சாதாரணமாக சாலையில் செல்லும்போது அவ்வளவாகத் தெரியாது; சற்று உள்வாங்கி இருக்கும். அகலம் குறைவான வாசல், உள்ளே சென்றதும் ஐந்து, நால்வர் உட்காரும் மேசைகள். என்னடா இது! இவ்வளவு சிறிய இடமா இருக்கே? இல்லை. உள்ளே சென்றால், மங்கலான ஒளி, இன்னும் அகலமான, 10 மேசைகளுக்கு மேல் போடக்கூடிய பரந்த இடம். நன்றாகத்தான் இருக்கிறது. சீருடை அணிந்த பணியாளர்கள், இரு மேற்பார்வையாளர்கள் சீருடை இன்றி. பின்னனியில் தமிழ்ப் பாடல்கள்.
நாங்கள் வெளியே அமர்ந்தோம்.
இங்கு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று உணவுப் பட்டியல் அட்டை (மெனு கார்டு). முதல் பக்கமும் கடைசி பக்கமும் பார்த்தவுடனேயே பிடித்துப் போயிற்று.
உள்ளே பலப்பல ரகங்கள். அதையெல்லாம் சாப்பிட ஒரு வயிறு போதாது என்றே தோன்றியது. ஒவ்வோரு நாளும் ஒரு சிறப்பு மதிய உணவுக் கலவை.
நாங்கள் சென்ற அன்று நெய்சோறும், கோழிக் கறிக் குழம்பும். கூடவே இரு சைவ கூட்டுக்கள், பருப்பு மற்றும் கத்தரிக்காய், கூடவே தயிர் வெங்காயம். அருமையான சுவை, இதன் விலை 79 ரூபாய்.
மேலும் சில படங்கள் மெனுவிலிருந்து
தோசை வகைகள்...
ஒரு சோறு சிறப்பு உணவு வகைகள் மற்றும் சைனீஸ் வகைகள்
அருமையான இடம், அசைவ உணவுப் பிரியர்களுக்குக் கொழுத்த வேட்டை.
---
இதை அறிமுகம் செய்த கேபிள்ஜிக்கு நன்றி.
-ஏனாஓனா.
25 ஊக்கங்கள்:
என்னை மாதிரி சைவ பிரியர்களுக்கு எதாவது வழி காட்டுங்க பாஸ்
என்னை மாதிரி சைவ பிரியர்களுக்கு எதாவது வழி காட்டுங்க பாஸ்
//
தொடர்ந்து இந்த பதிவையும், கொத்து பரோட்டாவையும் படியுங்கள் டம்பி
கரும்பு தின்ன கைக்கூலி வேண்டுமா என்ன? கண்டிப்பாக போய் சாப்பிட்டுவிட்டு பின்னரும் ஒரு பின்னூட்டல் போடுறேன். அப்புறம் ஐரோப்பிய நாடுகளில் தமிழில் ஒரு பேப்பர் என்ற பத்திரிகையும், ஒரு றேடியோ என்ற வானொலி சேவையும் நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது..
கண்டிப்பா சென்னை வந்தா இந்த ஹோட்ட்ல போகனும்.
கண்டிப்பா சென்னை வந்தா இந்த ஹோட்ட்ல போகனும். பில் நீயே கொடுத்திரு.
பதிவர் ஆன பிறகு நேரடி ரிப்போர்ட் செய்தியாக பல வரும் போல இருக்கே ;-)
சம்பளம் வரும் ஒண்ணாம் தேதி ஆதலால் இந்த பதிவு வரவேற்பு பெரும்.
ஹலோ.. புரட்டாசி மாசம் கறி சாப்பிட கூடாதுண்ணு பாத்தா,,மனச மாத்திடுவீங்க போல இருக்கே!!!
//டம்பி மேவீ said...
என்னை மாதிரி சைவ பிரியர்களுக்கு எதாவது வழி காட்டுங்க பாஸ்//
வாங்க மேவீ, ஏற்கனவே சைவ உணவகங்கள் பற்றி இரு முறை எழுதியதாக ஞாபகம்.
http://www.yetho.com/2009/09/60-30.html
http://www.yetho.com/2009/09/60-30.html
படித்துப் பாருங்கள்.
//Cable Sankar said...
தொடர்ந்து இந்த பதிவையும், கொத்து பரோட்டாவையும் படியுங்கள் டம்பி//
நன்றி கேபில்ஜி. ஆமாம் டம்பி, அங்கேயும் நிறைய உணவகங்கள் பற்றிய தகவல்கள் கிடக்கின்றன.
வாங்க ஜானா.
//ஐரோப்பிய நாடுகளில் தமிழில் ஒரு பேப்பர் என்ற பத்திரிகையும், ஒரு றேடியோ என்ற வானொலி சேவையும் நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது..//
நல்ல தகவல்கள், நன்றி.
//☀நான் ஆதவன்☀ said...
கண்டிப்பா சென்னை வந்தா இந்த ஹோட்ட்ல போகனும். பில் நீயே கொடுத்திரு.//
அடப்பாவி, எல்லாப் பதிவுலயும் இப்படியே சொல்றியே! ஒன்னுலயாவது நான் வாங்கித்தறேன்னு சொல்லு மாப்பி. கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.
//கிரி said...
பதிவர் ஆன பிறகு நேரடி ரிப்போர்ட் செய்தியாக பல வரும் போல இருக்கே ;-)//
ஆமா கிரி அண்ணே. அதுதான் கொஞ்சம் சுலமாய் இருக்கிறது எனக்கு. :)
//adaleru said...
சம்பளம் வரும் ஒண்ணாம் தேதி ஆதலால் இந்த பதிவு வரவேற்பு பெரும்.//
இல்லன்னாலும் ராசா சாப்பிடவே மாட்டாரு. உன்னப் பாத்தாலே தெரியுது மச்சி, சாப்பாட்டுல எப்படின்னு... ஓ, இது மத்தவங்களுக்கா? ரைட்டு.
//குறை ஒன்றும் இல்லை !!! said...
ஹலோ.. புரட்டாசி மாசம் கறி சாப்பிட கூடாதுண்ணு பாத்தா,,மனச மாத்திடுவீங்க போல இருக்கே!!!//
ஓ, ஒது வேறயா? அதெல்லாம் இப்படி ஓபனா சொல்லப்பிடாது. கமுக்கமா யாருக்கும் தெரியாம போயி சாப்டுட்டு வந்துடனும். சரியா?
ரூம்கு வருவீல்ல பெஸ்கி அன்றைக்கு இருக்கு நண்பனுக்கு தீபாவளி
// adaleru said...
ரூம்கு வருவீல்ல பெஸ்கி அன்றைக்கு இருக்கு நண்பனுக்கு தீபாவளி//
என்னாப் பேச்சு பேசுற, மேல கைய வச்ச... கொலக் கேசுல உள்ள போய்ருவ, ஜாக்கிரத.
கொடுத்து வைச்ச புள்ள பல ஐட்டங்களோட சாப்பிடுது
பி.கு:-
இதில் உள் குத்து வெளிக்குத்து எதுவும் இல்லை
//கிறுக்கல் கிறுக்கன் said...
கொடுத்து வைச்ச புள்ள பல ஐட்டங்களோட சாப்பிடுது//
உங்கள மாதிரி வருமா கிகி... அத விட நல்லா பண்ணி சாப்பிடுறீங்க நீங்க.
வருகைக்கு நன்றி அம்மு.
நல்லாருக்குதுனு சொன்னாங்க.. அதுக்காக மெனுகார்டை பக்கம் பக்கமா படம் புடிச்சு காமிக்குணுமா? ஏதாவது விளம்பரத்துக்கு காசு வருதா.. ஹிஹி.
//ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்லாருக்குதுனு சொன்னாங்க.. அதுக்காக மெனுகார்டை பக்கம் பக்கமா படம் புடிச்சு காமிக்குணுமா?//
இங்க என்னென்ன கிடைக்கும்னு மக்கள் தெரிஞ்சுக்கட்டுமேன்னு போட்டேன். நல்லா இல்லையோ?
சரி, அடுத்த தடவை வேறு மாதிரி போடுறேன்.
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
ஏனா ஓனா, சாப்பாட்டுக் கடை, படத்தோட போட்டு வயித்தெரிச்சல கிளப்புறீரே! இந்தியாவுக்கு வரும்போது சாப்பாட்டுக் கடை போறதுக்குத்தான் நேரம் இருக்கும் போல!
//ஷங்கி said...
ஏனா ஓனா, சாப்பாட்டுக் கடை, படத்தோட போட்டு வயித்தெரிச்சல கிளப்புறீரே!//
ஹி ஹி ஹி...
என்ன அண்ணே, பேரையெல்லாம் மாத்திட்டீங்க? கொஞ்சம் குழம்பிப் போயிட்டேன்.
வருகைக்கு நன்றி.
ஹெ ஹெ ஹெ! ஆமா, கொஞ்சம் முக்காடு போட வேண்டியதாப் போச்சு! அதாம் பேர மாத்திட்டேன்! கண்டுபிடித்த புலனாய்வாளருக்கு வாழ்த்துகள்!
ஒருசோறு சுவைக்கு மாப்ளையின் இந்த ஒரு இடுகையே பதம். எப்பயும் போல உங்க நுணுக்கமான அலசல் + புகைப்படங்கள் அற்புதம்!
உண்மையில் மெனு கார்ட் கண்ணைக் கவருது. நெய்ச்சோறும் அதன் செட்டப்பும் ஏ1!!!
வாங்க ஜெ மாம்ஸ்.
இப்படி லேட்டா வந்தா எப்படி? இதுக்கெல்லாம் முந்த வேண்டாமா?
கண்டிப்பா சென்னை வந்தா இந்த ஹோட்ட்ல போகனும்.
வருகைக்கு நன்றி esan.
Post a Comment