யார் குருடன்?

ஆதவன் அணையும் அந்தி வேளை


அழகாக இருந்தது ஆகாயக காட்சி பறவைகளின் அணிவரிசை


பார்த்தேன் பரவசமாய்

மாலை நேரத்து மழையை வரவேற்க்கும் வானவில்
\

மகிழ்ந்தேன் அதைக்கண்டு

சற்றே திரும்பினேன்

என்னை கடந்து சென்றனர்

சில கண் தெரியாதவர்கள்


நான் கண்ட ரசித்தவற்றை


இவர்கள் கண்டு ரசிக்க முடியாதே

என்று கண் கலங்கினேன்


திடீரென ஒரு அசரிரீ

என் முன்னால் கேட்டது

“ஏண்டா சாவு கிராக்கி கண்னு தெரியாதா உனக்கு


காயப் போட்டிருக்க கருவாடு மேல நடக்கிற”


அப்போதுதான் புரிந்தது யார் குருடன் என்று?...கி.கி.


Share/Bookmark

10 ஊக்கங்கள்:

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு கிறுக்கன்... இப்பிடி கூப்புடுறதுக்கு வருத்தமா இருக்கு வேற பேர் வச்சுக்கோங்களேன்...

Cable சங்கர் said...

அலோ..இது கவிதையா.. இல்லை படத்துக்கான விவரிப்பா.. எதையானாலும் சொல்லிட்டு செய்யுங்க..:)

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//கிறுக்கன்... இப்பிடி கூப்புடுறதுக்கு வருத்தமா இருக்கு வேற பேர் வச்சுக்கோங்களேன்...\\

நான் எட்டாவது படிக்கும்போது ஒரு கட்டுரை போட்டியில் கலந்து கொண்டபோது, அதை திருத்திய வாத்தியார் இந்த கிறுக்கு பய நல்லாத்தான் கிறுக்கிறான். என்று கூற அதையே என் புனை பெயராக எடுத்துக்கொண்டேன். எனவே மாற்ற மனம் வரவில்லை. நீங்கள் வேண்டுமானால் கி.கி.என்று அழைக்கலாமே

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//Cable Sankar said...
அலோ..இது கவிதையா.. இல்லை படத்துக்கான விவரிப்பா.. எதையானாலும் சொல்லிட்டு செய்யுங்க..:)\\


அண்ணே இது கவிதைதாண்ணே, நம்புங்கண்ணே

Anonymous said...

நல்லா இருக்கு மாபி சிந்தனை.

goma said...

அருமையான கவிதை கருத்துடன் முடிக்கப் பட்டிருக்கிறது..

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//adaleru said...
நல்லா இருக்கு மாபி சிந்தனை.
\\


வருகைக்கு நன்றி

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//goma said...
அருமையான கவிதை கருத்துடன் முடிக்கப் பட்டிருக்கிறது..\\


நன்றி

☀நான் ஆதவன்☀ said...

கவுஜ????? ரைட்டு போட்டு தாக்குங்க

ஆர்.வி. ராஜி said...

கவிதைதான்; நம்பிட்டேன்.
ரொம்ப நல்லா இருக்கு கி.கி.