நாம் யார் ?

வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !


வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள் !


சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள் !


நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள் !


தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள் !


கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள்!


ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள் !


நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள் !


பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !


ஏ . சி . காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !


வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள் !


தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் !


அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள் !


உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!


முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள் !


கொளுத்தும் வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!


பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த குழந்தைக்கும்
உற்ற குடும்பத்திற்கும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள் !

---


பி.கு:-
எனது நண்பன் ஒருவன் அரபு
நாட்டிலிருந்து அனுப்பிய கவிதை


-கி.கி


Share/Bookmark

15 ஊக்கங்கள்:

☀நான் ஆதவன்☀ said...
This comment has been removed by the author.
☀நான் ஆதவன்☀ said...

உண்மை தான் கி.கி அண்ணே :(

அன்புடன் நான் said...

கவிதை சொல்வது உண்மைத்தான்.

ஜோதிஜி said...

அதிகமாக மனதை பிசைந்த வரிகள்

உங்கள் கடைசி எஸ்எம்எஸ் ஜோக் இரண்டும் காணவில்லையே?

வால்பையன் said...

//வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !//

முதலில் படிக்கும் போது அம்புட்டு வயசா ஆகிருச்சுன்னு தோணுச்சு!

கடைசியாதான் நான் நண்பரின் கவிதைன்னு தெரிஞ்சது!

உங்கள் தோழி கிருத்திகா said...

பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !////////////
100% unmai

Beski said...

உண்மை கிகி.
ஜோதிஜி,
இது கிகி எழுதியது. அதெல்லாம் தேன்கூட்டில் வரும்.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

@☀நான் ஆதவன்☀

நன்றி

@ ♠ ராஜு ♠

முதல் வருகைக்கு நன்றி

@சி. கருணாகரசு

முதல் வருகைக்கு நன்றி

@ஜோதிஜி. தேவியர் இல்லம்.

எஸ்எம்எஸ் ஜோக் எழுதுவது நானல்ல அது அதிபிரதாபனான எவனோ ஒருவன்

@ வால்பையன்

நண்பனின் கவிதை இனியும் வரும்

உங்கள் தோழி கிருத்திகா said...

yen en peru varalai antha listla????
:(

Beski said...

//உங்கள் தோழி கிருத்திகா said...
yen en peru varalai antha listla????//

:)))))
தோழி கிருத்திகா, அப்படி கேளுங்க. என் பேரும் வரல.

கிகி, எங்களுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டீங்களா?

உங்கள் தோழி கிருத்திகா said...

அமாம்ங்க...இதுக்கு ஒரு நல்ல தீர்ப்பு யாரு சொல்லுவா??

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//உங்கள் தோழி கிருத்திகா said...
yen en peru varalai antha listla????
:(

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...
//உங்கள் தோழி கிருத்திகா said...
yen en peru varalai antha listla????//

:)))))
தோழி கிருத்திகா, அப்படி கேளுங்க. என் பேரும் வரல.

கிகி, எங்களுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டீங்களா?

உங்கள் தோழி கிருத்திகா said...
அமாம்ங்க...இதுக்கு ஒரு நல்ல தீர்ப்பு யாரு சொல்லுவா??\\


ஐயோ... ஐயோ... பதில் போடும்போது ஆர்காட்டார் வீட்டை விட்டு ஓடி விட்டார், UPS ம் அதிக நேரம் தாங்காது , ஆனா அதுக்குள்ள பஞ்சாயத்த கூட்டிட்டீங்களே..

அவ்வ்வ்வ்வ்வ்வ்..

உங்கள் தோழி கிருத்திகா said...

என்றா பசுபதி...இதுக்கு ஒரு நல்ல தீர்ப்பா நீயே சொல்லிபோடுரா...

உங்கள் தோழி கிருத்திகா said...

எவனோ ஒருவன்....நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணுங்க :)

Beski said...

தோழி கிருத்திகா,
என்னது சப்போர்ட்டா? எனக்கும்தான் பதில் சொல்லல, நமக்கு நாமே சப்போர்ட், வாங்க ஒரு கை பாக்கலாம்...

கிகி, ஆர்காட்டார் ஓடிவிட்டாரா? இப்போ அதுக்கும் சேத்து ஏதாவது சொல்லுங்க...