எவ்வளவு ஆண்டுகளுக்கு முன் சூரியன் உருவாகியிருக்கும்? பூமி? உயிர்? மனிதன்? நமக்கு முன் தோன்றிய உயிர்களில், இப்போது நம்முடன் இருப்பவற்றுள் பழமையானது எது? முதன் முதலில் தோன்றிய மனிதன் இவ்வுலகில் எங்கு வாழ்ந்திருப்பான்? முதலில் தோன்றியது ஆணா பெண்ணா?
மனிதனில் முதலில் தோன்றியது பெண் என்கிறது விஞ்ஞானம். அப்படியானால் இனப்பெருக்கம்? ஹோமோசேப்பியன் என்றால்? மனிதன் உலகம் முழுவதும் பரவியது ஏன்? கப்பல் இல்லாத அக்காலத்தில் கண்டம் விட்டு கண்டம் எப்படி சாத்தியம்? இமயமலை இருந்த இடத்தில் அதற்கு முன்னால் என்ன இருந்திருக்கும்? இப்பொதிருக்கும் மெரினாவில் முன்பு கடற்கரை இருந்திருக்குமா?
நாடோடியாக அலைந்த மனிதன் ஒரே இடத்தில் தங்க ஆரம்பித்தது ஏன்? சிக்கிமுக்கிக் கல் உபயோகிக்கும் முன், தீ எப்படிக் கிடைத்திருக்கும்? விவசாயம் எப்படி முளைத்திருக்கும்? நாகரிகம் தோன்றியது எப்படி? முதல் சட்டத்தை உருவாக்கியது யார்? ஊழலுக்கு மரணதண்டனை, குறிப்பிட்ட நாட்களுக்குள் திருடனைப் பிடிக்காவிடில் காவலர்களுக்கு வேலை நீக்கம், என்றெல்லாம் இருந்தது ஆச்சர்யம் அல்லவா?
பழமொழிகள் முதன் முதலில் எப்போது உருவானது? முதல் காப்பியம்? அதன் கதை எப்படி இருந்திருக்கும்? கடவுள்கள் எவ்வாறு இருந்திருப்பார்கள்? 100 என்பது முழுமை என்றால், நேரம் 60ன் அடுக்குகளாகவும், டிகிரி 360 எனவும் இருப்பது எப்படி?
இந்தியாவில் நாகரிகம் எப்போது தோன்றியிருக்கும்? அது பாபிலோனிய, எகிப்திய, ஐரோப்பிய நாகரிகங்களுக்கு இணையாக இருந்திருக்குமா?
எகிப்தின் கிடுகிடு வளர்ச்சி எப்போது? அப்போது ஆண்ட மன்னர் யார்? மூட/கடவுள் நம்பிக்கைகள் அதிகம் இருந்த அந்த காலகட்டத்தில் மன்னர் எப்படி சமாளித்திருப்பார்? எகிப்தியர் மம்மி செய்தது ஏன்? எப்படி? முதன் முதலில் பேப்பர் எப்படி வந்தது? 3500 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு ’காக்டெய்ல் பார்டி’ இருந்தது தெரியுமா?
கிரேக்க நாடுகளில் வளர்ச்சி எப்படி இருந்திருக்கும்? பாரசீக - ஏதேன்ஸ் போரின் வரலாறு என்ன? முதன் முதலில் கச்சிதமாக நாணயங்கள் தயாரித்தது யார்? விளையாட்டுப் போட்டிகள் உருவானது எப்படி? ஒலிம்பிக்கை தோற்றுவித்தவர்கள் யார்?
பெரும் வல்லரசான கிரேக்கத்தின் வளர்ச்சிக்குத் தடை போட்டது யார்? முக்கியமான, மிகப் பெரிய போர்களில் ஒன்றான கிரேக்க - பாரசீகப் போரின் பிண்ணனி என்ன? கிரேக்கப் படையை விட நான்கு மடங்கு பெரிதான பாரசீகப் படை வென்றதா?
சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ மேதைகளைத் தந்த ஏதேன்ஸ், மும்பை நகர் அளவுதான். உலகமகா தத்துவ மேதை சாக்ரடீஸைக் கொன்றது ஒரு ஜனநாயக நாடு என்றால் நம்ப முடிகிறதா? அவரது சீடர் பிளேட்டோ மூலமே இன்றைய ’அகடாமி’ என்ற வார்த்தை வந்தது. முதல் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்ததும் அவரே. அவரது சீடர் அரிஸ்டாட்டில். அவரது மாணவரே மாவீரன் அலெக்ஸாண்டர்.
தனிமனித சுதந்திரத்தை கொண்டாடிய நாடு ஏதேன்ஸ் என்றாலும், பெண் சுதந்திரம் கொஞ்சம் கூட கிடையாது என்றால் நம்ப முடிகிறதா? பிள்ளை பெறுவதற்கு மட்டுமே பெண். சுகத்திற்குக் கூட ஆண் நண்பர்களுடந்தான் கலவி என்பதெல்லாம் ஆச்சர்யமான விசயமல்லவா?
அலெக்ஸாண்டர் இறந்த பிறகு இந்தியாவில் தலை தூக்கிய மாபெரும் சாம்ராஜ்யமே மௌரியா சாம்ராஜ்யம். அதன் சக்கரவர்த்தி சந்திரகுப்தனின் மெய்க்காவலர்கள் பெண்கள் என்றால் நம்ப முடிகிறதா? கிரேக்கப் படையையே தோற்கடித்த அவர் எவ்வாறு ஆட்சி செய்திருப்பார்?
சந்திரகுப்தனை உருவாக்கிய அந்த சாணக்கியன் யார் தெரியுமா? சந்திரகுப்தனின் மகன்தான் அசோகர். அசோகர் ஆரம்பத்தில் கொடுங்கோல் மன்னரென்றால் நம்ப முடிகிறதா? அவரின் மனதையே கலிங்கப் போர் மாற்றியதென்றால், அப்போர் எவ்வளவு பெரிதாக, கொடூரமாக இருந்திருக்கும்?
---
உலகம் தோன்றியதற்கு சற்று முன்னால் இருந்து, கிறிஸ்து பிறப்பதற்கு முன் வரை நடந்தவற்றின் ஒரு சிறிய தொகுப்பே, கி.மு. - கி.பி., குமுதத்தில் வெளிவந்த, மதன் அவர்கள் எழுதிய தொடர் புத்தகமாக. பள்ளி நாட்களில் வரலாறு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால், இப்போது படிக்கும்போது மிகவும் சுவையாக இருப்பது எப்படி என்று தெரியவில்லை. புத்தகத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, ஆச்சர்யப்படவைக்கும், சுவாரஸ்யமான தகவல்கள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன.
வரலாற்றில் எனக்கு ஈடுபாடு இல்லை என ஒதுங்கிக்கொள்ள வேண்டாம். படிக்க ஆரம்பித்தால், முடிக்காமல் கீழே வைக்க மனம் கேட்காது. படித்து முடித்த பின், நாம் இருக்கும் இந்த உலகம் இவ்வளவு பாதைகளைக் கடந்து வந்ததா என சிந்தனையைத் தூண்டுகிறது, நம் முன்னோர்களின் வாழ்வை அசைபோட்ட ஒரு திருப்தியைக் கொடுக்கிறது.
கிமு கிபி
-ஏனாஓனா.
18 ஊக்கங்கள்:
me too,..
The book given by mathan is very good,.
கண்டிப்பாக படிக்க முயற்சி செய்கிறேன்.
தங்களின் சிந்தனை பகிர்தலுக்கு எனது நன்றிகள்.
கண்டிப்பா படிக்கிறேன் ஊருக்கு வந்து...........
நீ இவ்வளவு ரெக்மண்ட் பண்ணினதுக்கு அப்புறம் படிக்கலைன்னா எப்படி. இங்கு வரும் நண்பரை வாங்க சொல்லிடுறேன்.
வருகைக்கு நன்றி ஜோதி.
//பாலாஜி said...
கண்டிப்பாக படிக்க முயற்சி செய்கிறேன்.
தங்களின் சிந்தனை பகிர்தலுக்கு எனது நன்றிகள்.//
வருகைக்கு நன்றி பாலாஜி.
//பிரியமுடன்.........வசந்த் said...
கண்டிப்பா படிக்கிறேன் ஊருக்கு வந்து...........//
வருகைக்கு நன்றி வசந்த்.
//☀நான் ஆதவன்☀ said...
நீ இவ்வளவு ரெக்மண்ட் பண்ணினதுக்கு அப்புறம் படிக்கலைன்னா எப்படி. இங்கு வரும் நண்பரை வாங்க சொல்லிடுறேன்.//
வருகைக்கு நன்றி ஆதவன்.
கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.
என்னமோ போங்க.. ஒண்ணும் சொல்ரதுக்கு இல்ல!!!
//குறை ஒன்றும் இல்லை !!! said...
என்னமோ போங்க.. ஒண்ணும் சொல்ரதுக்கு இல்ல!!!//
வாங்க ராஜ்,
ஒன்னும் சொல்லலைனாலும் பரவால்ல... படிச்சுப் பாருங்க.
வாஸ்கோ ட காமா, அமெரிக்க வெஸ்புகி, கலீலியோ, கொலம்பஸ் மற்றும் ஏனாஓனா! இந்த பதிவப் படித்ததும் என் மனதிலும் கேள்விகள் அலைமோதுகின்றன. ஏன் மாப்ள இப்படி? எதனால? எங்கிருந்து? எந்த ஊருல? யாரால? எப்பயிருந்து? மாப்ள இந்த மாதிரி ஆயிட்டாருன்னு!
...... இருந்தும் ஒரு நல்ல புத்தக அறிமுகம் கொடுத்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள் அய்யா!
//ஜெகநாதன் said...
ஏன் மாப்ள இப்படி? எதனால? எங்கிருந்து? எந்த ஊருல? யாரால? எப்பயிருந்து? மாப்ள இந்த மாதிரி ஆயிட்டாருன்னு!//
அது ஒன்னுமில்ல ஜெ மாம்ஸே, மொதல்ல போட்டிக்கு ஒரு கதை எழுதினேனா... அதப் பாத்துட்டு ஒருத்தர் கருத்து சொன்னாரு. அதுல நெறைய புக்கு படிச்சா நல்லா எழுதலாம்னு சொன்னரா... நமக்கு பத்திக்கிச்சு. சரின்னு பக்கத்துல இருக்குற கிழக்குப் பதிப்பகம் போயி ஒரு 5 புக்க வாங்கிட்டு வந்துட்டேன்... 3 படிச்சாச்சு. அதுல இது கொஞ்சம் சூப்பரு. மத்ததப் பத்தி விமர்சனங்கள் அப்புறம் வரும்.
//இருந்தும் ஒரு நல்ல புத்தக அறிமுகம் கொடுத்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள் அய்யா!//
உண்மைடிலேயே நல்ல புத்தகம்தான்... படிச்சுப் பாருங்க.
Enakku Putichirukku....
//Chitrasekar said...
Enakku Putichirukku....//
எதுங்க? புத்தகமா, இல்ல இந்த விமர்சனமா?
வருகைக்கு நன்றி.
மதனின் எழுத்துக்கள் என்றுமே நன்று..!!
அன்புடன்,
எழில். ரா
வருகைக்கு நன்றி மச்சான்.
இந்த புத்ததகம் நான் ஏற்கனவே படித்திருக்கிறேன் என நினைக்கிறேன்.
//என். உலகநாதன் said...
இந்த புத்ததகம் நான் ஏற்கனவே படித்திருக்கிறேன் என நினைக்கிறேன்.//
நல்லது.
வருகைக்கு நன்றி.
தம்பி எனக்கும் ஒரு கிமு கிபி வாங்கி வாயேன்
//கிறுக்கல் கிறுக்கன் said...
தம்பி எனக்கும் ஒரு கிமு கிபி வாங்கி வாயேன்//
உஙகளுக்கு இல்லாததா?
Post a Comment