இப்பல்லாம் என்ன பெரிய ஓபன் தேட்டரு, அப்போ பாத்தோமே அந்த மாதிரி வருமா? பள்ளி நாட்களில் நடந்த சுவையான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.
தெருவில் எப்போதாவது ஒரு கல்யாணம் நடக்கும். சிலருக்கு எப்படா பந்தி ஆரம்பிக்கும் என்றிருக்கும். ஆனா நம்ம கூட்டத்துக்கோ, எப்படா கல்யாணம் முடியும், எப்படா கேசட் ரிலீஸ் ஆகும்னு இருக்கும். ஒரு வாரத்தில் எப்படியும் கேசட் வந்துவிடும். கல்யாண வீட்டினர் சார்பாக டிவி டெக் வாடகைக்கு எடுக்கப்படும். அவர் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்து, அவர் வீட்டுக்கு நேரே தெருவில் வைத்துவிடுவார்கள். இருட்டியதும் ஒளிபரப்பு ஆரம்பமாகும்.
டெக்குக்காரர் முதலில் சில செட்டிங்குகளைச் செய்வார். அதை இதை மாட்டுவார். ஒரு கேசட்டைப் போட்டு அங்கே இங்கே எதையெல்லாமோ நோண்டுவார். அப்போதெல்லாம் AV கிடையாது. நாங்கள்லாம் சுத்தி நிண்ரு ‘பே’ என பார்த்துக்கொண்டிருப்போம். சிறிது நேரத்தில் படம் தெரிய ஆரம்பிக்கும். உடனே நம்ம கூட்டம் கத்த ஆரம்பிச்சுடும், ஓஓஓ... எல்லோருக்கும் தெரிந்துவிடும், கனெக்சனெல்லாம் ஓக்கே என்று.
தெரு மக்கள், கல்யாண வீட்டுக்காரர்கள் மற்றும் அவரது சொந்தங்கள், தெருவில் போவோர் வருவோர் அனைவரும் புடைசூழ, முதலில் கல்யாண கேசட். நாம எப்படா வருவோம்னு பாத்து, ‘டேய், நாண்டா, நாண்டா’ என்று சுற்றி பகிர்ந்துகொள்வோம். அதன் பிறகு எப்படா முடியும் என்றிருக்கும். அதே நேரத்தில் பலரது சாப்பாடும் முடிந்திருக்கும், தெருவிலேயே. பின்பு, பாய், தலையணை எடுத்து வந்து செட்டில் ஆவதற்கும், கல்யாண கேசட் முடிந்து படம் ஆரம்பிப்பதற்கும் சரியாக இருக்கும்.
அதன்பிறகு ஒரே கொண்டாட்டம்தான். விசில், கைதட்டல், சிரிப்பு என தெருவே அமர்க்களப்படும். எப்படியும் புதுப்படம் இரண்டு இருக்கும். சிலர் விடிய விடியக் கூட ஓட்டுவர். நாமெல்லாம் ஒரு படம் முடிந்தவுடனேயே மட்டையாகி விடுவோம். விழித்துப் பார்த்தால் காலையில் வீட்டில் இருப்பேன்.
அப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் டிவி இருக்காது. எப்போதாவது இப்படி புதுப் படம் பார்த்தால்தான் உண்டு. இல்லையேல் ஞாயிறு, கருப்பு வெள்ளை படம் மட்டுமே. ‘டிவி டெக் வாடகைக்கு’ பலகைகள் ஊருக்குள் அப்போதெல்லாம் 2/3 இருக்கும். இப்போதெல்லாம் அது ஒழிந்தேவிட்டது. எல்லார் வீட்டிலும் டிவி, டிவிடி, ஹோம் தேட்டர் என வளர்ந்துவிட்டதே!
---
பள்ளிக்கூட நினைவுகளை எழுத ஆரம்பித்தவுடன் பல நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. தெப்பக்குளம், சுனை, மதகு, கடல் ஆகியவற்றில் குளியல், காவண்டி(சைக்கிள்) வாடகைக்கு எடுத்துப் பழகியது, பள்ளியில் சென்ற சுற்றுலாக்கள், சர்க்கஸ், ஜூராசிக் பார்க் படம், நாங்கள் விளையாண்ட கோலி, பம்பரம், கபடி, கொக்கோ, பாண்டி, சிகரெட் அட்ட, சோடா சுப்பி, கல்லா மண்ணா, கண்ணாமூச்சி, செவன் ஸ்டோன், கிளியந்தொட்டு, உப்புமூட்ட சண்ட, குச்சி கம்பு, கள்ளன் போலீஸ், WWF, வீடு கட்டி, சொப்பு சாமான், லக்கி பிரைஸ், கலக்கம்பு(திருவிழா நேரங்களில் ரொம்ப பேமஸ்) பூப்பறிக்க வருகிறோம்(?), ஆவியம், நொண்டி, டிக் டிக்... யாரது... பேயது...(?), கொல கொலயா முந்திரிக்கா, தாயக்கட்டை, பல்லாங்குழி, கூட்டஞ்சோறு, படம்பேர் சொல்லி, ஊர் பேர் சொல்லி, பாட்டுக்குப் பாட்டு... அனைத்தும் பசுமை. பழைய நினைவுகளில் மூழ்கி மகிழக் காரணமான நண்பர் சிறிய பறவை - ஜோதி அவர்களுக்கு நன்றிகள்.
இனி, கிகி தனது பள்ளி நினைவலைகளை நம்மேல் வீசுவார்.
-ஏனாஓனா.
26 ஊக்கங்கள்:
//தங்களது ஓட்டுக்களைவிட, பின்னூட்டங்களே விலைமதிப்பற்றது!//
அப்ப இந்த பின்னூட்டத்தை வச்சுகிட்டு ஒரு ஆயிரம் ரூவா கடன் கொடேன்
//☀நான் ஆதவன்☀ said...
அப்ப இந்த பின்னூட்டத்தை வச்சுகிட்டு ஒரு ஆயிரம் ரூவா கடன் கொடேன்//
அதான் விலைமதிப்பற்றதுன்னு சொல்லிட்டோம்ல... இப்படி நப்பித்தனமா 1000ம்னு கேக்குற...
கேக்குறதுன்னு வந்துட்டல்ல... நல்லா கேளு...
கேஸட் கடை காரர் சைக்கிளில் டிவியும், விசிஆர் ம் எடுத்து கொண்டு போவதை பார்த்தாலே எங்களுக்கு கொண்டாட்டமாகி விடும். எந்த வீட்டிற்க்கு போகிறார் என்று அவர் பின்னாலயே ஓடி போய் பார்த்து...அது தெரிந்த வீடாக இருந்தால் கொண்டாட்டம் தான் அது.
எல்லாத்தையும் கிளறி விட்டுடயேப்பா....நல்லாயிரு
//அதான் விலைமதிப்பற்றதுன்னு சொல்லிட்டோம்ல... இப்படி நப்பித்தனமா 1000ம்னு கேக்குற...
கேக்குறதுன்னு வந்துட்டல்ல... நல்லா கேளு...//
இல்லைன்னு சொல்றதுன்னு முடிவாகிட்ட பிறகு அதிகமா கேட்டா என்ன? கம்மியா கேட்டா என்ன? அப்படி தானே?
//☀நான் ஆதவன்☀ said...
இல்லைன்னு சொல்றதுன்னு முடிவாகிட்ட பிறகு அதிகமா கேட்டா என்ன? கம்மியா கேட்டா என்ன? அப்படி தானே?//
நம்மள நல்லாத்தான் புரிஞ்சு வெச்சிருக்காய்ங்க...
//☀நான் ஆதவன்☀ said...
கேஸட் கடை காரர் சைக்கிளில் டிவியும், விசிஆர் ம் எடுத்து கொண்டு போவதை பார்த்தாலே எங்களுக்கு கொண்டாட்டமாகி விடும். எந்த வீட்டிற்க்கு போகிறார் என்று அவர் பின்னாலயே ஓடி போய் பார்த்து...அது தெரிந்த வீடாக இருந்தால் கொண்டாட்டம் தான் அது.//
பகிர்தலுக்கு நன்றி ஆதவன்.
//இப்போதெல்லாம் அது ஒழிந்தேவிட்டது.
அப்பிடியே இருந்துருந்தா ரொம்ப நல்லா இருந்துருக்கும்ங்க... இப்ப ஏதோ பறிகொடுத்த மாதிரி இருக்கு..
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே !!!!
வாங்க ராஜ்,
வருதுல்ல... வருதுல்ல... வருதுல்ல... ?
நல்லா இருக்கு.
மாப்ள, ஆட்டோகிராப்-பார்ட் 2க்கு நீங்கதான்............ போனா போவுது ஹீரோ! நான் பைனாஸ் பண்றேன்.... ஹீரோ டீத்தண்ணி சிலவுக்கு! கடைசிப் பத்தியில் இருக்கிற பட்டியல் வரிசை கவிதையா இருக்கு! வாழ்த்துக்கள்!
//மாப்ள, ஆட்டோகிராப்-பார்ட் 2க்கு நீங்கதான்............ போனா போவுது ஹீரோ! //
ஆஹா...
//நான் பைனாஸ் பண்றேன்....//
சிக்கிட்டார்யா..
//ஹீரோ டீத்தண்ணி சிலவுக்கு! //
கவுத்திட்டார்யா...
//கடைசிப் பத்தியில் இருக்கிற பட்டியல் வரிசை கவிதையா இருக்கு! //
அப்படியா, சந்தோசம்...
இதுல பத்து குச்சியும், கல்லாங்காயும் விட்டுப்போச்சு.
//வாழ்த்துக்கள்!//
நன்றி.
//நீங்க ஏதாவது சொன்னா மட்டும் போதும்...
நீங்க ஏதாவது சொன்னா மட்டும் போதும்...//
ஏதாவது
மாப்ள, ஆட்டோகிராப் - பார்ட் 2 ஹீரோ.... நீங்கதான் (போனா போவுது) கலக்கல்! கடைசி பத்தி பட்டியல் படு சுவாரஸியம்! வாழ்த்துக்கள்!
//நீங்க ஏதாவது சொன்னா மட்டும் போதும்...
நீங்க ஏதாவது சொன்னா மட்டும் போதும்..//
சொல்லியாச்சு.. சொல்லியாச்சு..! :)
அன்புடன்,
எழில். ரா
உங்களின் தொடர் பள்ளி அனுபவங்கள் அட்டகாசம் எவனோ ஒருவன். பெரும்பாலான உங்கள் அனுபங்கள் என்னுடன் ஒத்துப்போகிறது,. என் ஊரில் இந்த டிவி டெக் போட்டு எம்ஜியார் படம் போட்டு சாகடிப்பாங்க,..எல்லாம் அ.தி.மு.க தான்.. ஆனால் நல்ல தொடர் பதிவு எவனோ ஒருவன்,..
//jothi said...
//நீங்க ஏதாவது சொன்னா மட்டும் போதும்...
நீங்க ஏதாவது சொன்னா மட்டும் போதும்...//
ஏதாவது//
வாங்க ஜோதி... வர வர உங்களுக்கு நக்கல் கொஞ்சம் அதிகமாயிடுச்சு... :)
//ஜெகநாதன் said...
மாப்ள, ஆட்டோகிராப் - பார்ட் 2 ஹீரோ.... நீங்கதான் (போனா போவுது) கலக்கல்! கடைசி பத்தி பட்டியல் படு சுவாரஸியம்! வாழ்த்துக்கள்!//
உங்களுக்கு நீங்களே ரிப்பீட்டா?
//tamizhilezhil.com said...
//நீங்க ஏதாவது சொன்னா மட்டும் போதும்...
நீங்க ஏதாவது சொன்னா மட்டும் போதும்..//
சொல்லியாச்சு.. சொல்லியாச்சு..! :)//
வாங்க மச்சான்.... ஓக்கே ஒக்கே.
//jothi said...
உங்களின் தொடர் பள்ளி அனுபவங்கள் அட்டகாசம் எவனோ ஒருவன். பெரும்பாலான உங்கள் அனுபங்கள் என்னுடன் ஒத்துப்போகிறது,. என் ஊரில் இந்த டிவி டெக் போட்டு எம்ஜியார் படம் போட்டு சாகடிப்பாங்க,..எல்லாம் அ.தி.மு.க தான்.. ஆனால் நல்ல தொடர் பதிவு எவனோ ஒருவன்,..//
எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் ஜோதி. நன்றி.
பின்னோக்கிய நினைவுகள் சுவாரசியத்தையும், கூச்சத்தையும் குதூகலத்தையும் ஒருங்கே கொண்டு வரும் இல்லையா?!
//சங்கா said...
பின்னோக்கிய நினைவுகள் சுவாரசியத்தையும், கூச்சத்தையும் குதூகலத்தையும் ஒருங்கே கொண்டு வரும் இல்லையா?!//
சரியா சொன்னீங்க அண்ணே.
நல்லா இருக்கு.
//என். உலகநாதன் said...
நல்லா இருக்கு.//
நன்றி அண்ணே.
அப்போதெல்லாம் டெக் ஆப்பரேட்டர்கள் காட்டும் கெடுபிடி?!! நைட் தண்ணி, தம் எல்லாம் கொடுத்தால்தான் ஒழுங்கா படம் போடுவார்கள்.இல்லைன்னா படம் காட்டுவார்கள்.
அப்படி கெத்து காட்டிய ஒருவர் சமீபத்தில் என்னிடம், புது படமெல்லாம் கம்பூட்டரில எடுக்கிறதுக்கு என்னோட மவ வயித்துப்புள்ளைக்கு கொஞ்சம் சொல்லிக்கொடேன் என்று கேட்டபோது ஒரு பழைய பாடல்தான் ஞாபகம் வந்தது
//கிறுக்கல் கிறுக்கன் said...
அப்படி கெத்து காட்டிய ஒருவர் சமீபத்தில் என்னிடம், புது படமெல்லாம் கம்பூட்டரில எடுக்கிறதுக்கு என்னோட மவ வயித்துப்புள்ளைக்கு கொஞ்சம் சொல்லிக்கொடேன் என்று கேட்டபோது ஒரு பழைய பாடல்தான் ஞாபகம் வந்தது//
:))))
Post a Comment