மீள் இயக்கம்

எழும்போது மகிழ்ச்சியில்லை உள்சென்றதும் உடனே குளியல் கண்ணாடியில் தெரியவில்லை முகம் இயல்பு இயல்பாகவே குழந்தைகள் கண்ணில் குழந்தைகளாய் அலைகள் முன்னே அலைகளாய் பாதைகள் பாதைகளாக மட்டுமே பயணம் தவறிப் போவதில்லை நிலவு குளிர்கிறது சூரியன் சுட மட்டுமே செய்கிறது மேகங்கள் மேகங்களாகவே மாறித் தெரிவதில்லை பாயாசம் இனிக்கிறது வேப்பங்காய் கசக்கிறது மலர்கள் அப்படியே சுவையில் மாற்றமில்லை தட்டில் கோலங்கள் இல்லை சிகரெட் கையைச் சுடுவதில்லை வெறித்துப் பார்க்கும் விட்டம் இல்லை சிந்தனையில் சிதறல் இல்லை மறுபடியும் என எழுத நினைக்கையில் இயங்கவில்லை எண்டர் பட்டன்.

-அதி பிரதாபன்.

இது உரையாடல் கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படலாம்.


Share/Bookmark

22 ஊக்கங்கள்:

மணிஜி said...

எழும்போது மகிழ்ச்சியில்லை உள்சென்றதும் உடனே
குளியல்
கண்ணாடியில் தெரியவில்லை முகம் இயல்பு இயல்பாகவே குழந்தைகள் கண்ணில் குழந்தைகளாய் அலைகள் முன்னே அலைகளாய் பாதைகள் பாதைகளாக மட்டுமே
பயணம்
தவறிப் போவதில்லை
நிலவு குளிர்கிறது
சுட மட்டுமே செய்கிறது
சூரியன்
மேகங்கள் மேகங்களாகவே
பாயாசம் இனிக்கிறது
கசக்கிறது வேப்பங்காய்
மலர்கள் அப்படியே
சுவையில் மாற்றமில்லை தட்டில் கோலங்கள்
இல்லை சிகரெட் கையைச் சுடுவதில்லை
வெறித்துப் பார்க்கும் விட்டம் இல்லை சிந்தனையில் சிதறல் இல்லை மறுபடியும் என எழுத நினைக்கையில் இயங்கவில்லை எண்டர் பட்டன்.

☀நான் ஆதவன்☀ said...

//இது உரையாடல் கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படலாம்.//

எங்க வேணா அனுப்பு... மவனே என் மெயிலுக்கு மட்டும் அனுப்பிறாத... ராஸ்கல் என்னா கொலவெறி!

Beski said...

ஆஹ்ஹா....
ஒரு ஃபார்மேட்டு ரெடி. நன்றி தண்டோரா அண்ணே. இப்படியே 5 பேரு முயற்சி பண்ணினா அதுல பெஸ்ட்டா ஒன்ன எடுத்து போட்டிக்கு அனுப்பி வச்சிடலாம்.

மாப்பி,
மன்னிக்கனும், ஒரிஜினல் ஃபார்மேட்ட கடைசியில மெயில்ல அனுப்பி வைக்கிறேன்.
நன்றி ஆதவா.

Raju said...

இதுக்கு ஒரு ஸ்மைலி போடலாமா..?
இல்லை ரெண்டு ஸ்மைலி போடலாமா..? பேசாம போயிரலாமா..?

சங்கர் said...

எழும்போது மகிழ்ச்சியில்லை
உள்சென்றதும் உடனே குளியல் கண்ணாடியில் தெரியவில்லை முகம்
இயல்பு
இயல்பாகவே குழந்தைகள் கண்ணில் குழந்தைகளாய்
அலைகள்
முன்னே அலைகளாய்
பாதைகள்
பாதைகளாக மட்டுமே பயணம் தவறிப் போவதில்லை
நிலவு குளிர்கிறது
சூரியன் சுட மட்டுமே செய்கிறது மேகங்கள்
மேகங்களாகவே மாறித் தெரிவதில்லை
பாயாசம்
இனிக்கிறது வேப்பங்காய்
கசக்கிறது மலர்கள்
அப்படியே சுவையில் மாற்றமில்லை தட்டில் கோலங்கள் இல்லை
சிகரெட் கையைச் சுடுவதில்லை
வெறித்துப் பார்க்கும் விட்டம் இல்லை சிந்தனையில் சிதறல்
இல்லை மறுபடியும் என எழுத நினைக்கையில்
இயங்கவில்லை
எண்டர் பட்டன்.

Romeoboy said...

அப்பா உங்கள் என்டர் பட்டன் நசுங்கி போனதில் எனக்கு ஒரு சந்தோசம் .. வேறு ஒண்ணும் இல்லை இந்த என்டர் பட்டனை தட்டிதட்டி மண்டை காய வைகிறங்க

Ashok D said...

’எண்டர் பட்டன்’ என்றவுடன் first எண்டர் ஆவது யாருன்னு பாருங்க மகாஜனங்களே. ஜி.. நீங்க ரொம்ப நல்லவர் போல.

Cable சங்கர் said...

எப்பூடி.. நம்ம எண்டர் பட்டன் விஷய்ம்.. எபபூடி பரவுது.. பாரு..

creativemani said...

தலைவருக்கு ஒரு எண்டர் பட்டன் பார்சேல்ல்ல்ல்லல்....

குறை ஒன்றும் இல்லை !!! said...

இத எழுதி முடிச்சதும் கீ போர்டே இயங்கி இருக்காதே ???

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இது உரையாடல் கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படலாம்.//

வீட்டுக்கு ஆட்டோ வரும் பரவால்லியா ?

அத்திரி said...

ஆஹா.........ரைட்டு

Venkatesh Kumaravel said...

ஆரம்பிக்கும்போதே இப்புடியா?

jothi said...

//வீட்டுக்கு ஆட்டோ வரும் பரவால்லியா ?//

ஆட்டோவோடு நிப்பாட்டிக்கங்க, பஸ் எதுவும் அனுப்பிராதீங்க,.. பாவம், அறியாப்பிள்ளை தெரியாம பண்ணிருச்சு,..

Beski said...

நன்றி ராஜூ,
பேசாம போகாம இருந்ததுக்கு.

நன்றி சங்கர்,
ஃபார்மேட் 2 ரெடி.

நன்றி ரோமியோ,
இன்னொரு கீபோர்டு வாங்கிடுறேன், எழுதுனதும் மொத காப்பி உங்களுக்குத்தான்.

நன்றி டாக்டர் (இன் ஆல் சப்ஜக்ட்),
ஹி ஹி ஹி... எண்டர்னாலே மொத எண்டர் அண்ணந்தான்.

நன்றி கேபிள்ஜி,
எப்பூ....டி?

Beski said...

நன்றி மணிகண்டன்,
சொல்றதான் சொல்றீங்க, கீபோர்டோட சேத்து சொல்லுங்க.

நன்றி ராஜ்,
அப்போ வேற ஏதாவது எழுதி அனுப்பவா? இத்தோட நிறுத்திக்க்லாம்னு பாத்தேன். இத அனுப்ப வேணாம், நல்லா இல்ல, வேற எழுதி அனுப்புன்னு சொல்றீங்க...

நன்றி அத்திரி,
ரைட்டு, ஸ்டார் பண்ணியாச்சு, இந்த மாசம் முழுதும் கவிதை முயற்சிதான். நீங்கதான் பாவம்.

நன்றி வெங்கி,
ஹி ஹி ஹி... இதுக்கே அசந்துட்டா எப்படி? ஜனவரி 14 வரை வந்துகிட்டே இருக்கும்...


நன்றி ஜோதி,
நீங்க ஒருத்தராவது என் மேல பரிதாபப்படுறீங்களே, இத வாசிச்சதுக்கு அப்புறமும். ரொம்ப சந்தோசம்.

அடலேறு said...

நல்லாயிருக்கு அதி

ரோஸ்விக் said...

ஆத்தாடி என்ன இப்படி ஒரு கொலைவெறி...:-)

Beski said...

நன்றி அடலேறு.

நன்றி ரோஸ்விக்,
போட்டின்னு வந்துட்டா அப்படித்தான்...

கலையரசன் said...

எண்டர் பட்டன் வேலை செய்யலைன்னா என்ன பாஸ்...?

பேக் ஸ்பேஸ் இருக்குல்ல? அதை அமுக்கியிருக்கலாம்!!

வேதாளன் said...

ஆ.. ஹா...

Beski said...

நன்றி கலை,
நீ சொல்றதும் கவித மாதிரிதாம்ப்பா இருக்கு, புரியல.

நன்றி தினேஷ்,
ஆஹ்...ஹா... இப்பத்தான் பாக்குறியா?