தந்தை, மகன் மற்றும் பயணம்
இரண்டும் சமீபத்தில் பார்த்த படங்கள், அடுத்தடுத்து. அதெப்படி இந்த இரு படங்களும் இவ்வாறு பார்க்க நேர்ந்ததென்று தெரியவில்லை. அந்த அளவுக்கு இரண்டுக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன.இரண்டிலும் ஒரு தந்தை, ஒரு மகன், ஒரு பயணம். இரண்டுமே மனதைப் பாதித்த காட்சிகள், முடிவுகள். ஆனால் ஒவ்வொரு கதைக்களமும் முழுதும் வெவ்வேறு, நோக்கம் ஒன்று.
முதலில் தி ரோடு. கற்பனைக் களம். உலகம் அழியும் தருவாயில் என்னவெல்லாம் நடக்குமென்கிற கற்பனை. திடீர் திடீரென்று காட்டுத்தீ, நிலநடுக்கம், மழை என மிரட்டும் உலகம். தாவரங்களெல்லாம் அழிந்த நிலை. உணவு என்பதே கிடையாது. மனித இனத்தையே பார்க்க முடியாத நிலை. அப்படியே மனிதர் யாரேனும் எதிர்பட்டால்? ஒன்று அவரது வயிற்றுப் பசிக்கு உணவாகும் நிலை, அல்லது உடல் பசிக்கு, இங்கு ஆண் பெண் என்ற பேதம் கிடையாது. இந்த நிலையில் தனது மகனுடன் பயணப்படும் ஒரு தந்தை. மகனைக் கொடிய மனிதர்களிடமிருந்து காப்பாற்றி அழைத்துச் செல்லும் காட்சிகள் தந்தையுணர்வை கூட்டிக் காட்டுகின்றன. மனைவியின் நினைவுகள் வழியே அழிவின் பயங்கரத்தை, பயங்கரமில்லாமல் உணர முடிகிறது.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஆயிரத்தில் ஒருவன் குறித்த ஒரு கேள்விதான் ஞாபகத்திற்கு வருகிறது. ”அப்படி வாழ்ந்த சோழர்கள் இப்படி மாமிசத்திற்காகவா அடித்துக்கொள்வார்கள்?”- இந்தப் படம் பார்க்கும்போது அது போன்ற கேள்விகள் எழவில்லை. உணவில்லாத யுகத்தில் இப்படித்தான் எதிர்படும் மனிதர்களும் இரையாவார்கள் என்பது விளக்காமலேயே விளங்குகிறது. ஒருவேளை ஆ.ஒ. இயக்குனர் பார்வையாளனுக்குப் புரியவைப்பதில் தோற்றுப்போயிருக்கலாம்.
அடுத்து, லாஸ்ட் ரைட். இதுவும் அதேபோல, ஒரு தந்தை தனது மகனுடன் ஒரு பயணம். காட்சிகள் அவனைப் பற்றியும் அவனது குணங்கள் பற்றியும் விளக்காமலேயே விளக்குகின்றன. சரியான போக்கிரி, காட்டுமிராண்டி, கோபம் வந்தால் தனது மகனை ரத்தம் வருமளவு கூட அடிப்பவன். பின்பு பாசத்தால் வருத்தப்படுபவன். கையில் காசில்லாமல் இப்படி ஏன் அலையவேண்டுமென்ற கேள்விக்கு பதில் தெரியும்போது எனக்குள்ளே ஒரு பதபதைப்பு. அந்தக் காரணம் புரியாமல் மகன் பேசுவது தந்தை மீது பரிதாபம். முக்கியமாக இந்தப் படத்தில் ஈர்த்த இன்னொரு விசயம், அந்த பின்னணி சப்தம். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தெரிந்த அது, படத்துடன் செல்லச் செல்ல மனதை ஏதோ செய்தது ஏனென்று தெரியவில்லை. மெதுவாக நகரும் காட்சிகளாக இருந்தாலும் ஏனோ தொடர்ந்து பார்க்கச் செய்தது.
இரு படங்களுமே தந்தையுணர்வை அள்ளிக் கொட்டி மனதைக் கரையவைக்கும் படங்கள். ஒன்று பயங்கரமாக, கோடாரி கொண்டு இதயத்தைக் கிழித்தது, இன்னொறு மெதுவாகக் கத்தியை நெஞ்சத்தில் இறக்கியது.
-அதி பிரதாபன்.
17 ஊக்கங்கள்:
வந்துடோம்ல.... நல்லா இருக்கு.. உங்க விமர்சனம் வாழ்த்துகள்.(முதல்ல வரவங்களுக்கு தங்க செயின், வைரமோதிரம் ஏதாவது பரிசு இருந்தால்.. வீட்டுக்கு அனுப்புங்க.. வீட்டு முகவரி வேனும்னா மின்னஞ்சல் அனுப்புங்க..)
யாரப்பா அது,
கூட்டத்துக்குள்ள கத்தியக்காட்டி மிரட்டி முன்னாடி வந்து டிக்கட் வாங்குறது?
கூட்டமே இல்ல, இங்க வந்து முன்னாடி டிக்கட் எடுக்குறதா பெரிய விசயம்... ஆனாலும் உங்க மன தைரியத்தைப் பாராட்டி நமது கம்பேனி, ஒரு மாலையில் டீயும் பொறையும் வழங்கி கௌரவப்படுத்தும் என தாழ்மையுடனும், நன்றியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம்.
---
நன்றி பிரவின்குமார்.
அப்றம் கதாநாயகர்களைப் பற்றி சொல்ல மறந்துட்டேனே.
ரோடு ஹீரோ லார்ட் ஆப் த ரிங்ஸில் அதிரடி காட்டியவர்.
லாஸ்ட் டைடு ஹீரோ மாட்ரிக்ஸில் மிரட்டியவர். இவர்களை இவ்வாறு பார்ப்பதும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
அருமையான படங்கள் இரண்டும். உங்கள் விமர்சனமும் கூட.
ஸ்ஸபா.... ஓவரா.. கண்ண கட்டுதே.... என்னங்க... உங்களுக்கு கூட்டமே தெரியலையா?? நாளைக்கு பாருங்க...!! (உங்க பதிவுகளை படிப்பதுண்டு கருத்துக்கள் மட்டும் அளிக்க இயலாது அலுவலகத்தில் orgut, blogger, youtupe எல்லாம் கட்டு) நீங்க கம்பெனில சொல்லி ஏதாவது பண்ணமுடியுமானு பாருங்க..
பகிர்வுக்கு நன்றி.. வரட்டுமா....!!!
அதி பிரதாபா..!
நீ எழுதியிருப்பது சினிமா விமர்சனமா..?
இப்பதான் last sunset படிச்சுட்டு வர்றேன்.. உன் விமர்சனமும் மனசை பிழிகிறது.. இந்த இரு படங்களோட The pursuit of Happiness யையும் சேர்த்துக்கொள்ளலாம் ஆதி... ரொம்ப ஆப்ட்டா இருக்கும்.
ஏலேய்ய்ய்ய் இது விமர்சனமா? கூட பத்து பதினைஞ்சு லைன் சேர்த்து எழுதினா என்ன? அம்புட்டு பிசியா?
நன்றி இராமசாமி.
மீண்டும் நன்றி, நம்ம கம்பெனில விசாரிக்கிறேன் பிரவின்குமார், ஓட்டை ஏதாவது சிக்குதான்னு பாப்போம்...
அண்ணன் உ.த. அவர்களே,
இது விமர்சனம் அல்ல, பகிர்வு. விமர்சனம் போலவும் தெரியலாம். அதுவும் உங்க விமர்சனமெல்லாம் படிச்சா இதெல்லாம் விமர்சனமாகவே தெரியாது. உங்களை வழக்கமாக படிக்கும் நபர் ஒருவரும் கீழே கூவுகிறார் பாருங்கள். வருகைக்கு நன்றி.
அண்ணன் அசோக்,
உண்மையிலேயே அந்தப் படமும் இந்த பட்டியலில் சேரும். அதில் சோகத்தோடு ஒரு சுகமும் இருக்கும். இவைகளில் அது இல்லை.
சார், மறந்துட்டேன், டா...க்டர் எம்.பி.பி.எஸ். நன்றி.
ஆதவா,
லேபில்ல அப்படி ஏதாவது போட்டோமா? ரசிகக் கண்மணிகள் கண்களுக்கு அவ்வாறு தெரிந்தால் கம்பேனி பொறுப்பேற்காது. சந்தோசப்படும்.
நன்றிலே.
/அதி பிரதாபா..!
நீ எழுதியிருப்பது சினிமா விமர்சனமா..?
//
அண்ணே எல்லாரையும் உங்களைப் போலவே நினைக்கக்கூடாது..:)
விமர்சனத்திற்கு நன்றி..
அதி - நான் சாதாரணமாகப் படங்கள் பார்ப்பதில்லை. ஆனால் விமரிசனங்கள் படிப்பேன். இரண்டு படங்களை ஒரே நோக்கில் விமரிசனம் செய்துள்ளது, நன்றாக உள்ளது.
அதி,
ரோட் படம் ஏற்கனவே பார்த்துட்டேன். அருமையான படம். இரண்டாவது பார்க்கலை. பார்த்துடறேன்.
விமர்சனம் அருமையா பண்ணியிருக்கு. நீயும் எழுத்தாளர்தான். ஒத்துக்கறோம். உன் கிட்டேயும் கத்தி இருக்கு.
நீங்கள் தந்த குறிப்புகளும், படங்களும் படங்களைப் பார்க்கும் ஆவலைத்தூண்டுகின்றன. எனக்கு சில சிடிக்கள் தரேன்னு சொல்லியிருந்தீங்க.. ஒண்ணு கூட வந்தபாடில்லை. :-)
ஆதரவுக்கு நன்றி கேபில்ஜி.
நன்றி புலிகேசி.
நன்றி கௌதமன்.
நன்றி அகநாழிகை.
ரெண்டாவதும் நல்லா இருக்கு, பாருங்க...
//நீயும் எழுத்தாளர்தான்.//
ஆரம்பத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் என்னை உசுப்பேத்துவதற்கு நன்றி.
நன்றி ஆதி,
//எனக்கு சில சிடிக்கள் தரேன்னு சொல்லியிருந்தீங்க.. ஒண்ணு கூட வந்தபாடில்லை//
காண்டு (பின்னூட்டமெல்லாம் போடும்போதே) தெரிகிறது. இந்த வார இறுதியில் அந்தப் பக்கம் வரும் திட்டம் உள்ளது. முயற்சி செய்கிறேன்.
hi...my friends
is my first time to visiting her..., wow this is great writing, I have not read that as good as this. and I agree with very good writing. keep on blogging my friends. can we link x-change with me. tell me ok.
வணக்கம் நண்பரே எப்படி சுகங்கள் எல்லாம்!! அருமையான பதிவு. சீக்கிரத்தில் படத்தையும் பார்த்திடுறன்.
Post a Comment