சிறுகதைப் பட்டறையில் பா.ராகவன் அவர்களுடைய பகுதி இதோ. பவர் பாயிண்டில் அவர் அளித்ததை முடிந்த அளவு குறிப்பு எடுத்து இங்கு அளித்திருக்கிறேன். பத்திரிக்கைகளுக்கு எழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது கண்டிப்பாகப் பயன்தரும்.
---
சிறுகதை நன்கு பிடிபட்ட, நவீன இலக்கியப் பரிச்சயமுள்ள, சிற்றிதழ் வாசிப்பு அனுபவமுள்ள நண்பர்களுக்கு இது உதவாது, வார இதழ்களில்/பத்திரிக்கைகளில் எழுத விருப்பம் உள்ளவர்களுக்கே இது.
நல்ல சிறுகதைக்கு இலக்கணம் கிடையாது
- உண்மையை எழுதுங்கள்
- பாசாங்கின்றி எழுதுங்கள்
- எளிமையாக எழுதுங்கள்
- உங்களுக்கென்று ஒரு மொழி முக்கியம்
என்ன வேண்டும்? ஏன் பத்திரிக்கை?
- பெயர் அச்சில் வரனும்
- புகழ் வேண்டும்; பிரபலமாக வேண்டும்
- எழுதி சம்பாதிக்க வேண்டும்
- ஆத்ம திருப்தி
- பகிர்ந்துகொள்ளும் சந்தோசம்
பத்திரிக்கைகளைப் புரிந்துகொள்ளுதல்
- நம்மை விட வயது, அனுபவம் அதிகம்
- லட்சக்கனக்கான மக்களிடம் நேரடியாகச் செல்கிறது
- விமர்சனம் இன்றி அனுகுங்கள்
- முன்னுக்கு வர பத்திரிக்கை ஒரு படிக்கட்டு
யார் வாசகர்கள்?
- பெண்கள் அதிகம்
- வயதானவர்கள் அதிகம்
- சராசரிகள் அதிகம்
- பொழுதுபோக்காகப் படிக்கிறவர்கள்
- தேர்ந்தெடுக்கும்போது ஆசிரியர்களுக்கு இது மனதில் நிற்கும்
உதவி ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள்
- பெரும்பாலும் அடிபடவர்கள், கஷ்டஜீவிகள்
- பெரும்பாலும் இரக்க சுபாவம் உடையவர்கள்
- பெரும்பாலும் நல்லவர்கள்
- பெரும்பாலும் விரக்தி கொண்டவர்கள்
- பெரும்பாலும் குடும்ப கதையை விரும்புபவர்கள்
- பெரும்பாலும் நல்ல முடிவுகளை விரும்புபவர்கள்
- பெரும்பாலும் நல்ல எழுத்தாளரைக் கண்டுபிடிக்க மாட்டோமா என ஏங்குபவர்கள்
எப்படிப்பட்ட கதைகள் வரும்
- வடிவமற்ற கதைகள்
- காலப் பிரக்ஞையற்ற கதைகள்
- பேரா பிரிக்கத் தெரியாதவர்களின் கதைகள்
- நாவல்களின் சுருக்கங்கள்
- நீதி சொல்லும் கதைகள்
- அர்த்தமற்ற திடீர் திருப்பமுள்ள கதைகள்
அனைத்தையும் படிப்பர்களா?
- அனேகமாக 100 கதைகள் வரும் தினமும்
- அனைத்தையும் பார்ப்பார்கள்
- முதல் பாராவைப் படிப்பார்கள்
- ஆர்வம் தூண்டினால் மட்டுமே மேலே படிப்பார்கள்
முதல் வரி முக்கியம்
- பளிச்சென்று இருக்க வேண்டும்
- புதிதாக இருக்க வேண்டும்
- ஆர்வம் தூண்டும் விதமாக இருக்க வேண்டும்
- கட்டிப்போடும் விதமாக இருக்க வேண்டும்
- எளிமையாக, கூர்மையாக, அர்த்தம் பொதிந்து இருக்க வேண்டும்
- மையக்கருவுக்கு தொடர்புடையதாக இருக்க வேண்டும்
பளிச்சென்று இருக்க வேண்டும்
“தீக்குழி இறங்குவது, அலகு குத்தி ஆடுவது, கத்தி போடுவது இவற்றுக்குச் சமமான ஒரு புனிதப் பணிதான் தினசரி செய்தித்தாள் படிப்பதும் என்பது இஸ்மாயிலின் அபிப்ராயம். தன்னைத்தான் துன்புறுத்திக்கொண்டு இன்புறும் காரியம்”. (யுவன் எழுதியது)
புதிதாக இருக்க வேண்டும்
“கடவுளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். விசயம் ஒன்றும் பிரமாதமில்லை. தம்பி மலையாளத் திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறான். நான் தாய்லாந்தில் வறுத்த மீன் விற்றுப் பணம் அனுப்புகிறேன்”
(இரா. முருகன் எழுதியது)
கதை எழுதும் கலை
- எழுதும் முன் சொல்லிப் பாருங்கள், சொல்லும் முறையிலேயே எழுதுங்கள்
- கதையில் அதிக பட்சம் மூன்று பாத்திரங்களுக்கு மேல் வேண்டாம்
- பிரச்சனை என்ன என்பதை முதலில் சொல்லுங்கள், யாருக்கு என்பது அடுத்து, பின் தீர்வை நோக்கிச் செல்லுங்கள்.
- வர்ணனை முக்கியம். விவரணை அவசியம். அதிக வர்ணனை வேண்டாம், தேவை - குறைந்த சொற்கள், தெளிவான படம்.
- நுணுக்கமான விவரங்கள் மனம் சேர்க்கும். ஆனால் விவரங்களோடு நிற்கக் கூடாது.
- கருத்தைத் திணிக்காதீர்கள், காட்சியில் புரிய வையுங்கள். (உதாரணத்திற்கு: அவர் ரொம்ப நல்லவர் என்றெல்லாம் சொல்ல வேண்டாம், உணர்த்தினால் போதும்.)
- சிறுகதை என்பது வசனங்கள் அல்ல. குறைவாகப் பேச விடுங்கள். கூர்மை முக்கியம்.
- நீதி சொல்லாதீர்கள், நீதிக்கதைகள் எழுதாதீர்கள்
- அன்றாடப் பிரச்சனைகளில் இருந்து கதைகளை எடுக்கவும்.
- தீர்வு சொல்வது சிறுகதையின் வாலையில்லை (கடைசி பாராவில் ஆகவே என ஆரம்பித்து ஒரு கருத்து சொல்வது... நல்லா இருந்த முதல் பாரா கூட, இப்படிப்பட்ட கடைசி பாராவால் விழுங்கப்பட்டுவிடும்)
- பத்திரிக்கைகளில் பிரசுரமாக இதெல்லாம் அவசியம். இந்த அம்சங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல கதையில் இருக்கும்.
- ஆனால், நல்ல கதை என்பது இவற்றைக் கடந்தது.
ஆளுக்கொரு விதம்?
- ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு உண்டு
- குமுதம் - திருப்பம் நிறைந்த கதைகள்
- மங்கையர்மலர் - பெண்கள் கண்ணீர் வடிக்கும் கதைகள்
- (இப்படி ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒவ்வொரு விதம் உண்டு, அதற்கேற்றார்போல எழுதி அனுப்பினால் தேர்வாக வாய்ப்பு அதிகம் என்ற அபிப்ராயம்)
- மேலே சொன்னவை எல்லாம் பிரமை
- எந்த பத்திரிக்கையும் இப்படியான வரையரை வைத்துக்கொள்வதில்லை.
- படித்தால் கவர வேண்டும். முடிந்ததும் ‘அட’ என்று சொல்லவைக்கவேண்டும். அவ்வளவுதான்
அடிப்படை ஒழுக்கங்கள்
- கையில் கிடைக்கும் அனைத்தையும் படியுங்கள், நல்ல கதைகளைப் படியுங்கள்
- அதிகம் பாதித்த கதையை எடுத்து அலச வேண்டும்
- வாழ்வையும், வாசிப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்
- ஒருமுறை எழுதியது நல்லா இருந்தாலும், வேறு வடிவத்தில் எழுதிப் பாருங்கள். 3 முறையாவது மாற்றி எழுதிப் பார்க்காமல் நல்ல கதை உருவாகாது
- கவரிங் லெட்டரில் காவியம் (வேண்டாம்)
- தெளிவாக, போதிய இடைவெளி விட்டு எழுதுங்கள்
- இருபுறமும் எழுதப்பட்ட தாள்களை யாரும் வாசிப்பதில்லை
- 4, 5 பக்கங்களுக்கு மேல் போகக் கூடாது (தோராயமாக 900 சொற்கள்)
- ஒரே கதையை பல பத்திரிக்கைகளுக்கு அனுப்பாதீர்கள், திரும்பி வந்தாலொழிய.
இறுதியாக
- நிபந்தனைக்குட்பட்ட சிறுகதைகள் எழுதுவது நல்ல பயிற்சி
- 50 படித்து, 1 எழுதுவது பலன் தரும் (நிறைய வாசிக்க வேண்டும்)
- தினசரி எழுதுவது நல்லது, 4 பக்கங்களாவது. (பா.ரா. தினமும் நாலு பக்கமாவது, எதையாவது எழுதிவிடுவாராம்)
- பத்திரிக்கை இறுதி இலக்கல்ல, ஒரு நல்ல தொடக்கம்
- அனுபவமே இலக்கியமாகிறது
- எனவே, அடிபடுவது பற்றிக் கவலை வேண்டாம்
---
பா.ராகவன் அவர்களுக்கு நன்றி.
-ஏனாஓனா.
9 ஊக்கங்கள்:
நல்ல பகிர்வு! அனைத்து டிப்ஸ்களையும் எழுதியதற்கு மிக்க நன்றி மாப்ள! கூடிய சீக்கிரம் உங்ககிட்ட இருந்து பெருசா ஒரு சிறுகதை எதிர்பார்க்கிறேன்! ரைட்டா?
தொகுத்துக் கொடுத்ததற்கு பலர் சார்பில் நன்றி!
பரிசலை ரிப்பீட்டுகிறேன்.
எனக்கு கதை எல்லாம் எழுத தெரியாது.. ஆனால் பதிவெழுத பயன்படும் :-)
ம்ம்ம்.. ஒண்ணும் சொல்ரதுக்கு இல்ல
பா.ராவின் செக்ஷன் அப்படியே வந்துருச்சு!
மிக்க நன்றி நண்பரே!
நன்றி ஜெ மாம்ஸ்.
//கூடிய சீக்கிரம் உங்ககிட்ட இருந்து பெருசா ஒரு சிறுகதை எதிர்பார்க்கிறேன்! ரைட்டா?//
ரைட்டு... உங்க விதி, ஒழுங்கா வர்ற வரை.
பரிசல்காரன், கேபிள்ஜி - வருகைக்கு நன்றி.
நன்றி கிரி.
//எனக்கு கதை எல்லாம் எழுத தெரியாது.. ஆனால் பதிவெழுத பயன்படும் :-)//
நானும் அந்த எண்ணத்தில்தான் போனேன், ஆனால் கதை எழுதக் கொஞ்சம் ஆர்வம் வந்துவிட்டது.
நன்றி ராஜ்.
//ம்ம்ம்.. ஒண்ணும் சொல்ரதுக்கு இல்ல//
இதாவது சொன்னீங்களே!
வருகைக்கு நன்றி வால்.
//பா.ராவின் செக்ஷன் அப்படியே வந்துருச்சு!//
அப்படியா?
ஆனால், முதல் வரி முக்கியம் என்பதற்கான உதாரணங்களை விட்டதில் கொஞ்சம் வருத்தமே.
கலக்கிட்ட மாப்பி. வராத குறைய போக்கிட்ட :)
நன்றி மாப்பி.
Post a Comment