தளபதி - ஒரு பார்வை

சிறு வயதில் சூப்பர் ஸ்டார் என்ற மோகம் இருந்ததுண்டு. முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கெல்லாம் அது இருந்ததில்லை, ‘ஸ்டைல்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் மட்டுமே அது அடக்கம். அப்போது பார்த்த படம் - தளபதி. இப்போதோ, திரையில் தெரியும் ஸ்டைல் என்பதையும் தாண்டி, ரஜினி என்ற மனிதனை மிகவும் பிடித்துப் போயிற்று. கடந்த ஞாயிரு மதியம் மீண்டும் தளபதி படம் பார்க்க நேர்ந்தது. அப்போது பார்த்ததற்கும், இப்போது பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்?! தளபதி = நட்பு.

தளபதி - ஒரு பார்வை, என்பது அப்படத்தின் விமர்சனம் அல்ல, அப்படத்தில் வரும் ஒரு சிலரின் பார்வைகளே, எனது பார்வையில். இதைத் தொடர்வதற்கு முன், ரஜினி ஒரு பெரிய நடிகர் என்பதையும், மணிரத்னம் பெரிய இயக்குனர், இளையராஜா மிகப்பெரிய இசைக் கலைஞர் என்பதையெல்லாம் கொஞ்சம் மறந்து விடலாம்.

ரஜினி, மம்முட்டி முதன்முதலில் சந்திக்கும்போது இருவருமே கோபமாகப் பார்த்துக்கொள்வர். பின்பு, ரஜினியை சிறையிலிருந்து மம்முட்டி வெளியே எடுத்தவுடன் ரஜினி சொல்லும் வார்த்தைகள், ‘உள்ளயே செத்துருக்கவேண்டிய அனாதை நான், என்னிடம் இதுக்குப் பதில் கொடுக்க ஒன்னே ஒன்னுதான் இருக்கு, என் உயிர்’, அவரது பார்வையில் தெரியும் நன்றி. இங்கே (2:00லிருந்து, பின்னனி இசையைக் கவனிக்கத் தவற வேண்டாம்)

ரஜினி ஒரு போலீசை நடு ரோட்டில் வெட்டுவார், அதை சோபனா பார்த்துவிடுவார். அதன் பின்பு, படித்துறையில் அவர்களது சந்திப்பு. சோபனா அழுதுகொண்டிருப்பார், ரஜினி ஆவேசமாகப் பேசிக்கொண்டிருப்பார், கடைசியில்,
’என்ன பிடிக்கலையா?’
சோபனா இல்லையெனத் தலையாட்டுவார்,
’அப்புறம் என்ன?’
’பிடிச்சிருக்கு.’
அப்போ இருவரின் முகத்தையும் பாக்கனுமே... அதிலும் ரஜினியோட பார்வை... அதை முழின்னே சொல்லிக்கலாம். அது இங்கே (3:25லிருந்து)

ஜெய்சங்கருக்கு, ரஜினிதான் ஸ்ரீவித்யாவின் மகன் எனத் தெரிந்துவிடும். பின்பு அவரும், ரஜினி மற்றும் தாய் ஒரு கோவில் காட்சியில். ரயில் சப்தம் கேட்கும். தாய் அப்படியே திரும்பிப் பார்ப்பார், குற்றம்+பாசப் பார்வை. அப்படியே காமிரா ரஜினி பக்கம் போகும். அவரும் அது போலவே திரும்பிப் பார்த்துக்கொண்டிருப்பார், ஏக்கம்+தொலைந்து போன்றதொரு பார்வை. இருவருக்குமே பார்வையை கண்ணீர் மறைக்கும். இப்போது ஜெய்சங்கர் பின்னாலிருந்து காமிரா, இருவரையும் காட்டும், இருவரும் சுதாரித்துக்கொள்வார்கள். மிக மிக அருமையான காட்சி. மணிரத்னத்தையும், இளையராஜாவையும் இந்த இடத்தில் மிகவும் பிடித்துப் போயிற்று. அப்போது ஜெய்சங்கரிடம் இருக்கும், உண்மை தெரிந்தும் சொல்ல முடியாத ஒரு பார்வை.


பின் ஜெய்சங்கர், ரஜினியை அழைத்து உண்மையைச் சொல்லுவார், அப்போது முதலில் தாயின்மீது கோபம் கொள்ளும் ரஜினி, பின் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், தன்னுடைய நிலையையும் எண்ணி வருத்தப்படுவார். அப்போது பின்னனியில் சூரியன் இருக்கும். இதே போல, சோபனாவிடம் கடைசியாகப் பேசும்போதும், தாயைத் தன் வீட்டில் சந்திக்கும்போதும், படம் முடியும்போதும், சூரியனும் ஒரு கதாப்பாத்திரமாய் இருக்கும். படத்தில் ரஜினியிம் பெயர், சூர்யா. கவனித்த இன்னொரு விசயம், ரஜினி இந்தப் படத்தில் சிகரெட் பிடிக்க மாட்டார்.

அடுத்து, ரஜினி தாயைப் பி்ன்தொடர்ந்து பார்ப்பார், கோவிலில். ‘சின்னத் தாயவள் தந்த ரா..சா..வே.....’, மனதை மயக்கும் பாடல். தாய் அழும்போது பின்னாலிருந்து, ‘அம்மா, அழாதீங்கம்மா’, என்பார், தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் பார்வையுடன். தாய் குனியும்போது, தலையிலிருந்து ஒரு பூ விழுவதும், பூவை மிக பக்கத்தில் காண்பிப்பதும், ரஜினி அதை உள்ளங்கையில் எடுத்து வைத்து அழுவதும், அருமையாக படமாக்கப்பட்டிருக்கும்.


கலெக்டருடன் மீட்டிங் காட்சியில் பார்வையில் அணல் தெரிக்கும். குழந்தையுடன் தன் கதையைப் பற்றிப் பேசும்போது பார்வையில் குளிர் வீசும். பானுப்பிரியா மஞ்சள் சால்வையுடன், ரஜினியின் தாயைச் சந்திக்கும்போது, ’என்னடா! இதப் பார்த்தும் இவங்களுக்குத் தெரியலயே’, என ஏமாற்றமாகப் பார்ப்பதும், பின், அடையாளம் கண்டுகொண்டபின், பெரிதாக ஏதோ அடைந்ததைப் போல பார்ப்பதும், அருமையான அமைப்பு.
இவை இங்கே

’காட்டுக்குயிலு மனசுக்குள்ள, பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல...’, இப்படித்தான் ஆரம்பிகிறது அந்த கொண்டாட்டப் பாடல். உள்ளே வருகிற வரிகள்,
உள்ள மட்டும் நானே
உசிரக்கூடத் தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
நண்பன் போட்ட சோறு
தினமும் தின்னேம்பாரு
’நட்பைக்கூட கற்பைப்போல எண்ணுவேன்...’
அவர்களது பார்வைகளில் தெரியும் - நன்றியும், நட்பும்.
இங்கே (3:48ல்)

கடைசியில் மம்முட்டி, நன்றாக சிறையில் அடிவாங்கித் திரும்பி வருவார். வந்து, ‘அந்த கலெக்டர் குடும்பம் சாகனும்’, என்பார். ரஜினி முடியாது என்பார். விவாதம் முற்றி, ரஜினி அது தன் குடும்பம் என்று சொலிவிடுவார். இது தெரிந்துமா என்னுடன் இருக்கிறாய், ஏன்? என்பார் மம்முட்டி, ‘ஏன்னா நீ என் நண்பன்’ என்பார் ரஜினி (ரஜினி நண்பன் எனும்போது வாய் அசைவு கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும்). படம் முழுவதுமே நட்பின் அடையாளங்களாய் காட்சிகள். அப்போது மம்முட்டி, ‘பாத்தீங்களா என் சூர்யாவ, பாத்தீங்களா என் தளபதிய’ என்று பெருமைப்படுவார். அவரது பார்வையில் தெரியும், நட்பின் பெருமிதம்.

இதோ எனது நட்பின் பெருமிதம்

குறை ஒன்றும் இல்லை - ராஜ் கொடுத்தது.

---

கொஞ்சம் ரொம்பவே லேட்டாகிப் போச்சு. இன்னேரம் எல்லாருக்குமே வந்து சேந்துருக்கும். ஆகவே, வாங்கினவங்க, வாங்காதவங்க எல்லாருக்குமே இதக் கொடுத்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன். இந்தப் பதிவிற்கு பின்னூட்டமிடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை அளிக்கிறேன், எப்பூடி? (கவுத்திறாதீங்கப்பா, வழக்கம்போல ஏதாவது சொல்லிட்டுப் போங்க.)

---
-ஏனாஓனா.

Share/Bookmark

18 ஊக்கங்கள்:

வால்பையன் said...

நல்ல பார்வை தான்!

நல்லாருக்கு தல!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

மஹாபாரதத்து நட்புதான் தளபதி.கர்ணன் - துரியோதனன் நட்பை அப்படியே எடுத்து மசாலா தடவி
தமிழ் சினிமா என்னும் சட்டியில் போட்டு எடுத்ததுதான்
தளபதி.

ஆனா நட்பை எங்கிருந்து சுட்டாலும் நன்றாகத்தான் இருக்கிறது

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னமோ போங்க.. நட்ப சொல்ல கூட உங்களுக்கு சினிமா தேவைபடுது..ஹீம்ம்ம்

Beski said...

விருதை பெற்றுக்கொண்ட,
வால்பையன்,
கிறுக்கல் கிறுக்கன்,
ராஜ்,
ஆகியோருக்கு நன்றி.

☀நான் ஆதவன்☀ said...

அந்த விருதை எனக்கு தனியா ராஜ் கொடுத்திட்டாரே!

Nathanjagk said...

தளபதி விமர்சனம் சூப்ப்ப்ப்பர் மாப்ள! என்ன ​கொஞ்சம் ​லேட்டா ​போட்டுட்டீங்க! பின்னூ ​போடறவங்களுக்கு அவார்ட்டு பின்னு (pin)​செய்யப்படும்னு புரட்சி பண்ணிடீங்க!!

ஷங்கி said...

இதுவரைக்கும் ”ரிப்பீட்டேய்” போட்டதில்லை. இன்னைக்கு ஆரம்பிச்சிர வேண்டியதுதான். தம்பி ஜெகநாதனுக்கு ஒரு ”ரிப்பீட்டேய்”!
......

விருது வழங்கிய ஏனா ஓனாக்கு நன்றி!

Unknown said...

மாப்பு... தளபதி - மகாபாரதத்தின் Modern version.

மறுபடியும் உங்க நட்ப இந்த விருது குடுத்து மனசுல நிரந்தரமா ஒரு எடத்த புடிச்சுட்டீய..! ரொம்ப சந்தோஷமா இருக்கு..

ஒடனே வந்து ஊக்கப்படுத்த(பின்னூட்டம் போட) முடியல.. வீடு மாறீட்டோம். இணைய இணைப்பு என்னமோ வீடு மாறி 2 நாள்ல வந்திடுச்சு, ஆனா வீட்ட செட் பண்ண கொஞ்சம் டயம் ஆகீடுச்சு.. அதான் பதிவு எதுவும் உடனே போட முடியல..

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//☀நான் ஆதவன்☀ said...
அந்த விருதை எனக்கு தனியா ராஜ் கொடுத்திட்டாரே!\\

//ஜெகநாதன் said...
தளபதி விமர்சனம் சூப்ப்ப்ப்பர் மாப்ள! என்ன ​கொஞ்சம் ​லேட்டா ​போட்டுட்டீங்க! பின்னூ ​போடறவங்களுக்கு அவார்ட்டு பின்னு (pin)​செய்யப்படும்னு புரட்சி பண்ணிடீங்க!!\\

//சங்கா said...
இதுவரைக்கும் ”ரிப்பீட்டேய்” போட்டதில்லை. இன்னைக்கு ஆரம்பிச்சிர வேண்டியதுதான். தம்பி ஜெகநாதனுக்கு ஒரு ”ரிப்பீட்டேய்”!\\
......

விருது வழங்கிய ஏனா ஓனாக்கு நன்றி!

//எழில். ரா said...
மாப்பு... தளபதி - மகாபாரதத்தின் Modern version.

மறுபடியும் உங்க நட்ப இந்த விருது குடுத்து மனசுல நிரந்தரமா ஒரு எடத்த புடிச்சுட்டீய..! ரொம்ப சந்தோஷமா இருக்கு..

ஒடனே வந்து ஊக்கப்படுத்த(பின்னூட்டம் போட) முடியல.. வீடு மாறீட்டோம். இணைய இணைப்பு என்னமோ வீடு மாறி 2 நாள்ல வந்திடுச்சு, ஆனா வீட்ட செட் பண்ண கொஞ்சம் டயம் ஆகீடுச்சு.. அதான் பதிவு எதுவும் உடனே போட முடியல..\\



ஏனா ஓனா கடுப்பில் விடுப்பெடுத்து சொந்த ஊருக்குச்சென்றிருப்பதால் உங்கள் ஊக்கங்களுக்கான பதிலை விரைவில் அளிப்பார். ம்ம்ம்... அப்புறம் அனைவருக்கும் நன்றி

Beski said...

//நான் ஆதவன்☀ said...
அந்த விருதை எனக்கு தனியா ராஜ் கொடுத்திட்டாரே!//
அதனால என்ன? நானும் கொடுப்பேன்...

Beski said...

//ஜெகநாதன் said...
தளபதி விமர்சனம் சூப்ப்ப்ப்பர் மாப்ள! என்ன ​கொஞ்சம் ​லேட்டா ​போட்டுட்டீங்க! பின்னூ ​போடறவங்களுக்கு அவார்ட்டு பின்னு (pin)​செய்யப்படும்னு புரட்சி பண்ணிடீங்க!!//
நன்றி மாம்ஸ்.

Beski said...

//சங்கா said...
இதுவரைக்கும் ”ரிப்பீட்டேய்” போட்டதில்லை. இன்னைக்கு ஆரம்பிச்சிர வேண்டியதுதான். தம்பி ஜெகநாதனுக்கு ஒரு ”ரிப்பீட்டேய்”!//

ஆரம்பிச்சிட்டீங்களா அண்ணே... அப்படிப்பாத்தா மாம்ஸ் சொல்ற எல்லாத்துக்கும் நீங்க ரிப்பீட்டு போட வேண்டி வரும்... பர்வால்லயா?

Beski said...

//எழில். ரா said...
மறுபடியும் உங்க நட்ப இந்த விருது குடுத்து மனசுல நிரந்தரமா ஒரு எடத்த புடிச்சுட்டீய..! ரொம்ப சந்தோஷமா இருக்கு..//
அட... இதுக்கு முன்னாடி நிரந்தர இடம் இல்லையா என்ன?

//ஒடனே வந்து ஊக்கப்படுத்த(பின்னூட்டம் போட) முடியல.. வீடு மாறீட்டோம். இணைய இணைப்பு என்னமோ வீடு மாறி 2 நாள்ல வந்திடுச்சு, ஆனா வீட்ட செட் பண்ண கொஞ்சம் டயம் ஆகீடுச்சு.. அதான் பதிவு எதுவும் உடனே போட முடியல..//
லேட்டா வந்தாலும் பரவாயில்ல... லேட்டஸ்ட்டா வாங்க.

Beski said...

விருதைப் பெற்றுக்கொண்ட,
நீ ஆதவன்,
ஜெகநாதன்,
சங்கா,
எழில்,
கிகி,
அனைவருக்கும் நன்றி.

கிரி said...

பெஸ்கி ரொம்ப நல்லா ரசிச்சு எழுதி இருக்கீங்க..நீங்க குறிப்பிட்ட அனைத்து காட்சிகளும் எனக்கு ரொம்ப பிடித்தவை

இந்த படத்தில் உள்ள காட்சிகளை பற்றி எழுதினால் மொத்த படத்தையும் தான் எழுத வேண்டி வரும்..

ரஜினி அர்விந்த் சாமியிடம் நான் உங்க அண்ணன் மாதிரி என்று கூறியதும்..உன்ன மாதிரி ஒரு அண்ணன் இருந்தால் என் அம்மா அன்னைக்கே தூக்கி எறிந்து இருப்பாங்க என்று கூறும் காட்சிகளும்..

ரஜினிக்கு பொண்ணு கேட்கும் காட்சியில்..மம்முட்டி சாருகாசனிடம் எப்ப கல்யாணம் நடக்கும் என்றதும் நான் செத்தப்புறம் என்று என்று கூறும் வசனங்களும் அருமை

இதில் ஏகப்பட்ட வசனங்கள் கலக்கலாக இருக்கும்

Beski said...

//இந்த படத்தில் உள்ள காட்சிகளை பற்றி எழுதினால் மொத்த படத்தையும் தான் எழுத வேண்டி வரும்..//
உண்மைதான்.

விருதைப் பெற்றுக்கொண்டதற்கு நன்றி கிரி அண்ணே.

CM ரகு said...

நட்பை அழகா சொல்லும் படம்....
படம் முழுக்கவே சூப்பரு அண்ணாத்தே...
அதை நீங்க புட்டு புட்டு விமர்சனம் செஞ்சது இன்னும் சூப்பரு..
எப்படி இப்படி எல்லாம் யோசிகரீங்க்களோ...
நன்றி...
ரகு

Beski said...

நன்றி ரகு.