எனக்கு வந்த கு.த.சே.கள் - 8

1)
மகன்: அப்பா, சின்ன வீடுன்னா என்னப்பா?
அப்பா: ஏம்ப்பா?
மகன்: சும்மா தெரிஞ்சு வச்சுக்கலாம்னுதாம்ப்பா.
அப்பா: தெரியாம வச்சுக்கிறதுதாம்ப்பா சின்ன வீடு.

2)
நோயாளி: சார், இது உங்களுக்கே ஓவரா தெரியல?
டாக்டர்: என்ன?
நோயாளி: ஊசி எனக்குப் போட்டுட்டு நர்ஸ் பின்னாடி தடவுறீங்க?

3)
ஆடி அதிரடித் தள்ளுபடி.
3 sms அனுப்பினால் ஒரு sms திருப்பி அனுப்பப்படும்.
5 smsக்கு மேல் அனுப்பும் அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு பிச்சர் மெசேஜ் ஃப்ரீ.
மேலும்,
கால் செய்து ’ஹாய்’ சொல்லுங்கள், ஒரு மிஸ்டு காலை இலவசமாக அள்ளுங்கள்.
முந்துங்கள், இவை அனைத்தும் பேலன்ஸ் உள்ளவரை மட்டுமே...

4)
சர்தார்: ச்ச... வர வர செல் கம்பெனி சரியில்ல...
நண்பர்: ஏன்?
சர்தார்: என் மனைவிக்கு கால் பண்ணினேன், “நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் வேறு ஒருவரோடு தொடர்பு வைத்துள்ளார்”னு சொல்லுது.

5)
நா ஒரு மிகப்பெரிய ”மெசேஜ் ரவுடி”னு காட்டத்தான் வாண்ட்டடா இந்த மெசேஜ அனுப்புறேன். சினம் கொண்ட சிங்கத்தோட மெசேஜ டெலிட் பண்ணா அது செல்லயே செதச்சிடும் பரவால்லியா? இவ்வளவு பேசுறவன் கால் பண்ணலயேனு கேக்குறீங்களா? “டவர் ஸ்ட்ராங்கு, ஆனா பேலன்ஸ் கொஞ்சம் வீக்கு”. நெக்ஸ்டு மெசேஜ்ல மீட் பண்றேன்.

6)
டீக்கும் காபிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
.
.
.
.
டீல ஒரு ஈ இருக்கும் (TEA),
காபில ரெண்டு ஈ இருக்கும் (COFFEE).

அதனால, பாத்து குடிங்க.

7)
செய் அல்லது செத்து மடி.
- நேதாஜி
படி அல்லது படுத்துத் தூங்கு.
- (யார் சொன்னா என்ன? நல்லாருக்குல்ல?)

8)
முள் இருக்கும் பாதையில் சென்றால்
கால்கள்தான் புண்ணாகும்
பெண் இருக்கும் பாதையில் சென்றால்
வாழ்க்கையே மண்ணாகும்.

9)
உயிர் இல்லாத மலரைக் கூட நேசிக்கிறோம்
ஆனால்
நமக்காக உயிரையே கொடுப்பவர்களை மட்டும் நேசிக்க ஏன் யோசிக்கிறோம்?

ஆதலால் நேசிப்போம்
.
.
.
.
.
.
சிக்கன், மட்டன், ஃபிஸ் எல்லாத்தையும்.

10)
உலக sms வரலாற்றில்
முதன் முறையாக

இன்பாக்ஸ்க்கு வந்து
சில நிமிடங்களே ஆன

புத்தம் புதிய
மெஹா ஹிட் sms

.
.
.
.
.
.
.
.
.
ஏதாவது இருந்தா அனுப்புங்க...

Share/Bookmark

27 ஊக்கங்கள்:

Anonymous said...

ரூம் போட்டு யோசிச்சு sms அனுப்புவாய்ங்களோ?

முடியலய்யா.. முடியல.. !!! :)

Anonymous said...

ரூம் போட்டு யோசிச்சு sms அனுப்புவாய்ங்களோ?

முடியலய்யா.. முடியல.. !!! :)

அன்புடன்,
எழில். ரா

jothi said...

//உலக sms வரலாற்றில்
முதன் முறையாக

இன்பாக்ஸ்க்கு வந்து
சில நிமிடங்களே ஆன

புத்தம் புதிய
மெஹா ஹிட் sms//

எப்படி அது,.. நான் வந்தது தெரியாமல் ரெண்டு நாள் கழித்து பார்த்தால்,..

jothi said...

நீங்களா யோசித்ததா?? அட்டகாசமான கற்பனை,.. அடிக்கடி இது மாதிரி கடிங்க

Nathanjagk said...

கு.த.​சே..... சூ! அ!

goma said...

எல்லாமே சூப்பர் அக்மார்க் கடிங்க...
நல்லா கடிக்கிறீங்க...கடிங்க் கடிங்க கடிச்சுட்டே இருங்க...கடிப்பார் கடித்தால் கல்லும் சிரிக்கும்

எப்படி என் பாராட்டுக் கடிகள்?கடிச்சிருக்கா சாரி சாரி பிடிச்சிருக்கா

ப்ரியமுடன் வசந்த் said...

//மகன்: அப்பா, சின்ன வீடுன்னா என்னப்பா?
அப்பா: ஏம்ப்பா?
மகன்: சும்மா தெரிஞ்சு வச்சுக்கலாம்னுதாம்ப்பா.
அப்பா: தெரியாம வச்சுக்கிறதுதாம்ப்பா சின்ன வீடு.//

ரசித்து சிரித்தேன்

Beski said...

//tamizhilezhil.com said...

ரூம் போட்டு யோசிச்சு sms அனுப்புவாய்ங்களோ?

முடியலய்யா.. முடியல.. !!! :)//

அப்படித்தான் நானும் நினைக்கிறேன் மச்சான்.

Beski said...

//jothi said...

//உலக sms வரலாற்றில்
முதன் முறையாக

இன்பாக்ஸ்க்கு வந்து
சில நிமிடங்களே ஆன

புத்தம் புதிய
மெஹா ஹிட் sms//

எப்படி அது,.. நான் வந்தது தெரியாமல் ரெண்டு நாள் கழித்து பார்த்தால்,..//

நிங்க அதை அனுப்ப வேண்டாம் :)

Beski said...

//jothi said...

நீங்களா யோசித்ததா?? அட்டகாசமான கற்பனை,.. அடிக்கடி இது மாதிரி கடிங்க//

எல்லாம் எனக்கு வந்த sms ங்க.

Beski said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...

:)))))))))))))))//

வாங்க ராஜ்... என்ன கவுண்டர் ஏதும் சொல்லலியா?

Beski said...

//ஜெகநாதன் said...

கு.த.​சே..... சூ! அ!//

மாம்ஸ்,
சூப்பர் அப்பு... அதான?

Beski said...

//goma said...

எல்லாமே சூப்பர் அக்மார்க் கடிங்க...
நல்லா கடிக்கிறீங்க...கடிங்க் கடிங்க கடிச்சுட்டே இருங்க...கடிப்பார் கடித்தால் கல்லும் சிரிக்கும்//
நன்றிங்க... கடி கண்டிப்பா தொடரும்...

//எப்படி என் பாராட்டுக் கடிகள்?கடிச்சிருக்கா சாரி சாரி பிடிச்சிருக்கா//
ரொம்ம்ம்ப கடிக்கிறீங்க... பிடிச்சிருக்கு.

Beski said...

//பிரியமுடன்.........வசந்த் said...
ரசித்து சிரித்தேன்//

தேர்ந்தெடுத்து ரசிச்சிருக்கீங்க வசந்த்.. இதெல்லாம் வீட்டுக்கு ஆகாது... :)

☀நான் ஆதவன்☀ said...

ஹி..ஹி எல்லாம் நல்லாயிருக்கு..
எனக்கு ஒன்னு வந்தது.

டைட்டானிக் கப்பல் மூழ்கியது எப்படி?

குபூக்..


லுபக்...


புலுக்..


க்ளுப்...


சதக்...


பொதக்...


பொதக்...



பொதக்...


பச்சக்..

சிரிக்காதீங்க..இது சோகக்கதை :(

ஷங்கி said...

ஹி ஹி!!!
நான் ஆதவன், அது பசுவைப் பற்றிக் கட்டுரை வரைக, ரயிலைப் பற்றிக் கட்டுரை வரைகவின் நீட்சி போலிருக்கே!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்லாயிருக்கு தல...,

Beski said...

//☀நான் ஆதவன்☀ said...

ஹி..ஹி எல்லாம் நல்லாயிருக்கு..//

நன்றி ஆதவன்.

//
எனக்கு ஒன்னு வந்தது.

சிரிக்காதீங்க..இது சோகக்கதை :(
//

:))

Beski said...

//சங்கா said...

ஹி ஹி!!!
//
வாங்க சங்கா ஆண்ணே.

// நான் ஆதவன், அது பசுவைப் பற்றிக் கட்டுரை வரைக, ரயிலைப் பற்றிக் கட்டுரை வரைகவின் நீட்சி போலிருக்கே!//
:)

Beski said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...

நல்லாயிருக்கு தல...,//
வாங்க சுரேஷ் சார்.
முதல் தடவையா இப்பத்தான் வர்றீங்கன்னு நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி.

iniyavan said...

கலக்கறீங்க. ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். இனி தினமூம் வருவேன்.

Beski said...

//என். உலகநாதன் said...

கலக்கறீங்க. ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். இனி தினமூம் வருவேன்.//

நல்லது அண்ணே. வருகைக்கு நன்றி.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

எப்படிடா இதெல்லாம்???

Beski said...

//கிறுக்கல் கிறுக்கன் said...
எப்படிடா இதெல்லாம்???//

வந்துக்கிட்டே இருக்குண்ணே. பயபுள்ளய நிறுத்தாம அனுப்பிக்கிட்டே இருக்கானுவ...

வால்பையன் said...

ஹாஹாஹாஹா

எல்லாமே செம சூப்பர் தல!
ரசித்து சிரித்தேன்!

Beski said...

//வால்பையன் said...
ஹாஹாஹாஹா

எல்லாமே செம சூப்பர் தல!
ரசித்து சிரித்தேன்!//

வாங்க தல... உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் (மப்பு பற்றி எழுதியே மப்பு ஏத்துகிறீர்கள்). வருகைக்கு நன்றி.

Anonymous said...

Harrah's Cherokee Casino & Hotel - MapYRO
Find your way around the casino, https://septcasino.com/review/merit-casino/ find where everything casinosites.one is located with the most up-to-date https://deccasino.com/review/merit-casino/ information งานออนไลน์ about Harrah's Cherokee Casino & Hotel in Cherokee, 출장샵 NC.