அன்று ஓரு இரவில்.........(3)

நண்பர்கள் சொன்ன போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, நடுவில் வெளிச்சத்தை பார்த்து பயந்தாலும் சுடுகாட்டிற்கு சென்று பூவை பறித்து, பின் என்னுடைய அறைக்குச்செல்லலாம் என கிளம்பினேன்.

கிளம்பிய 5 நொடிக்குள் அங்கு சட சடவென வித்தியாசமான சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் எரிந்துக்கொண்டிருந்த பெண்ணின் உடல் எழும்பிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்து நான் பயந்தேன் என யாராவது நினைத்தால் தவறு. உடலை எரிக்கும்போது அப்படி எழும்பும் என்பது எனக்கு தெரியும், அதனால் பயப்படவில்லை.

சுடுகாட்டில் அந்தக்காட்சியை பார்த்துவிட்டு நான் நடக்க தொடங்கினேன்.சுமார் 400 மீட்டர் தூரம் நடந்திருப்பேன் திடீரென எனக்கு தும்மல் வந்தது, தும்மிய பின் கைக்குட்டையால் முகத்தை துடைத்தபடி நடந்தேன். நடக்கும்போது நமது சந்திரமுகியின் ஒரிஜினல் மலையாள படமான "மணிச்சித்ரத்தாழ்” (1994-ல் வெளியானது)காட்சிகளும், அன்று பார்த்த ஹிந்தி திகில் படத்தின் காட்சிகளும் மனதில் வந்துக்கொண்டிருந்தது.

சிறிது தூரம் கூட சென்றிருப்பேன் ஏதோ சத்தம் கேட்பதுபோல் தோன்றியது. மனப்பிரமையென நினைத்து நடந்தேன். ஆனால் சத்தம் கேட்கத்தான் செய்தது. காதை கூர்மையாக்கி கேட்டேன். அது கொலுசுச்சத்தம் போலவே தோன்றியது.காற்றின் ஊளைச்சத்தத்தினிடையே ஜல் ஜல் சத்தம் என்னருகில், மிக அருகில் கேட்டது. மாட்டு வண்டியின் சத்தமாயிருக்கும் என நின்று திரும்பிப் பார்த்தேன் .ஆனால் அங்கே எந்த வண்டியும் வரவில்லை, அந்த சத்தமும் கேட்கவில்லை.சற்று நின்று பின் நடக்க தொடங்கினேன், நான் ந்டக்க நடக்க அந்த சத்தம் என்னை பின் தொடர்ந்தது.என் அடி முதல் முடி வரை வியர்த்தது. இதயம் தெறித்து விழுவது போல் துடித்தது.

கொலுசுப்பிரச்சினையில் இறந்த பெண்ணின் ஆவிதான் என்னை தொடர்கிறது என நினைத்தேன்.இருப்பினும் மனதை திடப்படுத்தி திரும்பிப்பார்த்தேன் யாரையும் காணவுமில்லை, சத்தமுமில்லை. பின்னும் நான் நடக்க தொடங்கினேன், நான் ந்டக்க நடக்க அந்த சத்தம் கேட்டது, நின்றால் கேட்கவில்லை.குலை நடுக்கம் என்பதை அப்போது உணர்ந்தேன்.

எப்படியும் அறைக்கு சென்றுவிடவேண்டுமென வேகமாக நடந்தேன். சத்தமும் என்னை தொடர்ந்தது. பயத்தினால் நன்றாக வியர்த்தது. மீண்டும் கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்துவிட்டு நடக்கும்போதுதான் சத்தம் வந்ததற்கான காரணம் தெரிந்தது. தெரிந்தபின் சிரிப்புதான் வந்தது. அதன் பின் பயமின்றி அறைக்குச்சென்றேன். இப்படி ஒரு வழியாக போட்டியில் ஜெயித்தேன்.




---கி.கி


Share/Bookmark

4 ஊக்கங்கள்:

Nathanjagk said...

நல்ல திகில். நிஜமாவே பயந்துட்டேன். ஆனா ​கொலுசு சத்தம் ஏன் கேட்டுதுன்னு புரியலே. ஒரு​வேளை பாக்​கெட்டில இருந்த சில்லறை காசுக சிணுங்குச்சா, இல்ல சாவி ஏதும் சத்தம் ​போட்டுதா? எலக்ட்ரிக் சுடுகாடு ஆதரளவாளர் சங்கம் ஒண்ணு ஸ்டார்ட் பண்ணலாமான்னு தீவிரமா ​யோசிக்க ஆரம்பிச்சுட்​டேன் கிகி!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//ஜெகநாதன்
ஒரு​வேளை பாக்​கெட்டில இருந்த சில்லறை காசுக சிணுங்குச்சா, இல்ல சாவி ஏதும் சத்தம் ​போட்டுதா?\\

கிட்டத்தட்ட அப்படித்தேன்.

Unknown said...

// நான் ந்டக்க நடக்க அந்த சத்தம் கேட்டது, நின்றால் கேட்கவில்லை.குலை நடுக்கம் என்பதை அப்போது உணர்ந்தேன். //

தல, செம டர்ராயிருப்பிங்கன்னு புரியுது..!!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//தல, செம டர்ராயிருப்பிங்கன்னு புரியுது..!\\


ம்ம்ம்.. எப்படித்தேன் எல்லாரும் கண்டுபுடிக்கிறாங்களோ