சிறுகதைப் பட்டறை - எனது பார்வையில்

நான் மிகவும் எதிர்பார்த்த சிறுகதைப் பட்டறை, 13-09-2009 (ஞாயிற்றுக்கிழமை) இனிதே நடந்தது. இதைப் பற்றி சில பதிவுகள் வந்துவிட்டன. இருப்பினும் எனது பார்வையில் உங்களுக்கு சிறிது கிடைக்கலாம் என்பதற்காக இந்தப் பதிவு. சொன்னதுபோல மொத்தம் 4 எழுத்தாளர்கள் பேசினார்கள்.

முதலில் பாஸ்கர் சக்தி அவர்கள்
இவருடைய பேச்சிலிருந்து நான் அறிந்துகொண்டது:
* நிறைய படிக்கனும்
* ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். அதையே தொடரலாம். நல்லா இருக்குன்னு பிறர் சொன்னதற்காக, நமது மண்டையில் ஏறாதவற்றை திணிக்க முயல வேண்டாம்.
* கதையில் சுவாரஸ்யம் முக்கியம்.
* கதையில் ஒரு செய்தி(Message)சொல்லவேண்டுமென்ற அவசியம் கிடையாது.
* இப்படித்தான் எழுதனும்னு எதுவுமே கிடையாது, எழுத்தாளனுக்கு முழு சுதந்திரம் உண்டு. (பெரும்பாலான கேள்விகளுக்கு இதுவே பதிலாக இருந்தது. ஆனால் அது அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கே, புதியவர்களுக்குத் தேவை பா.ரா. அவர்களுடைய பேச்சே எனப் பின்பே புரிந்தது)
இவர் தனது அனுபவங்களைப் பற்றிப் பேசினார். தன்னுடைய வாழ்வில் எப்படி சம்பவங்கள், தாக்கங்கள் கதைகளாக மாறியது என்பது குறித்துப் பேசியது நல்ல பகிர்வுகள்.

அடுத்து யுவன் சந்திரசேகர் அவர்கள்
* கதையில் சுவாரஸ்யம் முக்கியம்
* கதை எழுத கற்றுக்கொடுக்க முடியாது, அதை நாமேதான் கற்றுக்கொள்ளவேண்டும், நமக்குள் இருப்பதைக் க்ண்டுபிடிக்க வேண்டும், சமையல் மாதிரி.
* முன்பு இப்படித்தான் கதை இருக்க வேண்டும் என்றெல்லாம் இருந்தது (உதா: எடுப்பு, தொடுப்பு, முடிப்பு - என்பது மாதிரி) இப்போது அப்படியெல்லாம் இல்லை, நமக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.
இவர் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். Magical Realism, நவீனத்துவம், பின்னவீனத்துவம், செவ்வியல் என்பதைப் பற்றியெல்லாம் பேசினார். நமக்குத்தான் அதெல்லாம் புரியவில்லை. மொத்தத்தில் இவர் சொன்னது - இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற தடையெல்லாம் இப்போது இல்லை, முழு சுதந்திரம் இருக்கிறது, ஆனால் சுவாரஸ்யம் மிகவும் முக்கியம். நம்ப முடியாத நிகழ்வுகள் கொண்ட கதை கூட எழுதலாம், ஆனால் தொடர்ந்து படிக்கத் தூண்டும்படி அது இருக்க வேண்டும். முக்கியமாக இவருடைய கலந்துரையாடல் பகுதி மிகவும் சுவாரஸ்யமாகவும், வாய்விட்டுச் சிரிக்கும்படியும், கலகலப்பாகவும் இருந்தது.

அடுத்து தேவதாஸ் அவர்கள்
இவர் மொழி பெயர்ப்புக் கதைகள் பற்றிப் பேசினார். பிற நாட்டு மக்களுடைய கலாச்சாரத்தைப் பற்றி அறிந்துகொள்ள இம்மொழிபெயர்ப்புக் கதைகள் மிகவும் உதவும் என்றார். மேலும் சில வெளிநாட்டுக்கதைகள் பற்றியும் சொன்னார். இவர் பேசியதிலும், கலந்துரையாடலிலும் தகவல்கள் அதிகம் இருந்தன.
கலந்துரையாடலில், மொழிபெயர்ப்பில் இருக்கும் கஷ்டங்களைப் பற்றி சொன்னார். மொழிபெயர்ப்பு என்பது சரியாக நூறு சதவீதம் அப்படியே கொண்டுவரமுடியாத காரியம். அந்த மொழிபெயர்ப்பின் நோக்கத்தைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடலாம் (நோக்கம் என்பது, பிற மொழியின் கலாச்சார அறிமுகமாகவோ, வித்தியாசமான கதையைச் சொல்லவேண்டும் என்பதாகவோ, பிற மொழியின் மாறுபட்ட நடையைச் சொல்ல வேண்டும் என்பதாகவோ இருக்கலாம்).

இறுதியாக பா.ராகவன் அவர்கள்
இவர் பத்திரிக்கைகளுக்கு சிறுகதை எழுதுவது என்பது எப்படி என்பதைப் பற்றி ஒரு பெரிய பாடமே நடத்தினார், சுவாரஸ்யமான பல தகவல்கள் மற்றும் அனுபவப் பகிர்வுகளுடன். இவர்தான் தெளிவுபடுத்தினார், உங்கள் இஷ்டம்போல எழுதலாம் என்பது ஓரளவு களத்தில் நின்ற பிறகே, ஆரம்ப எழுத்தாளன் செய்யவேண்டியது இவைகளே என்று.
* எதற்காக எழுதுகிறோம் எனப் புரிந்துகொள்ளுதல்
* பத்திரிக்கைகளைப் பற்றிப் புரிந்துகொள்ளுதல்
* வாசகர்கள் யார்
* நமது கதையைத் தேர்வு செய்யும் உதவி ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள்
* அவர்களுக்கு எப்படிப்பட்ட கதைகளெல்லாம் வரும்
* அதிலிருந்து எப்படித் தேர்வு செய்கிறார்கள்
* நமது கதை தேர்வாக அதில் இருக்கவேண்டிய அம்சங்கள் என்னென்ன
* கதை எழுதும் கலையை நம்முள் வளர்ப்பது எப்படி
* அடிப்படை ஒழுக்கங்கள் என்னென்ன
என மிகவும் தேவையான பல தகவல்களை அள்ளிக் கொட்டிவிட்டார். இடையிடையே நகைச்சுவை வெடிகள் அட்டகாசம்.

இதோ அவருடைய முதல் பக்கம்:
சிறுகதை நன்கு பிடிபட்ட, நவீன இலக்கியப் பரிச்சயமுள்ள, சிற்றிதழ் வாசிப்பு அனுபவமுள்ள நண்பர்களுக்கு இது உதவாது...
புரிகிறதா? ஆகவே, பா.ராகவன் அவர்களுடைய உரை பற்றி பின்பு விரிவாக எழுதுகிறேன். தேவையானவர்கள் மட்டும் படித்துக்கொள்ளவும்.

இவர்கள் நால்வருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இவர்களுடைய அனுபவப் பகிர்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

---

மேலும், பல பதிவர்களை இங்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேசவேண்டும் என எண்ணியிருந்த சிலருடன் அதிகம் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை, எதிர்பாராமல் சந்தித்த பதிவர்களிடம் அதிகம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தத்தில் இந்த சந்திப்பு இன்ப அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந்த அருமையான நாளை நான் பெறக் காரணமான பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர் மற்றும் நர்சிம், பத்ரி அவர்களுக்கு நன்றிகள் பல.

---

-ஏனாஓனா.

Share/Bookmark

10 ஊக்கங்கள்:

gulf-tamilan said...

mm

சாந்தி நேசக்கரம் said...

சொல்லிட்டம் பதிவு நன்றாயிருக்கு

சென்ஷி said...

சூப்பர்!

நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க தலைவரே!

துபாய் ராஜா said...

'பட்டறை' முடிஞ்சாச்சு.இனி பட்டையை கெளப்ப வேண்டியதுதானே.... :))

Beski said...

வருகைக்கு நன்றி கல்ஃப் தமிழன்.
நன்றி முல்லைமண்.
நன்றி சென்ஷி.
நன்றி துபாய் ராஜா. (இனிமேதான் முயற்சியை ஆரம்பிக்க வேண்டும், விரைவிலேயே பட்டையைக் கெளப்புவோம்.)

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

நல்ல பதிவு

//விரைவிலேயே பட்டையைக் கெளப்புவோம்\\

கிளப்பு ராசா கிளப்பு

வால்பையன் said...

நல்ல தொகுப்பு!

உங்களை சந்தித்ததிலும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

Beski said...

நன்றி கிகி.
நன்றி வால். எனது அந்த நாள் இனிமையானதில் உங்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

☀நான் ஆதவன்☀ said...

yov un photo enga?

Beski said...

//☀நான் ஆதவன்☀ said...

yov un photo enga?//
என் போட்டோவ நானே போடுறதா? நோ நோ... அத அண்ணன் கிகியப் போடச் சொல்லுறேன்.
ஆனா இங்க எடுத்தது இல்ல.

சொல்லப்போனா இங்க நான் போட்டோ எடுக்கவே இல்ல. வேணும்னா வேற யார் கிட்டயாவது வாங்கி் அனுப்புறேன். பொறுமை மாப்பி.