நிஜமானதால்............

பரிச்ச்சய
பார்வையில் துவங்கி- அந்த
பார்வைலேயே
பரிணமித்த
புன்சிரிப்பாய் தோழமை


பிரிவோம் என்பதை உணராமல்
பிணைத்துக்கொண்ட நட்பு

முடிவுரை தெரியாமல்
முகப்புரை நெருக்கம்

தொங்கின முகங்குளுடன்
தொலைத்த நட்பு
தொடர் ரணங்களாய் மனதில்

இலையுதிர் காலமாய் போன ஊடலில்
இனிய வசந்தத்தின் தேடலாய் மனது

சாலையோரத்தில் ரோமியோக்கள் போல
சத்தமிட்டு திரிந்தது இனிய
நினைவுகளாய்
நெஞ்சில்

நிஜங்களின் நிழலாய்
நினைவில் நிறுத்த -சில
நிழற்படங்கள்


நட்பை காதலென்று நினைத்து
மூக்குடைபட்டது நினைவின் ஒரு மூலையில்

சுத்தமான காதலை நட்பென்று
சுதந்திரம் கொண்டாடி
சுத்த மண்டு என பேர் வாங்கினது
சுகமான வேதனையாய் உள்ளத்தில்


நட்பை மதிக்காத
நயவஞ்சகர்களும் இருந்தனர்
நம் கூட்டத்தில்

கல்லூரிப்பிரிவில்
காய்ந்த கண்களுடன்
கண்ணீர் விட இயலாது
கல்லாய் நின்றது
கனலாய் மனதில்

இப்படி பல இருந்தும்
நம் நட்பு நிஜமானதால் ..
நினைத்திராமல்
சந்திக்கிறோம்
நடு சந்தியில்.



பி.கு:-1996-ம் ஆண்டு பிரிந்த நண்பன் ஒருவனை
1999-ம் ஆண்டு ஈரோட்டில் நடுரோட்டில்
சந்தித்தேன். அன்று கிறுக்கியது இந்த கிறுக்கல்


----கி.கி


Share/Bookmark

8 ஊக்கங்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹீம்ம்ம்ம்ம்ம்... ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல..

தேவன் மாயம் said...

கல்லூரிப்பிரிவில்
காய்ந்த கண்களுடன்
கண்ணீர் விட இயலாது
கல்லாய் நின்றது
கனலாய் மனதில்
//

நிஜங்களின் வலிகளை
வடித்துள்ளீர்கள்!!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//ஹீம்ம்ம்ம்ம்ம்... ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல..\\

கிறுக்கல் பிடிக்கலையா??

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//நிஜங்களின் வலிகளை
வடித்துள்ளீர்கள்!!\\


ஆம் நிஜங்களே...

jothi said...

கவிதை எழுத்து வடிவம் அட்டகாசமான கலக்கல், ஆனால் நோக்கம் இல்லாத மாதிரி இருக்கு,..

ஆனால் 1999 ஆம் ஆண்டு எழுதிய கவிதை என்றால் இது கண்டிப்பாக அட்டகாசம்தான். இப்ப ஏன் எழுத மாட்டிறீங்க,.. காதல் கை கூடிருச்சா??

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//கவிதை எழுத்து வடிவம் அட்டகாசமான கலக்கல், ஆனால் நோக்கம் இல்லாத மாதிரி இருக்கு,..\\

அனுபவ நிகழ்வுகளை கிறுக்கும்போது என்னங்க நோக்கம் இருக்கும்..


//ஆனால் 1999 ஆம் ஆண்டு எழுதிய கவிதை என்றால் இது கண்டிப்பாக அட்டகாசம்தான். இப்ப ஏன் எழுத மாட்டிறீங்க,.. காதல் கை கூடிருச்சா??\\


எழுதுவதே இல்லை என்பதற்கில்லை, நிறைய குறைந்து விட்டது.மற்றபடி காதல் கை கூடவில்லை, நல்ல மனைவி கை கூடியிருக்கிறாள்

Beski said...

//நல்ல மனைவி கை கூடியிருக்கிறாள்//
:)

எழில் said...

// நட்பை மதிக்காத
நயவஞ்சகர்களும் இருந்தனர்
நம் கூட்டத்தில் //

மிகவும் நிதர்சனமான வரிகள்..