வேட்டைக்காரன் பாடல்கள்

கடந்த வெள்ளிக்கிழமை, சிவகாசி செல்லும் பஸ். ஏதோ பாட்டு மெல்லிய இசையில் ஓடிக்கொண்டிருந்தது (அது வேட்டைக்காரன் பாட்டுன்னு நினைச்சீங்கன்னா தப்பு, அதான் மெல்லிசான்னு சொல்றேன்ல). நாம வழக்கம்போல ஜன்னல் வெளியே வேடிக்கை (அந்த இருட்டுக்குள்ள என்ன பாத்தன்னு கேக்கப்பிடாது, போற வர்ற வாகனங்களைப் பாத்துட்டு இருந்தேன்). சைடுல ஒருத்தர் திட்டுறது கேட்டது...

‘பிச்சக்காரப்பய, போடுறதுக்கு வேற பாட்டே கிடைக்கலயா இவனுக்கு?’
(இப்பவும் வேட்டைக்காரன் பாட்டுன்னு நினைக்க வேணாம்)

என்னடான்னு பாட்டக் கேட்டேன், கட்டிப்புடி கட்டிப்புடிடால
ஜிங்கு ஜிக்ச்சா... ஜிக்கு ஜக்க ஜிக்கு ஜக்க...
ஓடிட்டு இருந்தது. இதுக்கு எதுக்கு கோவப்படுறான்னு யோசிச்சுக்கிட்டே கேட்டுட்டு இருந்தேன்.அடுத்த பாட்டு,
மீண்டும் மீண்டும் வா, வேண்டும் வேண்டும் வா....’
நல்லாத்தான் இருந்தது. அடுத்து,
’ராத்திரி நேரத்துப் பூஜையில்... ஜஞ்ஜக்கு ஜஞ்ஜக்கு ஜஞ்ஜக்கு ஜஞ்ஜக்கு....’
’ராக்கோழி கூவயில... ஹ்ஹா ஹ்ஹா ஹா...’

இப்படியே போய்கிட்டு இருந்தது (என்ன கேக்க வர்றீங்க...? ஆமா, பாக்கியராஜ் பாட்டுக்களும் வந்துச்சு). கொஞ்ச நேரத்துக்கு மேல நம்மளாலயும் கேக்க முடியல (எப்படித்தான் இப்படியே செலக்ட் பண்ணி வச்சிருக்காங்கன்னு தெரியல). அப்படியே மொபைல்ல பாட்டு கேக்கலாம்னு எடுத்தேன், தம்பியோட மொபைல், போன வாரம்தான் என்கிட்ட குடுத்தான். உள்ள ஆதவனும், வேட்டைக்காரனும் மட்டும் இருந்தது. ஆதவன் ரொம்ப தடவ கேட்டுட்டதால, வேட்டைக்காரனைக் கேட்டுத்தான் பாப்போமேன்னு கேட்டேன். நல்லா இருந்துச்சோ இல்லையோ, நல்லா நேரம்போச்சு...

1)
குஸ்து ஆலமாக்கி மிஸ்மாத்தா சூமிக்காஸா ஸூ (உண்மையிலேயே இப்படித்தான் ஆரம்பிச்சது)
ஏலேலம்மோ..... (டம்க்கு டக்கு டம்க்கு டக்கு... )
என் உச்சி மண்டேல சுர்ருங்குதே
உன்ன நா பாக்கேல கிர்ருங்குதே
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குதே
ட்டர்ருங்குதே....

கைதொடும் தூரம் காச்ச வட
சக்கரையால செஞ்ச வட
என் பசி தீக்க வந்தவளே (உண்மையிலேயே வடன்னு சொல்றாங்களா இல்ல வளேன்னு சொல்றாங்களான்னு தெரியல, 10 தடவ கேட்டுட்டேன்)
சுந்தரி...யே....

தாவணி தாண்டி பாத்தவனே (நல்ல வேளை, கவிஞர் தூக்கின்னு எழுதல)
கண்ணால என்ன சாச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே
தந்திர..னே...

இப்படியே டமுக்கு டப்பா டமுக்கு டப்பானு நல்லா உள்ள வாங்கி சைடுல வுட்டு பின்னாடி வெளிய எடுத்து, குத்து குத்துன்னு குத்தியிருக்காங்க. டான்சுக்குன்னே போட்ட பாட்டா இருக்கும்.

இதுல வர்ற குத்து ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்கு, என்ன பாட்டுன்னுதான் ஞாபகத்துக்கே வர மாட்டேங்குது.

2)
லமன்க்க்கிட்டுது லாமுமச்சா
என்ன ரஸ்ஸப்பானில ரஸ்மியத்தான்
பிரேன்னு சீக்குல ஷோமியல்லவ்
நன நானன்ன நானன்ன நானன..... அத்தானே அத்தானே.....
(சத்தியமா இதுவும் இப்படித்தான் ஆரம்பிச்சது...)
ஆ: கரிகாலன் காலப்போல கருத்துருக்குது கொழலு
பெ: கொழலில்ல கொழலில்ல தாஜுமஹால் நெழலு
ஆ: சேவலோட கொண்டப்போல செவந்திருக்குது உதடு
பெ: உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு...

ஹீரோ ஏதாவது சொல்ல, ஹீரோயின் அது இல்ல இதுன்னு கடைசி வரை சொல்லிட்டே இருக்காங்க. நல்லா இருக்கு. கிராமத்து இசை, தவில விட்டு தட்டிருக்காங்க, ட்க்ர்ர்ர், வ்ர்ர்ர்ர்ர்ர்யூம், ச்சல் ச்சல் சத்தமெல்லாம் கேட்டுட்டே இருக்கு. பாட்டக் கேக்கும்போது, அப்படியே கிராமத்து வயல்வெளியும், பேக்குரவுண்டுல சேல கட்டுன பொம்பளங்களும், வேட்டி கட்டின ஆம்பளங்களும் ஆடுறது, அப்றம் வைக்கோல், ஆடு, மாடு, கெழவி எல்லாம்  மனசுல அப்படியே ஓடுச்சு.

3)
லைட்டா மீசிக் ஸ்டார்ட் ஆகுது, கூடவே...ஹேய்....  ஹோய்... சத்தம்.
ஆரம்பிக்கும்போதே தெரிஞ்சு போச்சு, இதான்  இண்ட்ரோ சாங்கா இருக்கும்.

நா அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதிப்பாரு வீடு போயி
சேர மாட்ட...
(கன்பார்ம்)... அப்படியே போச்சு, இடையில ஒரு சிங்கம் வேற கொட்டாவி வுடுற சவுண்டு, லெப்டுல இருந்து ரைட்டுக்கு பாயுது...
.
.
.
வாழு வாழு, வாழ விடு
வாழும்போதே, வானைத் தொடு
வம்பு பண்ணா, வாளை எடு
வணங்கி நின்னா, தோளக் கொடு.
(அட நல்லாத்தான் இருக்கு)

கடைசியில ஒரு சின்ன பையன் வாய்ஸும் வருது. சின்னப் பசங்க படம்னு சொல்ல வாய்ப்பிருக்கு.

குத்துங்கடா குத்து
எங்கூட சேந்து குத்து....(நல்ல குத்துதான்)

4)
ஸ்ஸ்ஸூம்
க்கிய்யா (அப்டின்னு ஒரு வாய்ஸ், அப்றம் ஒரு மீசிக்..)
காலகீ மூவிய இப் ஹாமச் யூஹாவ்
காஸ் பெண்டியா போ கிம்மீய மாமு
வங்குபாரு ஜஸ் லுக்கிமீ ஸ்னீக்கர்ஸ்
மா கிரிடிட் கார்ட் ஹேவ் ரீல்லி கூல் ஃபீச்சர்ஸ்
(மறுபடியுமா...? திரும்ப ஒரு குத்து குத்தப் போறாங்களோன்னே கேட்டேன்)
ஒரு சின்னத் தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே...
(அடங்... மெலோடியா? ஏனோ தெரியல, இது கேக்கும்போது ’இருபது கோடி நிலவுகள் கூடி’ பாட்டு ஞாபகத்துக்கு வருது)
இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே...

நல்லாத்தான் எழுதியிருக்காங்க. காதல் பாட்டுன்னாலே வரிகள்லாம் சும்மா செதுக்கி வச்சிடுறாங்க. கண்டிப்பா காதலர்கள் கொஞ்ச நாளைக்கு இதத்தான் முனுமுனுப்பாங்க.

5)
ஸம்பரபர ஸிப்பட்டே ஸித்திஸ் ஸலபல கண்டா
லிம்ம ஸொப்பன ஸிந்தா ஹம்சா ஆலல கண்டா
ஹிப்பி ஸாலல கும்பா கப்பி ஸாலல கட்டே
ஓம் ஷாந்தி ஷாந்தி கீ...
(உண்மையிலேயே முடியல)

டன் டகெட டண்டண்டே டன் டகுட டன்
டன் டகெட டண்டண்டே டன் டகுட டன் (அய்யய்யோ இன்னொரு இண்ட்ரோவா)

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்கிது இடி இடிக்கிது
கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டக்காரன் வர்றதப் பாத்து
 (இதாவது பரவாயில்ல)


கொல நடுங்குது கொல நடுங்குது
துடி துடிக்கிது துடி துடிக்கிது
நெல கொலையிது நெல கொலையிது
வேட்டக்காரன் வர்றதப் பாத்து
(இதக் கேட்டவொடனேதான் சிரிப்பு வந்துட்டு, படம் நல்லா இல்லன்னா இந்த பாராவ மட்டும் எடுத்த்டு விமர்சனமா போட்டுறலாம், இதோட விட்டாங்களா..)


நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வர்றாம்பாரு வேட்டக்காரன்.
(இப்படி எடுத்துக்குடுத்துட்டே இருந்தா எப்டிங்னா?)


(நடுவுல ஒரு சாம்பில்)
போடு அடியப் போடு
போடு அடியப் போடு
ஆ: டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கருனா
கோரஸ்: டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கருனா
(போதுமா, இதுவும் செம குத்துதான். இளைய தளபதி எப்பல்லாம் நடக்குறாரோ இது பின்னாடி பாடும்னு எதிர்பாக்கலாம்)

---

ஒரு இண்ட்ரோ, ஒரு பிஜிஎம், ஒரு மெலோடி, ஒரு வில்லேஜ் அப்றம் ஒன்னு டான்ஸ்க்கு. பாட்டுக்களே செம மசாலாவா இருக்கு. கேக்கலாம்.

-ஏனாஓனா
(ஆதி அண்ணன் மன்னிக்கவும், பேரு சீக்கிரம் மாத்திடுறேன்)

Share/Bookmark

21 ஊக்கங்கள்:

ஜெட்லி... said...

நல்ல நக்கல் விமர்சனம் நண்பா...

ஜெட்லி... said...

சேம் ப்ளட்

Jana said...

விசேட செய்தி ஒன்று: வேட்டைக்காரன் பாடல்களை வேட்டையாடியுள்ளார் ஒவனோ ஒருவன்.

வால்பையன் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா!

ஏன்யா நைட்டு நேரத்துல இப்படி ரவுசு பண்றிங்க!

அகல்விளக்கு said...

நல்லாருக்குன்றீங்களா..
இல்ல இல்லன்றீங்களா..

ரகளலயப்பாத்தா முதல்ல சொன்னதுதாம்போல..

ப்ரியமுடன் வசந்த் said...

யோவ்..

Romeoboy said...

கார்க்கி கிட்ட நல்ல வங்கி கட்டிக போற பாரு சகா ..

இதுக்கே இப்படினா ஜகன் மோகினி பாட்டு கேட்டு என்ன பண்ணப்போறியோ

Cable சங்கர் said...

ஏற்கனவே அவனுங்க பாட்டை ரிலிஸ் பண்ணிட்டு ப்ண்ற அழும்பு தாங்கல இதுல் நீ வேறயா..?

☀நான் ஆதவன்☀ said...

யோவ் குசும்பு அதிகம் தான் உனக்கு. வர வர தமிழ் பாட்டுல அர்த்தம் எல்லாம் கண்டுபிடிக்கிற :)

சரி உன் siteஐ அட்ரஸ் பார்ல அடிக்கும் போது ‘ஏ’ன்னு வருது. அழகா தான் இருக்கு ஆனா ஏதோ ஏடாகூடமான சைட்டோன்னு யாராவது நினைச்சிர போறாங்க :)

Beski said...

நன்றி ஜெட்லி,
சேம் பிலட்.

நன்றி ஜனா,
நாம் வேட்டையாட விலையாடவே இவர்கள் படமெல்லாம் வருகிறதுபோல் இருக்கிறது.


வால்,
நான் பாட்டு கேட்டது கூட நைட்டுதான்...

அகல்விளக்கு,
நல்லா ஜாலியா இருக்கும்போது கேக்கலாம். யூத்துக்களுக்கும், குழந்தைகளுக்கும் கண்டிப்பா புடிக்கும். நான் கேட்டப்போ புடிச்சிருந்தது.

Beski said...

வசந்த்,
நல்லாத்தாம்ப்பா இருக்கு... ஜாலியா.

ரோமியோ,
அப்படி என்ன நான் தப்பா சொல்லிட்டேன். நல்லா இருக்குனுதான சொல்லிருக்கேன் (என்ன, கொஞ்சம் எக்ஸ்ட்ரா எழுதிருக்கேன்), இதுவும் ஒரு வகையில விளம்பரம்தான...
அப்றம் ஜகன்மோகினி கேக்கெனும்னு இது வரை நினைக்கல, நீங்கதான் ஞாபகப்படுத்திட்டீங்க...

கேபிள்ஜி,
இதுக்கே இப்டி நொந்துகிட்டா எப்புடி? இன்னும் படம் ரிலீஸ் ஆகனும், பேட்டி பாக்கனும்...

Beski said...

ஆதவா,
எங்கய்யா அர்த்தம் புரியுது... நாலு பாட்டு எப்படி ஆரம்பிக்குதுன்னு சொல்லிருக்கேன்ல, அதுக்கு அர்த்தம் சொல்லு பாக்கலாம்...

அப்றம், அந்த ஏ மேட்டர்... அது லோகோப்பா... தப்பா நினைக்கக் கூடாது.
அது எப்படி மாத்துறதுங்கிறத இன்னொரு பதிவுல சொல்றேன்.

இவன் said...

முதல் பாட்டு அதுதாங்க ”என் உச்சி” அது வந்து அப்படியே ”ஏரோபிலேன் பறக்குது பார் மேலே” அந்த பாட்டு மாதிரியே இருக்கும்....

இவன் said...

"நா அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதிப்பாரு வீடு போயி
சேர மாட்ட..."

சரியா பாருங்க அது ”நானடிச்சா” அதை ”நான் அடிச்சா” என்னு அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது ”அது நான் நடிச்சா” என்னு அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும்

kanagu said...

/*நா அடிச்சா தாங்க மாட்ட

நாலு மாசம் தூங்க மாட்ட

மோதிப்பாரு வீடு போயி

சேர மாட்ட...

(கன்பார்ம்)...*/

ha ha ha...

pattellam ore terror than.... theatre kulla pogave rasigargal ellam bayapaduranga...

ellam en kita escape aayidu nu solranga.... ;)

மணிஜி said...

/கடைசியில ஒரு சின்ன பையன் வாய்ஸும் வருது. //

அது விஜய் பையன் குரல்(இருக்கலாம்)

Beski said...

இவன்,
ஏரோப்பிலேன், உம்மா உம்மம்மா... இதெல்லாம் ஒரே அடிதான். ஆனால் இந்தப் பாடல்போலவே சரியாக இன்னொரு பாட்டில் அடி இருக்கிறது...

//”அது நான் நடிச்சா”//
நா சரியா கேக்கல, கவிஞரோட உள்குத்தா இருக்குமோ?


கனகு,
பார்ப்போம், கேபிள்ஜி எதுக்கு இருக்காங்க... பாத்து சொன்னதுக்கு அப்றம் போறதா வேண்டாமான்னு முடிவு பண்ணிக்கலாம்.

தண்டோரா அண்ணே,
இருக்கலாம்.
ஆனா உங்க குரல் மாதிரி வராதுல... :)

Bhuvanesh said...

ஹி ஹி.. விஜய் கிட்டைவும் விஜய் அன்டனி கிட்டவும் வேற என்ன எதிர்பாக்கறாங்க?? எல்லோரோட எதிர்பார்ப்பையும் பூர்த்தி செஞ்சிருக்கு போல?? எதுக்கும் இன்னைக்கு டவுன்லோட் செஞ்சு கேட்டுபாக்கறேன்.

Bhuvanesh said...

ஹி ஹி.. விஜய் கிட்டைவும் விஜய் அன்டனி கிட்டவும் வேற என்ன எதிர்பாக்கறாங்க?? எல்லோரோட எதிர்பார்ப்பையும் பூர்த்தி செஞ்சிருக்கு போல?? எதுக்கும் இன்னைக்கு டவுன்லோட் செஞ்சு கேட்டுபாக்கறேன்.

Marimuthu Murugan said...

கலக்கலான விமர்சனம்...
கலக்கலான விளக்கம்...//சரியா பாருங்க அது ”நானடிச்சா” அதை ”நான் அடிச்சா” என்னு அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது ”அது நான் நடிச்சா” என்னு அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும்- இவன் //

Beski said...

நன்றி முத்து,
இப்படி முத்து முத்தான பதிவுகளை எப்படித்தான் தேடிப்பிடித்துப் படிக்கிறீங்களோ?!