ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் - ஆகஸ்ட்08

தகவல்கள்

1) கூகுள் காலண்டரில் ஜீமெயிலில் இருப்பது போன்ற லேப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது கலர் கலரா தீம் வச்சிக்கலாம்.

2) கூகுள் எர்த்ல the ocean, the sky, Mars எல்லாம் இருக்காம் (இதுவே இப்பத்தான் தெரியுது), இப்போ the Moon சேத்துருக்காங்களாம். இதுக்கு லேட்டஸ்ட் Google Earth வேணும்.

3) Youtube ல இப்போ 3D வீடியோ பாக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதுக்கு ஸ்பெசல் 3D கண்ணாடி வேணுமாம் (அதத் தேடித்தான் அலஞ்சிட்டு இருக்கேன்).
ஒரு சாம்பிள் இங்கே...
மேலும் படிக்க இங்கே

4) கூகுள் இமேஜ் தேடலில் இப்போது புதிதாக பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன (web searchல் இருப்பதுபோன்ற optionகள்) மேலும் படிக்க...

5) Twitter எனக்கு இருக்கும் அக்கவுண்டில், புதிய பதிவு போட்டவுடனேயே ஒவ்வொரு முறையும் போய் அப்டேட் செய்வேன். இப்போது அது அவசியமில்லாமல் போய்விட்டது.
Twitterfeed சென்று புதிதாக ஒரு அக்கவுண்ட் திறந்து, அதில் என்னுடைய ட்விட்டரையும், ஏதோ டாட் காமின் RSS feed ஐயும் இனைத்துவிட்டேன். இப்போது புதிய பதிவு போட்டதும் ட்விட்டர் அக்கவுண்ட் தானாக அப்டேட் ஆகிவிடும். இதுபோல...

6) கூகுள் க்ரோம்ல இப்போ கலர் கலரா தீம் வந்துள்ளன... இங்கே சென்று எடுத்துக்கொள்ளுங்கள்...

---

வர வர விளம்பரம் பன்றவங்க அலும்பு தாங்க முடியல. எப்பிடித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ தெரியல. சில விளம்பர சத்தம் கேட்டாலே ஓடி வந்து பாக்கத் தோனுது.
20-20ல வந்த ஜூஜூ விளம்பரம் பத்தி எல்லாத்துக்கும் தெரியும். சமீபத்தில் என்னைக் கவர்ந்தவை...
சன் டிடிஎச் - நம்ம குண்டர் வண்டில போகும்போது சாமி கும்பிட்டுட்டே போவாரு. அப்படியே தலைவர் படம் வரும்போதும் ஒரு கும்பிடு. அந்த டிங் சத்தம் நல்லா பொருந்தியிருக்கும்.

கார் உதிரி பாகங்களுக்கு வரும் ஒரு விளம்பரம் - கார்லயே டென்னிஸ் விளையாடுவாங்க, கார்லயே கல்யாணம், கார்லயே டின்னர்... கடைசியா காருக்குள்ளயே கசமுசா. Car Accessories - Who love their cars ஆம்.

அப்புறம் ஒரு குழந்தைய ஒவ்வொருத்தரா வாங்கு வச்சுக்கிறாங்க, குழந்தை அழுதுக்கிட்டே இருக்கு... கடைசியா அம்மா வாங்கிகிட்ட பிறகுதான் அழுகைய நிறுத்துது - கார் சர்வீஸ்கு - அதுக்குண்டான இடத்துல விடனுமாம்.

அப்புறம் இது...







---

இனி மொக்கை

கடிகார முள் கூட
என்னைப் பயமுறுத்துகிறது,
தாமதம்.
---
இயலாமை மேலே
கோபம் ஏறியது,
அழுகை.
---
நுனி வெளியே தெரிந்தால்தான்
உற்சாகமே வருகிறது,
பென்சில்.
---
சிறு துளி
ஒரு ரவுண்டு,
காலி பாட்டில்கள்.
---
வாங்கவா வேண்டாமா
வாங்கித்தான் பார்ப்போமே,
தள்ளுபடி.
---
தேவையோ இல்லையோ
(வாங்கி) குப்பையிலாவது போடலாம்,
இலவசம்.
---

-ஏனாஓனா.

Share/Bookmark

13 ஊக்கங்கள்:

☀நான் ஆதவன்☀ said...

இதுல நம்ம விளம்பரம் வரையே...ஹி...ஹி

கூகுள்ல பத்தி நிறைய விசயம் இதுல சொல்லியிருக்க. டாங்ஸ்பா

Sanjai Gandhi said...

சூப்பரப்பு.. அந்த ட்விட்டர் மேட்டர் புதுசு.. நன்றி

குறை ஒன்றும் இல்லை !!! said...

சன் டீவி விளம்பரத்த ரசிக்கிறீங்களா? !!!!?????!!!!

ஷங்கி said...

தகவல்களுக்கு நன்றி. விளம்பர ஆட்டம் நல்லாருக்கு. நானும் ஆட்டம் போட்டு நாளாச்சு. இன்னைக்குப் போட்டிர வேண்டியதுதான்.
கவிதைல்லாம் கலக்குதுங்கோ

Nathanjagk said...

கதம்பமா கட்டி கலக்கியிருக்கீரு மாப்ளவாள்! நான் இப்பவும் Internet Explorerதான் யூஸ் பண்றேன். Google Chromeக்கு மாறிடலாமா? எப்படி வசதி? ​கொஞ்சம் விளக்குங்க இல்ல குழப்புங்க. நன்றி!
//நுனி வெளியே தெரிந்தால்தான்
உற்சாகமே வருகிறது,
பென்சில்.//
வேற எந்த உள்குத்தும் இந்த கவிதைல இல்லதானே?

கார்த்திக் said...

/*சிறு துளி
ஒரு ரவுண்டு,
காலி பாட்டில்கள். */

அருமையான சிந்தனை..

/* 3) Youtube ல இப்போ 3D வீடியோ பாக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதுக்கு ஸ்பெசல் 3D கண்ணாடி வேணுமாம் (அதத் தேடித்தான் அலஞ்சிட்டு இருக்கேன்). */

இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்.. நன்றி..

Beski said...

//☀நான் ஆதவன்☀ said...
இதுல நம்ம விளம்பரம் வரையே...ஹி...ஹி//
அய்யோ மறந்துட்டேன்... அடுத்த தடவ வந்துரும். உண்மையிலேயே உன்னோட விளம்பரங்கள்லாம் சூப்பரு.

//கூகுள்ல பத்தி நிறைய விசயம் இதுல சொல்லியிருக்க. டாங்ஸ்பா//
வருகைக்கு நன்றி.
---
//SanjaiGandhi said...
சூப்பரப்பு.. அந்த ட்விட்டர் மேட்டர் புதுசு.. நன்றி//
ஆமாங்கோ... அது இப்போதான் வந்துருக்கு.
வருகைக்கு நன்றி.
---
//குறை ஒன்றும் இல்லை !!! said...
சன் டீவி விளம்பரத்த ரசிக்கிறீங்களா? !!!!?????!!!!//
ஆமா பாஸ், சன்ங்கிறத மறந்துருங்க... எடுக்கப்பட்ட விதம், கருத்து, முக்கியமா பின்னனி சப்தங்கள் அருமையாய் இருக்கிறது எனக்கு.
வருகைக்கு நன்றி ராஜ்.
---
//சங்கா said...
தகவல்களுக்கு நன்றி. விளம்பர ஆட்டம் நல்லாருக்கு. நானும் ஆட்டம் போட்டு நாளாச்சு. இன்னைக்குப் போட்டிர வேண்டியதுதான்.
கவிதைல்லாம் கலக்குதுங்கோ//
நன்றி அண்ணே.

Beski said...

//ஜெகநாதன் said...
கதம்பமா கட்டி கலக்கியிருக்கீரு மாப்ளவாள்! //
நன்றி மாம்ஸ்.

//நான் இப்பவும் Internet Explorerதான் யூஸ் பண்றேன். Google Chromeக்கு மாறிடலாமா? எப்படி வசதி? ​கொஞ்சம் விளக்குங்க இல்ல குழப்புங்க. //

Google Chrome உண்மையிலேயே நல்லா இருக்கு. ரொம்ப லைட் வெயிட், சீக்கிறமா லோட் ஆயிடும். TAB வசதி இருக்கு, history save பண்ணாம browse பண்ண incognito window வசதி இருக்கு. address bar ல type பண்ணும்போது google search word suggestion வரும்... உபயோகித்துப் பாருங்கள்... Internet Explorerஐ விட நல்லா இருக்கும் என்பது எனது கருத்து.

நமது தேர்வு எப்போது Mozilla Firefox தான்... பெரும்பாலான தளங்கள் இதில் சரியாகத் தெரியும், இயங்கும்.


//நுனி வெளியே தெரிந்தால்தான்
உற்சாகமே வருகிறது,
பென்சில்.//
வேற எந்த உள்குத்தும் இந்த கவிதைல இல்லதானே?//
:) (ஸ்மைலி மட்டும்தான், இதுக்கு மேல ஏதும் சொன்னேன்னா உள்குத்து லீகவுட் ஆயிடும்)

Beski said...

//கார்த்திக் said...

/*சிறு துளி
ஒரு ரவுண்டு,
காலி பாட்டில்கள். */

அருமையான சிந்தனை..//
ஆஹ்ஹா... நீங்க நம்ம ஜாதி...

//* 3) Youtube ல இப்போ 3D வீடியோ பாக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதுக்கு ஸ்பெசல் 3D கண்ணாடி வேணுமாம் (அதத் தேடித்தான் அலஞ்சிட்டு இருக்கேன்). */

இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்.. நன்றி..//
ஆமா... அந்த 3D கண்ணாடி இருந்தா அற்புதமாக தெரியும்.

வருகைக்கு நன்றி கார்த்திக்.

iniyavan said...

நல்லா இருக்கு நண்பனே.

எனக்கு ட்விட்டரை பற்றியும், பேஸ் புக் பற்றியும் தெரிந்து கொள்ள ஆசை.

எங்கே சென்ற்று தேடுவது?

Beski said...

//என். உலகநாதன் said...

நல்லா இருக்கு நண்பனே.//
நன்றி.

//எனக்கு ட்விட்டரை பற்றியும், பேஸ் புக் பற்றியும் தெரிந்து கொள்ள ஆசை.
எங்கே சென்ற்று தேடுவது?//

facebook என்பது orkut மாதிரிதான். ஒரு friend network அவ்வளவே. இங்கு விளையாட்டுக்கள் நிறைந்திருக்கும். உபயோகிக்க ஆரம்பித்தால் நிறைய தெரிந்துகொள்ளலாம். ஆனால்... BLOG போலவே இதற்கு நிறைய நேரம் செலவு செய்யவேண்டியிருக்கும். நான் blog எழுத ஆரம்பித்த பிறகு இது போன்ற தளங்களுக்குச் செல்வது அறவே நின்றுவிட்டது.

twitter என்பது தங்களது செயல்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு அமைப்பு. அதை அரட்டைக்கும் பயன்படுத்துகிறார்கள் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். இதைப் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை, நேரமில்லாமையே காரணம். நீங்கள் twitterல் ஒரு அக்கவுண்டு திறந்துகொள்ளுங்கள்... கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்வோம். இவை என்னுடைய முகவரிகள்...
http://twitter.com/yetho
http://twitter.com/pbeski
---
மற்ற நண்பர்கள் மேலும் தெரிந்தால் தகவலைப் பகிர்ந்துகொள்ளவும்.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

மொக்கை என்பது ஹைக்கூ கவிதைகளோ???

Beski said...

//கிறுக்கல் கிறுக்கன் said...
மொக்கை என்பது ஹைக்கூ கவிதைகளோ???//

ஹைக்கூன்னே போட்டுருப்பேன்... இதெல்லாம் ஹைக்கூவான்னு எவனும் திட்டிறக்கூடாதுல்ல.

ஹைக்கூ மாதிரி இருந்தா சரிதான். :)