விதிமுறைகள்: 1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். 2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஆறு பேராகவும் இருக்கலாம் 3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். 4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்று இருக்கிறதா எனப் பார்த்தேன், இல்லை. அதையும் விதிமுறையில் சேர்த்திருக்கலாம்.
கருத்து:
இவரைப் பிடிக்கும் இவரைப் பிடிக்காது என எப்படிச் சொல்ல முடியும்? அறை முழுதும் குப்பையாக்கும் பிடிக்காத நண்பனொருவன், ஒரு பாட்டியை சாலை கடக்க உதவியதற்காக பிடித்துப் போகிறான். குடித்துவிட்டு மனைவியுடன் சண்டைபோடும் பக்கத்து வீட்டுக்காரன், அவனது குழந்தையைக் கொஞ்சும்போது ஈர்த்துவிடுகிறான். தெரிந்த இவர்களையே பிடிக்கும் பிடிக்காது என சொல்லத் தெரியாத போது, ஒரு பக்கம் மட்டுமே தெரிந்த பிரபலங்களை எப்படி பிடிக்கும் அல்லது பிடிக்காது எனச் சொல்ல முடியும்? கண்களால் பார்ப்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், அவரது உண்மை வாழ்க்கையில் எப்படியோ? ஹ்ஹ்ம்...
அரசியல்வாதி: செல்வி.ஜெ.ஜெயலலிதா
பிடிக்கும்: ஆளுமையால்
பிடிக்காது: ஊழல் குற்றச்சாட்டுகளால்
தொழிலதிபர்: சரவணபவன் ராஜகோபால்
பிடிக்கும்: அருமையாக உணவு கிடைக்க காரணமாதலால்
பிடிக்காது: ஜீவஜோதி விசயத்தால்
நடிகர்: திரு. ரஜினிகாந்த்
பிடிக்கும்: ஸ்டைல், ஆதரவு, பொது விசயங்களில் நடந்துகொள்ளும் விதம்
பிடிக்காது: அரசியல் முடிவுவில் இழுத்தடிப்பதால்
நடிகை: ப்ரியாமணி
பிடிக்கும்: பருத்திவீரன் நடித்தபோது
பிடிக்காது: அதற்க்குப் பின் நடிக்கும்போது
தயாரிப்பாளர்: உதயநிதி ஸ்டாலின்
பிடிக்கும்: அரசியல் பாதையில்செல்லாததால்
பிடிக்காது: மொக்கை படங்களாகவே எடுப்பதால்
இயக்குனர்: ஹரி
பிடிக்கும்: சாமி எடுத்தபோது (எங்கள் ஊர் தியேட்டரில் சாமி ஒரு வரலாறு)
பிடிக்காது: அதன் பிறகு...
பதிவர்: கேபிள் சங்கர்
பிடிக்கும்: நல்ல சாப்பிடும் இடங்களைக் காட்டுவதால்
பிடிக்காது: எனது நேரங்களை நிறைய சாப்பிடுவதால்
கடைசியா,
விதி எண் இரண்டை மீறிவிட்டேன்.
-அதி பிரதாபன்.

21 ஊக்கங்கள்:
அதி பிரதாபா அதிரடியா இருக்கு
அதுவும் கடைசி பஞ்ச் சூப்பர்
கேபிள் ஒரு ஆப்பாயில்
மன்னிக்கவும்..முதல் பின்னூட்டத்தில் விடுபட்டது..”போடும் அழகை அருமையாக படம் பிடித்திருக்கிறாய்..பதில்கள் வித்தியாசம்
பக்கத்தில் இருக்கு காலிபாட்டிகளையும் இழுத்து வச்சுப்பீங்களொ?
நல்ல வேளை அந்த படத்தை போடலை..?:)
ஆஹா... கடைசி மேட்டரு கலக்கலு :)
கலக்குங்க!
ஒரு டானிக் பாட்டில்
பீர் சாப்பிடுகிறதே
அடேடே
ஆச்சர்யகுறி !!!
வித்தியாசமான பதிலகள். நன்றாக உள்ளது.
பிடித்தவர்களையே பிடிக்காதவர்கள் ஆக்கிய விசயம் அருமை.
அட.. வித்தியாசமா இருக்கே.. :)
நல்ல காலம் போத்தில் கையில் வைத்திருந்து ஊத்திக்கொடுக்கும் ஆளை படத்தில் கட் பணிவிட்டீர்கள்.
உங்கள் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
கலக்கல் மாப்பி. ரொம்ப வித்தியாசமா இருக்கு. அதுவும் கேபிள் சங்கர் மேட்டர் சூப்பர் :)
ஏன் காலி பாட்டில்கள்..??
நன்றி முரளி கண்ணன்.
நன்றி தண்டோரா,
//கேபிள் ஒரு ஆப்பாயில்//
ஓஹோ!
//பக்கத்தில் இருக்கு காலிபாட்டிகளையும் இழுத்து வச்சுப்பீங்களொ?//
அதெல்லாம் தானா வந்தது.
//நல்ல வேளை அந்த படத்தை போடலை..?:)//
அது அடுத்த பதிவுல வருது கேபிள்ஜி.
நன்றி சென்ஷி.
நன்றி வால்.
நன்றி ராஜ்,
//ஒரு டானிக் பாட்டில்
பீர் சாப்பிடுகிறதே
அடேடே
ஆச்சர்யகுறி !!!//
அடடே!
நன்றி உலகநாதன்,
//பிடித்தவர்களையே பிடிக்காதவர்கள் ஆக்கிய விசயம் அருமை.//
உண்மை இதுதான். பிடிக்கிறது என்று சொன்னாலும் அவர்களி சில விசயத்தில் பிடிக்காது, யாரா இருந்தாலும் சரி.
நன்றி சஞ்சய்காந்தி.
நன்றி ஜனா.
//நல்ல காலம் போத்தில் கையில் வைத்திருந்து ஊத்திக்கொடுக்கும் ஆளை படத்தில் கட் பணிவிட்டீர்கள்.//
கேபிள்ஜிக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்.
நன்றி சாம்ராஜ்ய ப்ரியன்.
நன்றி ஆதவா.
என்ன இருந்தாலும் உன் பதிவு மாதிரி வராதுல.
நன்றி சூர்யா,
//ஏன் காலி பாட்டில்கள்..??//
ஹி ஹி ஹி... இப்படி தெரியாத மாதிரி கேக்குறீங்களே. நாங்க என்ன தெருவுல கெடக்குறதையா கொண்டு வந்து வச்சிருக்கோம்?
தொடரை வித்தியாசப்படுத்தியிருந்தீர்கள். நன்றாகயிருந்தது. குறிப்பாக உதயநிதியைப்பற்றிய கருத்தே எனதும்.!
நன்றி ஆதி அண்ணே,
வரும் காலத்திலும் அவர் வரவேண்டாமென வேண்டிக்கொள்ளுங்கள். அப்படியே நல்ல படங்களாக எடுக்கனும்னு ஒரு பிட்டயும் சேர்த்துப் போடுங்கள்.
இவர் பிடித்துப்போனதற்கு இளமையான தோற்றமும் ஒரு காரணம் (மற்ற தயாரிப்பாளர்களோடு ஒப்பிடும்போது).
கலக்கிட்டீங்க தலைவரே!
நன்றி ஷங்கி,
அப்போ உங்களுக்குப் பிடிச்சிருக்கு. :)
Post a Comment