கதையின் சுதந்திரம்

மாப்ள, நேத்து உன்னைப் போல் ஒருவன் படம் பாத்தேன்டா. இதெல்லாம் ஒரு படமா? பிடிக்கவேயில்லடா எனக்கு. தீவிரவாதத்தை தீவிரவாதத்தாலயே அழிக்கிற மாதிரி ஒரு கதை. தீவிரவாதின்னாலே முஸ்லிமாத்தான் காட்டனுமா? ஏன், இந்துத் தீவிரவாதியக் காட்டி, அவன அழிக்கிற மாதிரி காட்டக் கூடாதா?

அப்போ தீவிரவாதின்னாலே இந்துதானான்னு கேக்க மாட்டியா?

அப்போ ரெண்டு இந்து, ரெண்டு முஸ்லிம்னு காட்டிருக்கலாம். சரி சமமா போய்ருக்கும்.

அப்போ கமல் இந்து முஸ்லிம் பிரச்சனையக் கிளப்புறார்னு ஒன்னு கண்டுபிடிக்க மாட்டீங்களா?

இல்ல மாப்ள. இப்படி பல பேர நேரடியா போய் சேர்ற ஊடகத்துல, இப்படியெல்லாம் மக்கள் மனசுல தப்பான எண்ணங்கள்லாம் பதிஞ்சுறாது?

இதுக்கு முன்னாடி அரசியல்வாதிங்க பன்ற தப்பு பத்தி படமே வரலியா? அதான் அரசியல்வாதிகள யாரும் தட்டிக் கேக்க மாட்டேங்குறாங்களா? அட போடா, படம் முடிஞ்சவொடனே விட்ட பைக்கு ஒழுங்கா இருக்குமோ இருக்காதோ, நைட்டு என்ன சாப்பிடலாம், நம்ம ஆளுட்ட இருந்து மெசேஜே வரலியே, பஸ் கெடைக்குமோ கெடைக்காதோ, நைட்டு சரக்குக்கு எவன் கிட்ட ஆட்டயப் போடலாம் இப்டி நினைக்க அவனவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு. இதெல்லாம் மூளையில ஏத்த மனுசனுக்கு ஏதுடா எடம்? அண்ணன் தம்பி கல்யாணத்துக்குக் கூட ஊருக்குப் போக முடியாம வேல வேலன்னு கெடக்குறானுக, இதுல சிந்திச்சிட்டாலும்.

நீ என்ன வேணா சொல்லு, இது மனசுக்குள்ள பதிஞ்சு கிடக்கும், ஏதாவது கலவரம் வரும்போதுதான் எபக்டு தெரியும்.

ஆமா, நீ சிறுகதைப் பட்டறைக்கு வந்தல்ல?

ஆமா.

எழுத்தாளனுக்கு முழு சுதந்திரம் உண்டு, எதப் பத்தி வேணா எழுதலாம், உண்மை சம்பவத்த எழுதலாம், கற்பனைய எழுதலாம், உண்மையும் கற்பனையும் கலந்து எழுதலாம், என்னோட எழுத்து அவனுக்குப் பிடிக்கலன்னா என்ன? போட்டுட்டுப் போய்கிட்டே இருக்கட்டும், பிடிக்கிறவன் படிச்சாப் போதும்னு யுவன் சொன்னதுக்கெல்லாம் தலயத் தலய ஆட்டுனல்ல?

அதுக்கு என்ன இப்போ?

அதே மாதிரி ஒருத்தன் ஒரு கதைய சொல்லிருக்கான். பிடிக்கலன்னா போ கழுதன்னு பாதியிலயே எந்திரிச்சுப் போக வேண்டியதான? இவ்வளவுக்கும் கத முன்னாடியே தெரியும். அத வுட்டுட்டு, முழுசா வொக்காந்து பாத்துட்டு அது சரியில்ல இது சரியில்லன்னு பொலம்பிட்டு இருக்க!

ரூவா குடுத்து டிக்கட்டு வாங்கிருக்கேன்ல?

பொக்கிஷம் படத்துக்குக் கூடத்தான் ரூவா குடுத்து டிக்கட் வாங்கின. கடைசி வர இருந்தியா என்ன?

...

அது உனக்குப் பிடிக்கல. இது உன்ன கடைசி வர வொக்காந்து பாக்க வச்சுதுல்ல?

படம் நல்லாத்தான் இருக்கு. அதுக்காக இந்த மாதிரி மதக்கலவரத்தத் தூண்டுற மாதிலாம் எடுக்குறத ஒத்துக்க முடியாது.

டேய்! மதக்கலவரம்னு சொல்லி நீயா ஏதாவது தூண்டி விட்டுறாதடா. நாட்டப் பத்தி இவ்வளவு அக்கறையா பேசுறியே, இன்கம்டாக்ஸ் ஒழுங்கா கட்டுனியா நீயி?

...

சரி விடு. இந்தமாதிரியாவது கொஞ்சம் நாட்டு மேல அக்கறை இருக்குற மாதிரி பேசுறியே! அது வரை சந்தோசம்.

எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்குல்ல?

கதை சுதந்திரத்தையே கட்டையில ஏத்துறீங்க, உங்க கருத்து சுதந்திரம் வெளங்கிரும்.

---

-ஏனாஓனா.

Share/Bookmark

19 ஊக்கங்கள்:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்லாயிருக்கு அண்ணாச்சி..,

பரிசல்காரன் said...

நெஜமாவே நல்ல நடைங்க பாஸ்..

உண்மைத்தமிழன் said...

ஹா... ஹா.. ஹா...

செம நக்கலு தம்பீ..! பொழைச்சுக்குவ..!

☀நான் ஆதவன்☀ said...

என்னப்பா அறிவாளி நீயும் தொட்டுட்டயா? :)

வால்பையன் said...

//கதை சுதந்திரத்தையே கட்டையில ஏத்துறீங்க, உங்க கருத்து சுதந்திரம் வெளங்கிரும்.//

பாயிண்ட புடிச்சிடிங்களே!

தீப்பெட்டி said...

கலக்கல் பாஸ்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

:))))))))

Bhuvanesh said...

இல்ல மச்சி.. இப்ப முஸ்லிம்னா தீவிரவாதின்னு ஒரு எண்ணம் மக்கள் கிட்ட இருக்கு.. அது தான் உண்மை..

அதுல நம்ம முஸ்லிம் நண்பர்கள் எல்லாம் ரொம்ப நொந்து பொய் இருப்பாங்க.. அவங்க இந்த படம் பாத்த உடனே அவங்க மனசுல இருக்கறத சொல்லறாங்க.. அவ்வளவு தான்..

நாம (மக்கள்) முஸ்லிம்னாவே தீவிரவாதினு நினைச்சுட்டு இருக்கறத மாத்தினா அவங்களுக்கு இந்த படம் ஒரு பொருட்டு இல்லனு நினைக்கறேன்!!

Beski said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
நல்லாயிருக்கு அண்ணாச்சி..,//
நன்றி சுரேஷ் அண்ணாச்சி.
நான் அண்ணாச்சி இல்ல உங்களுக்கு, தம்பியாபிள்ள.

//பரிசல்காரன் said...
நெஜமாவே நல்ல நடைங்க பாஸ்..//
நெஜமாவேவா? நன்றி பரிசல்.

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஹா... ஹா.. ஹா...
செம நக்கலு தம்பீ..! பொழைச்சுக்குவ..!//
நன்றி அண்ணே.

Beski said...

// ☀நான் ஆதவன்☀ said...
என்னப்பா அறிவாளி நீயும் தொட்டுட்டயா? :)//
என்ன பண்றது மாப்பி, தோனுதே.

//வால்பையன் said...
//கதை சுதந்திரத்தையே கட்டையில ஏத்துறீங்க, உங்க கருத்து சுதந்திரம் வெளங்கிரும்.//
பாயிண்ட புடிச்சிடிங்களே!//
நன்றி வால்.

//தீப்பெட்டி said...
கலக்கல் பாஸ்..//
நன்றி தீப்பெட்டி.

Beski said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
:))))))))//
வாங்க ராஜ், நம்ம கருத்து புரிஞ்சுதுல்ல.

கருத்துக்களுக்கு நன்றி புவனேஷ்.
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். நான் சொல்லவந்தது (கற்பனையும் உண்மையும் கலந்த) ஒரு கதை கதையாகப் பார்க்கப் படவேண்டுமென்பதே.
பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனதில் மதவாத எண்ணமுள்ளவர்களுக்கும் கொஞ்சம் நெருடத்தான் செய்யும்.

பாதிக்கப் பட்ட நண்பர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம், இதனால் எனது மனதில் ஏதும் மாற்றம் இல்லை என்பதே, மதங்களைச் சார்ந்து ஒருவரை மதிப்பதோ, எடை போடுவதோ எப்போதும் கிடையாது.
மதவாத எண்ணமுடையவர்களுக்கு, கொஞ்சம் (ஒன்னும் தெரியாத) மற்றவர்களையும் தூண்டாமல் இருப்பது நல்லது.

Bhuvanesh said...

ரைட்டு மச்சி !!

Bhuvanesh said...

ரைட்டு மச்சி !!

Nathanjagk said...

இந்த மாதிரி ஸ்​டைல்ல விமர்சனம் எழுத மாப்ளயாலதான் முடியும்!!
//நீ என்ன வேணா சொல்லு, இது மனசுக்குள்ள பதிஞ்சு கிடக்கும், ஏதாவது கலவரம் வரும்போதுதான் எபக்டு தெரியும்//
என்னமா புடிக்கறீங்க பாயிண்​டை!!
//பிடிக்கலன்னா போ கழுதன்னு பாதியிலயே எந்திரிச்சுப் போக வேண்டியதான? இவ்வளவுக்கும் கத முன்னாடியே தெரியும்//
நல்லாத்தான் ​கேட்கறீங்க ​கேள்வி..!

//கதை சுதந்திரத்தையே கட்டையில ஏத்துறீங்க, உங்க கருத்து சுதந்திரம் வெளங்கிரும்.
//
இதுதாம்பா இந்த ஆண்டின் மிகச்சிறந்த தத்தூவம்!!

கலக்கீட்டிய மாப்ள!

Beski said...

நன்றி மச்சி, புரிந்துகொண்டதற்கு.

ஜெ மாம்ஸ், இப்படி வரிக்கு வரி பதில் எழுத உங்களாலதான் முடியும். நன்றி.

shortfilmindia.com said...

அருமை எவனோ ஒருவன்.. கதை சுதந்திரத்தையே கட்டையில ஏத்துற நீ கருத்து சுதந்திரத்தை பத்தி பேசுற சூபப்ர் நெத்தியடியான லைன்.. சூப்பர்..

கேபிள் சங்கர்

Beski said...

நன்றி கேபிள்ஜி.
எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்.

மணிஜி said...

விஸ்கி..சாரி.பெஸ்கி..நீ எவனோ ஒருவன் இல்லை...என்னைப் போல் ஒருவன்

Beski said...

//தண்டோரா ...... said...
விஸ்கி..சாரி.பெஸ்கி..நீ எவனோ ஒருவன் இல்லை...என்னைப் போல் ஒருவன்//

வருகைக்கு நன்றி தண்டோரா.

என் பேர நீங்கதான் சுலபமா ஞாபகம் வச்சிக்குவீங்கன்னு நினைக்கிறேன்.

உன்னைப் போல் ஒருவன் + எவனோ ஒருவன் = என்னைப் போல் ஒருவன் ஆகியாச்சா? நல்லாத்தான் இருக்கு.