சில க்ளிக்குகள்

ஜெ மாம்ஸ், ஊருக்குப் போனேன்னவொடனே புரோட்டாப் பதிவு கேட்டார். இந்த தடவை போன தடவைய விட நல்லா சாப்டேன். ஆனா போட்டாதான் எடுக்கல. இருந்தாலும் நம்ம அதிதீவிர புரோட்டா கொலவெறி ரசிகர் கேட்டதால இந்த போட்டோ:

இது புரோட்டா + சுக்கா.
ஒரு போட்டாவுக்கு ஒரு பதிவா? அதனால கூடவே இதெல்லாம் சேத்துக்கறேன்...


நம்ம ஊருல்லல்லாம், ஹோட்டலுக்கு வெளியதான் அடுப்பே இருக்கும். அதைக் கடந்துதான் உள்ளே சாப்பிடப் போகனும். நம்ம ஊருல புரோட்டா அடிக்கிற அழகையும், டண்டக்க டண்டக்க டண்டக்கன்னு கொத்துற அழகையும் இங்க பாக்க முடியல.


கிகி வீட்டுக்கு போற வழில, பாக்க அழகா இருந்ததால க்ளிக்கிட்டேன்.


கிகி தந்த சிக்கன் வகைகளில் ஒன்று.


புரோட்டா மட்டுமல்ல, இட்லி கூட நம்ம ஊருக்குப் போனாதான். இந்த தடவ நம்ம நாயக்கர் கடைக்கு ஒரு விசிட் அடிச்சாச்சு. சுவையில் மாற்றமே இல்லை, ஆனால் கடையில்... நாயக்கர் கல்லாவுக்கு போய்ட்டாரு, அவர் பையன் கல்லுக்கு வந்துட்டான்.


நம்ம ஊருக்கு வெளிய வந்துட்டா இப்படித்தான் இருக்கும். ‘நீ எரும மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ அப்டின்னு அப்பா திட்டுறத சாதாரணமா நம்ம ஊருல கேக்கலாம். இங்க எரும மாடுதான் அதிகம்.

மெரினா கடற்கரை



இந்த முறையும் நண்பர்களுடன் மெரினா சென்றேன். எப்பவுமே மெரினா செல்லும்போதும் வானம் மிக மிக அழகாக, வித்தியாசமாக, மாறிக்கொண்டே இருக்கும், பார்த்துக்கொண்டே இருக்கலாம். இப்பவும் அப்படித்தான்.
இதற்கு முன் :
மெரினா க்ளிக் இங்கே...
வானம் பற்றி உளறல் இங்கே...


இது ஐஸ் பார். (ஒவ்வொன்னும் 50 கிலோ இருக்கும், இது உருவாகும் விதமும், வெளியே எடுக்கும் விதமும் நமக்கு சுவாரஸ்யமா இருக்கும், முடிஞ்சா இதப் பத்தியும் பின்னாடி எழுதுறேன்.)


இது கோயம்பேடு ஹோட்டல் சென்னை டீலக்ஸ் பார்.

---

-ஏனாஓனா.

Share/Bookmark

22 ஊக்கங்கள்:

Nathanjagk said...

மாப்ள ரொம்ப தாங்கஸு! முதல் ​போட்டோல இருக்கிற பரோட்டாவையும் அதுக்கு மேல இருக்கிற சால்னா கலரையும் பாத்ததியும்....ஸ்ஸ்ஸ்... வாயூறுது! பக்கத்தில மட்டன் சுக்கா வேற! பரோட்டா கலரும் அதன் நெளிவுகளுமே ​சொல்லுது அது எவ்வளவு ஸாப்டா இருக்கும்னு (சாப்டாத்தான் இருக்காதே!) நான் மாப்ளையின் அதிதீவிர ரசிகர் + புரோட்டா கொலவெறி ரசிகர்தான்! ஒத்துக்கிற்ற்ற்றேன்!
நம்மூரு புரோட்டா கடைகள் பற்றியே தனி பதிவு ​போடலாம்.. மணலைத் திரிக்க முடியாதுதான்.. ஆனா மாவைப் பந்தாக்கி, பந்தைக் கோலிக்குண்டுகளாக்கி, குண்டுகளைப் பேப்பராக்கி, ​பேப்பரைச் சும்மாடு ஆக்கி.. கடைசியா புரோட்டா ஆக்கீறுவாங்க - அசால்டா!
புரோட்டா மேல எனக்கு இருக்கிற கொ(ள்ள)ல​வெறியால நானே கஷ்டப்பட்டு ஒரு புரோட்டா மாஸ்டர்கிட்ட இருந்து புரோட்டா போட கத்துக்கிட்டேன். பேப்பர் மாதிரி விசிறி கூட அடிப்பேன்!

Nathanjagk said...

எனக்கொரு டவுட்..
கிகி இருக்கிறது ​கோவையா? நாகர்கோவிலா?
நீங்க இந்த முறை ஊருக்குன்னு போனது எந்த ஊரு?
ப்ளீஸ் ஸால்வ் தி பஸில்!

Nathanjagk said...

கிகியோட சமையல் குறிப்புகள் படிச்சிருக்கேன்.. ஆனா சாப்பிட்டதில்ல!!!! அம்மணி ஊருக்கு ​போயிடுச்சு.. தனியாத்தான் இருக்கேன்.. ஏதாவது நல்ல ரெஸிபி ​தாங்களேன் கிகி! மைக்ரோவேவ்ல சமைக்கிற மாதிரி ஏதாவது சிக்கன் / பிஷ் ஐட்டம் ​இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்!

Nathanjagk said...

ஊர் நண்பர்கள் (எருமை) படம், ​மெரீனா படம், இட்லி சாம்பார் படம், பார் படம் எல்லாமும் அருமையா இருக்கு மாப்ள! நன்றிகள்!

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா இரு்க்கு!!!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//ஜெகநாதன் said...
எனக்கொரு டவுட்..
கிகி இருக்கிறது ​கோவையா? நாகர்கோவிலா?
நீங்க இந்த முறை ஊருக்குன்னு போனது எந்த ஊரு?
ப்ளீஸ் ஸால்வ் தி பஸில்!\\


கிகி இருக்கிறது ​கோவை.சொந்த ஊர் நாகர்கோவில்.
இந்த முறை ஏனா ஓனா ஊருக்குன்னு போனது கோவை

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//கிகி தந்த சிக்கன் வகைகளில் ஒன்று\\

சிக்கன் கூட எதை சேர்த்து சாப்பிட்டாய் என்று சொல்லவே இல்லையே தம்பி

Beski said...

ஜெ மாம்ஸ்,
//புரோட்டா மேல எனக்கு இருக்கிற கொ(ள்ள)ல​வெறியால நானே கஷ்டப்பட்டு ஒரு புரோட்டா மாஸ்டர்கிட்ட இருந்து புரோட்டா போட கத்துக்கிட்டேன். பேப்பர் மாதிரி விசிறி கூட அடிப்பேன்!//
இது உண்மையா? சூப்பரு. இங்க சென்னைல கூட கையால அடிக்கிறவுங்க கம்மி. பூரிக்கட்டையாலதான் தேய்க்கிறாங்க.

//கிகி இருக்கிறது ​கோவையா? நாகர்கோவிலா?
நீங்க இந்த முறை ஊருக்குன்னு போனது எந்த ஊரு?//
திருச்செந்தூர் நம்ம ஊரு, இப்ப இருக்குறது சென்னை. இந்த தடவ போகும்போது, முதலில் கோவை சென்றுவிட்டு அதன்பின் திருச்செந்தூர் போனேன்.

//எல்லாமும் அருமையா இருக்கு மாப்ள! நன்றிகள்!//
நன்றி மாம்ஸ்.

Beski said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்லா இரு்க்கு!!//

நன்றி ராஜ்.
---
//Anbu said...
:-)//
நன்றி அன்புத் தம்பி.
---
//சிக்கன் கூட எதை சேர்த்து சாப்பிட்டாய் என்று சொல்லவே இல்லையே தம்பி//
அதெல்லாம் இப்பிடியா ’ஓபனா’ கேக்குறது?

☀நான் ஆதவன்☀ said...

யோவ் முன்னாடியே சொல்லனும் நினைச்சேன் இந்த மாதிரி பரோட்டோவை எல்லாம் க்ளோஸப்ல போடாதன்னு. இப்ப நாக்கு ஊருது. இதுல சால்னாவை வேற போட்டிருக்க.

Beski said...

ஐ ஆதவா... நல்லா ஊருதா ஊருதா?
எப்பூடி?
சொல்லிட்டல்ல... அடுத்த தடவ இன்னும் க்லீயரா எடுத்துப் போடுறேன். (அடுத்தவங்க வயித்தெறிச்சலக் கொட்டிக்கிறதுல என்னா சுகம், இன்னைக்கும் நல்லா தூக்கம் வரும்.)

☀நான் ஆதவன்☀ said...

கிகி நானும் அங்க வருவேன். அப்ப இதே மாதிரி சிக்கனெல்லாம் செய்து போடனும் ஆமா சொல்லிபுட்டேன்.

//கிகி வீட்டுக்கு போற வழில, பாக்க அழகா இருந்ததால க்ளிக்கிட்டேன்.//

ரொம்ப அழகா இருக்கு இடம். உனக்குள்ள இப்படியொரு கலைஞனா? அவ்வ்வ்வ்

☀நான் ஆதவன்☀ said...

//எவனோ ஒருவன் said...
ஐ ஆதவா... நல்லா ஊருதா ஊருதா?
எப்பூடி?
சொல்லிட்டல்ல... அடுத்த தடவ இன்னும் க்லீயரா எடுத்துப் போடுறேன். (அடுத்தவங்க வயித்தெறிச்சலக் கொட்டிக்கிறதுல என்னா சுகம், இன்னைக்கும் நல்லா தூக்கம் வரும்.) //

அப்புறம் நான் இங்க kfc சிக்கனை ஜூம் செய்து போட்டோ எடுத்து போடுவேன்.

☀நான் ஆதவன்☀ said...

பாரையும் நோட் செய்துட்டேன். சென்னை வந்தா போயிடுவோம் :) பில்லை நீயே கொடுத்திடு

Beski said...

ஆதவா,
நம்ம கிட்ட சொல்லிட்டல்ல, அடுத்த தடவ வரும்போது அறுசுவைக்கும் மேலயே காட்டுறோம்.

//உனக்குள்ள இப்படியொரு கலைஞனா?//
இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...

Beski said...

//அப்புறம் நான் இங்க kfc சிக்கனை ஜூம் செய்து போட்டோ எடுத்து போடுவேன்.//
அத நானும் போடுவேன்... இங்கயும் கிடைக்கிதுல்ல...

//பாரையும் நோட் செய்துட்டேன். சென்னை வந்தா போயிடுவோம் :) பில்லை நீயே கொடுத்திடு//
வழியனுப்பும்போது எப்பவும் போல நான் கொடுத்துடுறேன். அதுக்கு முன்னாடி இங்க இருக்குற காலங்கள்ல சேத்து கறந்துருவோம்... அதையும் ஞாபகத்துல வச்சிக்கோ.

☀நான் ஆதவன்☀ said...

//வழியனுப்பும்போது எப்பவும் போல நான் கொடுத்துடுறேன். அதுக்கு முன்னாடி இங்க இருக்குற காலங்கள்ல சேத்து கறந்துருவோம்... அதையும் ஞாபகத்துல வச்சிக்கோ./

எல்லாத்துக்கும் சேர்த்து நானும் கறந்திடுவேன்ல...உங்க ஊருக்கு எல்லாம் வருவேன். அப்ப நீ தான் செலவு செய்யனும்

Beski said...

//எல்லாத்துக்கும் சேர்த்து நானும் கறந்திடுவேன்ல...உங்க ஊருக்கு எல்லாம் வருவேன். அப்ப நீ தான் செலவு செய்யனும்//

தாராளமா வா, நா பாத்துக்கறேன். நீ என்னதான் திருப்தியா சாப்ட்டாலும் 75 ரூபாய்க்கு மேல வராது. அதான் நம்ம ஊரு சிறப்பே.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//☀நான் ஆதவன்☀ said...
கிகி நானும் அங்க வருவேன். அப்ப இதே மாதிரி சிக்கனெல்லாம் செய்து போடனும் ஆமா சொல்லிபுட்டேன். \\

அப்படியேஆகட்டும் ஆனா கூட சாப்பிடவேண்டிய பொருளை கொண்டு வரவேண்டும்

வால்பையன் said...

ரொம்ப பசிக்குதே!

Beski said...

//கிறுக்கல் கிறுக்கன் said...
அப்படியேஆகட்டும் ஆனா கூட சாப்பிடவேண்டிய பொருளை கொண்டு வரவேண்டும்//
எல்லாருமே உசாராத்தான்யா இருக்காய்ங்க.

Beski said...

//வால்பையன் said...
ரொம்ப பசிக்குதே!//
உங்களுக்கும் ஒரு நாள் விருந்து வச்சிட்டாப் போச்சு.