கொத்துபரோட்டா, பஞ்சாமிர்தம், நங்கநல்லூர் பஞ்சாமிர்தம், காக்டெயில், மிக்ஸர், மானிட்டர் பக்கங்கள், அவியல், குவியல்,
டரியல், என்’ணங்கள், டிபன் (இட்லி, வடை, பொங்கல்....), மிக்ஸ்டு ஊறுகாய்,
மிக்ஸ்டு ஃப்ரைடு ரைஸ் இப்படி பல பேர் பல தலைப்புல கலவைப் பதிவுகளை எழுதுறாங்க. நான் கூட எழுதிட்டுதான் இருக்கேன் (உண்மையாத்தான்), அது எத்தன பேருக்குத் தெரியும்னு தெரியல.
ஆக்கம் 60 நாள் மொக்கை 30 நாள் - எங்கையோ பாத்த தலைப்பு மாதிரி இருக்கா? இதுதான் நம்ம கலவைப் பதிவின் தலைப்பு, நேத்து வரைக்கும் (இதுக்கு அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுக்கனும்னா தனியா காண்டாக்ட் பண்ணுங்க (போன் பண்ணப் போறவங்களுக்கு இன்னோனு - உங்க தலையெழுத்து(இதுதான் பிராக்கெட்டுக்கே பிராக்கெட் போடுறது))).
திடீர்னு ஒரு சந்தேகம், நேத்து வீட்டுக்குப் போற வழியில. நம்ம கலவைப் பதிவு நல்லா ரீச் ஆகல போல இருக்கேன்னு! காரணம் என்னன்னு ஆராய்ச்சி பண்ணிப் பாத்தா தலைப்பும் ஒரு காரணமா இருக்குமோன்னு தோணுச்சு. சரி, தலைப்பை மாத்தி வச்சுடலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். வேற தலைப்பு என்ன வைக்கலாம்? (மொக்கைனு வைய்டா மொக்கைனு சொல்றீங்களா? கவலப்படாதீங்க, அது லேபில்ல கண்டிப்பா இருக்கும்) ’ஏதேதோ’னு வைக்கலாமா, நம்ம தளத்தோட பேருக்குப் பொருத்தமா இருக்கும் அப்டின்னு தோனுச்சு. ஆனா, மத்த பிரபல பதிவர்களோட தலைப்புகளை எல்லாம் பாத்தா ஏதோ ஒன்னு ஸ்டிரைக் ஆச்சு... எல்லாமே வாய்க்குள்ள போறதாவே இருக்கே! (என்’ணங்களை கணக்குல எடுக்கல) அப்போ நாமலும் ஒரு (சாப்பிடுற) ஐட்டத்தோட பேர தலைப்பா வச்சிடலாம்னு முடிவு பண்ணி, அப்படியே யோசிக்க ஆரம்பிச்சேன் (திரும்பவும்).
பஞ்சாமிர்தம், கொத்துபரோட்டா, மிச்சர் - இந்த மாதிரி மிக்ஸிங் ஐட்டமா இருக்கனுமேன்னு யோசிச்சு யோசிச்சுப் பாத்தேன். கடைசியில நம்ம மூளைக்குள்ள ஓடுன தலைப்புதான் - பழரசம்.
இது சின்ன வயசுல நம்ம ஊரு ஃபேவரிட் ஐட்டம். ஒரு ரூபாய்க்கு ஒரு கண்ணாடி கிலாஸ் நெறையா கெடைக்கும். வாழைப்பழம், ஆப்பிள், அன்னாச்சி, கொய்யா... இப்படி கைல கெடைக்கிறத எல்லாம் மொத்தமா போட்டு அடிச்சி வச்ச்சிருப்பாங்க. சிகப்பு கலர்ல இருக்கும். வாங்கி குடிச்சா வயிறு நெறைஞ்சே போகும். நாம 25 காசு குடுத்து பாதி கிலாஸ்ல குடிக்கிறது வழக்கம் (அப்போ ஒரு நாள் பாக்கெட் மனி அவ்ளோதான்). வீட்டுல இதெல்லாம் வாங்கி குடிக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஏன்னா மிச்சம் இருக்குற பழைய பழங்களைப் போட்டுத்தான் இது பண்றாங்கங்கிறது அவங்களோட எண்ணம். நாம இதெல்லாம் கண்டுக்கிறது இல்ல (இப்ப குடிக்கிற ஐட்டம் வரைக்கும் இதே கததான்).
சென்னை வந்து ஒரு ரெண்டு வருசத்துக்கு அப்புறம் (ஒன்னா ரெண்டா, ஒழுங்கா சொல்லுன்னு கமண்டு போடாதீங்க, ஒரு ஃப்லோல வருது) திரும்பவும் இது குடிக்க ஆசப்பட்டு, ஒரு கடைக்கிப் போயி கேட்டேன். கடக்காரன் நம்மள மொறச்சுப் பாத்தான். என்னடான்னு யோசிக்கிறதுக்குள்ள கூட இருந்த நம்ம மச்சி ஒருத்தன் ’ரெண்டு பழரசம்’ அப்டின்னான். நான் கேட்டது ‘ரெண்டு ஃப்ரூட் ஜூஸ்’.
நல்ல பேரு ஒன்னு கெடச்சிடுச்சுன்னு நெனச்சிட்டு இருக்கும்போது, ஒரு பிரபல பதிவரிடம் கருத்துக் கேக்கலாமேன்னு தோனுச்சு. நமக்குத் தெரிஞ்ச பிரபலம் ஒருத்தருக்கு போன் பண்ணி கேட்டேன். இது நல்லா இல்லன்னு சொல்லிட்டாரு (உங்க ஊருலதான் இப்படி, மத்தவங்களுக்கு பழரசம்னா ஒரு பழத்தோட ஜூஸ்னுதான் தோனும் என்பது விளக்கம்). வேணும்னா ஃப்ரூட் சாலட்னு வைச்சுகோன்னு சொன்னார். இல்ல, நான் தமிழ்லதான் வைப்பேன்னு சொன்னேன். எக்கேடும் கெட்டுப்போன்னு விட்டுட்டாரு.
இப்ப திரும்பவும் யோசன... ரொம்ம்ம்ம்ம்ப யோசிச்சப்றம், மிச்சம் மீதி இருக்குற ஐட்டத்தத்தான எழுதுறோம், அப்போ இட்லி உப்புமான்னு வைக்கலாமா? இல்லை. சரி டஸ்ட் பின், வேணாம் இங்லீஸ், அப்போ குப்பைத்தொட்டி; ஆதவன் கோபத்துக்கு ஆளாக வேணாம். மிச்ச சொச்சம்... ஆஹா, ரொம்ப நல்லா இருக்கு. இதையே வச்சிடலாம்னு முடிவு பண்ணியாச்சு.
இவ்ளோ யோசிச்சு என்ன பிரயோஜனம்? கடைசியில யோசிக்காமலேயே தோனின ஒன்னுதான் தலைப்பா போச்சு. துணிதுவைக்கும்போது தண்ணியெல்லாம் தெரிச்சு, வானவில் மாதிரி தெரிஞ்சது. அட, வானவில் நல்லா இருக்குமேன்னு, அந்த பிரபலத்த திரும்பவும் கூப்பிட்டுக் கேட்டேன். ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. ரைட்டு.
சரி, அதெல்லாம் இருக்கட்டும், மேட்டருக்கு வான்னு ’நீ ஆதவன்’ கூவுறது கேக்குது. இதான் மேட்டரு. இனி ஆ60மொ30 - வானவில்னு மாறப் போகுது,
உங்க மனச கொள்ளை அடிக்கப் போகுது. (கொஞ்சம் ஓவரா போறமோ?) யாராவது இந்தப் பேருல எழுதிட்டு இருந்தா, தயவு செஞ்சு சொல்லிருங்க, அப்பிடின்னு சொல்லுவேன்னு மட்டும் எதிர்பாக்க வேணாம். தயவு செஞ்சு நீங்க பேர மாத்திக்குங்க, ரொம்ப யோசிச்சு, ஒரு பதிவு வேற போட்டுட்டேன் (இதுல பதிவு போட்டது பெருசா, நீ யோசிச்சது பெருசான்னு கேக்காதீங்க).
----
இந்த வானவில்அறிமுகப் வானவில்லாக இருப்பதால் இதுக்கு மேல மேட்டர் இல்ல. என்னது? ஏதாவது சொல்லனுமா? சரி.
டெம்ப்லேட் மாத்திட்டேன் (அதான் தெரியுதே, இது ஒரு மேட்டரான்னு அவசரப்பட வேணாம்). உங்களுக்கும் டெம்ப்லேட் மாத்த உதவி தேவைனா, தாராளமா தொடர்புகொள்ளலாம். ஃபிரீயாய் இருக்கும்பட்சத்தில் கண்டிப்பா செய்து தருகிறேன்.(இது ச்சும்மா... செஞ்சு குடுடான்னு அடம் பிடிச்சீங்கன்னா செஞ்சு குடுத்துருவான் இந்த ஏனாஓனா, அவ்ளோ நல்ல மனசு
).
பெஸ்கியின் டிஸ்கி 1: இந்தப் பதிவுல அதிகமா (பிராக்கெட்) இருக்குதேன்னு தோனுதா? அதுக்கு நா ஒன்னும் செய்ய முடியாது.
பெஸ்கியின் டிஸ்கி 2: மொதல்ல ஒன்னுன்னு போட்டுட்டேன்... ஆனா உண்மையிலயே ரெண்டாவது இல்ல. (இதுக்கு மொதல்ல 1 போடாமலேயே இருந்திருக்கலாமோ?)
---
-ஏனாஓனா.

வானவில் - 2009/10/12
Read More!