Showing posts with label web. Show all posts
Showing posts with label web. Show all posts

தேன்கூடு - 2009/10/22

கூகுள் தகவல்கள்

கூகுள் க்ரோம் புதிய வசதிகளுடன் அருமையாக உள்ளது. வெற்றுப் பக்கத்தில், ஏற்கனவே திறந்த பக்கங்களின் சிறிய படங்கள் ஏற்கனவே தெரிந்ததல்லவா... இப்போது அவற்றை அருமையாக கையாளும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கூகுள் க்ரோமில் தீம்கள் இருப்பது ஏற்கனவே தெரிந்ததே. இப்போது பிரபல ஆர்ட்டிஸ்ட்டுகள் உருவாக்கிய 95 தீம்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கே சென்று மாற்றிக்கொள்ளலாம். இதில் ஒரு கவனிக்கவேண்டிய விசயம் - தீம் மாறும்போது க்ரோமை ரீஸ்டார்ட் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

பாதுகாப்பான பாஸ்வேர்டு வைத்துக்கொள்வது பற்றிய அருமையான வழிமுறைகளை இங்கே காணலாம் - கூகுள் டீமிலிருந்து.

---

சென்ற வார பதிவர் சந்திப்பு



படத்தில்: ஜனா, அவருடைய நண்பர் சீலன், அடலேறு, நிலாரசிகன்.
படம் எடுத்துக்கொண்டிருப்பது: ஏனாஓனா.
இடம்: பாலவாக்கம் கடற்கரை.

நம்மைத் தவிர மற்றவர் அனைவருமே இலக்கிய சிந்தனையாளர்கள் என்பதால், பேச்சு இலக்கியம் பற்றியே அதிகம் இருந்தது (கதை, கவிதை, ஹைக்கூ, எழுத்தாளர்கள் இப்படியே...). நமக்கு அந்த அளவுக்கு அறிவு பத்தாததால் வெறும் கவனிப்பு மட்டுமே. இடையிடையே வெகுஜன கலப்பும் இருந்தது, நாம் பேசியதால்.

பாலவாக்கம் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் சொல்லுங்கள், அடுத்த முறை கூடும்போது தகவல் சொல்கிறேன்.

---

இந்த வார பதிவர் சந்திப்பு

பதிவர் வலைமனை சுகுமார் திருமணம் நேற்று இனிதே நடந்தது. பதிவர்கள் சிலர் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தோம்.



படத்தில்: அகநாழிகை பொன்.வாசுதேவன், கேபிள் சங்கர், முரளி கண்ணன், வண்ணத்துப்பூச்சி சூர்யா.
படம் எடுத்துக்கொண்டிருப்பது: (வழக்கம்போல)ஏனாஓனா.
இடம்: வில்லிவாக்கம், பாபா நகர் திருமண மண்டபம் ஒன்றில்.

இந்த பாபா நகர் தேடிக் கண்டுபிடித்ததே ஒரு பெரிய கதையாக எழுதலாம். ‘பாபாவைத் தேடி ஒரு பயணம்’ என்று தலைப்பு போட்டால் ஹிட்டு கண்டிப்பாக கூடும் என்று வண்ணத்துப்பூச்சியார் சொன்னது கூடுதல் சுவாரஸ்யம்.

இது ஒரு காதல் திருமணம். பல போராட்டங்களுக்கிடையே காதலியைக் கைப்பிடித்த சுகுமாருக்கு வாழ்த்துக்கள்.

மொய்யாக 4 பின்னூட்டம் எழுதி கவரில் வைத்துக் கொடுத்துவிடலாம் என்றார் முரளி கண்ணன், நான் ஒரு பதிவே போட்டு விடுகிறேன் என்றேன் (ஐய்யா, செலவு மிச்சம்).

படத்தை மீண்டும் பாருங்கள், நால்வரும் சீனியாரிட்டிப்படி வரிசையில் இருப்பதுபோல் தெரிகிறதா? (இடப் பக்கம் இருப்பவர்கள் மன்னிக்கவும்)

---

ஒரு SMS

நேத்து ஒரு கல்யாண வீட்டுக்குப் போனேன்.
ஜோடின்னா ஜோடி அப்படி ஒரு ஜோடிய என் வாழ்க்கையில பாத்ததே இல்ல.
அப்படி ஒரு அழகு.
அப்புறம் என்ன,
கால்ல மாட்டிட்டு வந்துட்டேன்.

---

கடைசியா ஒரு சொந்த சரக்கு

பொண்ணு கிடைத்தாலும்
புதன் கிடைக்காதாம்
கிடைத்தது என்னவோ
புதன்கள் மட்டுமே.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

Gmailல் Multiple Signature

Gmailல் Multiple Signature சாத்தியமா?

இந்த மாதிரி கேள்வி உங்களுக்கும் இருக்கா? Gmail ல் ஒன்றுக்கும் மேற்பட்ட இமெயில் ஐடிகளை கனெக்ட் பண்ணி வைச்சிருக்கீங்களா? அப்போ மேல (கீழ) படிங்க.

ஒன்றுக்கும் மேற்பட்ட Email id களை Gmail ல் பிணைத்து வைக்கும் வசதி இருப்பது ஏற்கனவே தெரிந்த்தே. நான் 5 Email id களை வைத்திருக்கிறேன். Gmail Inbox லேயே எல்லாம் வந்து கொட்டிவிடும். Send பண்ணுவதும் இங்கிருந்தே தேவைப்படும் ஐ.டி. களின் மூலம் அனுப்பி விடலாம். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை நேற்று வரைக்கும்.

ஐந்து Email மூலம் அனுப்பும் வசதி இருந்தாலும், Signature ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. Personal, Official, Blog சம்பந்தமான எல்லா மெயிலுக்கும் ஒரே Signature தானா? என்ன கொடுமை கிரி அண்ணே இது? ஒவ்வொரு தடவையும் அந்த Signature ஐ மாற்றி மாற்றி அடித்து அனுப்பவேண்டுமா? ஹ்ம்... நேற்று இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கனுமேன்னு தேடினேன் இணையத்தில்.

முதலில் Google Labs ல் ஏதேனும் வழி இருக்கிறதா எனப் பார்த்தேன். இல்லை. சீக்கிரம் வர வாய்ப்பிருக்கிறது. Google ல் தேடினேன். Firefox ல் சில Addons சேர்த்து, Multiple Signature உபயோகிக்கும் முறைகள் சில கிடைத்தன. அவற்றில் திருப்தி இல்லை. நமது சிஸ்டத்தில் இதை செய்து உபயோகித்துக்கொள்ளலாம். வெளியே எங்காவது சென்று இந்த வசதியை உபயோகிக்க முடியாதல்லவா? மீண்டும் வேறு வழிகளைத் தேடினேன்.

இறுதியாகச் சிக்கிய வழிமுறைதான் இது. Gmail ல் Multiple Signature இல்லை. ஆனால், Canned Responses ஐ இந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். Canned Responses என்பது Google Labs ன் ஒரு வசதி. இதன் மூலம் சில Ready made Message களை சேமித்து வைத்து, தேவைப்படும்போது அனுப்பிக்கொள்ளலாம் (I m busy now, will call u later என்பது போன்ற). இதை எப்படி Multiple Signature ஆகப் பயன்படுத்தலாம் எனபது பற்றி பார்க்கலாம்.

முதலில் Gmail Settings -> General சென்று Signature வசதியை நீக்கி விடவும் (ஏற்கனவே உபயோகித்தால்).



பின், Gmail ல் இருக்கும் Google Lab சென்று Canned Responses வசதியை உயிர்ப்பிக்கவும்.



இப்போது Gmail Restart ஆகும்.
Compose Mail பண்ணவும்.
இப்போது, தேவையான signature ஒன்றை அடிக்கவும்.
(உதாரணத்திற்கு,
அன்புடன்,
பெஸ்கி.
http://www.yetho.com)
அடித்துவிட்டு Canned Responses சென்று Save பண்ணவும்.
இப்போது இதற்கு ஒரு பெயர் கொடுக்கவும். (இங்குள்ள உதாரணத்திற்கு, BLOG எனக் கொள்ளலாம்)



பின்பு இதேபோல் எத்தனை வேண்டுமோ அத்தனை signature களையும் தனித்தனியே save செய்து கொள்ளவும். இதை பின்பு delete மற்றும் edit செய்துகொள்ளவும் முடியும்.

வழக்கம்போல மெயில் அனுப்பும்போது compose வந்தவுடன், முதலில் Canned Responses க்ளிக் செய்து தேவையான signature ஐ தேர்வு செய்து, பின் மற்றதை டைப்பவும். அல்லது. எந்த இடத்தில் வேண்டுமோ அங்கே cursor ஐ வைத்து insert செய்துகொள்ளலாம்.



இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட signature கிடைத்துவிட்டது.
Gmail ல் ஒன்றுக்கும் மேற்பட்ட Email id வைத்திருப்பவர்கள் கருத்துக்களைக் கூறவும்.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

பிளாக்கருக்கு வயது 10...

பிளாக்கர் ஆரம்பித்து, வரும் ஆகஸ்டோடு 10 ஆண்டுகள் ஆகப்போகிறதாம். (அதே நேரம் கூகுளுக்கு ஆகும் வயது 20).

பிளாக்கர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்...
- ஒரு நிமிடத்திற்கு 270,000 வார்த்தைகள் பிளக்கரில் எழுதப்படுகின்றன.
- வாரத்திற்கு மில்லியன் மக்கள் தங்களது பதிவுகளை இடுகிறார்கள்
- அதிகமாக உபயோகிக்கும் நாடு யூ.எஸ்., அடுத்து பிரேசில், துருக்கி, கனடா, யூ.கே...
- பெரும்பாலான பிளாக்கர்களின் அபிமான விளையாட்டு: கால்பந்து.

விருப்பம் உள்ளவர்கள் பிளாக்கர் பற்றிய தங்களது அனுபவங்களைப் பதிவாகப் போட்டு இங்கே அளிக்கலாம்.

--

கூகுள் மொழிபெயர்ப்பில் இன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மொழி: பெர்சியன்.

தமிழைத் தேடினேன் இன்னும் வரவில்லை. சீக்கிரம் வந்துவிடுமெனெ நினைக்கிறேன். ஏனெனில் ஹிந்தி இருக்கிறது.

--

இன்று கூகுள் புத்தகங்களில் புதிதாக சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
முக்கியமாக கீழே உள்ளதுபோல, புத்தகங்களின் பக்கங்களை உங்கள் வலைப்பூ பக்கங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.



மேலும் சேர்க்கப்பட்டுள்ள வசதிகள்...
- புத்தகங்களினுள் இருக்கும் பக்கங்களில் தேடும் வசதி
- பக்கங்களை தம்னெய்ல்களாகப் பார்க்கும் வசதி
- வெறும் எழுத்துக்களாக மட்டும் பார்க்கும் வசதி
- பக்கங்களைப் புரட்டுவதற்கான பொத்தான்கள்

விபரமாகப் படிக்க இங்கே செல்லவும்.

--

Share/Bookmark
Read More!

கூகுள் - அசத்தும் வொண்டர் வீல் தேடல்...

Youtube ல் புதிதாக வந்துள்ள Wonder Wheel Search அருமையாக இருக்கிறது. நாம் ஒரு விசயத்தைப் பற்றித் தேடும்போது, அது தொடர்பான விசயங்களை காட்டும் விதமும், அங்கிருந்து அது தொடர்பான மற்ற விசயங்களுக்குச் செல்லும் விதமும் அருமையோ அருமை.

இதை உபயோகிக்கும் முறை பற்றி பார்க்கலாம். (இப்போது Tamil என்ற வார்த்தையைத் தேடுவதாக வைத்துக் கொள்வோம்)
Youtube.com சென்று வழக்கம் போல Tamil என டைப் செய்து தேடவும். (படங்களை க்ளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்)

மேலே காட்டுவது போல Wonder Wheel என்பதை க்ளிக்கவும்.



மேலே உள்ளதுபோலத் தெரியும். இது தேவையில்லை எனில் Hide ஐ க்ளிக்கவும்.



தொடர்பான வார்த்தைகளைக் க்ளிக்கி, க்ளிக்கி பார்க்கலாம்.... அதற்கு ஏற்றார் போல வலது புறம் உள்ள Result மாறிக் கொள்ளும்.

---

இதேபோல கூகுளில் இருக்கிறதா என்று தேடினேன், இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வந்திருக்கிறது. ஆனால், google.co.in ல் இல்லை, google.com ல் தான் இருக்கிறது. எனவே, இந்த வசதியை இந்தியாவிலிருந்து உபயோகிக்க வேண்டுமானால் google.com சென்று உபயோகிக்க வேண்டும். அது எப்படி என்று பார்க்கலாம்.

இந்தியாவில் google.com சென்றீர்களானால், தானாக google.co.in சென்றுவிடும்.



பின்பு, Go to Google.com ஐ க்ளிக் செய்து, google.com செல்லவும்.



தேவையென்றால் இங்கிருந்து மீண்டும் google.co.in செல்லவும் முடியும்.




google.com ல், இப்போது Tamil என டைப் செய்து தேடவும். விடை தெரியும் பக்கத்தில் Show Options ஐ க்ளிக் செய்யவும்.




இடதுபுறம் தெரியும் Options களில் Wonder Wheel ஐ க்ளிக்கவும்.




இப்போது Wonder Wheel தெரியும். இனி க்ளிக்கி விளையாட வேண்டியதுதான்... இதை மறைக்க Reset Options ஐ க்ளிக்க வேண்டும்.

---

திடீரென, தமிழில் தேடினால் கிடைக்குமா என சந்தேகம்.... அட... தமிழில் தேடினாலும் கிடைக்கிறதே!

-
-

இது தொடர்பான வீடியோ: http://www.youtube.com/watch?v=_Ah7ZWYjxdM

-

Share/Bookmark
Read More!