Gmail ல் To அட்ரஸ் அடிக்கும் இடத்தில் இப்போது Contact Chooser சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
Wordpress ல் உள்ளது போல இப்போது Blogger லும் TAG Cloud வைத்துக்கொள்ளும் வசதி உள்ளது. தேவையான Label களை மட்டும் தேர்வுசெய்துகொள்வது மேலும் சிறப்பு. மேலும் படிக்க...
Gmail அக்கவுண்டு பெருபவர்களுக்கு, ஏற்கனவே அவர்கள் வைத்திருக்கும் yahoo, aol, hotmail அக்கவுண்டுகளின் தகவல்களை import செய்யும் வசதி இருப்பது தெரிந்ததே... இப்போது பழைய Gmail அக்கவுண்டு வைத்திருப்பவர்களுக்கும் import வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
டோண்டு அவர்கள் இந்தப் பதிவில், இரவு நேரம், சாப்பாடு (அரிசி, சாம்பார், ரசம், தயிர், பொறியல்) வேறு எங்கு கிடைக்கும் எனக் கேட்டிருந்தார். சென்ற ஆண்டு வரை, எழும்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள பழைய வசந்தபவன் மாடியில் கிடைத்தது. இப்போது எப்படியோ தெரியவில்லை.
---
விடுமுறை:
அலுவலக இடமாற்றம் காரணமாக சில நாட்கள் விடுமுறை கிடைத்தது. வெள்ளிக்கிழமை (14-08-2009), கிளம்பி கோவை சென்றேன், கிகி வீட்டிற்கு. அண்ணன் கிகி, சமையல் கலையில் நல்லவர், வல்லவர், நாற்பதிற்கும் மேல் தெரிந்தவர். முதல் நாள் சிக்கனில் 3 வகைகளும், இரண்டாம் நாள் மட்டனில் 2 வகைகளும் செய்து அசத்திவிட்டார்; கொஞ்சம் நானும் கற்றுக்கொண்டேன்.
பின்பு ஞாயிறு கிளம்பி திருச்செந்தூர் சென்றேன். வழக்கம்போல புரோட்டா, இட்லி, சிக்கன், மட்டன் என ஒரு வாரம் இஷ்டம்போல சாப்பாடு.
மீண்டும் சென்னையிலிருந்து அழைப்பு வர (22-08-2009) திரும்பி வந்தேன். வந்த இடத்தில் நெடுநாள் கழித்து வந்த நண்பர் ஒருவருடன் இரண்டு நாட்கள் சுற்றவேண்டியதாகிவிட்டது. அப்பாடா, ஏதாவது எழுதலாமென நினைத்தால், அடுத்த நாள் தம்பி விஜயம். அவனுடன் ஒரு நாள். அவன் கிளம்பியவுடன் பிடித்தது ஒரு கெட்ட தலைவலி + காய்ச்சல். ஒன்றும் செய்ய இயலவில்லை. இன்றுதான் பரவாயில்லை.
ரீடரில் புதிதாக இருக்கும் 400+ பதிவுகளை இப்போதுதான் துடைத்தேன். பாதிக்குப் பாதி படிக்காமலேயே விட்டுவிட்டேன். இனி வழக்கம்போல தொடரவேண்டும். திங்கள் முதல் தொடரும் என நம்புகிறேன்.
---
காய்ச்சல், தலைவலி என்றதும் பன்றி பயம் தொற்றிக்கொண்டது. உங்களுக்கும்? இப்போதுதான் நிம்மதி. அது தொடர்பாக பல SMS கள் வந்தவண்ணம் உள்ளன. அவற்றுள் லேட்டஸ்ட்:
கந்தசாமி ரீமிக்ஸ்-
Feveru
Cough
Cold
Chicken Pox
Cancer
Aids
Sori
Serangu
Small Pox
Thalaivali
Kaivali
இதெல்லாம் டூப்பு,
பன்னிக்கய்ச்சல்தான் டாப்பு.
---
Class போனா வரும்
உயிர் போனா வருமா?
மூடுறா காலேஜ...
-Swin Flu Fans.
---
கடைசியா கண்டுபிடிச்சிட்டாங்க,
பன்னிக்காய்ச்ச்ல்,
சின்ன வயசுல யாரெல்லாம்
பன்னிய கல்லால அடிச்சாங்களோ
அவங்களுக்குத்தான் வருதாம்...
மவனே மாட்னியா?
---
இது வேற:
2009 August Has...
5 Sundays
5 Mondays
5 Saturdays
In Just One Month
It happens only in 823 years.
அட ஆமால்ல!
---
மேலும் கொஞ்சம்...
-
ஒரு பொண்ணு போட்டோவுல தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா
-
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
-
காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்,
நனைந்த பின்பு ஜலதோஷம்.
-
சார்,
டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே...
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?
---
-ஏனாஓனா.
16 ஊக்கங்கள்:
கந்தசாமி ஜோக் கல கல பெஸ்கி
கந்தசாமி பாட்டு ரீமிக்ஸ் சூப்பர்...
தங்கள் உடல்நிலையினை பார்த்து கொள்ளவும்...
//இரவு நேரம், சாப்பாடு (அரிசி, சாம்பார், ரசம், தயிர், பொறியல்) வேறு எங்கு கிடைக்கும் எனக் கேட்டிருந்தார். சென்ற ஆண்டு வரை, எழும்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள பழைய வசந்தபவன் மாடியில் கிடைத்தது. இப்போது எப்படியோ தெரியவில்லை.//
எல்லா ஆந்திரா மெஸ்ஸிலேயும் கிடைக்கும்..
நன்றி வசந்த்.
நன்றி கீதா (உடல்நிலை இப்போது பரவாயில்லை).
நன்றி ராஜ் (நோட் பண்ணியாச்சு).
ஓ, அதான் ஆளையே காணோமா?! உடம்பைப் பார்த்துக்கோங்கோ!
”அட ஆமால்ல”இதை வைச்சே ஒரு இடுகையைப் போட்டுட்டேன்ல!
கொறிக்கக் குடுத்த டிட் பிட்ஸ் சூப்பர் தலைவா!
சாப்பாடு - சமையல் - லீவு லட்டர் - குதசெ ஜோக்ஸ் - மாப்ள ஏனாஓனா... கலக்கல்!! அடுத்த புரோட்டா பதிவுக்கு வெயிட்டிங்! மறக்காம சாப்படிட்ட ஐட்டங்களை, ஹோட்டல்களை ஃபோட்டா புடிச்சிட்டு வரவும்!!
//கந்தசாமி ரீமிக்ஸ்-
Feveru
Cough
Cold
Chicken Pox
Cancer
Aids
Sori
Serangu
Small Pox
Thalaivali
Kaivali
இதெல்லாம் டூப்பு,
பன்னிக்கய்ச்சல்தான் டாப்பு.//
இது சூப்பர்ங்க..
அன்புடன்,
அம்மு.
SMS டாப்பு
மத்ததெல்லாம் டூப்பு இல்ல அதுவும் டாப்பு தான் :)
நன்றி சங்கா அண்ணே.
நன்றி ஜெ மாம்ஸ் (புரோட்டா படம் ஒன்னுதான் இருக்கு... அதனால வேறமாதிரி பதிவு ஒன்னு உங்களுக்காக போட்டுர்றேன்.).
நன்றி அம்மு.
நன்றி ஆதவன்.
நிஜமாகச் சொல்கிறேன். நல்ல தலைவலி. தேவியர்களை அடக்க முடியாமல் கணிணியில் அமரமுடியாமல் அல்லாடிக்கொண்டுருந்த போது உங்கள் வருகையும் பதிலும் என்னுடைய பயத்தை போக்கியது போல மெத்தப்படித்தவர்கள் மேம்போக்காக சொல்வதை வரிந்து கட்டிக்கொண்டு எறிக்க வந்து விட்டால் என்ற அச்சத்தில் இரண்டு மூன்று முறை எப்போதும் இல்லாத பழக்கத்தில் எழுதுகிறேன். உங்கள் பதில் பார்த்த பிறகு தான் மூன்றாவது தொடருக்கு குறிப்பு அடிக்கத் தொடங்கும் போது உங்கள் பதிவில் வந்து பார்த்த போது அத்தனையும் நண்பரின் டைரியை அனுமதியோடு படிப்பது போல் இருந்தது. அதிலும் குறிப்பாக ஆக்கம் 60 நாள் மொக்கை 30 நாள் என்னைப் போன்ற தொழில் நுட்ப குறைவு அறிவு பெற்றவர்களுக்கு பொக்கிஷம். அதைவிட காதல் என்பது சந்தோஷம் ஜலதோஷம் வெகு அற்புதம். இது போல் நீங்கள் எழுதினால் வாரம் 15 ரூபாய் எனக்கு மிச்சம். ஆ,வி க்கு செலவழிப்பது. நன்றி.
நல்ல நகைச்சுவை!
தொடர்ந்து மொக்கை போடுங்க!
நன்றி ஜோதி. தொடர்ந்து எழுதவும். ஒரே கோணத்தில் பார்ப்பது எப்போதும் நல்லதல்ல. நீங்கள் சொன்னது போல உண்மை மறைய வாய்ப்பிருக்கிறது.
நன்றி வால். மொக்கை கண்டிப்பாகத் தொடரும்.
ம்ம்ம் என்னத்த சொல்ல எல்லாம் நன்னாயிருக்கு
வாங்க கிகி அண்ணே, சீக்கிரம் அடுத்த மொக்கைய போடுங்க.
//Wordpress ல் உள்ளது போல இப்போது Blogger லும் TAG Cloud வைத்துக்கொள்ளும் வசதி உள்ளது//
நன்றி. என் வலைப்பூவின் tag cloud சேர்த்துவிட்டேன்.
வருகைக்கு நன்றி சாய்தாசன்.
Post a Comment