மோகன்லாலுக்கு லெப்டினண்ட் கர்னல் பதவியா?? அப்போ எங்களுக்கு....................?

திரைப்படங்களில் ராணுவ அதிகாரியாக திறம்பட நடித்ததாலும், ராணுவத்தில்
சேரவேண்டும் என்ற ஆசை இருந்ததாலும், சமீபத்தில் மலையாள பட நடிகர் பத்ம ஸ்ரீ
மோகன்லாலுக்கு கௌரவ லெப்டினண்ட் கர்னல் பதவி அளித்து கௌரவித்துள்ளது
இந்திய ராணுவம்.


இதை கேள்விபட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கும் தாங்கள் திறம்பட நடித்த வேடங்க்ளுக்கு
ஏற்ப தங்களுக்கும் பதவி கிடைக்கும் என்ற கனவில் மிதக்கின்றனர்.அந்த கனவுகளில் சில..

ரஜினி காந்த் -

ராகவேந்திர பக்தனாகிய நான் ராகவேந்திரராகவே நடித்துள்ளதால் தனக்கு
2-ஆம் ராகவேந்திரர்பதவி கிடைக்கும் என்ற கனவில் பாபாவிடம் செல்ல,
அவரோ உனக்கு 2-ஆம் பாபா பதவி கிடைக்க அருள் புரிகிறேன் என
கூற ஒரே குழப்பத்தில் ரஜினி காந்த்.

கமல்-

ஜார்ஜ் புஷ் வேடத்தில் நடித்ததால் தனக்கு அமெரிக்க கௌரவ ஜனாதிபதி பதவியாவது
கிடைக்கும் என்ற கனவில் முகத்தில் mask-குடன், நாக்கு நுனி ஆங்கிலத்தை மூக்கு
வழியாக பேசி திரிவதாக தகவல்.

விஜய்-

வில்லு படத்தில் ராணுவ அதிகாரியாக வந்து மக்களை திரையரங்கை விட்டே
விரட்ட முடிந்தது போல், தீவிரவாதிகளை விரட்ட முடியும் என்பதால் தனக்கு
கௌரவ தளபதி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விமானத்தில் இருந்து
குதித்து குதித்து பயிற்சி மேற்கொள்வதாக நம்பத்தகுந்த
நண்பரான ஓட்டேரி நரியிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது.

அஜீத்-

ஏகன் படத்தில் CID-யாக தலைக்காட்டினபடியால் தனக்கு CIP- பதவியாவது உறுதி (CIP-காலேஜிலேயே இருக்கும் போலிஸ்) என்ற கனவில் கையில் புத்தகத்தையும்,
‘கன்’னையும் சுற்றி சுற்றி பயிற்சி மேற்கொள்வதாக தவல்.

விஷால்-

ஒரு ஊரில் இருந்து வேறொரு ஊருக்கு சென்று காவல்+காதல் வேலை பார்ப்பதில்
கில்லாடி என்பதால் தனக்கு ஊர்க்காவல் படை தளபதி பதவி கிடைத்து விட்டதாக
விளம்பித் திரிகிறார் விஷால்.


அர்ஜூன் -

எப்படியும் ஒரு நாள் முதல்வர் பதவி தனக்கு தான் என்ற கனவில் ஒற்றைக் காலில்
நிற்கிறார்.

சரத்-

2011-ல் முதல்வர் ஆகிறேனோ இல்லையோ, உடனடியாக 18 பட்டிக்கு
சமத்துவ நாட்டாமை பதவி கிடைக்கும் என்ற கனவில் மீசை முறுக்குகிறார்.

சிம்பு-

விரல் வித்தையில் நான் வல்லவன் என்பதால், எனக்கு போக்குவரத்து போலீஸ்
கமிஷனர் பதவி கிடைக்கும் என்ற கனவில் விரலுடன் கையையும் காலையும்
ஆட்டி ஆட்டி பயிற்சி மேற்கொள்கிறார்.

ஜீவா-

மோகன்லாலுக்கு துணையாக நடித்ததால் தனக்கு துணை லெப்டினண்ட் கர்னல் பதவி
கிடைத்தேவிட்டதாக சொல்கிறார் இவர்.

சூர்யா-

எப்படியும் CRPF -ல் சேர்ந்துவிடும் நோக்கில் தன் கட்டுமஸ்த்தான உடலை மேலும் மேலும்
மெருகேற்றுவதாக தகவல்.

விஜய காந்த்-

பேசி பேசியே பாகிஸ்த்தான் தீவிரவாதிகளை விரட்டும் தனக்கு கண்டிப்பாக
பாகிஸ்த்தான்
தீவிரவாத எதிர்ப்பு தளபதி பதவி தந்தே ஆக வேண்டும் என கண் சிவக்க புள்ளி விவரம்
சேகரித்து வருகிறார்.


பி.கு:-
இவை எல்லாம் நான் மொக்கையாக கிறுக்கினாலும் என் உள்ளத்தில் ஒரு கேள்வி.
நடித்த நடிகனுக்கு பதவி கொடுத்து, போர்க்காலத்தில் போர் புரிய அனுமதியும்
அளிக்கும் ராணுவம், திறமை உள்ள குடிமகனுக்கு போர் காலத்தில் போர் புரிய
அனுமதி அளிக்குமா????????

தெரிந்தவர்கள் சொல்லவும்



---கி.கி


நமது நண்பர் ஜெகநாதன் எல்லாம் சரி.. எங்கண்ணன் ஜி.​கே. ரித்திஷு பத்தி ஒரு வார்த்த கூட ​சொல்லலியே...? என்று ஜுலை 17 அன்று வருத்தத்துடன் பின்னூட்டத்தில் பின்னியிருந்தார்.

அவருக்காக........


ஜி.​கே. ரித்திஷு-


நான் மக்காளால் தெரிந்தெடுக்கப்பட்ட M.P. அதனால் ராணுவ மந்திரி பதவியை அளிக்க
வேண்டும் நம்பி,என மீசை முறுக்கி உள்ளார். அப்படி அளித்தால் முப்படையுடன் நான்காவதாக
கலர் சட்டை படை ஒன்றை ஏற்படுத்தி எதிரிகளை கண் கூசச்செய்தே விரட்ட முடிவெடுத்துள்ளார்


கி.கி







Share/Bookmark

7 ஊக்கங்கள்:

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ் நீங்களும் மொக்கை போட ஆரம்பிச்சுட்டாலும்...கடைசியில நல்ல கேள்வி கேட்டீங்க.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//அவ்வ்வ்வ் நீங்களும் மொக்கை போட ஆரம்பிச்சுட்டாலும்...கடைசியில நல்ல கேள்வி கேட்டீங்க.\\

ஆமா அந்த கேள்விக்கு பதில் தெரியுமா??

கிரி said...

:-))))

Nathanjagk said...

ரொம்ப ஆச்சரியம். ​மோகன்லால் விருது நியூஸ்ல பாத்தவுடனே, நம்ம நடிகர்கள வச்சு ஒரு இடுகை ​போடணும்னு எழுத ஆரம்பிச்சேன். படங்கள் கூட டவுன் ​லோடு பண்ணுனேன்.. ஏனோ எழுதாம ​போயிடுச்சு! உங்க இடுகை அப்படியே நான் நினைச்ச மாதிரியே வந்திருக்கு! வாழ்த்துக்கள்! எல்லாம் சரி.. எங்கண்ணன் ஜி.​கே. ரித்திஷு பத்தி ஒரு வார்த்த கூட ​சொல்லலியே...?

Beski said...

வருகைக்கும் கருத்துக்கும்(!) நன்றி கிரி. (அண்ணன் கிகி கொஞ்சம் பிசி)

Beski said...

//உங்க இடுகை அப்படியே நான் நினைச்ச மாதிரியே வந்திருக்கு! வாழ்த்துக்கள்//
நன்றி ஜெகநாதன்.

//எங்கண்ணன் ஜி.​கே. ரித்திஷு பத்தி ஒரு வார்த்த கூட ​சொல்லலியே...?//
அண்ணன் கிகி இப்போது ஊரில் இல்லை. வந்ததும் உங்க ஃபேவரட் வீரத்தளபதி பற்றிய தகவலை தரச் சொல்கிறேன்.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//ஜெகநாதன் said...
ரொம்ப ஆச்சரியம். ​மோகன்லால் விருது நியூஸ்ல பாத்தவுடனே, நம்ம நடிகர்கள வச்சு ஒரு இடுகை ​போடணும்னு எழுத ஆரம்பிச்சேன். படங்கள் கூட டவுன் ​லோடு பண்ணுனேன்.. ஏனோ எழுதாம ​போயிடுச்சு! உங்க இடுகை அப்படியே நான் நினைச்ச மாதிரியே வந்திருக்கு! வாழ்த்துக்கள்!\\


ஆச்சரிய ஒற்றுமை, அதை சொன்னதற்கும் நன்றி. ஆமா அந்த போட்டோவெல்லாம் எங்கே மெயிலுக்கு அனுப்பினா அதையும் சேர்த்து போடுவமில்ல ஹி ஹி ஹி......!!!





// எல்லாம் சரி.. எங்கண்ணன் ஜி.​கே. ரித்திஷு பத்தி ஒரு வார்த்த கூட ​சொல்லலியே...?\\


ஆளுங்கட்சி?? அடி வாவ்ங்க திராணியில்லைங்கண்ணோ....
இருந்தாலும் கிறுக்குகிறேன்