சென்ற வாரம் நடைபெறவிருந்த பதிவர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அநேகமாக வரும் சனிக்கிழமை இருக்கலாம். போன தடவை மழை வந்துவிட்டதே என கூரைக்குள் கூடுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தடவை அந்த இடத்திற்கே செல்ல முடியாதபடி மழை. இயற்கையை வெல்ல யாரால் முடியும். அடுத்த தடவை அவரவர் இடத்திலேயே இருந்தபடி பதிவர் சந்திப்பு நடத்துவது பற்றி யோசனை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். :)
இமெயில் அட்டாச்மெண்ட்
இமெயிலில் அட்டாச்மெண்ட் அனுப்பவது பற்றிய சுவையான கட்டுரை ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது...
பெரிய அளவு ஃபைல்களை அனுப்ப நீங்கள் இமெயிலை உபயோக்கிறீர்களா? இதைக் கொஞ்சம் கவனியுங்கள்.
இமெயிலில் ஒரு ஃபைலை அட்டாச் செய்யும்போது MIME encoding அதற்கு 33% அதிக இடம் எடுத்துக்கொள்ளும். அதாவது 15MB ஃபைலை அட்டாச் செய்ய, தகவலுக்கான இடம் உட்பட 20MB அளவு இடம் தேவைப்படும்.
அதையே 20 பேருக்கு CC போட்டு அனுப்புகிறீர்களென்றால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி மெயிலாக 20x20MB = 400MB இடம் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு சி.டி. அளவு.
அதன்பின், ஒரு சின்ன அலுவலகத்தில் இருக்கும் 5 பேர் அதை டவுன்லோடு செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர்களது இமெயில் சர்வரின் பயன்பாடும் அதிகரிக்கிறது. இதனால் Maximum Bandwidth சீக்கிரம் அடைய வாய்ப்புள்ளது.
இதைத் தவிர்க்க, பெரிய ஃபைலை ஒரு இடத்தில் அப்லோடு செய்துவிட்டு, அனைவருக்கும் அந்த லிங்கை அனுப்பிவிடுவது நல்லது.
நான் இது போன்ற வேலைக்கு www.yousendit.com தளத்தையே உபயோகிக்கிறேன். 100MB அளவு வரையிலான ஃபைல்களை இதன் மூலம் அனுப்ப முடியும். கூகுளில் மெயில் அட்டாச்மெண்டின் அதிகபட்ச அளவு 25MB மட்டுமே.
அனைத்து அக்கவுண்டுகளும் ஒரே இடத்தில்
கூகுள் - மெயில், டாக்குமெண்ட், ஆர்குட், காலண்டர்... இப்படி பல சேவைகளை வழங்குகிறது. இது போன்ற பல சேவைகளை உபயோகிப்பவர்கள் http://google.com/dashboard க்கு ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள். அனைத்து அக்கவுண்டுகளையும் ஒரே இடத்தில் கையாளலாம். அட்டகாசம்.
ஜாக்கிரதை
இப்போது Facebook லிருந்து உங்கள் அக்கவுண்ட் பாஸ்வேர்டை ரீசெட் செய்துவிட்டோம். இந்த மெயிலுடன் வரும் ஃபைலை டவுன்லோடு செய்து திரும்ப மாற்றிக்கொள்ளவும் எனுமாறு ஒரு இமெயில் அடிக்கடி வருகிறது. இதுபோல் உங்களுக்கும் வந்தால் ஜாக்கிரதையாக இருக்கவும். பேஸ்புக் இப்படியெல்லாம் செய்வதில்லை. அதிலிருக்கும் ஃபைலை டவுன்லோடு கூட செய்ய வேண்டாம். மெயிலை அழித்துவிடவும்.
பதிவர் சந்திப்புகள்
குறையொன்றுமில்லை ராஜ்
ஒரு சோறு பற்றி எழுதியதிலிருந்தே பதிவர் ராஜ், அங்கு சந்திப்போம் என கூறிக்கொண்டிருந்தார். பல திட்டங்கள் போட்டும் எல்லாம் தவிடுபொடி. சென்ற வாரம் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது மதிய உணவுடன். மனுசன் ரொம்ப நல்லவர். அவரது அலுவலகத்திலிருந்து ஆட்டோ பிடித்து வந்து சாப்பாடும் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனார். அவருக்கும் எனக்கும் ஆறு அல்ல நூறு வித்தியாசங்கள் சொல்லலாம். எனக்கு சந்திப்புகள் பிடிக்கும். போதை பிடிக்கும். அவரோ டீ கூட குடிக்க மாட்டார். இருவருக்கும் இடையே என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. அருமையான நண்பர்.
நிறைய விசயங்களைப் பற்றி பேசினோம். பதிவர்கள், ஞாயிறு திரைப்படம் என பேச்சு போய்க்கொண்டிருந்தது. உலக திரப்படம் காட்டுவதால் என்ன பயன் என்றார். ‘பல மக்களில் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ளலாம். கதை எழுதுவதற்கு நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம்’ என்றேன். சிறிது நேரம்தான் பேசினோம். கடமை அழைத்ததால் அத்துடன் முடித்துக்கொண்டோம்.
சாப்பிடும் போது சேவை செய்துகொண்டிருக்கும் ஓட்டலின் ஊழியர் ஒருவர் ராஜிடம் வந்து “அன்லிமிட்டட்தான் சார், வேணும்னா வாங்கிக்குங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார். “நாம ரெண்டு பேரு இருக்கோம். அது ஏன் என்கிட்ட மட்டும் வந்து சொல்லிட்டுப் போறான். என்னைப் பாக்க அப்படியா இருக்கு?” என்றார் ராஜ். “இது வரை 3 தடவை வந்திருக்கிறேன். இங்கு அன்லிமிடட் என்று என்னிடம் சொன்னதே கிடையாது தெரியுமா?” என்றேன்.
“ரெண்டு பேரு இருக்கோம், அது ஏன் என் கிட்ட மட்டும் வந்து இப்படி சொல்லனும்?”, என கரகாட்டக்காரன் கவுண்டர் ரேஞ்சுக்கு கடைசி வரை புலம்பிக்கொண்டே இருந்தார் ராஜ்.
அடுத்த முறை நான் அவருடைய இடத்திற்கு செல்லலாம் என நினைத்திருக்கிறேன்.
ஜனா வீட்டில் விசேசம் + அட்டகாசம்
ஜனாவினுடைய தேவதை இந்த உலகத்திற்கு வந்திறங்கிய 31ஆம் நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவரது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் பதிவர்கள் சிலரையும் அழத்திருந்தார். சிலரால் வர இயலவில்லை. நானும் கேபிள்ஜியும் சென்றோம். பின்பு www.thamizhstudio.com அருண் நண்பர்களுடன் வந்து சேர்ந்தார்.
முதலில் அட்டகாசங்கள் ஆரம்பமாகின. ஒரு சாம்பில்...
கையெழுத்து அழகாக வேண்டுமா ? வாங்கி அருந்துங்கள் Signature.
(மேலும் படங்களுக்கு pbeski@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்)
நண்பர்களை இவ்வளவு உபசரிக்கும், Cheers With Jana என்ற தலைப்பை வைத்திருக்கும், வாரந்தோரும் ஞாயிறு ஹொக்ரெயில் எழுதும் ஜனா குடிப்பதில்லை என்றால் நம்ப முடிகிறதா?
பின்பு குழந்தையைத் தொட்டிலில் போடும் சடங்கு நடைபெற்றது. பின்பு சாப்பாடு. அதன்பின் பேச்சு பேச்சு பேச்சுதான். முதலில் அங்கு வந்திருந்த ஜனாவின் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். பல அனுபவங்களைக் நேரில் கேட்க முடிந்தது. விரைவில் அனைவரும் அவர்கள் நினைத்த இடத்தை அடைய வாழ்த்துக்கள்.
பின்பு ஜனா, கேபிள்ஜி, நான், அருண் மற்றும் நண்பர்கள் பேசினோம். பட்டிமன்றமே தோற்றுவிடும் அளவுக்கு சுவாரஸ்யம். படம், குறும்படம், பதிவு, பெண்ணியம், கவிதை, இலக்கியம், பெண்ணின் சுதந்திரம், சம உரிமை எங்கெல்லாம் என விவாதம் நீண்டது. அங்கு எல்லோரையும் கவர்ந்தது யூத் கேபிள் சங்கர் பேச்சுகள்தான்.
பார்த்த படங்கள்
Public enemies
இந்தப் படம் நல்லா இருக்கும்னு கேபிள்ஜி சொன்னதால பாக்க உட்கார்ந்தேன். இது ஒரு உண்மைக்கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படமாம். வராலாரைப் புரட்டிப் பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது. 1933ல் நடந்த கதை. எப்.பி.ஐ. ஏஜண்ட் மெல்வின் பெர்விஸ் அமெரிக்காவின் எதிர்காலத்தையே அச்சுருத்தும் முக்கிய குற்றவாளிகளான ஜான் டிலிங்கர், பேபி ஃபேஸ் நெல்சன், ப்ரெட்டி பாய் பிலாய்டு ஆகியோரை தடுக்கப் போராடினார். இந்த சமயத்தில்தான் எப்.பி.ஐ. தோன்றி வளர்ந்த காலம், இவர்களை ஒடுக்குவதற்காகவே. அவர்களில் ஜான் டிலிங்கரின் கடைசி காலக் கதைதான் இந்த பப்லிக் எனிமீஸ்.
கொள்ளையன் ஜான் டிலிங்கராக நம்ம ஊர் பைரேட்ஸ் ஆப் த கரீபியன் புகழ் ஜானி டெப், எப்.பி.ஐ. ஆபீசராக கிரிஸ்டியன் பேய்ல் (டெர்மினேட்டர் சால்வேசன் மற்றும் டார்க் நைட்டில் நடித்தவர்). படத்தின் கதையைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லாததால் மற்ற விசயங்களைப் பற்றிப் பார்க்கலாம். இந்த இருவரின் கதாப்பாத்திரங்களுமே அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கொள்ளைக்கார ஹீரோவின் பார்வையே அவனைப் பற்றிச் சொல்கிறது. அழகாகப் பார்க்கிறார். திடீரென காதலில் விழுவதும், அவளையே தேடிப்போய் அடைவதும் அழகு. என்னதான் கொள்ளையனாக இருந்தாலும் கொலை செய்யாமல் இருப்பது, கடைசியில் தன் முன்னே முதன் முதலாய் நண்பன் ஒருவன் செத்துப்போவதைப் பார்க்கும்போது பதறுவது என அவரது கதாப்பாத்திரம் அழகாகப் புரிகிறது. அதே போல போலீஸ் ஆபீசர். முதல் காட்சியே நம்ம ஊரு விஜய் படம் போல மிகப் பெரிய கொள்ளையன் ஒருவனை அசால்ட்டாக சுட்டுப் பிடிப்பதில் ஆரம்பிக்கிறது. நேர்மையான ஆபீசராக படம் முழுதும் வலம்வருகிறார். கதாநாயகி அதிகம் பேசாத அழகு.
படத்தில் காட்சி அமைப்புகள் அப்படியே 1930 களுக்கு நம்மை கொண்டு செல்கின்றன. உடை, கார், சிறை, இடங்கள் என எல்லாமே அந்த காலகட்டத்தில் இருப்பதாக இருக்கிறது (அந்தக்காலம் எப்படி இருந்ததோ தெரியாது, ஆனால் இது இந்தக்காலம் இல்லை). படத்தின் மிகப்பெரிய பலம் இசை. எனக்கு இசை பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் இந்தப் படத்தில் வரும் பின்னணி இசை அப்படியே மனதிற்கு உள்ளே சென்று அறைகளனைத்தும் புகுந்து ஏதேதோ செய்கிறது. இந்த இசைக்காகவே இன்னொரு முறை பார்க்க வேண்டும். பார்க்கலாம்.
UP
இது ஒரு அனிமேசன் படம். சிறுவன் ஒருவன் அட்வெஞ்சர் பற்றிய படம் பார்ப்பதுபோல படம் ஆரம்பிக்கிறது. பின், வரும் வழியில் தன் எண்ணங்களை ஒத்த சிறுமியைச் சந்திக்கிறான். வாலிபனானதும் அவளையே கல்யாணம் செய்துகொள்கிறான். இவன் ஒரு காஸ் நிரப்பி, விட்டால் மேலே சென்றுவிடக்கூடிய பலூன் விறபவன். இவர்களுக்கு குழந்தை பிறக்காதது பற்றி அவள் வருந்துகிறாள். இருந்தாலும் சந்தோசமாக வாழ்க்கை நகருகிறது. கடைசியில் அவள் இறந்துவிடுகிறாள். கால்கள் தள்ளாடும் கிழ வயதில், கையில் குச்சியுடன் நடந்துவந்து வீட்டில் உட்காருகிறார். இவையனைத்தும் படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்குள் முடிந்துவிடும். அதற்குப் பிறகுதான் படமே.
தள்ளாடும் இந்த வயது வந்த பிறகு இந்த ஹீரோஎன்னதான் செய்ய முடியும் என்று நினைத்த என்னை, கடைசி வரை உட்கார்ந்து பார்க்க வைத்துவிட்டது இதன் கதையும், காட்சிகளும். அனிமேசன் அருமையாக செய்யப்பட்டிருக்கிறது. உதவி செய்ய வரும் பையனுக்கும் இவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி அழகாக இருக்கிறது. நாய்கள் துரத்தும்போது, அந்தப் பறவை இவர்களையும், வீட்டையும் தூக்கிக்கொண்டு ஓடும் காட்சி அருமை. Wall-E க்கு அடுத்து என்னைக் கவர்ந்த அனிமேசன் படம்.
கண்டிப்பாக பார்க்கலாம்.
SMS AREA
ஆசை
அடுத்த ஜென்மத்தில்
அவளது செருப்பாகப் பிறக்க ஆசை
அவளிடம் மிதி படுவதற்கு அல்ல
என்னைச் சுமந்த அவளை
சுமக்க ஆசை.
எது சிறந்தது?
லவ் மேரேஜ் சிறந்ததா
அரேஞ்சுடு மேரேஜ் சிறந்ததா
லவ் மேரேஜ்தான்.
.
.
.
தெரியாத பிசாசை விட
தெரிந்த குட்டிச்சாத்தானே மேல்.
சொந்த சரக்கு
பயம் அவளுக்கு
இல்லையென்றால்
பயம் எனக்கு
முதலிரவு.
---
-அதி பிரதாபன்.
26 ஊக்கங்கள்:
குட்பாய்...சீ.. யூ..பை...
ரொம்ம்ம்பப நல்ல்லவன்னு சொல்லிட்டாங்கம்மா..
குருவிற்கு ஏற்ற சிஷ்யன்..
வாழ்க சிஷ்யா..
\\butterfly Surya said...
குருவிற்கு ஏற்ற சிஷ்யன்..
வாழ்க சிஷ்யா..\\
அட..அவர்தான் குருவா சூர்யா அண்ணே..!
:-)
சுவாரசியமான எழுத்து.
ஓவர் கான்பிடெண்ட் ஒடம்புக்காவாது.. ரெண்டாவது வாட்டி வாசியுங்கப்பா.. ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்குது..
கலக்கலான காக்டெயில்.
அப்புறம் அந்த ’பார்ட்டி’ ம்ம்ம் நடத்து ராசா நடத்து.
//“ரெண்டு பேரு இருக்கோம், அது ஏன் என் கிட்ட மட்டும் வந்து இப்படி சொல்லனும்?”//
என்னால இப்ப கூட தாங்க முடியல,, என்ன பாத்து ஏன் அப்படி சொன்னான்?
இந்த தேன் கூடு அருமை.. ஹி ஹி ஹி.. நானும் இருக்கேன் இல்ல அதான்..
//என்னைச் சுமந்த
அவளைச் சுமக்க ஆசை.//
என்னை சுமந்த அவளை,
சுமக்க ஆசை!
என்று தான் இருக்க வேண்டும்!
வால்பையன் said...
//என்னைச் சுமந்த
அவளைச் சுமக்க ஆசை.//
என்னை சுமந்த அவளை,
சுமக்க ஆசை!
//
வால்பையன் அவர்களே, அவர் எழுதியதும் சரிதான் ஐயா.!
ராஜ் அழகா இருக்காரே..
சுத்தி போடுங்க பாசு...
நன்றி தண்டோரா,
//குட்பாய்...சீ.. யூ..பை...//
ஓஹோ அடுத்த வாரத்திற்குச் சொல்கிறீர்களா?
நன்றி அகநாழிகை,
//ரொம்ம்ம்பப நல்ல்லவன்னு சொல்லிட்டாங்கம்மா..//
யாரச் சொல்றீங்க?
நன்றி சூர்யா,
//குருவிற்கு ஏற்ற சிஷ்யன்..
வாழ்க சிஷ்யா..//
வாழ்க குரு.
நன்றி ராஜூ,
ஆமா அவர்தான் குரு, அடுத்த வாரம் தண்டோரா.
நன்றி ஆதி,
//ஓவர் கான்பிடெண்ட் ஒடம்புக்காவாது.. ரெண்டாவது வாட்டி வாசியுங்கப்பா.. ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்குது..//
எப்படியும் அஞ்சுவாட்டி வாசிச்சுருப்பேன்.
ஹி ஹி ஹி... அது தப்பாக்கூட இருக்கலாம். தெரியாம பண்ணினதா இருக்காது.
நன்றி ஆதவா,
//கலக்கலான காக்டெயில்.//
தலைப்ப மாத்தாத, கார்க்கி சண்டைக்கு வரப்போறாரு.
//அப்புறம் அந்த ’பார்ட்டி’ ம்ம்ம் நடத்து ராசா நடத்து.//
வா, நடத்தலாம்.
நன்றி ராஜ்,
//என்னால இப்ப கூட தாங்க முடியல,, என்ன பாத்து ஏன் அப்படி சொன்னான்?//
உங்களப் பத்தி எனக்குத் தெரியும் ராஜ், அன்னைக்கு எவ்வளவு கம்மியா சாப்டீங்கன்னு... அவனை விடுங்க.
//இந்த தேன் கூடு அருமை.. ஹி ஹி ஹி.. நானும் இருக்கேன் இல்ல அதான்..//
வாரா வாரம் இதே படத்த போடட்டுமா?
அது நிச்சயமாய் கையெழுத்து நல்லா வர்ற டானிக் தானே..?:)
நன்றி வால்,
//என்னை சுமந்த அவளை,
சுமக்க ஆசை!
என்று தான் இருக்க வேண்டும்!//
மாத்தியாச்சு.
// ஆதிமூலகிருஷ்ணன் said...
வால்பையன் அவர்களே, அவர் எழுதியதும் சரிதான் ஐயா.!//
இப்ப என்ன பண்றதுன்னு தெரியல...
நன்றி சாம்ராஜ்ய ப்ரியன்.
நன்றி வசந்த்,
//ராஜ் அழகா இருக்காரே..
சுத்தி போடுங்க பாசு...//
நீங்க ராஜை நேர்ல பாக்கும்போது செம ட்ரீட் ஒன்னு இருக்கு.
:)
//ராஜ் அழகா இருக்காரே..
சுத்தி போடுங்க பாசு...//
ஹி ஹி ஹி நன்றிங்க.. கண்டீப்பா ட்ரீட் உண்டு..
சொந்த சரக்கு சூப்பர்.
ப்பிளிக் எனிமி பார்த்தாச்சு, அப் இன்னும் பார்க்கலை பார்க்கனும். தேன்கூடு கலக்குது
//ஹி ஹி ஹி நன்றிங்க.. கண்டீப்பா ட்ரீட் உண்டு..//
வசந்த், நோட் பண்ணிக்குங்க.
நன்றி முரளிகண்ணன்,
//சொந்த சரக்கு சூப்பர்.//
அப்பாடா, கடைசியா ஒருத்தர்...
ரொம்ப நல்லவருண்ணே நீங்க.
நன்றி ஜனா,
அப் பாருங்க, சூப்பரா இருக்கு.
thenkoodu naalukku naal super aagite irukku... :)
padhivar sandhipukal super :)
/* “இது வரை 3 தடவை வந்திருக்கிறேன். இங்கு அன்லிமிடட் என்று என்னிடம் சொன்னதே கிடையாது தெரியுமா?” */
yen sollala nu purinjuthaanga???
நன்றி கனகு.
//yen sollala nu purinjuthaanga???//
என்னை நேர்ல பாக்கும்போது உங்களுக்கே தெரியும்.
பிரதாபம் ரொம்பப் பெரிசா இருக்கே! இப்ப ஏனா ஓனான்னு கூப்பிடறதா இல்ல அதி பிரதாபன்னு கூப்பிடறதா?!
நன்றி ஷங்கி,
//பிரதாபம் ரொம்பப் பெரிசா இருக்கே!//
மொத்தமா சேத்து வச்சு எழுதினது...
//இப்ப ஏனா ஓனான்னு கூப்பிடறதா இல்ல அதி பிரதாபன்னு கூப்பிடறதா?!//
ஏனாஓனாவெல்லாம் இனி கிடையாது.
அதி பிரதாபன்தான்.
கேபிள் போட்டோவும் அந்த கமெண்ட்டும் சூப்பரு.
SMS கவிதைகள், I like first two :)
நன்றி அசோக்.
//SMS கவிதைகள், I like first two :)//
இருந்தாலும் உங்களுக்கு நக்கல் ஜாஸ்தி.
கடைசி மட்டும் நல்லா இருக்குன்னு சொன்னா என்ன?
// ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள். அனைத்து அக்கவுண்டுகளையும் ஒரே இடத்தில் கையாளலாம். அட்டகாசம்.//
உண்மையிலேயே அட்டகாசம் தான்
ராஜ் அவரோட பெண்ணுக்கு வைத்த காம்ப்ளான் கூட விடாம எடுத்து சாப்பிட்டு விடுவார் போல இருக்கே! ;-)
// உலக திரப்படம் காட்டுவதால் என்ன பயன் என்றார்//
அதானே! எப்பவுமே விவகாரமா தானே பேசுவார் :-)
நன்றி கிரி,
ராஜ் கொஞ்சம் விவகாரமான, விவரமான ஆளுதான்.
Post a Comment