முதன்முறையாக எக்மோர் இரயில் நிலையம் சென்றிருந்தபோது பிரமித்துப் போனேன், எவ்வளவு இரயில்கள், அத்தனையும் சரியாக வருகின்றன போகின்றன, அதற்கான அறிவிப்புகளும் சரியாக வருகின்றன என்று. அதன்பின் பல தடவைகள் சென்றிருந்தபோதும் ஏதும் குறைபாடு கண்டதில்லை.
ஆனால் நேற்று,
மும்பையிலிருந்து வந்த தங்கமணியை அழைத்துவரப் போயிருந்தேன். இரவு 7.45க்கு வரவேண்டிய இரயில். அட்டவணையில் அதே நேரத்திற்கு வரும் என்றிருந்தது. ஆனால் நடைமேடை எண் இல்லை. ஒருவழியாக விசாரித்து, 7வது நடைமேடையில் வரும் என்று அறிந்து அங்கு சென்று நின்றேன் 7.30 க்கு. குறித்த நேரத்திற்கு அறிவிப்பும் இல்லை, இரயிலும் வரவில்லை. 7வது நடைமேடையிலிருந்து, இரயில் நிலையத்திற்கு முன்னால் இருக்கும் விசாரணை மேசைக்கு வந்து அங்கிருந்தவரிடம் கேட்டேன், ”தாதர் எக்ஸ்பிரஸ் லேட்டா சார்?”. அவர் சொன்னார், “தாதர் லேட் எல்லாம் இல்லை, இன்னேரம் 7வது பிலாட்பாரத்தில் வந்திருக்கும்”. அவர் சொன்னதை நம்...பி, திரும்பவும் 7வது நடைமேடைக்குச் சென்றேன், இரயில் வந்ததற்கான அறிகுறி இல்லை. திரும்பவும் விசாரணைக்குச் சென்று, “தாதர் இன்னும் வரல சார்”.அதற்கு அவர், “அதெல்லாம் அப்பவே சரியான நேரத்திற்கு வந்துட்டு சார். அனௌன்ஸ்மெண்டும் சொல்லியாச்சு”, என்று எரிந்தார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கொஞ்சம் வயதானவர், ஏதும் கடிந்து சொல்வதற்கும் மனமில்லை. திரும்பவும் 7வது நடைமேடைக்குச் சென்று அங்கு காத்துக்கொண்டிருந்த ஒருவரிடம் தாதர் எக்ஸ்பிரசுக்குத்தான் காத்திருக்கிறார் என்பதை உறுதி செய்துகொண்டு அமர்ந்திருந்தேன். இரயில் 30 நிமிடங்கள் தாமதமாக வந்து சேர்ந்தது, தாமதமாக வந்ததன் அறிவிப்பு ஏதும் இல்லாமல்.
என்ன ஆயிற்று எக்மோர் இரயில் நிலையத்திற்கு? எப்போதாவது ஒரு தடவை இப்படி நடக்கத்தான் செய்யும் என மனம் சமாதானமாகவில்லை. ஏனெனில் அதற்கு ஒரு வாரத்திற்கு முன் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த ரயில்வே நிர்வாகத்தையே கேவலமாக நினைக்கச் செய்திருந்தது...
-அதி பிரதாபன்.
2 ஊக்கங்கள்:
அட போங்கப்பு..இதுக்கே இவ்ளோ கேவலமா நினைச்சா எப்பிடி..?
இன்னும் எம்பூட்டு கச்சேரி இருக்கு!
எப்போதாவது இல்லேங்க. அதே இடத்தில எங்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. 30 நிமிடம்தானே லேட் பரவாயில்லை. நானும் சக பதிவர்கள் டிலான், சயந்தன் ஆகியோர் 2 மணிநேரம் காத்திருந்தோம் ஒருநாள்.
Post a Comment