தூக்கம் உன் கண்களை...

ஒரு நாள் இரவு, வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வெகு நேரம் பேசிய பின்பு, ”காலையில் எழுதிருக்கனும், நா தூங்குறேன்”, என்றார். சரி என்று கணினியிடம் திரும்பினேன். இரண்டு பின்னூட்டங்கள் படித்திருப்பேன், திரும்பிப் பார்த்தால் நண்பர் ஆழ்ந்த உறக்கத்தில். கொடுத்துவைத்தவர். இப்படித்தான் சிலபேர். நினைத்தவுடன் தூங்கிவிடுவர். நமது கதையோ வேறு. இரவு 12 மணிக்குமேல் தூங்கலாமென முடிவெடுத்தபின், படுக்கையில் ஒரு அரை மணி நேரம் புரண்டபின்தான் தூக்கம் வரும். அதுவும் நல்ல காற்று வீச வேண்டும். வெளிச்சம் இருக்கக் கூடாது, போன்ற நிபந்தனைகளுடன்.

காற்று என்றவுடன்தான் ஞாபகத்துக்கு வருகிறது. சிலருக்கு மின்விசிறி இல்லாமல் தூக்கமே வராது. காற்றுதான் காரணம் என்று நினைக்க வேண்டாம். அந்த மின்விசிறியில் காற்றே வராது. கொர கொர என்று சத்தம்தான் வரும். அந்த சத்தம் நின்றுவிட்டால் உடனே விழித்துவிடுவார்கள். எனது நண்பன் சுரேஷ் நான்கு பேருடன் ஒரு வீட்டில் வசித்துவந்தான். இரவு வெகு நேரம் கழித்துதான் வீட்டிற்கு வருவான். வந்து பார்த்தால் மின்விசிறி உள்ள அறையில் மற்ற நால்வரும் படுத்துவிடுவர். அவன் மின்விசிறியில்லாத அடுத்த அறையில்தான் படுக்கவேண்டும். ஆனால் காலை மட்டும் இந்த அறைக்குள் நீட்டியிருப்பான், காற்றுக்காகவாம். எப்போதாவது மின்விசிறியை அனைத்தால் போதும், உடனே எழுந்து போடச்சொல்வான். ”ஏண்டா, அங்கதான் காத்தே வராதே, அப்புறம் எதுக்கு ஃபேன்”, என்று கேட்டால், பதில் சொல்லத்தெரியாது. மின்விசிறி ஓடினால்தான் தூக்கம் வருமென்பது அவனது நினைப்பு.

சிலருக்கு போர்த்தினால்தான் தூக்கம் வரும், குளிர்காலத்தில் மட்டுமல்ல. கொளுத்தும் வெயில்காலத்தில் கூட சிலர் போர்த்திக்கொண்டு தூங்குவதைப் பார்த்திருக்கிறேன். குளிர் காலத்தில் மின்விசிறியையும் போட்டு நடுக்கத்துடன் போர்த்திக்கொண்டு தூங்குவர் சிலர். மின்விசிறியை அனைத்தால் தூக்கம் வராது. சிலருக்கோ மல்லாந்து படுத்தால்தான் தூக்கம் வரும், சிலருக்கு வலதுபுறம் சரிந்து, சிலருக்கு இடதுபுறம்.

சிலருக்கு கட்டிலில் படுத்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கு தலையணை இல்லாமல் தூக்கம் வராது. சிலருக்கு வெளிச்சம் இல்லாமல் இருந்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கு சப்தம் ஏதும் இருந்தால் தூக்கம் வராது. சிலருக்கு குறிப்பிட்ட சபதம் கேட்டால்தான் தூக்கம் வரும், சிலருக்கு குறிப்பிட்ட சப்தங்கள் மட்டும் தொந்தரவைக் கொடுக்கும். உதாரணத்திற்கு, குறட்டை சத்தம் கேட்டால் ஒன்றும் தொந்தரவில்லை. அதே நபருக்கு சுவற்றில் மாட்டியிருக்கும் நாட்காட்டி (அல்லது ஏதாவது தாள்) உரசும் சப்தம் கேட்டால் தூக்கம் வராது. சிலருக்கு தூங்குவதற்கு முன் ஒரு சிகரெட் குடித்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கோ தண்ணி. சிலருக்கு வேறு வகை போதை.

இன்னும் சில வித்தியாசமான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அவனுக்கு பக்கத்தில் இருப்பவர் மேல் கால் போட்டால்தான் தூக்கம் வரும். பயந்த சுபாவம் உள்ளவனென்று நினைக்கிறேன். பக்கத்தில் யாரேனும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இன்னோருவன், சின்ன வயதில் பக்கத்தில் இருப்பவரின் காதைப் பிடித்துக்கொண்டுதான் தூங்குவானாம். பல தடவைகள் இப்படி அம்மாவின் காதைப் பிடித்து கம்மலை கழட்டிவிட்டிருக்கிறான். இதேபோல சின்ன வயதில் சிலர் கை சூப்பிக்கொண்டுதான் தூங்குவர். விரலை எடுத்தால் போதும் டபக்கென்று விழித்துக்கொள்வர். எப்படித்தான் தூங்கும்போது தெரியுமோ தெரியவில்லை. இன்னோரு நண்பன் காலை(மட்டும்தான்) ஆட்டிக்கொண்டேதான் தூங்குவானாம்.

இதில் பொதுவான சில விசயங்களும் இருக்கின்றன. புதிய இடத்தில் தூக்கம் சரியாக வராது. பேருந்து பிரயானத்தில் சன்னலோரம் இருந்தால் தூக்கம் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. அதிக உடல்வலியுடன், தூக்கமே இல்லாது இருக்கும்போது தூங்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த சூழ்நிலையிலும் தூக்கம் அமோகமாக வரும்.

அதிலும் கல்யாணம் ஆன சிலரிடம் கேட்டேன். ஒருத்தருக்கு மனைவியை வயிற்றோடு கட்டிப்பிடித்தால்தான் தூக்கம் வருமாம். இன்னொருத்தருக்கு மார்போடு அனைத்துத் தூங்கும் பழக்கமாம். இன்னொருவர் காலை தூக்கிப் போட்டுக்கொண்டுதான் படுப்பாராம். ஒன்று மட்டும் உறுதி, கல்யாணமானவர்கள் மனைவியைக் கட்டிப் பிடித்துக்கொண்டுதான் தூங்குகிறார்கள். :)

-அதி பிரதாபன்.

Share/Bookmark

33 ஊக்கங்கள்:

கார்த்திகைப் பாண்டியன் said...

எவ்ளோ பெரிய ஆராய்ச்சி.. அருமை.. குறிப்பா அந்தக் கடைசி வரிகள் ரொம்பப் பிடிச்சிருக்கு நண்பா.. ஹி ஹி ஹி..

☀நான் ஆதவன்☀ said...

சிலருக்கு குப்புற படுத்தாதான் தூக்கும் வரும் :)

வேலை இருக்கு வேலை இருக்குன்னு எவ்வளவு ஆராய்ச்சி பண்ற!

சென்ஷி said...

:-)

நல்ல ஆராய்ச்சி நண்பரே!

க.பாலாசி said...

//தூக்கமே இல்லாது இருக்கும்போது தூங்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த சூழ்நிலையிலும் தூக்கம் அமோகமாக வரும்.//

ம்ம்ம்..சரிதான்...

//ஒன்று மட்டும் உறுதி, கல்யாணமானவர்கள் மனைவியைக் கட்டிப் பிடித்துக்கொண்டுதான் தூங்குகிறார்கள். :)//

ஓடிபோயிட்டா என்ன பண்றதுங்கறதால கூட இருக்கலாம்.

Marimuthu Murugan said...

//குளிர் காலத்தில் மின்விசிறியையும் போட்டு நடுக்கத்துடன் போர்த்திக்கொண்டு தூங்குவர் சிலர்//

சரியாச் சொன்னீங்க போங்க...
பதிவு அருமை...

Raju said...

தெய்வம்ம்ம்மே..உங்க காலக் குடுங்க தெய்வம்ம்ம்ம்ம்மே...!













நான் கால் போட மாட்டேன்.

Raju said...

\\இரண்டு பின்னூட்டங்கள் படித்திருப்பேன், திரும்பிப் பார்த்தால் நண்பர் ஆழ்ந்த உறக்கத்தில். \\

"நோ"வோட பின்னூட்டம் படிச்சீங்களா..?
இல்ல உண்மைத்தமிழனோடதா...?

Ashok D said...

:)

கலையரசன் said...

நல்லவேளை யாரோட மனைவியை?-ன்னு யாரும் கேக்கல பாஸ்..!

அடலேறு said...

ஆராய்ச்சி மாணவர் :-)

Romeoboy said...

\\கல்யாணமானவர்கள் மனைவியைக் கட்டிப் பிடித்துக்கொண்டுதான் தூங்குகிறார்கள். :)//

கல்யாணம் பண்ணி பரு சகா அப்பறம் தெரியும் ஏன் என்று .

Beski said...

நன்றி கார்த்திகைப் பாண்டியன்,
//குறிப்பா அந்தக் கடைசி வரிகள் ரொம்பப் பிடிச்சிருக்கு நண்பா.. ஹி ஹி ஹி..//
சீக்கிரம் அமைய வாழ்த்துக்கள்.

நன்றி ஆதவா,
//சிலருக்கு குப்புற படுத்தாதான் தூக்கும் வரும் :)//
ஓஹோ... புரிஞ்சது, அதப் பத்தி சொல்ல வேணாம்னு நினைச்சேன்...

//வேலை இருக்கு வேலை இருக்குன்னு எவ்வளவு ஆராய்ச்சி பண்ற!//
யோவ், ஒரு வாரத்துக்கு அப்றம் இப்பத்தான் ஒரு பதிவு போட்டுருக்கேன், கண்ணு வைக்காத.

நன்றி சென்ஷி.

Beski said...

நன்றி பாலாசி,
//ஓடிபோயிட்டா என்ன பண்றதுங்கறதால கூட இருக்கலாம்.//
கேட்டுருவோம்.

நன்றி மாரி முத்து.

நன்றி ராஜூ,
கால் போட்டாக்கூட நமக்கு ஓக்கே, ஆனா கால் போட்டா ஆவாது.

//"நோ"வோட பின்னூட்டம் படிச்சீங்களா..?
இல்ல உண்மைத்தமிழனோடதா...?//
இல்ல, ஜெகாவோடது.


நன்றி டாக்டர்(இன் ஆல் சப்ஜக்ட்டு) அசோக்.

Beski said...

நன்றி கலையரசன்,
//நல்லவேளை யாரோட மனைவியை?-ன்னு யாரும் கேக்கல பாஸ்..!//
அடப்பாவிகளா, இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்குதோ.... எங்க யூத்து?

நன்றி அடலேறு.

நன்றி ரோமியோ,
//கல்யாணம் பண்ணி பரு சகா அப்பறம் தெரியும் ஏன் என்று .//
நீங்க சொன்னதுக்கும் கலை சொன்னதுக்கும் ஏதும் தொடர்பு இல்லையே?

Cable சங்கர் said...

oru ராத்திரி நீயே கால் மாற்றி போட்டு கிடுக்கி கொண்டதை பற்றி எழுதவில்லையே..

புலவன் புலிகேசி said...

//லருக்கு மின்விசிறி இல்லாமல் தூக்கமே வராது. காற்றுதான் காரணம் என்று நினைக்க வேண்டாம். அந்த மின்விசிறியில் காற்றே வராது. கொர கொர என்று சத்தம்தான் வரும். அந்த சத்தம் நின்றுவிட்டால் உடனே விழித்துவிடுவார்கள்.//

நானும் இந்த குரூப்பு தேன்...நல்ல ஆராய்ச்சி.

அத்திரி said...

ரொம்ப ஆராய்ச்சி பண்ணி உடம்பை கெடுத்துக்காதே

ப்ரியமுடன் வசந்த் said...

அதி பிரதாபன் பிஹெச்டி இன் ....?

ரொம்ப உதவியா இருக்கும் போல உங்கள் ஆராய்ச்சி பலருக்கு..!

:))))))))))

க ரா said...
This comment has been removed by the author.
க ரா said...

எனக்கு அந்த மின்விசிறி சத்தம் எனது அம்மாவின் தாலாட்டை போல...

CS. Mohan Kumar said...

//அதிலும் கல்யாணம் ஆன சிலரிடம் கேட்டேன். ஒருத்தருக்கு மனைவியை வயிற்றோடு கட்டிப்பிடித்தால்தான் தூக்கம் வருமாம். இன்னொருத்தருக்கு மார்போடு அனைத்துத் தூங்கும் பழக்கமாம். இன்னொருவர் காலை தூக்கிப் போட்டுக்கொண்டுதான் படுப்பாராம். ஒன்று மட்டும் உறுதி, கல்யாணமானவர்கள் மனைவியைக் கட்டிப் பிடித்துக்கொண்டுதான் தூங்குகிறார்கள். :)//

அதெல்லாம் ஆரம்பத்தில் தான்..

ஒன்னு புரியுது. அதி பிரதாபனுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சு. அப்பா நம்பர் குடுங்க. போன் பண்ணி பேசனும்

CS. Mohan Kumar said...

//"நோ"வோட பின்னூட்டம் படிச்சீங்களா..?
இல்ல உண்மைத்தமிழனோடதா...?//

Ha ha ha ...

ராஜு செம பார்மில் இருக்காருப்பா

CS. Mohan Kumar said...

//வேலை இருக்கு வேலை இருக்குன்னு எவ்வளவு ஆராய்ச்சி பண்ற!//

ஆதவன்... ரைட்டு!! போன் பண்ணா கூட அதி பிரதாபன் எடுக்கிறது கிடையாது. என்னமா ஆராய்ச்சி மட்டும் (ஒரு வாரமா) பண்றார் பாருங்க!!

Beski said...

நன்றி கேபில்ஜி,
//oru ராத்திரி நீயே கால் மாற்றி போட்டு கிடுக்கி கொண்டதை பற்றி எழுதவில்லையே..//
எழுதினா முடிச்சவிக்கின்னு சொல்லிட மாட்டாங்களா?

நன்றி புலவன் புலிகேசி.

நன்றி அத்திரி,
//ரொம்ப ஆராய்ச்சி பண்ணி உடம்பை கெடுத்துக்காதே//
அதான் நீங்க இருக்கீங்களே, சரவணபவன்ல சாப்பாடு வாங்கி குடுக்க.

Beski said...

நன்றி வசந்த்,
//ரொம்ப உதவியா இருக்கும் போல உங்கள் ஆராய்ச்சி பலருக்கு..!//
எதச் சொல்றீங்க? ஓ, அதையா? ரைட்டு.


நன்றி ராமசாமி கண்ணன்,
//எனக்கு அந்த மின்விசிறி சத்தம் எனது அம்மாவின் தாலாட்டை போல...//
ஒரு படி மேலயே சொல்லிட்டீங்க.

நன்றி மோகன்குமார்,
//அதெல்லாம் ஆரம்பத்தில் தான்..//
இது வேறயா?

//ஒன்னு புரியுது. அதி பிரதாபனுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சு. அப்பா நம்பர் குடுங்க. போன் பண்ணி பேசனும்//
உடனே இன்னோரு முடிச்சப் போடுறீங்களே!

//ராஜு செம பார்மில் இருக்காருப்பா//
நானும் கவனிச்சேன், சில இடங்களில்...

//போன் பண்ணா கூட அதி பிரதாபன் எடுக்கிறது கிடையாது. என்னமா ஆராய்ச்சி மட்டும் (ஒரு வாரமா) பண்றார் பாருங்க!!//
என் நெலம கேலியாப் போயிடுச்சுல்ல.... பிடிங்க சாபம், அடுத்த ஒரு வாரத்துக்கு ஆபீஸ்ல வேலை வந்து குவிவதாக... ஆதவனுக்கும்தான்.

Ashok D said...

//ராத்திரி நீயே கால் மாற்றி போட்டு கிடுக்கி கொண்டதை பற்றி எழுதவில்லையே//

இதான் கேபிள் பஞ்சு..
ஆனா சம்பவம் நடந்தது அவருக்கு

Jana said...

கடைசிவரியில் தாங்கள் தனிக்கட்டை என்பது பளிச் என்று புரிகின்றது. கல்யாணம் ஆகும்வரை அனைவருக்கும் கற்பனைகள் அப்படித்தான் இருக்கும், இந்தது. சித்தர்கள் சொன்னதெல்லாம் உண்மை என்பது பின்னர்தானே புரிகின்றது..

CS. Mohan Kumar said...

உங்களுக்கு ஒரு விருது அறிவிசிருக்கேன். நல்ல பிள்ளையா என் ப்ளாக் வந்து வாங்கிட்டு போங்க

ஷங்கி said...

அது எப்பிடிவே கல்யாணமானவங்களைப் பத்தி ஒரு முடிவுரை எழுதிருக்கீரு?! நீரு அதி பிரதாபன்தாம்வே!

Beski said...

நன்றி அசோக்,
//இதான் கேபிள் பஞ்சு..
ஆனா சம்பவம் நடந்தது அவருக்கு//
நானாவது லேசுல எடுத்துருவேன், அவரு பாடு கஷ்டமாச்சே...

நன்றி ஜனா,
//கல்யாணம் ஆகும்வரை அனைவருக்கும் கற்பனைகள் அப்படித்தான் இருக்கும், இந்தது.//
சில கல்யாணமானவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டது அப்படித்தான். எனக்கு ஆசை இருப்பதில் ஆச்சர்யமில்லையே...

விருதுக்கு நன்றி மோகன்குமார்.

நன்றி ஷங்கி,
//அது எப்பிடிவே கல்யாணமானவங்களைப் பத்தி ஒரு முடிவுரை எழுதிருக்கீரு?! //
பல பேரு சொல்றதப் பாத்தா அது உண்மைதான் போலருக்கு. ஜனா மட்டும்தான் விதிவிலக்கு, இங்கே.

Nathanjagk said...

ஆமாமா, தழுவுது தழுவுது!
​ரொம்ப கண்ணு முழிச்சி ஆராச்சி பண்ணாதீங்க மாப்ள!

//பக்கத்தில் இருப்பவர் மேல் கால் போட்டால்தான் தூக்கம் வரும். பயந்த சுபாவம் உள்ளவனென்று நினைக்கிறேன்//
நீங்க ​ரொம்ப நல்லவரு!!!

அன்புடன் நான் said...

கட்டுரை மிக தெளிவா இருக்குங்க.... படிப்பதற்கும் இயல்பா ரசனையோடு இருக்குங்க பாராட்டுக்கள்.

Beski said...

நன்றி ஜெ மாம்ஸ்.

நன்றி கருணாகரசு.