பேரு வைக்கிறதுக்கு ஒரு அக்கப்போரா?

ஏற்கனவே வானவில் வந்த கதை உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். தெரியாதுன்னா இங்க போயி பாத்துக்குங்க.

அதுக்கப்புறம், அங்க பின்னூட்டத்துல கூட சிலபேர் சில தலைப்புகளை சிபாரிசு பண்ணினாங்க. அண்ணன் ஷங்கி என்சிலாடான்னு ஒரு ஐட்டத்த சொன்னாரு. விக்கில பாத்தா ஃப்ரூட் சாலட் மாதிரி தெரிஞ்சது. அப்றம் ஆதவன், இந்த பேரு ஏற்கனவே இருக்குன்னு ஒரு குண்ட தூக்கி போட்டுட்டான். அப்றம் ஜனா மனோரஞ்சிதம், இராகமாலிகா, பூந்தோட்டம், கூட்டாஞ்சோறு, பலதும் பத்தும், பழக்கூடை இப்படி வரிசையா பின்னிட்டாரு. சாம்ராஜ்ய ப்ரியன் கதம்பம்னு ஒன்னு சொன்னாரு. இதுல இன்னொரு முக்கியமான விசயம், கிரி அண்ணன் ஆ60மொ30 தொடர்ந்து படிக்கிறாராம்.

இதெல்லாம் பத்தி யோசிச்சுக்கிட்டே இருக்கும்போது... ஒரு பிரபல பதிவர் சாட்ல வந்தார். அவரும் நானும் இதப் பத்தி அலசி ஆராஞ்சு பாத்தத நீங்களும் பாருங்க...

பி.ப.1: ஏனோ ஓனோ, எங்கிட்ட ஒரு ஐடியா கேட்டிருக்கலாம்ல.... பேரு வைக்கிறாராம் பேரு
ஏனாஓனா: அட போய்யா, எந்த பேரு யோசிச்சாலும் யாராவது வச்சிருக்காங்க, நீ ஏதாவது சொல்லேன்.
பி.ப.1: இரு யோசிக்கிறேன்
ஏனாஓனா: தமிழ்ல சொல்லு
பி.ப.1: இதெல்லாம் முன்னாடியே கேட்டிருக்கனும்
ஏனாஓனா: அதுக்கு என்ன இப்போ? இந்த வாரத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சு, இது ஏற்கனவே இருக்குன்னு இன்னொரு பதிவு போடலாம். மொத்தம் 2 பதிவுக்கு மேட்டர் கிடச்சுதுல்ல?
ஹி ஹி ஹி...
பி.ப.1: வாந்தி ஓக்கேவா?
ஏனாஓனா: அது ஏற்கனவே யோசிச்சேன்.. .வேணாம்.
பி.ப.1: ரைட்டு
ஏனாஓனா: ’ரைட்டு விடு’ - இது?
பி.ப.1: ஹிஹி
ஏனாஓனா: ஹி ஹி ஹி
பி.ப.1: தமிழ்ல இல்லையே
ஏனாஓனா: அட ஆம்மா...
பி.ப.1: பத்தியா நம்ம எது தமிழ் எது மற்ற மொழின்னு மறக்கற அளவுக்கு இருக்கு நம்ம தமிழ்
ஏனாஓனா: ஹ்ம்ம்ம்
பி.ப.1: வழக்கு தமிழ்
ஏனாஓனா: நீ பாடம் நடத்த ஆரம்பிச்சிடாத, மேட்டருக்கு வா.
பி.ப.1: பேசாம “தமிழ்”ன்னு வச்சிரு, கலப்படம் இருக்குல்ல
ஏனாஓனா: பேர கண்டிப்பா மாத்தனுமா?
பி.ப.1: இல்ல விடு. அவரும் என் நண்பர் தான். அதான் கேட்டேன், இளைய பல்லவன்.
ஏனாஓனா: கூட்டாஞ்சோறு...?
பி.ப.1: அதுவும் இருக்குய்யா
ஏனாஓனா: ம்ம்ம்ம்...
பி.ப.1: யாருன்னு ஞாபகம் இல்ல
ஏனாஓனா: கே.கு. - அப்டின்னு வச்சிடலாமா?
பி.ப.1: அதென்ன?
ஏனாஓனா: அது அவனவன் இஷ்டம்... என்ன தோனுதோ வச்சிக்கட்டும்
பி.ப.1: அசிங்கமா இருக்குமே
ஏனாஓனா: உனக்கு என்ன தோனுது?
பி.ப.1: அதே தான் தோணுது
ஏனாஓனா: ஹி ஹி ஹி...
பி.ப.1: ஹிஹி
ஏனாஓனா: சாக்கடைனு வைக்கலாம்னு பாத்தா.... வாந்தி மாதிரி இருக்கு...
சாக்கடை - நாத்தம் - னு நீயே பின்னூட்டம் போடுவ...
பி.ப.1: கண்டிப்பா
ஏனாஓனா: ம்ம்ம்... ’அத்தப்பூ’?
பி.ப.1: மாமியார்பூ கூட வைப்ப போல
ஏனாஓனா: அதென்னப்பா மாமியார்பூ? கெட்ட வார்த்த மாதிரி இருக்கு!
பி.ப.1: யோவ் நீ அத்தைப்பூன்னு வைக்கும் போது அதுவும் வைக்கலாம்ல?
ஏனாஓனா: இது அத்தப்பூய்யா... கேரளால போடுவாங்கள்ல...
பி.ப.1: ஓ அதுவா, நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன்
ஏனாஓனா: அடங்... சரி... இது கேரளா... அதுவும், ரொம்ப சாப்டா இருக்கு, லேடீஸ் இந்தப் பேர வச்சிக்கலாம்...
நமக்கு நல்லா, டெர்ரரா இருக்கனும் பேரு...
பி.ப.1: ம்... யோசிப்போம்
ஏனாஓனா: என்னல்லாமோ தோனுது...
தலைப்பில்லா
தலைப்பின்மை...
முண்டம்
பி.ப.1: அவ்வ்வ்வ்
ஏனாஓனா: வாய்க்கொழுப்பு
பி.ப.1: ரெஸ்ட் எடுய்யா
ஏனாஓனா: ஹி ஹி ஹி...
பி.ப.1: உடம்பு சரியில்லைன்னு தோனுது
ஏனாஓனா: நேரடியா சொல்ல வேண்டியதுதான... மெண்டல்னு சொல்ல வர்றியா?
”மூக்க ஒடச்சிடுவேன்”...
பி.ப.1: ச்சீ சீ என் வாயால அப்படி சொல்லுவேணா
ஏனாஓனா: அதான் மாத்தி சொன்னியாக்கும்...?
கடல்
?
சங்கமம்?
பி.ப.1: அந்த பழனி முருகன் சிலை எதால செஞ்சது?
நவ பாசானம்?
ஏனாஓனா: ஓஹோ...
பி.ப.1: ஆனா ஒன்பது மேட்டர் வேணூம்
ஏனாஓனா: அது கொஞ்சம் அதிகமா இருக்குய்யா... அதான்...
வானவில்னா 7ஓட முடிஞ்சு போகும்
பி.ப.1: ம், ஐஸ் பிரியாணி? பழைய சோறு தான் அப்படி சொன்னேன்...
ஏனாஓனா: ஐஸ்? தமிழா?
ஏனாஓனா: ’அட போடாங்’
ஏனாஓனா: அப்டின்னு வச்சிடலாமா?
பி.ப.1: அட போய்யாங்... ‘கழனி மண்டி’?
ஏனாஓனா: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
எரும மாடு... அப்டின்னு பின்னூட்டம் வரும்...
பி.ப.1: யோவ் அதுல தான்யா எல்லாமே இருக்கும்
ஏனாஓனா: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
அதுக்காக... சாக்கடைல கூட எல்லாம் இருக்கும்....போய்யாங்...
பி.ப.1: யோவ் கால்நடைக்கு தீவனம்யா அது, சாக்கடையோட கம்பேர் பண்ணாத
ஏனாஓனா: அது சரி, அவனவன் மனுச தீனி பேரு வச்சிருக்கான்...
பி.ப.1: ஹிஹிஹி
ஏனாஓனா: அதுக்கு நாம இப்படியா வைக்கிறது...?
பி.ப.1: ஜிகர்தண்டா?
ஏனாஓனா: அது எப்பிடி பண்ணூவாங்க? அதப் பத்தி ஒன்னும் தெரியாதே...
பி.ப.1: மதுரையில இருக்கும்
ரெண்டு மூனு பொருளை போட்டு பண்ணுவாங்க. ஜில்லுன்னு டேஸ்டா இருக்கும்
ஏனாஓனா: ஏற்கனவே இருக்கு...
பி.ப.1: quarter matter..?, quarter quarteraa matter..? தமிழ்ல வேணும்னு அடம்பிடிக்காத
ஏனாஓனா: அது மானிட்டர் பக்கங்கள் மாதிரி இருக்கே....
பி.ப.1: ம்ம்ம்ம்... மகாமகம்?
ஏனாஓனா: அதென்னய்யா மகாமகம்... ஏதோ திருவிழா மாதிரி இருக்கு?
பி.ப.1: ம் அதே தான், ஒன்னு கூடுற இடம்
ஏனாஓனா: ம்ம்ம்... சந்தை...?
பி.ப.1: பல சரக்கு?
ஏனாஓனா: சூப்பர்...அது பலசரக்கு
பி.ப.1: தெரிஞ்சு தான் ஸ்பேஸ் விட்டேன்
ஏனாஓனா: ம்ம்ம், சூப்பரா இருக்கு, அடுத்த பதிவு ரெடி... நாம பேசுனதுதான் பதிவு... தலைப்பு - ‘வானவில் கோனவில்லான கதை’
பி.ப.1: ஹிஹி, என்னமோ பண்ணு
ஏனாஓனா: அதுவும் இருக்குய்யா... :(
பி.ப.1: அவ்வ்வ்வ் :(
ஏனாஓனா: பேசாம ’ங்கொய்யால’ன்னு வைக்கப்போறேன் பாரு, எல்லாத்தையுமே யோசிச்சுடுறானுவ...
பி.ப.1: யோவ் அது கெட்ட வார்த்தையா
ஏனாஓனா: அது வேறயா...
பி.ப.1: ஆமா
ஏனாஓனா: அவ்வ்வ்வ்வ்....
பி.ப.1: முத்தமிழ்? மூனு மேட்டர் தான் சொல்லமுடியும்
ஏனாஓனா: கொஞ்சம் ஓவரா தெரியல?
பி.ப.1: அதெல்லாம் இல்ல, மூனுமே ஒவ்வொரு ஊர் ஸ்லாங்ல சொல்லு
ஏனாஓனா: இல்லன்னா... சதுரம்னு வச்சு நாலு மேட்டர் சொல்லிடலாம்...
பி.ப.1: வட்டம் வச்சு நிறைய மேட்டரே சொல்லலாமே :)
ஏனாஓனா: ஹி ஹி ஹி.... வாழ்க்கை ஒரு வட்டம்டா....
பி.ப.1: தத்துவம்ம்ம்ம்
ஏனாஓனா: அஞ்சரப் பெட்டி
பி.ப.1: அஞ்சரப்பெட்டி இருக்கு
ஏனாஓனா: ம்ம்ம்ம்... ஆரரைப் பெட்டி? ஹி ஹி ஹி...
பி.ப.1: ங்கொய்யால
பி.ப.1: ’என்னமோ ஒன்னு'?
ஏனாஓனா: ஐ, ’ஏதோ ஒன்னு’
பி.ப.1: ஏதோ ஒன்னு, என்னமோ ரெண்டு?
ஏனாஓனா: அட, கொஞ்சம் பெருசா இருக்கே...
பி.ப.1: சுருக்கு
ஏனாஓனா: ஒன்னு ரெண்டு மூனு
பி.ப.1: ஊர் வாய்க்கு அவல்?
ஏனாஓனா: என்னய்யா இது வாய்க்கரிசிதான் ஞாபகத்துக்கு வருது...
பி.ப.1: அவ்வ்வ்வ்
ஏனாஓனா: பஞ்சாயத்து?
பி.ப.1: தீர்ப்பா சொல்ல போற?
ஏனாஓனா: ஹி ஹி ஹி.... நல்லா யோசிச்சு வை... கொஞ்ச நேரத்துல வறேன்...
பி.ப.1: சரி

அப்பப் போனவருதான், அதுக்கப்புறம் ஆன்லைன்ல வரவே இல்ல. என்ன நெனச்சாரோ தெரியல?!

---

அப்றம் இன்னொரு பிரபல பதிவர் சில தலைப்புகளை மெயில்ல அனுப்பினார்.
இப்போ பி.ப. பார்ட் 2

வறுத்த கடலை
தேனீ
வடகறி
சரிகம பதநி
சூடா போண்டா
சுண்டல்
இதுதான் லிஸ்ட். நான் கேட்டேன்,

ஏனாஓனா: ஹா ஹா ஹா... என்னா இதெல்லாம்... ?
பி.ப.2: வானவில்லுக்கு தலைப்பு
ஏனாஓனா: நல்லது, கலவையான ஐட்டமா இருக்கனுமே...இப்படி ஏதாவது சொல்லிட்டே இருங்க.. ஏதாவது சிக்கும்... ம்ம்ம், பாக்கலாம்...
பி.ப.2: கென்டகி சட்னி, மகரந்தம்?
ஏனாஓனா: கெண்டகி? அப்டின்னா?
பி.ப.2: தெரியாது, ஆனா இது ஒரு மிக்ஸ்டு சட்னி
ஏனாஓனா: ஓஹோ... எந்த ஊரு ஐட்டம் இது?
பி.ப.2: நாலு வருடங்களுக்கு முன் 'ஆனந்த விகடன்'ல் பார்த்தது. "கெண்டகி சட்னி" என்ற பெயரில் யூகி சேது எடுக்கப் போவதாக சொல்லி இருந்தார். அவர் சொன்னது தான் அந்த அர்த்தம்.
ஏனாஓனா: ஓஹோ.... விசாரிச்சுப் பாக்குறேன்... நல்ல பேரு, நன்றி

---

அப்புறம் இன்னோரு பிரபல பதிவர் போன்ல வந்தாரு...

பி.ப.3: என்னப்பா பண்ற?
ஏனாஓனா: சும்மா யோசிச்சுட்டு இருக்கேண்ணே, இன்னும் தலைப்பு கிடைக்கல, உங்களுக்கு ஏதாவது கெடச்சுதா?
பி.ப.3: நானா இருந்தா இப்படில்லாம் வைப்பேன், நீ வைக்க மாட்டியே...
ஏனாஓனா: பரவால்ல சொல்லுங்க, அப்படி என்னதான் சொல்றீங்கன்னு பாப்போம்...
பி.ப.3: ஜில்பான்ஸி, கில்மா...
ஏனாஓனா: என்னது கில்மாவா? அப்டின்னா?
பி.ப.3: யாருக்குத் தெரியும்... ஃபிகரையும் கில்மான்னுதான் சொல்றாங்க, சரக்கையும் கில்மான்னுதான் சொல்றாங்க... கில்மாவான ஐட்டம் எல்லாத்தையுமே கில்மான்னுதான சொல்றாங்க...
ஏனாஓனா: அதுசரி. அப்றம் ஜலபுலஜங்ஸ விட்டுட்டீங்களே.
பி.ப.3: சொன்னா மட்டும் வச்சுறப் போறியா?
ஏனாஓனா: இதெல்லாம் நமக்கு சரிவராதுண்ணே. நான் பலது யோசிச்சேன். நவபாசானம் எப்படி இருக்கு?
பி.ப.3: யோவ் அது விஷம்யா.
ஏனாஓனா: அது வேறயா? பல்நவீனத்துவம்?
பி.ப.3: ???? என்னது?
ஏனாஓனா: ச்சும்மா... கேக்க புதுசா நல்லா இருக்குல்ல... இதக் கேளுங்க. ’கலக்கல்’ - ஏதோ டாட் காம்ல எவனோ ஒருவன் எழுதும் கலக்கல் பதிவுகள் - இத தெரியாதவன் கேட்டா குழம்பிப் போயிருவான்ல...
பி.ப.3: ஆமா, இன்னைக்கி எவ்வளவு அடிச்ச?
ஏனாஓனா: அட போங்கண்ணே, இன்னிக்கி நோ சரக்கு.
பி.ப.3: அடிக்காமலேயே இவ்ளவு பேசுறியா? உனக்கு கடைசி வரை தலைப்பே கிடைக்காது பாரு.
ஏனாஓனா: ஙே....

---

அதுக்கப்புறம் பி.ப.4, பி.ப.5... கதையெல்லாம் வேணாம். உங்களை இதுக்கு மேல சோதிக்க விரும்பல. கடைசியா ஒரு பூவைப் பார்த்தப்போ தோனினதுதான் ’தேன்கூடு’. ரொம்ப பொருத்தமா இருந்தது (எப்படிங்கிற மொக்கை அடுத்த பதிவில்). வேற யாராவது இந்த தலைப்புல கலவைப் பதிவு எழுதுறாங்களானு கூகுள்ல தேடிப்பாத்தேன். தேன்கூடுன்னு ஒரு திரட்டி இருந்தது மட்டும் தெரியுது, கலவை யாரும் எழுதுற மாதிரி தெரியல.
உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க, ப்லீஸ்.

---

பெஸ்கியின் டிஸ்கி: பி.ப.1 - ஆதவன், பி.ப.2 - சாம்ராஜ்ய ப்ரியன், பி.ப.3 - கேபிள்ஜி, பி.ப.4 - அடலேறு, பி.ப.5 - நிலாரசிகன், பி.ப.6 - ஜனா. பேரு வைக்க அக்கப்போர் பண்ணின, பண்ண முயற்சி பண்ணின இவங்களுக்கு நன்றிகள்.
அப்றம் முதல் பத்தியில இருக்குறவங்களுக்கும் நன்றிகள்.

-ஏனாஓனா.

Share/Bookmark

23 ஊக்கங்கள்:

வால்பையன் said...

எல்லாருமே கொலைவெறியோடத்தான் அலைவாங்க போலருக்கே!

Romeoboy said...

ஒரு தலைப்பு வைக்கிறதுக்கு இத்தனை நாளா ?? ஓவர்ரா யோசிக்காத சகா சட்டு புட்டுனு எதாவது வை. நீங்க யோசிகுறதுகுள்ள அந்த பேர யாராவது வச்சிட போறாங்க .

☀நான் ஆதவன்☀ said...

ஆகா....பதிவாவே போட்டுட்டயா?
“தேன்கூடு” தான் வைக்க போறேன்னு சொல்லிட்டு அதுக்கு லேட்டாக்குனா நிறைய பேரு இத படிச்சுட்டு வச்சுற போறாங்க.

அந்த தலைப்புல ஒரு பதிவை போடு.

☀நான் ஆதவன்☀ said...

அப்புறம் ஒரு டவுட்டு... அவியல்,கொத்து பரோட்டா, பஞ்சாமிர்தம்னு எல்லாம் ஒரு ஆளாவே வைக்கலாம். ஆனா தேன்கூடுங்கிறது நிறைய பேர் சேர்ந்து உருவாக்கனுமே இராசா? நீ மட்டும் தனியா செய்யமுடியாதே :) லாஜிக் உதைக்குதே.......

(அப்பாடா வந்த வேலை முடிஞ்சுது)

butterfly Surya said...

பேரு வைக்கிறத வெச்சே எத்தனை பதிவு தம்பி...??

சீக்கிரம் முடிவு பண்ணுங்க...

Jana said...

ஆஹா…ஒரு மாதிரி “தேன்கூடு” தயாராகிவிட்டதா? தேன்களை சேமிப்பது பல தேனிக்கள் என்றாலும் ராணித்தேனி ஒன்றுதானே? நீங்கள் அந்த ராணித்தேனியாக இருங்கள். இனி இந்த “தேன்கூடு” தித்திக்கட்டும்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

#@!#@$#@%$#^$%^&$%&

kanagu said...

romba than yoseekireenga... 'thenkoota' kalaikkurathuku munnadi oru padhiva podunga..

/*அப்புறம் ஒரு டவுட்டு... அவியல்,கொத்து பரோட்டா, பஞ்சாமிர்தம்னு எல்லாம் ஒரு ஆளாவே வைக்கலாம். ஆனா தேன்கூடுங்கிறது நிறைய பேர் சேர்ந்து உருவாக்கனுமே இராசா? நீ மட்டும் தனியா செய்யமுடியாதே :) லாஜிக் உதைக்குதே.......*/

athuku than ki.ki anna irukkangala.. :)

ப்ரியமுடன் வசந்த் said...

:)))))

தேன்கூடு நல்ல பேர்

அடலேறு said...

அது யாருப்பா பி.பா அடலேறு.
நல்லாதா குடுக்கறாங்கயா பட்டம்.

பதிவு அருமை நண்பா, ரசிச்சு படித்தேன்
வாழ்த்துக்கள்.”தேன்கூடு” சிறக்க வாழ்த்துக்கள்

ஷங்கி said...

எப்பா!!! பெயர் வைக்கிறதுன்னாலே பிரச்சினைதான் போல....
ஏனா ஓனா என்சிலாடா ஃப்ரூட் சாலட் இல்லை. அது ஒரு மெக்சிகன் உணவு. பலதும் இருக்கும். (சோறு, பயறு, இறைச்சி, சப்பாத்தி மாதிரியான ஐட்டம், இப்படி...)

Cable சங்கர் said...

அலோவ்.. நூறு கோடி போட்டு படமெடுக்கிறவனே கதையை பத்தி யோசிக்கிறாது இல்ல.. நீ பதிவுக்கு பெயர் வைக்க இவ்வளவு குழப்பம்.. விளங்கிரும்.


இன்னொரு பேர் கூட ஞாபகத்துக்கு வருது.. ஆனா சொன்னா வைக்க மாட்டே.. அதான் ஒவரா அடிச்ச்சுட்டு வந்தா.. வருமே அது..//

Beski said...

//வால்பையன் said...
எல்லாருமே கொலைவெறியோடத்தான் அலைவாங்க போலருக்கே!//
பயங்கரம் வால், பேசினாத்தான் தெரியுது...

//Romeoboy said...
ஒரு தலைப்பு வைக்கிறதுக்கு இத்தனை நாளா ?? ஓவர்ரா யோசிக்காத சகா சட்டு புட்டுனு எதாவது வை. நீங்க யோசிகுறதுகுள்ள அந்த பேர யாராவது வச்சிட போறாங்க .//
ரைட்டு சகா.

ஆதவா,
அதான் சொல்லிட்டோம்ல, இதுக்கு அப்புறம் வச்சா செல்லாது செல்லாது.
என்னது லாஜிக் உதைக்கிதா, நாங்கள்லாம் ஒன்மேன் ஆர்மி தெரியும்ல... அர்த்தம் சொல்றேன்னு இன்னொரு மொக்கை போடுறேன் பாரு.

Beski said...

//butterfly Surya said...
பேரு வைக்கிறத வெச்சே எத்தனை பதிவு தம்பி...??
சீக்கிரம் முடிவு பண்ணுங்க...//
இன்னும் ஒரு பதிவு போட்டுக்கிறேனே அண்ணே.

நன்றி ஜனா.
ஆதவா, இதையும் நோட் பண்ணிக்க.

//குறை ஒன்றும் இல்லை !!! said...
#@!#@$#@%$#^$%^&$%&//
ராஜ்,
இப்பவும் பாராட்ட வார்த்தைகள் கிடைக்கலையா?

Beski said...

நன்றி கனகு.
ஆதவா, இங்கயும் நோட்....

நன்றி வசந்த்.

நன்றி அடலேறு.

நன்றி ஷங்கி.
யாராவது இந்த பேர நோட் பண்ணிக்கோங்கப்பா...

Beski said...

கேபிள்ஜி,
சந்து கேப்புல ஒரு மேட்டர வுட்டுட்டுப் போறீயளே!
//அதான் ஒவரா அடிச்ச்சுட்டு வந்தா.. வருமே அது..//
அந்தப் பேரும் உள்ள வந்திருக்கு, கவனிக்கலையா?

மணிஜி said...

சரக்கடிக்க கூப்டியே..பேரு வைக்க ஏன்யா கூப்பிடலை?

Beski said...

//தண்டோரா ...... said...
சரக்கடிக்க கூப்டியே..பேரு வைக்க ஏன்யா கூப்பிடலை?//

அன்னைக்கு சரக்கடிக்கும்போது கூட சொன்னதா ஞாபகம்... :)

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

இந்த பேராவது நிலைக்குமா???

கிரி said...

ஒரே குஷ்டமப்பா!

Beski said...

//கிறுக்கல் கிறுக்கன் said...
இந்த பேராவது நிலைக்குமா???//
நிலைக்குமென்று நினைக்கிறேன், இதுவரை தடைகளில்லை.
உங்களுக்கு ஏதாவது சிக்கியதா?

// கிரி said...
ஒரே குஷ்டமப்பா!//
இந்த டைட்டில் கூட நல்லா இருக்கு கிரி அண்ணே.

Nathanjagk said...

செம ஜாலி மாப்ள!
ஜக்கிளிங் ஜானின்னு (Juggling Johny)வச்சுக்கோங்க!
டாஸ்மாக்-ன்னு ​வைங்க; ஏன்னா அங்கதான் நிறைய மிக்ஸிங் நடங்குது!

Beski said...

ஜெ மாம்ஸ்,
என்னது ஜான்னி....?

சரி சரி.. பேரு வச்சாச்சு...