நிறம் மாறும் உறவுகள்

”ஏங்க போய்த்தான் ஆகணுமா”

“வேற என்ன செய்யச் சொல்ற”

“நாம இங்க ஏதாவது வியாபாரம்...”

“என்ன வியாபாரம் பண்ண முடியும் அப்படி பண்றதா இருந்தாலும்பணத்துக்கு எங்கே போறது”

“வெளிநாட்டுக்கு போக செலவு செய்யிற காசுல வியாபாரம் ஆரம்பிக்கலாமில்லையா”?


“ஆரம்பிக்கலாம்,ஆன வருமானம் அதிகமாக ஒன்றும் வராதே”

“கிடைக்கிறத வச்சுட்டு,நாமும் பிள்ளையும் ஒரு வேளை கஞ்சி குடித்தாவது நிம்மதியா இருக்கலாம்

“இந்தாப்பாரு உனக்கு இப்போ ஆறு மாதம்,அடுத்த மாதம் நீ உன் அம்மா வீட்டுக்கு
போயிடுவ அப்படி ஒரு 6 மாதம்,அதுக்கப்புறம் குழந்தைக்கு ஒன்று ஒன்றர வயசாகும்போது நான் திரும்பி வந்துவிடுவேன்”


இப்படி ஒரு வழியாக தன் மனைவியை சமாதானப்படுத்தி அரபு நாட்டுக்கு
வேலைக்கு கிளம்பினான் அந்த கணவன்.

இடையிடையே குழந்தையின் புகைப்படத்தை மின் அஞ்சலில்
பார்த்து,அங்கிருந்து இங்கு வருபவர்களிடம் பரிசுப்பொருட்கள்
கொடுத்தனுப்பி கடந்தது இரண்டு வருடம்.

தாயகம் திரும்பினான் ஒரளவு சம்பாத்தியத்துடன் சிறிது நிலம்
வாங்கினான், குழந்தையின் பேரில் வைப்பு முதலீடு செய்தான்.

“இனி இருக்கிற பணத்தை வைத்து இங்கேயே ஒரு வியாபாரம்
செய்யலாமுன்னு யோசிக்கிறேன்”

“ஏங்க நீங்க வந்து 3 மாசம் ஆகுது,இப்போ நான் 1 மாதம்
முழுகாமலிருக்கிறேன்,எப்படியும் என்னால் 2 வருடம் ஓட்ட
முடியும்,இங்கே வியாபாரம் பண்ணி கஷ்ட்ப்படுறதை விட
அங்க போய் வந்தீங்கன்னா, சின்னதா ஒரு வீடு கட்டி நாம்
தனியாகப்போய்,பின் வியாபாரம் செய்யலாமில்லையா”

இம்முறை மனைவி கணவனை சமாதனப்படுத்தி அனுப்பினாள்
அரபு நாட்டுக்கு?!

ஏழு எட்டு மாதங்களுக்குப் பின், இரண்டாவது குழந்தையும் பிறந்தது .

சிறிது நாட்களுக்கு பின் ஊர் திரும்பினான் கணவன் உயிரற்றவனாக.

கதறி அழுதனர் குடும்பத்தினர், கடைசியாக மனைவியும்.

“நான் அப்பவே சொன்னேன் போக வேண்டாம், போக வேண்டாம் என , கடைசியில் இப்படி போயிட்டியே, பிள்ளைங்க அப்பா எங்கேன்னு கேட்டா
நான் என்ன பதில் சொல்வேன்”

கூடியிருந்த கூட்டம் அதைக்கண்டு கண்ணீருடன் கலைந்தது.

ஒரு வருடத்திற்குப்பின் யாரோ முதல் குழந்தையிடம் கேட்டார்கள், அப்பா எங்கே என்று.
“அங்க அம்மாவோடு படுத்து தூங்குறாங்க” என இறந்த கணவனின் ஆயுள் காப்பீடு மற்றும் இழப்பீடு பணத்தில் கட்டிய வீட்டின் படுக்கை அறையை காட்டி சொன்னது இரண்டாவது குழந்தையை அரவணைத்தபடி.

பி.கு:-

இது முற்றிலும் கதையல்ல, 95% உண்மை.


---கி.கி



Share/Bookmark

11 ஊக்கங்கள்:

Jana said...

உண்மைதான். நண்பரே..இப்படி அப்பாவைத்தேடும் குழந்தைகள் வளர்ச்சியடையும் மூன்றாம் உலக நாடுகளில் ஏராளம்.
தந்தை தியாகம் செய்கின்றான், பணம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றது, உண்மைதான். அனால் தந்தையின் அருகாமை, அரவணைப்பு, பாசம் என்பன கேள்விக்குறியாகிவிடுகின்றது.

வால்பையன் said...

உண்மை சம்பவமா!?

ரொம்ப கஷ்டம் தல!

இன்னொன்று பொருளாதார மேம்பாட்டுக்காக வெளிநாடு செல்வது இருவருக்கும் மன வருத்தம் அளிக்கும் தான்! ஆனால் வெளிநாடு சென்றதால் தான் மரணம் என்று சொல்ல முடியாது!

எனக்கு தெரிந்து ஒருவர், மனைவி கர்ப்பமாக இருக்கும் போதே விபத்தில் இறந்துவிட்டார் பாவம்!

☀நான் ஆதவன்☀ said...

கஷ்டம் கி.கி அண்ணே. நாங்க இங்க கண்கூடா எல்லாரையும் பாக்குறோம். ஊருக்கு போகனும்னு ஆசை இருந்தாலும் யாருக்கும் போக முடியாத சூழ்நிலை.

எல்லோரும் குறைஞ்சது 80 அடி உயரம் உள்ள கட்டடத்துல வேலை செய்யுறவங்க. உயிருக்கு உத்திரவாதம் இல்ல :(

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//Jana said...
உண்மைதான். நண்பரே..இப்படி அப்பாவைத்தேடும் குழந்தைகள் வளர்ச்சியடையும் மூன்றாம் உலக நாடுகளில் ஏராளம்.
தந்தை தியாகம் செய்கின்றான், பணம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றது, உண்மைதான்.\\

ஆனால் அவர்கள் வழி தவறுவது அதிகமாக இருக்கிறது

// அனால் தந்தையின் அருகாமை, அரவணைப்பு, பாசம் என்பன கேள்விக்குறியாகிவிடுகின்றது.\\

இவையெல்லாம் சில மனைவிமார்க்கு கிடைக்கும் போது , பிள்ளைகள் வழி தவறுவதை தட்டி கேட்க முடியாமல் போய்விடுகிறார்கள்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//வால்பையன் said...
உண்மை சம்பவமா!?

ரொம்ப கஷ்டம் தல!\\

ஆம் கஷ்டம்தான் வால்

//இன்னொன்று பொருளாதார மேம்பாட்டுக்காக வெளிநாடு செல்வது இருவருக்கும் மன வருத்தம் அளிக்கும் தான்!\\

பணம் அதிகம் வரும்போது சில மனைவிமார்க்கு வருத்தமில்லை.


//ஆனால் வெளிநாடு சென்றதால் தான் மரணம் என்று சொல்ல முடியாது!\\

நான் அப்படி சொல்லவில்லை, என் கண்முன்னால் நடந்ததை சொன்னேன்

//எனக்கு தெரிந்து ஒருவர், மனைவி கர்ப்பமாக இருக்கும் போதே விபத்தில் இறந்துவிட்டார் பாவம்!\\


கர்ப்பத்தில் இருந்த குழந்தை பாவம்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//☀நான் ஆதவன்☀ said...
கஷ்டம் கி.கி அண்ணே. நாங்க இங்க கண்கூடா எல்லாரையும் பாக்குறோம். ஊருக்கு போகனும்னு ஆசை இருந்தாலும் யாருக்கும் போக முடியாத சூழ்நிலை. \\

ஊரிலேயே வேலை செய்யலாமே

//எல்லோரும் குறைஞ்சது 80 அடி உயரம் உள்ள கட்டடத்துல வேலை செய்யுறவங்க. உயிருக்கு உத்திரவாதம் இல்ல :(\\

உயிருக்கு உத்திரவாதம் எந்த வேலையில்தான் இருக்கு ச்கோதரா

கிரி said...

பலரின் நிலை பரிதாபம் தான்

கடைசி காலத்தில் சந்தோசமாய் வாழ இளமையை தொலைத்து விடுகிறார்கள்.

அடலேறு said...

படித்து முடித்ததும் முட்டித்தள்ளிய நினைவுகளை பிடித்து வைக்கவே ஒரு கணம் ஆனது. வலி.

Bhuvanesh said...

ரொம்ப கஷ்டம் தான்!! ஆனா பொருளாதாரம் மேம்படுதனும்னு யாருக்கு தான் ஆசை இருக்காது ?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//கிரி said...
பலரின் நிலை பரிதாபம் தான்

கடைசி காலத்தில் சந்தோசமாய் வாழ இளமையை தொலைத்து விடுகிறார்கள்.\\

//Bhuvanesh said...
ரொம்ப கஷ்டம் தான்!! ஆனா பொருளாதாரம் மேம்படுதனும்னு யாருக்கு தான் ஆசை இருக்காது ?\\

உங்கள் இருவருக்கும் நிகழ்வின் முடிவு புரியவில்லை என நினைக்கிறேன்.

அந்த மனைவி தற்போது வேறு ஒரு கனவானுடன் (க்ணவ்னுடன் அல்ல)
2-வது குழந்தையை முதல் குழந்தைதான் கவனித்துக் கொள்கிறது

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//அடலேறு said...
படித்து முடித்ததும் முட்டித்தள்ளிய நினைவுகளை பிடித்து வைக்கவே ஒரு கணம் ஆனது. வலி.\\

என்ன செய்ய கலி முத்திப்போச்சு