெளியில் நான்கு மேசைகளும் அவற்றிற்கு குடைகளும் போடப்பட்டுள்ளன.


முதலிலேயே பணம் செலுத்தி, பின் சாப்பட்டைப் பெற்றுக்கொள்ளவேண்டும். 40 ரூபாய் சாப்பாடு. பிளஸ்டிக் தட்டில் சோறு, ஒரு துண்டு மீனுடன் குழம்பு, ரசம், மோர், அப்பளம் மற்றும் ஊறுகாய். கூட்டு என்று எதுவும் கிடையாது; பொரித்த மீன், மீன் 65 என ஏதாவது வாங்கிக்கொள்ளலாம். உட்கார நாற்காலி ஏதும் கிடையாது, நின்றுகொண்டுதான். சாப்பாடு, மீன் குழம்பு, மீன் 65 அருமை; அதிலும் ஊறுகாய் மிக மிக அருமை.


ஃபிஸ் 65


விலைப்பட்டியல் (03-ஜூலை-2009 ல்) மற்றும் திறந்திருக்கும் நேரம்எனக்கு, சென்னையில் ஒரு சில உணவகங்களையே மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யத்தோன்றும். அவற்றுள் இதுவும் சேர்ந்துவிட்டது. அதிலும் அரசு நடத்தும் இது போன்ற இடங்களில் காணப்படும் தரம் உண்மையிலேயே வியக்க வைக்கிறது.

தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம், நெய்தல் வளாகம் - நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள்.

Share/Bookmark

19 ஊக்கங்கள்:

Unknown said...

ஆஹா, மீனா? பாக்குறப்பயே நாக்குல ஊத்தெடுக்குதே!! இதுக்காகவே சென்னைக்கு ஒரு trip போட்ற வேண்டியதுதான்.. :)

முகவை மைந்தன் said...

மீன் உணவுன்னதும் பழைய நினைவுகள் கிளர ஓடி வந்துட்டேன். கடலோர சிற்றூர்களில் மீன் உணவு கிஇடைக்கும். விலை குறைவாக இருக்கும். வாளை மீன் குழம்பு தான் பெரும்பாலும். சோறு போட்டவர் வரிசை முடிக்கும் முன் தட்டு காலியாய் இருக்கும். பகல் வெய்யிலில் வேர்த்து ஊத்த, காரத்தால் கண் கலங்கி, மூக்கிலும் நீர் வர ப்ச்... இனிமேலெ வாய்க்குமா? தெரியலையே..!

முகவை மைந்தன் said...

நான் உண்டது இராமேச்வரத்துல. தொடர்வண்டி நிறுத்துக்கு எதுத்தாப்ல திண்ணை வீடு மாதிரி ஒரு ஒரு கடைல.

இது நம்ம ஆளு said...

அதிலும் அரசு நடத்தும் இது போன்ற இடங்களில் காணப்படும் தரம் உண்மையிலேயே வியக்க வைக்கிறது.

பிரமாதம்

வாங்க நம்ம பதிவுக்கு வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

Beski said...

எழில். ரா,
வாங்க வாங்க...
அப்படியே நம்ம ஊருக்கு வந்தீங்கன்னா இத விட சூப்பரா ஏற்பாடு பண்றேன்.

Beski said...

வாங்க முகவை மைந்தன்,
அழகா சொல்லிருக்கீங்க...

//இனிமேலெ வாய்க்குமா? தெரியலையே..!//
அட, நம்ம ஊருக்கு வாங்க, கண்டிப்பா கிடைக்கச் செய்கிறேன்.

கருத்துக்களுக்கு நன்றி.

Beski said...

நன்றி இது நம்ம ஆளு.

//வாங்க நம்ம பதிவுக்கு வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க//
நைட்டு வரேன்.

ரமேஷ் வைத்யா said...

ரைட். நாக்குச் செத்துப்போனதுக்கு நல்ல மருந்து.

Beski said...

வாங்க ரமேஷ் வைத்யா,
இந்த ஊருதான? போய் சாப்பிடுங்க...

ரமேஷ் வைத்யா said...

இன்னிக்கு ஆபீஸ் நண்பர்கள் மூணு பேரோட போய் சாப்பிட்டாச்சு. மீன் குழம்பு அருமை. ரசம் அதைவிட அருமை என்று நினைத்தால் மோரைப் பற்றி என்ன சொல்வது..? ஊறுகாயில் மட்டும் இன்றைக்கு உப்பு ஒரு கல் தூக்கல். மற்றபடி சூப்பர்ப். அடுத்து ஏதாவது கடை இருந்தாச் சொல்லுங்க. (போகும்போது 'எவனோ ஒருத்தன் சொன்னான்னு கிளம்பிப் போறோம். எப்பிடி இருக்கப்போகுதோ..." என்று கிண்டலடித்தபடி வந்த நண்பர்களுக்கும் சாப்பாடு ரொம்பவே பிடித்திருந்தது.)

Beski said...

என்ன தலைவா, சொல்லிருந்தா நானும் வந்திருப்பேன்ல... இன்னும் ஒரு மாசத்துக்கு இந்த ஏரியாதான். நெக்ஸ் டைம் சொல்லுங்க நானும் ஆஜர் ஆய்டுறேன்.

இப்பத்தான் சாப்ட்டு வறேன், அதுக்கு எதிரே ஒரு சைவ விடுதியில்.

iniyavan said...

நண்பா,

நான் என்னைக்கு அங்க வந்து சாப்புட்டு!!

வெளி நாட்டுல வேலை பார்ப்பதால் இழக்கும் சுகத்தில் இதுவும் ஒன்று

Beski said...

கவலப் படாதீங்க சார்,
வரும்போது சொல்லுங்க, நம்ம வீட்டுக்கே கூட்டிட்டுப் போயி சூப்பரா செஞ்சு தரேன்.

ரவி said...

என்னங்க அப்படியே ஒரு ட்ரிப் போனமாதிரி இருக்கு...

சூப்பர்..

ஒட்டும் போட்டாச்சு......

Beski said...

வாங்க செந்தழல் ரவி.
அப்பவே பதில் போட்டுருப்பேன்... உங்க பதிவப் பாத்ததும், சரி வீட்டுல போய் போட்டுக்கலாம்னு வந்துட்டேன்.
---
//சூப்பர்..
ஒட்டும் போட்டாச்சு......//
நன்றி.
ஓட்டை விட, பின்னூட்டம் பாக்கும்போதுதான் பெருமகிழ்ச்சி எனக்கு.

ஜோதிஜி said...

அசைவத்திற்கென்று பெயர் போன ஊரில் இருந்து வந்தவன் என்ற முறையில் கேட்கின்றேன் இடத்தை படம் வரைந்து பாகம் குறிப்பதை விட அதன் தொலைபேசி எண் இருந்தால் கிடைத்தால் தெரியப்படுத்துங்களேன். தேவிகளைக் கொண்டு குளிப்பாட்ட வேண்டும். அசைவத்தை மட்டுமே சாப்பிட்டு வளர்த்த நாக்கு அசைவம் சமைப்பது என்றால் கிலோ என்ன விலை? என்று துணையாள். பத்து வருடங்களாக விட்டவை இன்று இவர்களின் ஏக்கத்துக்கு உள்ளே நுழைந்து இங்கு சரியான ருசி இல்லாததால் தெரிந்த நபர்கள் கூட பணத்துக்கு ஆசைப்பட்டு சோரம் போவதால் ஏக்கமாகவே தொடர்ந்து கொண்டுருக்கிறது. தள்ளிப்போட்டுருக்கும் சென்னை விஜயத்திற்கு உங்கள் செய்தி மேலும் உற்சாகமளிக்கும் விஷயம் தான். உடன் அளித்த மின் அஞ்சலுக்கும் நன்றி. முயற்சித்துப் பார்க்கின்றேன். இணைப்புபட்டை மூலம் இணைக்க முடிந்தால் உங்களை தொடர வசதியாய் இருக்கும். நன்றி. http://texlords.wordpress.com

பிச்சைப்பாத்திரம் said...

பிரதாப், பொதுவாக நண்பர்கள் பரிந்துரைக்காத அல்லது இன்னும் அறிமுகம் ஆகாத அசைவ ஓட்டல்களுக்கு செல்வதென்றாலே எனக்கு இன்னமும் தயக்கம்தான். பரிந்துரைக்கு நன்றி. மெனக்கெட்டு போட்டோவெல்லாம் எடுத்து போட்டிருக்கீங்க. போயிடுவோம். :-)

Beski said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி Jothig.
---
சென்னையில், அசைவத்தில், எனக்கு இன்னொரு பிடித்த இடமாக இருந்தது, புரசைவாக்கம் டவ்ட்டன் அருகிலிருக்கும் டெக்கான் ஹோட்டல். ஒரு வருடத்திற்கு முன்பு அந்த ஏரியாவில் இருந்தேன். சென்னையிலேயே அங்கு மட்டும்தான் பரோட்டா சாப்பிடுவேன், நமது ஊர் காரத்துக்கும் ருசிக்கும் ஓரளவு ஒத்துப் போகும். சிக்கன், மட்டன் வகைகளும் நன்றாக இருக்கும். குடும்பத்துடன் சென்று சாப்பிடலாம், ஏசி அறையும் உண்டு.

இப்போ எப்படி இருக்கோ தெரியல.

Beski said...

வாங்க சுரேஷ் கண்ணன்.
இங்க நெறையா அசைவப் பிரியர்கள் இருக்காங்க போல இருக்கே?

உண்மைய சொல்லனும்னா, சிக்கன், மட்டன் கூட பல இடங்களில் நல்லா இருக்கும். ஆனா நல்ல மீன் அய்ட்டங்கள் இருக்கும் இடங்களை நான் பார்த்ததில்லை. இங்குதான் முதலில் கண்டேன்.
---
//பொதுவாக நண்பர்கள் பரிந்துரைக்காத அல்லது இன்னும் அறிமுகம் ஆகாத அசைவ ஓட்டல்களுக்கு செல்வதென்றாலே எனக்கு இன்னமும் தயக்கம்தான்.//
எனக்கும்தான்.

//மெனக்கெட்டு போட்டோவெல்லாம் எடுத்து போட்டிருக்கீங்க.//
பிலாக் எழுத ஆரம்பித்ததிலிருந்தே இந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது. இதைப் பற்றி எழுதல்லம் என ஒன்றை நினைக்கும்போது, கண்டிப்பாக போட்டோ எடுக்கவேண்டுமெனத் தோன்றுகிறது. மொபைல் போனின் தொழில்நுட்ப வளர்ச்சி இதற்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது.

//போயிடுவோம். :-)//
என்ஜாய்.