கமலா தியேட்டர் - புதுப் பொலிவுடன்
நேற்று சென்னை வடபழனியிலிருக்கும் கமலா தியேட்டருக்குச் சென்றிருந்தேன். சீரமைக்கப் பட்டு புதுப் பொலிவுடன் இருந்தது. இதற்கு முன் 2 வருடங்களுக்கு முன் சென்ற ஞாபகம். அப்போது ஒன்றுதான் இருந்தது, இப்போது கமலா - ஸ்கிரீன் 1, ஸ்கிரீன் 2 என இரண்டாக இருந்தது.
டிக்கட் கவுண்டரில் இருந்து, பாத்ரூம் வரை அனைத்தும் புதுப்பிக்கப்பட்டிருந்தது. இண்டீரியர் அருமை, அனைத்து இடங்களிலும். டிக்கட் கவுண்டர் - கனினி மயமாக்கப்பட்டுள்ளது, ஒரே தாளில் அனைவருக்கும் பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கட், தாள் கூட அருமை. என்ன ஒன்று, பேசுவதற்கான ஓட்டை அங்கு இன்னும் போடப்படவில்லை, குனிந்துதான் பேச வேண்டும், சீக்கிரம் போட்டுவிடுவார்களாம். முகப்பு முழுவதும் கண்ணாடிதான். டெர்மினேட்டர் - ஆங்கில பதிப்பில் ஏதோ பிழை இருப்பதால் தமிழிலேயே திரையிடப்படும், மன்னிக்கவும் என்று அறிவிப்பு; இதுக்கு எதுக்கு மன்னிப்பு, எனக்கு சந்தோசம்தான்.
உள்ளே, கேண்டீன் அமைப்பும் அருமை. அதைப் படம் எடுத்து விட்டு பாத்ரூம் சென்றேன் மொபைலுடன், படம் எடுக்க முயற்ச்சித்த என்னை அங்கு ஒன்னுக்கு இருந்துகொண்டிருந்தவரின் பார்வை அடக்கியது, எடுக்கவில்லை.
நான் சென்றது - டெர்மினேட்டர், ஸ்கிரீன் 2, டிக்கட் 75, 90(பாக்ஸ்) மினி உதயத்தை விட சிறியது என்றே நினைக்கிறேன். ஏசி சூப்பர். ஊழியர் அனைவருக்கும் சிகப்பு நிற யூனிபார்ம், வந்தவர்களைப் மிகவும் பணிவுடன் கையாள முயற்சி செய்தனர், நலம். சீட் அருமை, சாய்ந்தால் கொஞ்சம் முன்னாடி வந்து, பின்னால் சரிந்து கொள்ளும் வகையான சீட், எனக்குப் பிடித்த நீல நிறத்தில். அதைவிட ஆச்சர்யம், திரை கொஞ்சம் கூட முன்னால் இருப்பவரால் மறைக்கவில்லை, அருமையான அமைப்பு. ஒரே ஒரு குறை, தலை வைக்கும் இடத்தில் மாற்றிக் கொள்ளும்படியான துணி ஏதும் போடவில்லை, சீக்கிரம் அழுக்காகும் வாய்ப்பு அதிகம்.
டெர்மினேட்டர் - கதை ஒன்றும் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை, பார்ட் 2 போல. பார்ட் 2 வை விட நன்றாக எடுப்பது கஷ்டமே. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். ஆனால்... படம் எடுக்கப்பட்ட விதம் என்னை கடைசி வரை உட்கார வைத்துவிட்டது. குறிப்பாக, முதல் காட்ச்சியில் ஹீரோ ஹெலிகாப்டரில் ஏறுவதிலிருந்து, அடி பட்டு கீழே விழும் வரை ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட காட்சி, என்னதான் மனதில் கற்பனை பண்ணினாலும் வரமாட்டேனென்கிறது. அந்த ஒரு காட்சிக்காகவே இன்னோரு முறை சிடியிலாவது பார்ப்பேன். தமிழில் பார்க்காவிட்டால் கண்டிப்பாக எனக்குப் புரிந்திருக்காது.
மொத்ததில் புதுப் பொலிவுடன் கமலா தியேட்டர் - நன்றாக உள்ளது.
---
7 ஊக்கங்கள்:
பகிர்தலுக்கு நன்றி.ஒரு நாள் போய் படம் பார்க்க வேண்டியதுதான்.
வருகைக்கு நன்றி ரவிஷங்கர்.
தற்போது திரை அரங்கு பராமரிப்பில் அனைவரும் கவனம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது..
மட்டமான பராமரிப்புள்ள திரை அரங்குகளை மக்கள் புறக்கணித்தாலே இதை போன்ற திரை அரங்குகள் வர வாய்ப்பு..(டிக்கெட் விலை தான் மக்களை யோசிக்க வைக்கும்)
வாங்க கிரி.
//திரை அரங்கு பராமரிப்பில் அனைவரும் கவனம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது//
ஆமாம்.
//மட்டமான பராமரிப்புள்ள திரை அரங்குகளை மக்கள் புறக்கணித்தாலே//
இது கொஞ்சம் கஷ்டம்தான்.
கருத்துக்களுக்கு நன்றி.
//Congrats!
Your story titled 'ஏதோ டாட் காம்: கமலா தியேட்டர் - புதுப் பொலிவுடன்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 2nd July 2009 06:00:01 AM GMT//
நன்றி மக்களே!
நல்லா அனுபவ பதிவு தல.... உங்க பதிவு படங்களோட கலக்கலா இருக்குதுங்க....
நன்றி சுகுமார்.
நம்ம பதிவுகலோட சிறப்பே நேரடிப் படங்கள்தான்.
Post a Comment