அழகிய கல்லூரி பூக்களில்
கல்வியே சிறந்தது என கற்கும் சில,
காதல்தான் எல்லாம் என அலையும் சில,
கிண்டலால் பிறர் மனதை வருத்தும் சில,
கீழான பழக்கங்களால் வருத்தும் சில,
குற்றம் கூறியே குறைபடும் சில-வேண்டா
கூட்டம் கூடியே அழியும் சில- தானும்
கெட்டு அருகிலுள்ளதையும் அழிக்கும் சில,
கேவலமான வாழ்க்கையை விரும்பும் சில,
கையாலாகாதவை என் பட்டம் பெறும் சில,
கொட்டமடித்தே தினம் வட்டம் போடும் சில,
கோபமே கொள்ளாமல் அமைதியாய் சில,
கெளரவமாய் நடந்து காட்டும் அதிசயமாய் சில,
என பல உள்ளத்தில
எதிலும் பொருந்தாமல்
நித்தமும் வாடியும்
உதிராமல் இருக்கின்றாயே!
என் இனிய பூவே!
N B:
இதில் ’பூவே’ என்று அழைத்திருப்பது பூவுள்ளம்
படைத்த சில மனிதர்களை ,
அது ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம் (94 டிசம்பரில் கிறுக்கியது)
---
-கிகி.
கல்லூரி பூக்கள்
ஆக்கம்:
கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )
Saturday, October 10, 2009
பிரிவு:
அனுபவம்,
கவிதை,
கிகி
14
ஊக்கங்கள்
14 ஊக்கங்கள்:
4 நாட்கள் நான் விடுமுறை
க, கா,கி, கீ, கு கூ கெ கே என்று எழுத நினைத்தது வெற்றி பெற்றிருக்கிறது.. அது சரி.. கவிதையா எழுதியிருக்க..:)
ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்
கவிதை ரொம்ப அழகா இருக்கு அண்ணா.. :)
கேபிள் அண்ணா கமெண்ட்ட பாத்த பிறகு தான் அந்த ‘க’ வரிசைய பாத்தேன் :)
இந்த உயிர்மெய் எழுத்து கவிவரிசை உயிர்மெய்யாக உள்ளது. பாராட்டுக்கள் நண்பரே…
ஹி ஹி ஹி .. என்ன பாஸ் எழுதி இருக்கிங்க ??
அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..
அருமை....
பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
அண்ணன் கிகி விடுமுறையில் இருப்பதால், பின்பு பதிலுரை எழுதுவார்.
//Cable Sankar said...
க, கா,கி, கீ, கு கூ கெ கே என்று எழுத நினைத்தது வெற்றி பெற்றிருக்கிறது.. அது சரி.. கவிதையா எழுதியிருக்க..:)\\
ஏதோ தெரியாத்தனமா சொல்லிட்டேன்.
//குறை ஒன்றும் இல்லை !!! said...
ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்\\
தீபாவளிக்கு வீட்ல அல்வாவோ வாயே திறக்க முடியாம இருக்கீங்க
//kanagu said...
கவிதை ரொம்ப அழகா இருக்கு அண்ணா.. :)
கேபிள் அண்ணா கமெண்ட்ட பாத்த பிறகு தான் அந்த ‘க’ வரிசைய பாத்தேன் :)\\
நன்றி தம்பி
//Jana said...
இந்த உயிர்மெய் எழுத்து கவிவரிசை உயிர்மெய்யாக உள்ளது. பாராட்டுக்கள் நண்பரே…\\
நன்றி ஜனா
//Romeoboy said...
ஹி ஹி ஹி .. என்ன பாஸ் எழுதி இருக்கிங்க ??\\
நான் எதுவும் எழுதலியே, ஏதோ கிறுக்கியிருக்கேன் ஹி ஹி
// பிரபா said...
அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..\\
இதோ வந்துட்டேன்
// புலவன் புலிகேசி said...
அருமை....\\
நன்றி . ஆமா நீங்க எத்தனையாவது புலிகேசி
Post a Comment