வானவில் - 2009/10/12

கொத்துபரோட்டா, பஞ்சாமிர்தம், நங்கநல்லூர் பஞ்சாமிர்தம், காக்டெயில், மிக்ஸர், மானிட்டர் பக்கங்கள், அவியல், குவியல், டரியல், என்’ணங்கள், டிபன் (இட்லி, வடை, பொங்கல்....), மிக்ஸ்டு ஊறுகாய், மிக்ஸ்டு ஃப்ரைடு ரைஸ்  இப்படி பல பேர் பல தலைப்புல கலவைப் பதிவுகளை எழுதுறாங்க. நான் கூட எழுதிட்டுதான் இருக்கேன் (உண்மையாத்தான்), அது எத்தன பேருக்குத் தெரியும்னு தெரியல. ஆக்கம் 60 நாள் மொக்கை 30 நாள் - எங்கையோ பாத்த தலைப்பு மாதிரி இருக்கா? இதுதான் நம்ம கலவைப் பதிவின் தலைப்பு, நேத்து வரைக்கும் (இதுக்கு அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுக்கனும்னா தனியா காண்டாக்ட் பண்ணுங்க (போன் பண்ணப் போறவங்களுக்கு இன்னோனு - உங்க தலையெழுத்து(இதுதான் பிராக்கெட்டுக்கே பிராக்கெட் போடுறது))).

திடீர்னு ஒரு சந்தேகம், நேத்து வீட்டுக்குப் போற வழியில. நம்ம கலவைப் பதிவு நல்லா ரீச் ஆகல போல இருக்கேன்னு! காரணம் என்னன்னு ஆராய்ச்சி பண்ணிப் பாத்தா தலைப்பும் ஒரு காரணமா இருக்குமோன்னு தோணுச்சு. சரி, தலைப்பை மாத்தி வச்சுடலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். வேற தலைப்பு என்ன வைக்கலாம்? (மொக்கைனு வைய்டா மொக்கைனு சொல்றீங்களா? கவலப்படாதீங்க, அது லேபில்ல கண்டிப்பா இருக்கும்) ’ஏதேதோ’னு வைக்கலாமா, நம்ம தளத்தோட பேருக்குப் பொருத்தமா இருக்கும் அப்டின்னு தோனுச்சு. ஆனா, மத்த பிரபல பதிவர்களோட தலைப்புகளை எல்லாம் பாத்தா ஏதோ ஒன்னு ஸ்டிரைக் ஆச்சு... எல்லாமே வாய்க்குள்ள போறதாவே இருக்கே! (என்’ணங்களை கணக்குல எடுக்கல) அப்போ நாமலும் ஒரு (சாப்பிடுற) ஐட்டத்தோட பேர  தலைப்பா வச்சிடலாம்னு முடிவு பண்ணி, அப்படியே யோசிக்க ஆரம்பிச்சேன் (திரும்பவும்).

பஞ்சாமிர்தம், கொத்துபரோட்டா, மிச்சர் - இந்த மாதிரி மிக்ஸிங் ஐட்டமா இருக்கனுமேன்னு யோசிச்சு யோசிச்சுப் பாத்தேன். கடைசியில நம்ம மூளைக்குள்ள ஓடுன தலைப்புதான் - பழரசம்.

இது சின்ன வயசுல நம்ம ஊரு ஃபேவரிட் ஐட்டம். ஒரு ரூபாய்க்கு ஒரு கண்ணாடி கிலாஸ் நெறையா கெடைக்கும். வாழைப்பழம், ஆப்பிள், அன்னாச்சி, கொய்யா... இப்படி கைல கெடைக்கிறத எல்லாம் மொத்தமா போட்டு அடிச்சி வச்ச்சிருப்பாங்க. சிகப்பு கலர்ல இருக்கும். வாங்கி குடிச்சா வயிறு நெறைஞ்சே போகும். நாம 25 காசு குடுத்து பாதி கிலாஸ்ல குடிக்கிறது வழக்கம் (அப்போ ஒரு நாள் பாக்கெட் மனி அவ்ளோதான்). வீட்டுல இதெல்லாம் வாங்கி குடிக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஏன்னா மிச்சம் இருக்குற பழைய பழங்களைப் போட்டுத்தான் இது பண்றாங்கங்கிறது அவங்களோட எண்ணம். நாம இதெல்லாம் கண்டுக்கிறது இல்ல (இப்ப குடிக்கிற ஐட்டம் வரைக்கும் இதே கததான்).

சென்னை வந்து ஒரு ரெண்டு வருசத்துக்கு அப்புறம் (ஒன்னா ரெண்டா, ஒழுங்கா சொல்லுன்னு கமண்டு போடாதீங்க, ஒரு ஃப்லோல வருது) திரும்பவும் இது குடிக்க ஆசப்பட்டு, ஒரு கடைக்கிப் போயி கேட்டேன். கடக்காரன் நம்மள மொறச்சுப் பாத்தான். என்னடான்னு யோசிக்கிறதுக்குள்ள கூட இருந்த நம்ம மச்சி ஒருத்தன் ’ரெண்டு பழரசம்’ அப்டின்னான். நான் கேட்டது ‘ரெண்டு ஃப்ரூட் ஜூஸ்’.

நல்ல பேரு ஒன்னு கெடச்சிடுச்சுன்னு நெனச்சிட்டு இருக்கும்போது, ஒரு பிரபல பதிவரிடம் கருத்துக் கேக்கலாமேன்னு தோனுச்சு. நமக்குத் தெரிஞ்ச பிரபலம் ஒருத்தருக்கு போன் பண்ணி கேட்டேன். இது நல்லா இல்லன்னு சொல்லிட்டாரு (உங்க ஊருலதான் இப்படி, மத்தவங்களுக்கு பழரசம்னா ஒரு பழத்தோட ஜூஸ்னுதான் தோனும் என்பது விளக்கம்). வேணும்னா ஃப்ரூட் சாலட்னு வைச்சுகோன்னு சொன்னார். இல்ல, நான் தமிழ்லதான் வைப்பேன்னு சொன்னேன். எக்கேடும் கெட்டுப்போன்னு விட்டுட்டாரு.

இப்ப திரும்பவும் யோசன... ரொம்ம்ம்ம்ம்ப யோசிச்சப்றம், மிச்சம் மீதி இருக்குற ஐட்டத்தத்தான எழுதுறோம், அப்போ இட்லி உப்புமான்னு வைக்கலாமா? இல்லை. சரி டஸ்ட் பின், வேணாம் இங்லீஸ், அப்போ குப்பைத்தொட்டி; ஆதவன் கோபத்துக்கு ஆளாக வேணாம். மிச்ச சொச்சம்... ஆஹா, ரொம்ப நல்லா இருக்கு. இதையே வச்சிடலாம்னு முடிவு பண்ணியாச்சு.

இவ்ளோ யோசிச்சு என்ன பிரயோஜனம்? கடைசியில யோசிக்காமலேயே தோனின ஒன்னுதான் தலைப்பா போச்சு. துணிதுவைக்கும்போது தண்ணியெல்லாம் தெரிச்சு, வானவில் மாதிரி தெரிஞ்சது. அட, வானவில் நல்லா இருக்குமேன்னு, அந்த பிரபலத்த திரும்பவும் கூப்பிட்டுக் கேட்டேன். ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. ரைட்டு.

சரி, அதெல்லாம் இருக்கட்டும், மேட்டருக்கு வான்னு ’நீ ஆதவன்’ கூவுறது கேக்குது. இதான் மேட்டரு. இனி ஆ60மொ30 - வானவில்னு மாறப் போகுது, உங்க மனச கொள்ளை அடிக்கப் போகுது. (கொஞ்சம் ஓவரா போறமோ?) யாராவது இந்தப் பேருல எழுதிட்டு இருந்தா, தயவு செஞ்சு சொல்லிருங்க, அப்பிடின்னு சொல்லுவேன்னு மட்டும் எதிர்பாக்க வேணாம். தயவு செஞ்சு நீங்க பேர மாத்திக்குங்க, ரொம்ப யோசிச்சு, ஒரு பதிவு வேற போட்டுட்டேன் (இதுல பதிவு போட்டது பெருசா, நீ யோசிச்சது பெருசான்னு கேக்காதீங்க).

 ----

இந்த வானவில்அறிமுகப் வானவில்லாக இருப்பதால் இதுக்கு மேல மேட்டர் இல்ல. என்னது? ஏதாவது சொல்லனுமா? சரி.
டெம்ப்லேட் மாத்திட்டேன் (அதான் தெரியுதே, இது ஒரு மேட்டரான்னு அவசரப்பட வேணாம்). உங்களுக்கும் டெம்ப்லேட் மாத்த உதவி தேவைனா, தாராளமா தொடர்புகொள்ளலாம். ஃபிரீயாய் இருக்கும்பட்சத்தில் கண்டிப்பா செய்து தருகிறேன்.(இது ச்சும்மா... செஞ்சு குடுடான்னு அடம் பிடிச்சீங்கன்னா செஞ்சு குடுத்துருவான் இந்த ஏனாஓனா, அவ்ளோ நல்ல மனசு).

பெஸ்கியின் டிஸ்கி 1: இந்தப் பதிவுல அதிகமா (பிராக்கெட்) இருக்குதேன்னு தோனுதா? அதுக்கு நா ஒன்னும் செய்ய முடியாது.
பெஸ்கியின் டிஸ்கி 2: மொதல்ல ஒன்னுன்னு போட்டுட்டேன்... ஆனா உண்மையிலயே ரெண்டாவது இல்ல. (இதுக்கு மொதல்ல 1 போடாமலேயே இருந்திருக்கலாமோ?)

---

-ஏனாஓனா.

Share/Bookmark

24 ஊக்கங்கள்:

butterfly Surya said...

பாப்கார்னை விட்டுடிங்க.

வானவில் நல்லாயிருக்கு.

Cable சங்கர் said...

வானவில்லுக்கு ஓகே சொல்லி ஆதரவளித்த என் பெயரை மறைத்ததற்காக வனமையாய் கண்டிக்கிறேன்.

ஷங்கி said...

ஆக்கம் நல்லாருக்கு ஏனா ஓனா! ஒருத்தரோட வலைப்பூ பேரு ரெயின்போதாட்ஸ். நம்மூரு ஐட்டம் இல்லாம சாப்பாடு ஐட்டம் பேரு ஓக்கேன்னா நான் ஒண்ணு சொல்றேன். என்சிலாடா - இந்தப் பேரை வைச்சுக்கோங்க! (ஸ்டைலா இருக்கும். என்சிலாடாவை வைச்சே ஒரு இடுகைய நிரப்பிடலாம்)
அப்புறம் பழரசம்னவுடனே திருநெல்வேலி ஜங்ஷன்ல, நீங்க சொல்ற அந்தச் சிகப்பு நிறத்துல வித்துக்கிட்டிருப்பாங்க. எங்க வூட்டுலயும் அதைக் குடிக்க விட மாட்டாங்க. ஆனா குடிக்காம யாரு விட்டா?! சூப்பராத்தான் இருக்கும். கலவைன்னாலே சூப்பர்தான்.
தொடருங்கள், வாழ்த்துகள்.

☀நான் ஆதவன்☀ said...

மாப்பி இந்த தலைப்புக்காக இவ்ளோ கஷ்டப்பட்டுட்டு, மாங்கு மாங்குன்னு இவ்வளவு பெரிய பதிவை போட்டுடது எல்லாம் வீணாப்போகிரும் போலயே.

இங்க போய் பாரு
http://ilayapallavan.blogspot.com/2009/07/26072009.html

வானவில் எல்லாம் எப்பவோ ரிசர்வ் பண்ணியாச்சு.

☀நான் ஆதவன்☀ said...

//சரி டஸ்ட் பின், வேணாம் இங்லீஸ், அப்போ குப்பைத்தொட்டி; ஆதவன் கோபத்துக்கு ஆளாக வேணாம்.//

இதுவும் ஏற்கனவே யாசவின்னு ஒருத்தங்க வச்சுட்டாங்க மாப்பி :)

http://yasavi.blogspot.com/2009/09/blog-post_09.html

நல்லா யோசிங்கிறாய்ங்கய்யா...

☀நான் ஆதவன்☀ said...

// butterfly Surya said...

பாப்கார்னை விட்டுடிங்க.

வானவில் நல்லாயிருக்கு.//

அதுவும் எங்கேயோ பார்த்திருக்கேன் சூர்யா.

Jana said...

ம்ம்ம்...ரொம்ப கஷ்டம்தான் ஒரு பெயரை சூட்டுவதற்கு..நானும் தலையை போட்டு அடித்து பின்னர் ஒரு மாதிரி, ஞாயிறு ஹொக்டெயில் என்று வைத்தேன், ஹொக்ரெயில் இருக்கலாம் இது ஞாயிறு ஹொக்ரெயிலாக்கும்!! அப்புறம் நான் தரும் சில ரிப்ஸ்;
மனோரஞ்சிதம் - ஒரு பூதான் அனால் பல பூக்களின் வாசனை தரும்.
இராகமாலிகா..- ஒரு உருப்படிதான் ஆனால் பல இராகங்களின் கோவை
பூந்தோட்டம் - நிச்சயமாக இங்கே பல தரப்பட்ட பூக்கள் இருக்கும்.
கூட்டாஞ்சோறு!!
பலதும் பத்தும்...
பழக்கூடை..
இப்படி ஏதாவது???

வால்பையன் said...

நல்ல தலைப்பு தான் தல!

Romeoboy said...

நீங்களும் ஆரமிச்சா ?? நடத்துங்க நடத்துங்க .. நல்லா இருந்தா சரி ..

கிரி said...

என்ன கொடுமை சார்!

பேர் வைக்கறதுல இவ்வளோ பிரச்சனையா!

பேர் ல என்னங்க இருக்கு..பதிவுல விஷயம் இருக்காங்கறது தான் முக்கியம்..

உங்களோட ஆக்கம்...ல தொழில்நுட்ப செய்திகள் தவறாம படிப்பேன்

kanagu said...

/*இப்ப குடிக்கிற ஐட்டம் வரைக்கும் இதே கததான்*/

:))))

peru nalla irukku... naanum kalavaikku oru peru yosichu paathen.. onnum sikkala.. vittuten :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

சுத்தம்!! பேரு வைக்கிரதுக்கு முன்னாலயே இப்படின்னா !! இனி பேரு வச்ச அப்புரம்!!! கஷ்டம் தான் போல!!!

Beski said...

நன்றி சூர்யா.
ஓ உங்க ஐட்டத்த விட்டுட்டேனா?

நன்றி கேபிள்ஜி.
ஜி, இப்பிடி டக்குன்னு சொல்லிட்டா எப்புடி?

நன்றி ஷங்கி.
தமிழ்ப்பேருதான் வேணும். வேற இருந்தா சொல்லுங்க.

Beski said...

நன்றி ஆதவா.
வீணா எல்லாம் போகல, ஒரு பதிவு போட முடிஞ்சதுல்ல...
திரும்பவும் பேர மாத்தி ‘வானவில் கோனவில்லான கதை’னு ஒரு பதிவு போடலாம். ஆக மொத்தம் 2 பதிவுக்கு பிரயோசனமா இருக்கு.

ஆனா, நீதான் இங்க ரொம்ப வெட்டின்னு நினைக்கிறேன்... எல்லாத்தையும் படிக்கிறியேய்யா...

ஆனா நீ சொன்ன பாரு ஒரு தலைப்பு... ‘வாந்தி’ன்னு, அதுக்கே உனக்கு _____________...

Beski said...

நன்றி ஜனா.
தலைப்பு இன்னும் தேடிட்டுதான் இருக்கேன். எல்லாத்தையும் ஏற்கனவே யோசிச்சு வச்சிருக்காங்க, என்ன பண்றது?

கூட்டாஞ்சோறு ஏற்கனவே இருக்காம், அந்த ஆதவனும் சொன்னான்.
பூந்தோட்டம் நல்லா இருக்கு. ’அத்தப்பூ’ யாராவது வச்சிருக்காங்களான்னு பாக்கனும்.

Beski said...

நன்றி வால்.

நன்றி ரோமியோபையா.

நன்றி கிரி.
அதை ஏன் கேக்குறீங்க? அடுத்த பதிவுல அந்த அக்கப்போரப் பத்தி பாருங்க.
அட, நம்ம ஆ60மொ30க்கும் ஒரு ரசிகரா?
அதே மேட்டர்தான் உள்ள இருக்கும். தலைப்ப மட்டும்தான் மாத்தப்போறேன்.

Beski said...

நன்றி கனகு.
அட, இப்படி விட்டுட்டா எப்படி? வாங்க, நாமளும் புடிப்போம் ஒரு தலைப்பு.

நன்றி ராஜ்.
பேரு வைக்கிறதே கஷ்டமாத்தான் இருக்கு.

தினேஷ் ராம் said...

கதம்பம்..

Beski said...

நன்றி சாம்ராஜ்ய ப்ரியன்.

கதம்பம் - இப்போதைக்கு ரெண்டு பேரு எழுதுறாங்க...
முடியல... எவ்ளோ கஷ்டம் பாருங்க.

அடலேறு said...

ஒரு பேரு வெக்க இவ்வளோ ரண களமா, ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க..
கடையின் புது வடிவம் நல்லா இருக்கு

Beski said...

நன்றி அடலேறு.
ஒரே அக்கப்போரா இருக்கு... நீ ஏதாவது சொல்லேன்...

அடலேறு said...

கண்டிப்பா சொல்ற நண்பா.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

தம்பி எனக்கும் ஒரு தலைப்பு யோசித்து சொல்லேன்

Beski said...

நன்றி அடலேறு. ஆனா இன்னும் சொல்லல?

கிகி அண்ணே,
நமக்கே இன்னும் மாட்டல, மொத்தமா சொல்றேன், நீங்களே எடுத்துக்குங்க...