2009ல் IMDB ன் டாப் படங்கள்

சில படங்களைப் பற்றி நண்பர்களிடம் பேசும்போது, எப்படி இந்த மாதிரி படங்களெல்லாம் கிடைக்கிறது என என்னிடம் கேட்பதுண்டு. அது ஒன்றும் பெரிய விசயமில்லை, சில படங்கள் நண்பர்கள் வாய்வழி வரும் பரிந்துரை. மற்ற படங்கள் எல்லாம் www.imdb.com பரிந்துரைதான். ஒரு படத்தின் டொரண்ட் கிடைத்தவுடன் இங்கு சென்று அதன் ரேங்கிங் எவ்வளவு என்று முதலில் பார்ப்பேன். பின்பு யூ.எஸ். யூ.கே. நிலவரம். ஏனென்றால் ரேங்கிங் மட்டும் வைத்து ஒரு படத்தை முடிவுசெய்துவிட முடியாது. குறைவான ரேட்டிங் உள்ள நல்ல படங்களும் இங்கே இருக்கும். மக்கள் கண்களுக்கு அது தெரியாது, அல்லது ஓட்டு விழுந்திருக்காது, அவ்வளவுதான்.

சில நேரங்களில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடக்கும். சமீபத்தில் வெளியான படம் The Twilight Saga: New Moon - ரேட்டிங் என்று பார்த்தால் 4.6 தான். ஆனால் வசூலில் பார்த்தால் சகைப்போடு போடுகிறது. இதே போல ரொம்பப் பிடித்த படங்களுக்கு ரேட்டிங்கே சரியாக இருக்காது. அதனால்தான் ஒரு படத்தின் வெற்றிக்கு விளம்பரம் மிக மிக முக்கியம் என்று கேபிள்ஜி சொல்கிறார்.

இந்த IMDB ரேட்டிங்கில் உள்ள டாப் 250 படங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படங்கள். இந்த தளத்தில் இருக்கும் மொத்த படங்களில், ரேட்டிங்கில் முதல் 250க்குள் இருக்கும் படங்கள். புதிதாக வரும் ஒரு படம் இந்த டாப் 250க்குள் வருவது என்பது அவ்வளவு எளிதல்ல.

இந்த டாப் 250 எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு ஒரு தனி சூத்திரத்தையே கையாளுகிறார்களாம். முதலில், ஒரு படம் டாப் 250 க்குள் வருவதற்கு குறைந்தபட்ச தகுதி 1500 ஓட்டுக்களையாவது பெற்றிருக்க வேண்டும். அந்த தளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே ஓட்டுப்போடலாம். அதுவும் யாருடைய 1500 என்றால், வழக்கமாக ஓட்டுப்போடும் பழக்கமுடையவர்களுடைய 1500 ஓட்டுக்கள். அதற்காக தனி அட்டவணையும் வைத்திருக்கிறார்கள். அந்த பட்டியலில் இருப்பவர்களில் 1500 ஓட்டுக்கள் வாங்கினால் அது 250க்குள் வர முதற்கட்டத்தைத் தாண்டிவிடும். பின்பு அதன் இடம் இன்னொரு சூத்திரம் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. அது எப்படி என்பது இங்கே சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.

அந்த உலகப் பட வரிசையில் முதல் 250 படங்கள் இங்கே. இந்தப் பட்டியலில் 2009ல் வெளியான படங்களில் 5 படங்கள் இடம்பிடித்துள்ளன. இவைதான் கண்டிப்பாக மிகச்சிறந்த படங்கள் என்று சொல்ல இயலாது. ஆனால் இவை சிறந்த படங்கள்தான்.

---
(ரேட்டிங்ஸ் - 18/டிசம்பர்/2009 நிலவரப்படி)

5. (500) Days of Summer

இடம்: 217
தரம்: 8.0/10
மொத்த ஓட்டுகள்: 31,997
படம் கையில் கிடைத்து ஒரு வாரம் ஆகிறது. இன்னும் பார்க்கவில்லை. காதல் காமெடி. கதை இதுதான். காதல் மேல் நம்பிக்கையில்லாத கதாநாயகி சம்மர், அவளைப் பார்த்தவுடனேயே காதலிக்கத் தொடங்கிய கதாநாயகன். இவர்களுக்கிடையேயான 500 நாட்களில் சிலவற்றை அசைபோடுவதாகக் கதையாம். படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. பார்த்தபின் விரிவாக எழுதுகிறேன்.

---

4. Star Trek

இடம்: 139
தரம்: 8.1/10
மொத்த ஓட்டுகள்: 98,057
வழக்கமான வானவெளி சாகசப் படம். ஆரம்பம் முதலே கண்களுக்கும், மூளைக்கும் ஆச்சர்ய விருந்து. திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டிய காட்சிகள் பல. இதைப் பற்றிய ஹாலிவுட் பாலாவின் விரிவான விமர்சனம் இங்கே.

---

3. District 9

இடம்: 95
தரம்: 8.3/10
மொத்த ஓட்டுகள்: 98,057
இதைப் பற்றி கேபிள்ஜி விரிவான விமர்சனம் ஒன்றை ஏற்கனவே எழுதியிருக்கிறார். படம் ஆரம்பித்தவுடனேயே ஒரு டாக்குமெண்ட்ரி போல இருப்பதால் கவனத்தை ஈர்த்துவிடுகிறது. வழக்கமாக இல்லாமல் சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும். வித்தியாசமான உருவத்துடன் இருக்கும் வேற்றுகிரகவாசிகள், அவர்களுக்கென தனி முகாம், அதைக் கையாளத் தனி அரசாங்கப் பிரிவு, அதிலிருக்கும் ஒரு சுயநலமிக்க உயர் அதிகாரி என கதை ஆரம்பிக்கும். அப்படியே ஒரு விபத்தில் அந்த அதிகாரி கொஞ்சம் கொஞ்சமாக அந்த வேற்றுகிரகவாசிகளின் உருவத்திற்கு மாற, அதைச் சரிசெய்ய அந்த வேற்றுகிரகவாசிகளின் உதவியை நாட, இவன் உதவி அவர்களுக்கு தேவைப்பட... கடைசியில் என்ன ஆனது என்பது சுவாரஸ்யம். அனைத்தும் பார்க்க அசலாகவே தெரிவது CGன் உழைப்பு.

---

2. Up

இடம்: 68
தரம்: 8.4/10
மொத்த ஓட்டுகள்: 65,804
இதைப் பற்றி ஏற்கனவே ஒரு தேன்கூட்டில் எழுதியது:
இது ஒரு அனிமேசன் படம். சிறுவன் ஒருவன் அட்வெஞ்சர் பற்றிய படம் பார்ப்பதுபோல படம் ஆரம்பிக்கிறது. பின், வரும் வழியில் தன் எண்ணங்களை ஒத்த சிறுமியைச் சந்திக்கிறான். வாலிபனானதும் அவளையே கல்யாணம் செய்துகொள்கிறான். இவன் ஒரு காஸ் நிரப்பி, விட்டால் மேலே சென்றுவிடக்கூடிய பலூன் விறபவன்.  இவர்களுக்கு குழந்தை பிறக்காதது பற்றி அவள் வருந்துகிறாள். இருந்தாலும் சந்தோசமாக வாழ்க்கை நகருகிறது. கடைசியில் அவள் இறந்துவிடுகிறாள். கால்கள் தள்ளாடும் கிழ வயதில், கையில் குச்சியுடன் நடந்துவந்து வீட்டில் உட்காருகிறார். இவையனைத்தும் படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்குள் முடிந்துவிடும். அதற்குப் பிறகுதான் படமே.

தள்ளாடும் இந்த வயது வந்த பிறகு இந்த ஹீரோஎன்னதான் செய்ய முடியும் என்று நினைத்த என்னை, கடைசி வரை உட்கார்ந்து பார்க்க வைத்துவிட்டது இதன் கதையும், காட்சிகளும். அனிமேசன் அருமையாக செய்யப்பட்டிருக்கிறது. உதவி செய்ய வரும் பையனுக்கும் இவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி அழகாக இருக்கிறது. நாய்கள் துரத்தும்போது, அந்தப் பறவை இவர்களையும், வீட்டையும் தூக்கிக்கொண்டு ஓடும் காட்சி அருமை. Wall-E க்கு அடுத்து என்னைக் கவர்ந்த அனிமேசன் படம்.

---

1. Inglourious Basterds

இடம்: 64
தரம்: 8.4/10
மொத்த ஓட்டுகள்: 1,05,244
இதுதான் 2009ல் டாப். இந்தப் படம் பார்க்கும்போது ஏனோ தெரியவில்லை, No Country for Old Men (4 ஆஸ்கர்), There Will Be Blood (2 ஆஸ்கர்) மற்றும் Public Enemies படங்கள் ஞாபகத்திற்கு வந்து போகின்றன. அப்படி என்ன ஒற்றுமை? படம் சில நேரம் மெதுவாகச் செல்வது போலத் தோன்றும், சில நேரம் வேகம் போலத் தோன்றும், சில நேரம் சுவாரஸ்யம்... கடைசியில் ஒன்றுமே புரியாதது போலவும் தோன்றியது எனக்கு. எப்படியோ, இதற்கு ஆஸ்கர் நிச்சயம் என்றே தோன்றுகிறது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாசிசப் படைக்கு அச்சுறுத்தலை உண்டாக்க உருவாக்கப்பட்ட பாஸ்டர்ட்ஸ் எனப்படும் குழுவோடு இணைந்த கதை. ஹிட்லருக்கு எதிராக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ஹிட்லர் அரசின் பிடியிலிருந்து தப்பி, ஒரு திரையரங்கு நடத்திக்கொண்டிருக்கும் ஒரு பெண், இவர்களுக்கிடையே வரும் தொடர்பு என சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது படம். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் ஹிட்லரின் ஹான்ஸ் லாண்டா என்ற நயவஞ்சக அதிகாரியின் கதாப்பாத்திரம் உச்சம், மேலும் ஒரு மதுபான விடுதிக் காட்சி அருமை.

---

பி.கு.: டிசம்பரில் எழுத ஆரம்பித்து கிடப்பில் போடப்பட்ட பதிவு. சில பயணங்கள், அதனால் விடுமுறை, அதனால் கிடப்பில் போடப்பட்ட அலுவலக வேலைகள் என நேரங்கள் கையைவிட்டுப் போய்விட்டன. எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை. காலம் கடந்தாலும் சிலருக்கு உபயோகமாக இருக்க வாய்ப்புள்ளதால் தூசி தட்டி எடுத்துப் போடுகிறேன். விரைவில் பழையபடி பதிவுலகில் உலா வருவேன் என நம்புகிறேன்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark

9 ஊக்கங்கள்:

வால்பையன் said...

பகிர்வுக்கு நன்றி!

CS. Mohan Kumar said...

வாங்க ராசா வாங்க.. அப்பப்ப எழுதணும் இல்லாட்டி மறந்துடும்..

சங்கர் said...

தொடர்ந்து எழுதுங்க

எதுக்கு தான் மைனஸ் போடுறதுன்னு ஒரு விவஸ்தையே கிடையாது போல,

Ashok D said...

உலா வாங்க... நல்லாதான் எழுதியிருக்கீங்க... சினிமாயெல்லாம் எங்களுக்கு கமர்கட் மாதிரிதானே

Beski said...

வருகைக்கு நன்றி வால்.

நன்றி மோகன்குமார்,
ஆமாமா, எனக்கும் எழுதுறது மறந்துடும், மத்தவங்களும் மறக்க வாய்ப்பிருக்கு.

நன்றி சங்கர்,
ஆஹா, நமக்கு மொத மொதலா மைனஸ் ஒட்டா? நா அப்படி பெருசா ஒன்னும் பண்ணலியே...

நன்றி அசோக்(டா.இ.ஆ.ச).

பாலா said...

//நா அப்படி பெருசா ஒன்னும் பண்ணலியே...//

என்ன இப்படி சொல்லிட்டீங்க! :)

எனக்கு, கேபிளுக்கு எல்லாம் லிங்க் கொடுப்பது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? :) :) :)
--

இதில் 500 டேஸ் மட்டும்.. ரொமாண்டிக் என்பதால் பார்க்கலை. மீதி நாலும்.. என்னுடைய டாப் 10-ல். IMDB நம்பர் கூட சமயத்தில் ஏமாத்திடும். நான் படம் பார்த்தப் பின்னாடிதான்... மத்த ஏரியாக்களுக்கு போய்.. என் ரசனையை ஒப்பிடுவேன்.

அன்புடன் நான் said...

தகவலுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க.

உங்களுக்கு எனஹினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Beski said...

நன்றி பாலா,
//என்ன இப்படி சொல்லிட்டீங்க! :)
எனக்கு, கேபிளுக்கு எல்லாம் லிங்க் கொடுப்பது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? :)//
இதுல இப்படி ஒரு உள்குத்து வேலையெல்லாம் இருக்கா? ரைட்டு நம்மளையும் ஆட்டோல ஏத்திருவாங்க போல இருக்கு.

//இதில் 500 டேஸ் மட்டும்.. ரொமாண்டிக் என்பதால் பார்க்கலை. மீதி நாலும்.. என்னுடைய டாப் 10-ல். //
இங்கயும் இதே கதைதான். அடுத்து பாக்கானும்.

நன்றி கருணாகரசு.
வாழ்த்துக்கள்.

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி பெஸ்கி.

முன்னாடி போட்ட கமெண்ட் எங்கே..??