வாடகை வீட்டுல இருக்குறதுனால நன்மைகளும் இருக்கு, கஷ்டங்களும் இருக்கு. வீடு நமக்குப் பிடிக்கலைனாலோ, பக்கத்து வீட்டுக்காரங்களப் பிடிக்கலன்னாலோ, தெருவைப் பிடிக்கலைனாலோ, வாசப்படி பிடிக்கலைனாலோ வீட்ட மாத்த முயற்சி பண்ணலாம். அல்லது வேற நல்ல வீடு கிடைச்சா வீட்ட மாத்திக்கலாம். வேற நல்ல வேலை, வேற ஊர்ல கிடைச்சாலோ, இந்த வீட்டுல தண்ணி வரல, அல்லது தண்ணி சரியா போகல (இது தண்ணி வரலங்கறத விட பெரிய பிரச்சனை) அப்டி இப்டின்னு பல காரணங்களுக்காக வாடகை வீட்டுல இருக்குறவங்க மாத்திக்கலாம். ஆனா சொந்த வீடுன்னா? அப்படியே பேத்து எடுத்துட்டுப் போகவா முடியும்? சொந்த வீட்ட விட்டுப் போக முடியலங்கிறதுக்காகவே பல வாய்ப்புகளை இழந்தவர்கள் பலர். அப்படியே விட்டுப் போகவேண்டிய சூழ்நிலை வந்தால் வீட்டை வாடகைக்கு விடனும், அதப் பாக்கனும், வர்றவங்க சரியா வச்சுக்குவாங்களான்னு கவலைப் படனும், இன்னும் எவ்வளவோ இருக்கு. அப்படி இல்லைனா, மத்தவங்களை வீட்டுல விட்டுட்டு நாம மட்டும் தனியா வாழனும். ஆனாலும் பாருங்க, வாடகை வீடா சொந்த வீடான்னு கேக்கும்போது “சொந்த வீடு”ன்னு சொல்லிறதுல ஒரு கெத்து இருக்கத்தான் செய்யிது.
இருந்தாலும் வாடகை வீட்டுல இருக்குறவங்க ரொம்ப சந்தோசமானவங்கன்னு நினைச்சுடக்கூடாது. எங்க கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். வாடகை வீட்டுல இருக்குறவனோட மொத குறிக்கோள் ஒரு சொந்த வீடு வாங்கனும் என்பதாகத்தான் இருக்கும். அதுவும் தங்கமணி ஆசை அதுவாகத்தான் இருக்கும். நமக்கு ”யாதும் ஊரே, எங்கேயும் வீடே”ன்னு வாடகை வீட்டுல இருக்குறதுதான் பிடிச்சிருக்கு. ஆனா தங்கமணி அப்பப்ப சொந்த வீட்டப் பத்திப் பேசி அடிக்கிற தம்ம விட்டுடலாமான்னு உள் மனச யோசிக்க வைப்பாங்க. அதுலயும் சில நேரம், “அவங்க சொந்த வீடு வாங்கப் போறாங்களாம்” அப்படின்னு சொல்லும்போது காதையே கழட்டி வச்சுடலாம் போல இருக்கும். இருந்தாலும் கேக்குற மாதிரியே ஹ்க்கும் போட்டுக்கனும். இந்தப் பாயிண்ட மட்டும் நல்லா நோட் பண்ணிக்கனும், இல்லன்னா வாடகை வீடோ சொந்த வீடோ, எந்த வீட்டுலயும் நிம்மதியா இருக்க முடியாது.
பிடிக்கலைனா வீட்ட மாத்திக்கலாம். ஆனா வீட்ட மாத்தும்போது எவ்வளவு விசயங்களைக் கவனிக்கவேண்டியது இருக்கு தெரியுமா? சரியா விசாரிக்காம வந்துட்டோம்னா அவ்வளவுதான், உடனே மாத்திகிட்டெல்லாம் போக முடியாது. பின்ன? சாமான் சட்டியை எல்லாம் ஏத்தி எறக்குற கொடுமை எங்களுக்குல்ல தெரியும். இப்பல்லாம் பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் அப்டின்னு நிறைய கம்பெனிகள் வந்துடுச்சாம். நாம இது வரைக்கும் இப்படி யாரு கிட்டயும் போனது இல்ல. ”தம்பிகள் உடையான் வீடு மாத்த அஞ்சான்”. ஆனா அடுத்த தடவ பேக்கர்ஸ்தான். அதையும் ஒரு தடவ பாத்துடலாம்.
வீடு மாறுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் புதிதாகப் போகும் வீடு நம் மனதிற்குப் பிடித்ததாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வீடு கிடைப்பது மிகவும் கடினம். அவ்வாறான வீட்டைத் தேடுவதும் மிகவும் கடினம். அவ்வாறு தேடும்போது எனக்கு வந்த பல பிரச்சனைகள், அனுபவங்களில் இருந்து இந்தத் தொடரை எழுதுகிறேன். வாடகை வீடு மாறும்போது என்னென்ன பிரச்சனைகள் வரலாம், என்னென்ன விசயங்களை எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதே இந்தத் தொடர். முதலில் வீட்டு புரோக்கரிடம் இருந்து ஆரம்பிக்கலாம்...
-பெஸ்கி.
சொந்த வீடும் வாடகை வீடும்
ஆக்கம்:
Beski
Friday, November 26, 2010
பிரிவு:
அனுபவம்,
சொந்த வீடு,
வாடகை வீடு,
வீடு,
வீடு மாறுதல்
11
ஊக்கங்கள்
11 ஊக்கங்கள்:
வீடு மாறுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் புதிதாகப் போகும் வீடு நம் மனதிற்குப் பிடித்ததாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வீடு கிடைப்பது மிகவும் கடினம். //
உண்மை
வாடகை வீட்டுலதான் நானும் இருக்கேன்,, என்ன பண்றது ஒரு வீட்டு ஓனர் மாதிரி இன்னொரு ஓனர் அமைய மாட்டேன்றாறு....
ஹும் நடந்ததை மேல கூறு
நீ இன்னாவேணாலும் எழுது தல!
ஆனா சீக்கிறம் சொந்த வீடு வாங்கற வழியப்பாரு! சொல்லிப்புட்டேன். :))
வருகைக்கு நன்றி KANA VARO.
ஓனர் பத்தி ஒரு பதிவு வரும், ஓனர் அமைவதெல்லாம்... இல்லையா?
நன்றி செந்தில்.
அனானி,
ஒவ்வொரு விசயமா சொல்றேன். அடுத்த பதிவு பாருங்க. நன்றி.
நன்றி ஷங்கர்,
சொந்த வீடு வாங்கனும், ஆனா சென்னையில இல்ல.
நண்பரே நீங்கள் சென்று இருக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். என்னை உங்களுக்கு நினைவு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. இடுகை என்று அறிமுகமானதே உங்கள் மூலம் தான்.
நல்ல அனுபவத் தொடர். எல்லோருக்கும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி ஜோதிஜி,
ஞாபகம் இருக்கிறது. தொடர்ந்து எழுதினால் சென்றிருக்கலாம். இடையே பல தடங்கள். அனைத்தையும் இப்போதுதான் கடந்தது போன்ற உணர்வு. இனி விட்ட பாதையைப் பிடித்துக்கொள்கிறேன்.
நன்றி அமைதி அப்பா,
நீங்களும் அனுபவங்கள் குறித்துதான் எழுதுகிறீர்களா? நல்லது.
பெஸ்கி நலமா? தொடரா? கலக்குங்க
ம்ம்ம் ரைட்டு.. தொடரு
நலம் மோகன்குமார், நன்றி.
நன்றி ஆதவா, உனது கருத்துக்களையும் கூறு.
Post a Comment