ஏதோ ஒன்னு

படிக்கவும் முடியல, எழுதவும் முடியல. சில நேரம் படிக்காம படுக்கவும் முடியல. ஒரு சில விசயங்களைப் பழகிட்டோம்னா திரும்ப விடுறது எனக்கு கொஞ்சம் கஷ்டம். அது எல்லாமே ஒரே மாதிரியா இருக்காது.

இப்போ காபி குடிக்கிறத எடுத்துக்கலாம். வீட்டுல இருக்குறவரைக்கும் காலைல எந்திரிச்ச உடனே காபி குடிக்கனும்போல இருக்கும். அம்மா கேட்டவொடனே குடுக்கலைனா சண்டையே வரும். அந்த சமயத்துல எங்காவது வெளியூரு போயிருந்தா, காலைல எந்திரிச்சவொடனே எங்கயாவது தேடிப்பிடிச்சாவது குடிக்கிறது பழக்கம். அப்புறம் சென்னை வந்ததுக்கு அப்புறம் பேச்சலர் வாழ்க்கைல அது எப்படி காணாமப் போச்சுன்னே தெரியல. அதப் பத்தி கவலப்படுறதும் கிடையாது. அதே நேரம், காலைல எந்திரிச்ச உடனே கிடைச்சதுனாலும் குடிக்கிறதுதான், அதப் பத்தி அப்பவும் சரி பின்பும் சரி, கவலைப்படுறது இல்லை. இது ஒரு வகையாச்சா?

இப்போ சிகரெட் குடிக்கிறத எடுத்துக்கலாம். பழக்கமாகிப்போச்சு. விடனும்னு தோனுது. சில நாள் விட்டுப்பாக்குறது. அப்றம் ரெண்டு நாள் அடிச்சுப் பாக்குறது. விட்டதும் ஒரு சந்தோசம், அப்றம் ஏக்கம். சரின்னு அடிச்சுப்பாத்தா, ஏதோ ஒரு இழப்பு. இப்படி ஒரு பழக்கம். விட்டாலும் இழுக்கும், பிடிச்சாலும் கவலைப்படவைக்கும்.இதுல படிக்கிறது, எழுதுறதுன்னு ரெண்டு புதுசா வந்து தொத்திக்கிச்சு. ஆரம்பத்துல படிச்சுட்டு மட்டுமே இருந்தேன். அது காப்பி குடிக்கிற மாதிரி. படிக்க வாய்ப்பு கிடைக்கலைனாலும், கிடைச்சாலும் அவ்வளவா கண்டுக்கிறதே இல்லை. முடிஞ்சா படிப்போம், இல்லன்னா அடுத்த நாள் படுச்சுக்கலாம். அப்றம் வந்தது எழுதுறது, இது சிகரெட் குடிக்கிற மாதிரி ஆகிப்போச்சு. எழுத நேரம் ஒதுக்குனா வேலை சில கெட்டுப்போகும்னு தெரியும். இருந்தாலும் எழுதினேன். அப்றம் கொஞ்ச காலம் நிறுத்திவச்சேன். சில நேரங்கள்ல அப்படியே கை துருதுருன்னு வரும். வேணாம்டா எழுத வேணாம், புடிச்சா திரும்ப விட முடியாதுன்னு மனசு சொல்லும்.

ஆனா பாருங்க, இன்னொரு பக்கம் பல பல தலைப்புகள் மனசுக்குள்ள தோனிக்கிட்டே இருக்கும். மாசத்துக்கு ஒன்னு எழுது, வாரத்துக்கு ஒன்னு எழுது, உன் கண்ட்ரோல்ல வச்சுக்கன்னு இன்னொரு பக்கம் சொல்லும். சில நேரம் எழுத ஆரம்பிச்சு பாதியிலயே டிராப்ட்ல போட்டு வச்சுடுவேன். போட்டது போட்டதுதான் சேந்துகிட்டே இருக்கும். யாருக்குத் தெரியும் இது கூட டிராப்ட்லயே கிடந்தாலும் கிடக்கலாம். அப்படி கிடக்காம இருக்கனும்னா ஒரே வழிதான் இருக்கு. இதுக்கு மேல கொஞ்சம் கூட யோசிக்காம டக்குன்னு PUBLISH POST பட்டன க்ளி

Share/Bookmark

10 ஊக்கங்கள்:

அகநாழிகை said...

உனக்கு இந்த மாசம் இப்படிதான்யா இருக்கும். அடுத்த மாசம் இருக்குடி உனக்கு. பட்டன்ல கைய வெச்சு அமுக்க நேரம் இருக்காது.

Beski said...

ஒரு மூத்த பதிவர், எழுத்தாளர், பண்பாளர், நல்லவர், வல்லவர் இப்படியா பேசுறதுன்னு யாராவது தீ கொளுத்திப் போட்டுறபோறாங்க. இப்படியா பேசுறது?

Athisha said...

நல்ல பதிவு நன்றி வாசுண்ணே

Beski said...

நன்றி அதிஷா.
அங்க நன்றி சொல்றதப் பாத்தா...

Ashok D said...

இரண்டு நாள் முன்னாடி தான் நினைச்சன்.. என்ன ஆளே காணாம்னு...

சிகரெட்ட விடறது ரொம்ப ஈஸி.. மொதல்ல ஒரு சிகரெட் வாங்கி கொளுத்துங்க.. அப்படியே யோசிங்க... நாம இனி சிகரெட் பிடிக்கறத விடவே கூடாதுன்னு...

தினேஷ் ராம் said...

எழுதுறது ஒரு போதையா?

ம்ம்.. உங்களுக்கு 'ஊக்கம்' அளித்து உங்களுக்கு போதையை அதிகப்படுத்துவது தவறென்றாகிறது. சரி, எவ்ளோவோ பண்ணிட்டோம்.. இதை மட்டும் மன நிறைவோடு பண்ண மாட்டோமா!! ;)

Beski said...

நன்றி டாக்டர்,
நீங்களும் விட்ட ஆளுதானா?

நன்றி சாம்ராஜ்ய ப்ரியன்,
நீங்க பண்ணுவீங்க. :)

Karthick Chidambaram said...

நல்லா இருக்கு. கல்லூரி காலத்துல படிச்ச ஒரு சிறுகதை ஞாபகம் வந்தது.
ஒரு மிதமான குடிகாரன் யாரோட ஆலோசனைலையோ கேட்டு போய்டுவான் - அதாங்க குடிய விட்டுருவான் .
அதுக்கு பதிலா புத்தகம் படிக்கிற பழக்கம் தொத்திக்கும்.
படிச்ச புத்தகங்கள வீட்ல சேமிச்சு வச்சுருவாறு. பெருமையா பாதுகாபாரு.
அப்ப அவர் மனைவி ஒரு பஞ்ச டயலாக்கு சொல்லும் பாருங்க
"இந்த மனுஷன் குடிச்ச கூட பரவா இல்ல ... பாட்டில வித்து பணம் ஆக்கிடுவேன். கெட்டுப்போன மனுஷன் புத்தகம் படிக்கிறார் விக்கவும் விடுறாரு இல்ல"

உண்மையில் வாசிப்பும் போதைதான்.

Beski said...

அருமையான பின்னூட்டம் கார்த்திக்,
நன்றி.

அன்பரசன் said...

//வீட்டுல இருக்குறவரைக்கும் காலைல எந்திரிச்ச உடனே காபி குடிக்கனும்போல இருக்கும். அம்மா கேட்டவொடனே குடுக்கலைனா சண்டையே வரும்.
அப்புறம் பேச்சலர் வாழ்க்கைல அது எப்படி காணாமப் போச்சுன்னே தெரியல. அதப் பத்தி கவலப்படுறதும் கிடையாது.//

இதே ஃபீலிங் தான் எனக்கும்.