காட்டுநிற நாட்கள்

கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின் என வாழ்க்கையை இரு கட்டங்களாகப் பிரிக்கலாம் (க.மு., க.பி.) என்கிறான் நண்பனொருவன். ஏனென்றால் கல்யாணத்திற்குப் பின் பெரிய மாற்றம் இருக்குமாம். மேலும் அவன் கூறியது... ”கல்யாணத்திற்குப் பின் ஒரு ஆணின் சுதந்திரம் அனைத்தும் பறிபோய்விடும். ஆனால் பெண்களுக்கு சில சுதந்திரங்கள் கிடைக்கும். கல்யாணம் ஆன முதல் இரு மாதங்களுக்கு உன்னை வெளியில் பார்க்கவே முடியாது. பின் சில நேரங்களில் பார்க்கலாம். சில வருடங்கள் கழித்து நீயே என்னை போன் செய்து அழைப்பாய் - மாப்ளஎங்கயாவது பாருக்கு போய் பேசலாம்டா என்று”.

இன்னொரு நண்பன் கூறியது... ”கல்யாணத்துக்கு அப்புறம்தாண்டா நா ஜாலியா இருக்கேன். அன்னைக்கி மட்டும் இவளப் புடிக்கலன்னு சொல்லிருந்தேன்னா இவ்வளவு சந்தோசமா இருந்திருக்கவே மாட்டேன். என் பிரண்ட்ஸ் எல்லாத்தையும் அவ பிரண்ட்ஸ் மாதிரி பழகுறா. எல்லாரும் நா குடுத்துவச்சவன்னு சொல்றாங்கடா...”.

வாங்க வாங்க, வந்து கிணத்துல விழுந்துருங்க...

வாய்யா, வந்து இந்த வருத்தப்படும் வாலிபர் சங்கத்துல வந்து சேந்துக்க...

கல்யாணத்துக்கு அப்புறம்தான்யா உனக்கு வாழ்க்கையே இருக்கு, அது ஒரு சுகமான சுமை...

அப்படி இப்படின்னு அவங்கவங்க கருத்துக்களை நம்ம மேல அள்ளித் தெளிச்சுக்கிட்டே இருக்காங்க. இதுல, பிரபல பதிவர் ஒருத்தர், கல்யாணம் ஆனதுல இருந்து, குழந்தை பிறக்குற வரை என்ன நடக்கும்னு வெளாஆஆஆஆவரியா புட்டு புட்டு வச்சாரு. அப்படியே அசந்து போயிட்டேன், மனுசனுக்கு இவ்வளவு அடியா அனுபவமா?

சரி சரி, வரப்போறவ எப்படி இருக்குறாங்கிறதப் பொருத்துத்தான் நம்ம வாழ்க்கை அமையும்னு ஒரு முடிவா இருந்துட்டேன். அதுலயும் ஒருத்தன் வந்து ஒரு குண்டத்தூக்கிப் போட்டான்.”டேஏஏஏய், இவ வரும்போது என்ன மெண்டாலிட்டில இருந்தா தெரியுமா? கொஞ்சம் கூட மெச்சுரிட்டியே இல்லடா. அப்றம், கொஞ்ச கொஞ்சமா நம்ம வழிக்கு கொண்டுவந்தேன். எல்லாம் நம்ம கைலதான் மாப்ள இருக்கு...”.

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. ஆனா இவன் சொன்னதுல ஒன்னு எனக்கு ரொம்பப் புடிச்சிருந்தது. எல்லாம் நம்ம கைலதான் இருக்கு. ஆனா அவளுக்கும் கை இருக்குன்னு நெனச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு. அந்த அளவுக்குப் போகாது. அப்படியே போனாலும் “போய்க்கிட்டேஏஏஏ இருடா ஏனாஓனா”ன்னு போய்கிட்டே இருப்போம்ல.

கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடக்கும் என்பதைக் கொஞ்சம் தள்ளி வைக்கலாம். கல்யாணத்திற்கு முன்பு செய்த ஒருசிலவற்றை செய்ய இயலாது எனபது நூத்துக்கு நூறு உண்மை. அப்படி என்ன செய்திருப்போம்? பெருசா ஒன்னும் இல்லை. நினைத்ததை, நினைத்த நேரத்தில் செய்திருப்போம். எப்போதும் முதுகில் ஒரு பை. அதில் சில அத்தியாவசியப் பொருட்கள். நகரத்தின் ஒரு மூலையில் இருக்கும்போது, இன்னொரு மூலையிலிருந்து அழைப்பு வரும். “நைட்டு வந்துர்றேன் மாப்ள”, என்றபடி அலுவகத்திலிருந்து வழக்கமான பாதை மாறிப்போகும் வண்டி. இரு நாட்களாக வீட்டுக்குச் வீட்டுக்கு அறைக்குச் செல்லவில்லையென்றாலும் கவலைப்படாத மனம். ஞாயிரு விடுமுறை கொண்டாடச் சென்று, செவ்வாய் மாலை அறை திரும்பும் அசால்ட்டு. இவையெல்லாம் விட்டுவிடுவேன் என்றல்ல, இவை என்னை விட்டுவிட்டுப் போய்விடும்.

இப்படி நினைத்ததைச் செய்வது என்ன பெரிய விசயமா? என்ற சந்தேகம் வரலாம். அப்படியல்ல, இப்படி நினைத்ததைச் செய்த சில காரியங்களை நினைத்தால் இப்போதும் மனது லப்டப்லப்டப் என வேகமாக அடித்துக்கொள்ளும், ஓரத்தில் புன்முறுவல் பூக்கும், இனி இப்படி செய்யக்கூடாது என்ற உறுதிகொள்ளும். அதுபோன்று என்னவெல்லாமோ செய்தோம். அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும்போதுதான் இப்படியொரு தலைப்பு மனதில் தோன்றியது.

காட்டுநிற நாட்கள்...

-அதி பிரதாபன்.


Share/Bookmark

8 ஊக்கங்கள்:

அத்திரி said...

இப்பவே புலம்ப ஆரம்பிச்சிட்டியா???

Beski said...

இப்பத்தானய்யா போட்டேன், அதுக்குள்ள அடிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்களே!

GEETHA ACHAL said...

நீங்கள் சொல்லுவது கரெக்ட் தான்...சரி...சரி..புலம்புங்க...

Thamira said...

என்னாச்சுன்னு சொல்லாம இப்படி ஒளறினா என்ன அர்த்தம்? :-))

கௌதமன் said...

அதி - இப்போ நீங்க கமு வா ? கபியா? நல்லா எழுதி இருக்கீங்க!

Nathanjagk said...

மாப்பு, கல்யாணம் என்றதும் ஒரு பணிவு வந்திடுச்சு ​போல. சாய்வெழுத்துக்களில் (italics) எழுதியிருக்கீங்க.

angel said...

kggouthaman said...
அதி - இப்போ நீங்க கமு வா ? கபியா? நல்லா எழுதி இருக்கீங்க

i too have the same doubt.

சரி விடுங்க ரொம்ப ஃபில் பண்ணாதிங்க

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//இன்னொரு நண்பன் கூறியது... ”கல்யாணத்துக்கு அப்புறம்தாண்டா நா ஜாலியா இருக்கேன். அன்னைக்கி மட்டும் இவளப் புடிக்கலன்னு சொல்லிருந்தேன்னா இவ்வளவு சந்தோசமா இருந்திருக்கவே மாட்டேன். என் பிரண்ட்ஸ் எல்லாத்தையும் அவ பிரண்ட்ஸ் மாதிரி பழகுறா. எல்லாரும் நா குடுத்துவச்சவன்னு சொல்றாங்கடா...”.\\

யாரந்த நண்பன்