ஊட்டி நண்பர் ஏற்கனவே சொல்லியிருந்தார். ஊரிலிருந்து ஒரு "கலைஞர் டிவி"யைக் கொடுத்துவிட்டிருக்கிறார்கள், நண்பர் ஒருவரிடம் இருக்கிறது, சென்று வாங்கவேண்டும் என்று. இரண்டு வாரத்திற்கு முன்னால் கிளம்பலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால் முடியவில்லை. வெள்ளி இரவு மறுநாள் போகலாம் என பேசிக்கொண்டோம். மறுநாள் காலை கல்லூரியில் படித்த நண்பனின் நிச்சயதார்த்தம். அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தேன். மழை வேறு. வீட்டிற்கு கிளம்பவும் மழை விடவும் சரியாக இருந்தது. வழக்கம்போல மழைவிட்ட டிராபிக். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.
அப்போதுதான் நண்பர் போன் செய்தார், இப்போது போகலாமா என்று. டிராபிக் அதிகமாக இருக்கிறது, இன்று வேண்டாம், நாளை போகலாம் என்றேன். என்ன நினைத்தாரோ, மாலை அவரே கிளம்பிவிட்டார், பேருந்தில் போகலாமென்று. சரி, நானே வருகிறேன் என்று காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். வழக்கம்போல டிராபிக். இங்கு, எப்போது எப்படி டிராபிக் இருக்குமென்று கனிக்கவே முடியாது. பீக் அவர் என்று நினைத்து வரும்போது குறைவாக இருக்கும். சில நேரம் இரவு பதினோரு மணிக்கு முட்டிக்கொண்டு நிற்கும். எப்படிப் பார்த்தாலும் இந்த ஹைபர் சிட்டி சிக்னலைக் கடப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.
ஊட்டி நண்பரையும், அவரது நண்பர் ஒருவரையும் ஏற்றியாயிற்று. ஹைபர் சிட்டி சிக்னல்; இரண்டாவது முறை ரெட் விழுகிறது. ஊட்டி நண்பர் போகவேண்டிய இடத்திற்கான வழியை விசாரித்துக்கொண்டிருந்தார். பின்புதான் தெரிந்தது அது ரொம்ப தூரம் என்று. இங்கிருந்து சில்க்போர்ட் சென்று, அதையும் தாண்டி தூரமானதாக இருந்தது. சில்க்போர்ட் போவதற்கே நடு இரவு ஆகிவிடும்போல இருந்தது. நண்பருக்கு மனமில்லை. அவ்வளவு தூரம் போவதற்கு பக்கத்தில், மாரத்தல்லியில் ஏதாவது ஒரு கடையில் ஒரு டிவி வாங்கி வந்துவிடலாம் என்றார். டிவி வருகிறது என்று ஏற்கனவே ஹாத்வே கேபிள் கனெக்சனெல்லாம் வாங்கியாகிவிட்டது. ஏதாவதொரு டிவி வாங்கியே ஆக வேண்டும்.
நானெல்லாம் ஒரு பொருள் வாங்குவதென்றால், ஒரு கடைக்குப் போவேன். இருக்கும் பொருட்களில் ஏதாவது ஒன்றை வாங்கி வந்துவிடுவேன். முடிந்தால் ஆன்லைனில் விலையை ஒப்பிட்டுப் பார்த்துவைத்துக்கொள்வேன். அவ்வளவுதான் நம்மால் முடியும். கடையில் போட்டிருக்கும் விலையில் பேரம்பேசுவது கிடயாது. ஏசி போட்டு, கண்ணாடிக் கதவுகள் போட்டு, யூனிபார்ம் போட்டிருக்கும் கடைகளில் எல்லாம் பேரம்பேசுவது என்பது நடக்காது என்பது இன்னாள் வரை நமது நினைப்பு. ஆனால் மொபைலுக்காக சில கடைகளில் கேட்டுப் பார்த்ததுண்டு.
நண்பர்களை, சர்வீஸ் ரோட்டில் இருக்கும் கிரியாஸில் இறக்கிவிட்டுவிட்டு, காரை எங்காவது ஓரமாகப் போடலாமென்று இடத்தைத் தேடினேன். பக்கத்தில் இல்லை, கொஞ்சம் முன்னால் போகலாம் என்று கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தள்ளி கார் நிறுத்துவதற்கு இடம் இருந்தது. ஒரு வழியாக நிறுத்திவிட்டு திரும்பி வந்தேன்.
நண்பர் எதிரெ வந்துகொண்டிருந்தார். ரேட்டு கேட்டாச்சு, அடுத்த கடைக்குப் போகலாம் என்றார். கிரியாசில் கேட்டுவிட்டு, அடுத்த் இருந்த எல்ஜி சோரூமிலும் கேட்டிவிட்டாராம். அடுத்து இருந்த நெக்ஸ்ட் சோரூமிற்குச் சென்றோம்.
சும்மா சொல்லக்கூடாது, அங்கு குண்டாக இருந்த விற்பனைப் பிரதிநிதி உண்மையிலேயே கவர்ந்துவிட்டார். அருமையாக அனைத்தையும் ஒப்பிட்டுச் சொன்னார். விலை முடிந்த அளவுக்குக் குறைத்துத் தருகிறேன் என்றார். நண்பர் ஒரு மாடலைக் காட்டி எவ்வளவு என்றார். 26 ஆயிரம் என்றார் அவர்,நண்பரோ 21 க்கு தருவதாக கிரியாசில் சொன்னார்களே என்றார். ஒரு நிமிசம் என்று சில பேருடன் சென்று பேசினார். திரும்பி வந்து, அதெல்லாம் சான்சே இல்ல சார், வேணும்னா இங்க 24க்கு முடிக்கலாம் என்றார். இன்னும் கொஞ்சம் அப்படி இப்படி பேசிவிட்டு, நமது நண்பர் வெளியேறினார்.
இப்போது கொஞ்சம் பிரேக். ஒரு ஜூஸ் கடையில் ஜூஸ் சொல்லிவிட்டு, அனைத்தைப் பற்றியும் அலசினார். 21க்கு கிரியாசில் சொன்னார்களே, அதையே வாங்கிவிடலாமா என்றேன். அவரோ அவங்க 21 சொல்லலை, 25தான் சொன்னார்கள் என்றார். இங்க 24 வரைக்கும் வந்துட்டாங்க... எதுக்கும் அங்க இன்னோரு தடவை போய் கேட்டுட்டு வந்துடலாம் என்றார்.
அங்கு மீண்டும் ஒருமுறை அனைத்தையும் விசாரித்தார். முடிந்த அளவுக்கு பேரம் பேசினார். இப்போதாவது வாங்கிவிடுவார் என்றுதான் நினைத்திருந்தேன். சரி, இருங்க வரேன் என்று அங்கு சொல்லிவிட்டு, மீண்டும் வெளியே அழைத்துவந்தார். எதிரே இன்னோரு சோரூம் இருக்கு, அங்கயும் ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம் என்றார். எதுக்கு ஒரு பிரேக் எடுத்து ஜூஸ் எல்லாம் குடித்தார் என்று இப்போதுதான் புரிந்தது.
அது நல்ல அகலமான ரோடு. சிக்னல் எல்லாம் கிடையாது. நம் திறமையைப் பொறுத்து கடந்துவிடும் நேரம் அமையும். அவர்கள் இருவரும் முதலிலேயே சென்றுவிட்டனர். நமக்கு கொஞ்சம் பயம் அதிகம். வண்டியே வராத நேரம் பார்த்து ஒரு வழியாக அந்தப் பக்கம் சென்றாயிற்று.
அந்தக் கடையிலும் ஒரு அலசல். ஒருவர் நன்றாகவே விளக்கினார். இங்கேயும் இதே கதைதான். விலை இன்னதென்று சொல்லப்படும். நண்பர் அந்தக் கடையிலே ஃபைனலாக இவ்வளவுக்குத் தருவதாகச் சொன்னார்கள் என்று அடிமாட்டு விலை ஒன்றை கூச்சமில்லாமல், சிரிக்காமல் சொல்வார். கடைக்காரரோ இருங்க என்று சொல்லிவிட்டு, யாரிடமாவது சென்று பேசிவிட்டு வந்து, பைனலாக இவ்வளவுக்கு முடித்துத் தருகிறேன் என்று அவரும் சிரிக்காமல் சொல்வார். இறுதியாக இரண்டு டிவிக்கள் பிடித்துப் போயிற்று. ஒன்று 24 இன்ச், மற்றொன்று 32 இன்ச்.
எனக்கோ அந்த 24 பிடித்திருந்தது. அனைத்து டிவிக்களிலும் ஒரே வீடியோதான் ஓடும். அதிலேயே வித்தியாசத்தைக் கண்டுபிடித்துவிடலாம். 24 இன்ச் டிவி சிறியதாக இருந்தாலும் படம் தெளிவாக இருந்தது. 32 கொஞ்சம் டல்தான். 32 இன்ச்ல் நல்ல டிவி என்றால் விலை தாறுமாறாக இருந்தது. அதுசரி, அது செய்யும் வேலைக்கு ஏற்றபடிதானே விலையும் இருக்கும். 35 ஆயிரத்திற்கு ஒரு 32 இன்ச் டிவி வாங்கினால் அம்சமாகத்தான் இருக்கும்.
நண்பர் நன்றாக யோசித்தார். கடைசியாக, வழக்கம்போல,
இருங்க வரேன் என்று வெளியே அழைத்துவந்துவிட்டார். மறுபடியும் ஒரு ஜூஸைப் போட்டுவிடுவாரோ என்று கொஞ்சம் கெதக் என்றிருந்தது. இரவு உணவு நேரம் வேறு, பேசாமல் சாப்பிட்டுவிட்டு தொடரலாமா என்று தோன்றியது. மீண்டும் சாலையைக் கடந்து நெக்ஸ்ட் வந்தாயிற்று.
இந்த முறை நமது குண்டு நண்பர் இன்னும் விலையைக் குறைத்துச் சொன்னார். மேலும், ஐசிஐசிஐ கார்டுக்கு 5 சதம் தள்ளுபடி வேறு தறுவதாகச் சொன்னார். கடைசியாக அவர் வைத்த ஆப்சன் கொஞ்சம் வித்தியாசம். ஹுண்டாய் என்று ஒரு டிவியைக் காண்பித்தார். 32 இன்ச். 20 ஆயிரம் ரூபாய் போட்டிருந்தது. கடைசியாக 18க்கும் குறைவாக முடித்தார். உள்ளே இருக்கும் அனைத்து பாகங்களும் வீடியோகான் கம்பெனியினுடையது. வெளியே இருக்கும் கவர் மட்டும் ஹுண்டாயாம். கஸ்டமர் கேர் நம்பர் கூட இரண்டு டப்பாவிலும் ஒன்றேதான் போட்டிருந்தது கூடோனுக்கு அழைத்துச்சென்று அட்டைப் பெட்டிகளையெல்லாம் காண்பித்தார். இதே 32 இன்ச் வீடியோகான் விலை கொஞ்சம் அதிகம்தான்.
ஊட்டி நண்பர் மேலும் ஒரு வாசிங்மெசினையும் சேர்த்து எடுத்து, கடைசியாக இரண்டுக்கும் சேர்த்து ஒரு ரேட்டு பேசி முடித்தார். உலகம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிகிறது. கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது.
-பெஸ்கி.

0 ஊக்கங்கள்:
Post a Comment