Gmailல் Multiple Signature

Gmailல் Multiple Signature சாத்தியமா?

இந்த மாதிரி கேள்வி உங்களுக்கும் இருக்கா? Gmail ல் ஒன்றுக்கும் மேற்பட்ட இமெயில் ஐடிகளை கனெக்ட் பண்ணி வைச்சிருக்கீங்களா? அப்போ மேல (கீழ) படிங்க.

ஒன்றுக்கும் மேற்பட்ட Email id களை Gmail ல் பிணைத்து வைக்கும் வசதி இருப்பது ஏற்கனவே தெரிந்த்தே. நான் 5 Email id களை வைத்திருக்கிறேன். Gmail Inbox லேயே எல்லாம் வந்து கொட்டிவிடும். Send பண்ணுவதும் இங்கிருந்தே தேவைப்படும் ஐ.டி. களின் மூலம் அனுப்பி விடலாம். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை நேற்று வரைக்கும்.

ஐந்து Email மூலம் அனுப்பும் வசதி இருந்தாலும், Signature ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. Personal, Official, Blog சம்பந்தமான எல்லா மெயிலுக்கும் ஒரே Signature தானா? என்ன கொடுமை கிரி அண்ணே இது? ஒவ்வொரு தடவையும் அந்த Signature ஐ மாற்றி மாற்றி அடித்து அனுப்பவேண்டுமா? ஹ்ம்... நேற்று இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கனுமேன்னு தேடினேன் இணையத்தில்.

முதலில் Google Labs ல் ஏதேனும் வழி இருக்கிறதா எனப் பார்த்தேன். இல்லை. சீக்கிரம் வர வாய்ப்பிருக்கிறது. Google ல் தேடினேன். Firefox ல் சில Addons சேர்த்து, Multiple Signature உபயோகிக்கும் முறைகள் சில கிடைத்தன. அவற்றில் திருப்தி இல்லை. நமது சிஸ்டத்தில் இதை செய்து உபயோகித்துக்கொள்ளலாம். வெளியே எங்காவது சென்று இந்த வசதியை உபயோகிக்க முடியாதல்லவா? மீண்டும் வேறு வழிகளைத் தேடினேன்.

இறுதியாகச் சிக்கிய வழிமுறைதான் இது. Gmail ல் Multiple Signature இல்லை. ஆனால், Canned Responses ஐ இந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். Canned Responses என்பது Google Labs ன் ஒரு வசதி. இதன் மூலம் சில Ready made Message களை சேமித்து வைத்து, தேவைப்படும்போது அனுப்பிக்கொள்ளலாம் (I m busy now, will call u later என்பது போன்ற). இதை எப்படி Multiple Signature ஆகப் பயன்படுத்தலாம் எனபது பற்றி பார்க்கலாம்.

முதலில் Gmail Settings -> General சென்று Signature வசதியை நீக்கி விடவும் (ஏற்கனவே உபயோகித்தால்).



பின், Gmail ல் இருக்கும் Google Lab சென்று Canned Responses வசதியை உயிர்ப்பிக்கவும்.



இப்போது Gmail Restart ஆகும்.
Compose Mail பண்ணவும்.
இப்போது, தேவையான signature ஒன்றை அடிக்கவும்.
(உதாரணத்திற்கு,
அன்புடன்,
பெஸ்கி.
http://www.yetho.com)
அடித்துவிட்டு Canned Responses சென்று Save பண்ணவும்.
இப்போது இதற்கு ஒரு பெயர் கொடுக்கவும். (இங்குள்ள உதாரணத்திற்கு, BLOG எனக் கொள்ளலாம்)



பின்பு இதேபோல் எத்தனை வேண்டுமோ அத்தனை signature களையும் தனித்தனியே save செய்து கொள்ளவும். இதை பின்பு delete மற்றும் edit செய்துகொள்ளவும் முடியும்.

வழக்கம்போல மெயில் அனுப்பும்போது compose வந்தவுடன், முதலில் Canned Responses க்ளிக் செய்து தேவையான signature ஐ தேர்வு செய்து, பின் மற்றதை டைப்பவும். அல்லது. எந்த இடத்தில் வேண்டுமோ அங்கே cursor ஐ வைத்து insert செய்துகொள்ளலாம்.



இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட signature கிடைத்துவிட்டது.
Gmail ல் ஒன்றுக்கும் மேற்பட்ட Email id வைத்திருப்பவர்கள் கருத்துக்களைக் கூறவும்.

---

-ஏனாஓனா.

Share/Bookmark

17 ஊக்கங்கள்:

அகல்விளக்கு said...

சத்தியமா நான் மட்டும் கமிட்டில இருந்தா நோபல் பரிசு உங்களுக்குத்தான்

என்ன ஒரு கண்டுபிடிப்பு!

ரொம்ப நாளா முயற்சி பண்ணிட்டு இருக்கிறதா எளிமையாக்குனதுக்கு நன்றி.

நானும் முயற்சி பண்றேன்.

அகல்விளக்கு said...

அய்யய்யோ

first comment போட கூடாதுன்னு சங்கத்துல சொன்னாங்களே!!!

அவசரப்பட்டுட்டமோ.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

Beski said...

அய்யய்யோ அகல்...

எவனோ ஒருவன் இங்கிலிபீசுல கொடுத்ததத்தான் இங்க நான் தமிழ்ல கொடுத்துருக்கேன். கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க. இருந்தாலும், ’வருங்கால ஜனாதிபதி வாழ்க’ ரேஞ்சுக்கு கூவியதால் உங்களுக்கு பரிசு உண்டு.

முயற்சி பண்ணி பாருங்க, ரொம்ப நல்லா இருக்கு.

Beski said...

என்னது,
ஃபர்ஸ்ட் கமண்டு போடக்கூடாதா? யார் அப்படி சொன்னது?

நம்ம சங்கத்துல அப்படியெல்லாம் கிடையாது.

Jana said...

வாவ்...!! மிக மிக பிரயோசனமான அருமையான தகவல்கள் நண்பரே..
இந்த விடயங்களுக்காக உங்களிடம் கொஞ்சம் கிளாஸ் எடுக்கணும்.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல தகவல் தான் :)


//first comment போட கூடாதுன்னு சங்கத்துல சொன்னாங்களே!!!
//

அது என்னய்யா புது சங்கம்?

குறை ஒன்றும் இல்லை !!! said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!

அகல்விளக்கு said...

பர்ஸ்ட் கமெண்ட் போட்டா நமக்கு பின்னாடி வர்றவங்க கும்மிட்றாங்கப்பா அதுதான்.

இப்பக்கூட மாட்டிட்டன்னு நினைக்கிறேன்.

வால்பையன் said...

யூஸ்புல் மேட்டர் தல!

Beski said...

நன்றி ஜனா.
நன்றி ஆதவா.
நன்றி ராஜ். தீபாவளி வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு, அதெல்லாம் ’பிரபல’ இடங்களில் இருக்கலாம். இங்கெல்லாம் எப்போ பின்னூட்டம் போட்டாலும் கும்முவதற்கு வாய்ப்புண்டு.

நன்றி வால்.

kanagu said...

nalla thagaval anna... :) pagirvirku nandri... :)

deepavali nalvazthukkal ungalukku :)

ஷங்கி said...

உள்ளேன் ஐயா! உபயோகிக்கிறவங்களுக்கு உதவட்டும்.

ஷங்கி said...

தீபாவளி வாழ்த்துகள்

Beski said...

நன்றி கனகு.
நன்றி ஷங்கி. தீபாவளி வாழ்த்துக்கள், அனைவருக்கும்.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

சீக்கிரமா கூகுள்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்

கிரி said...

// என்ன கொடுமை கிரி அண்ணே இது? ஒவ்வொரு தடவையும் அந்த Signature ஐ மாற்றி மாற்றி அடித்து அனுப்பவேண்டுமா?//

நான் நண்பர்களுக்கு அனுப்புவதில் மட்டும் தான் இதை பயன்படுத்துவேன்.. மற்றவற்றிக்கு இதை சேர்க்க மாட்டேன்

Beski said...

கிகி,
இதுக்கெல்லாமா வேலை கிடைக்கும்?

நன்றி கிரி அண்ணே.
ஓஹோ, ஒரே ஒரு சிக்னேச்சர் மட்டும் உங்களுக்குப் போதுமானதாய் இருக்கிறதா? தேவைப்படும்போது உபயோகித்துப் பாருங்கள்.