ஈஃபெல் கோபுரத்தின் உருவாக்கம் அன்றும், இன்றும்






தற்போதைய தோற்றம்
நீங்கள் இங்கே பார்க்கும் ஈஃபிள் கோபுரத்தைப்பற்றி ஏற்கனவே நிறைய தெரிந்து வைத்திருப்பீர்கள். இருப்பினும் எனக்குத்தெரிந்த சில விஷயங்களையும்,இதன் உருவாக்கத்தின் போது எடுத்த சில அரிய புகைப்படங்களையும்., உங்களுடன் பகிர்கிறேன்.

பொறியாளர் (Gustave Eiffel) கஸ்ற்றேவ் ஈஃபிள் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, ஃப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில்(Seine)ஸெயின் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த உலோக கோபுரம்.உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோபுரம் இதன் பொறியாளரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் அதுவும் நம் தமிழ் நாட்டில் நமது வரிப்பணத்தில் ஒரு பேருந்து நிலையம் கட்டப்பட்டால், அது யாருடைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதோ அவரால் கட்டப்பட்டது என அறிவிக்கும் ஒரு சிமெண்ட் பலகை சுமார் 1.5 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும். அதன் பின் ஆட்சி மாறினால் இவரால் புனரமைக்கப்பட்டது என அறிவிக்கும் ஒரு சிமெண்ட் பலகை சுமார் 3 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும். ஒரு வேளை இனி ஆட்சி மாறினால் மீண்டும் புனரமைக்கப்பட்டது என அறிவிக்கும் ஒரு சிமெண்ட் பலகை சுமார் 6 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் . அப்படியில்லாமல் பொறியாளரின் பெயர் பத்திரிகை செய்தியில் வந்தால் அது 8-வது அதிசயம்.சரி சரி அதெல்லாம் நமக்கெதற்கு நாம் ஈஃபிள் கோபுரத்தின் கட்டுமான தகவல்களைக் குறித்து பார்ப்போம்.

1887 தொடக்கம் 1889 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889,மார்ச் 31 ஆம் தேதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில், உயர்த்திகளைப் (lift)பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.





1888ஏப்ரல்

இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 டன்னுக்கும் கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்டபோது, உலகின் அதிக உயரமான அமைப்பு இதுவேயாகும். இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 டன் கடும் மண்ணிறப் பூச்சு மை(paint) பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சென்டி மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது.

இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடியவகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இராதென்றே கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.

ஆரம்பத்தில், இக் கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈஃபெல் அநுமதி பெற்றிருந்தார், எனினும், தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்கதாக இது இருந்ததனால், அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னும், கோபுரம் அங்கே நிற்க அனுமதிக்கப்பட்டது.

(என்ன அநியாயம் இது 20 ஆண்டுகள் என்று சொல்லி 120 ஆண்டுகள் ஒன்றும் ஆகாமல் இருப்பதெல்லாம் கட்டுமானக்கலையா?! நம் டெல்லி மேம்பாலம் போல் கட்டும்போதே இடிந்து வீழ்வது அல்லவா கட்டுமானக்கலை)

ஜனவரி 12, 1908 ல், முதலாவது தொலைதூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது.

1929 ல், கிறிஸ்லெர் கட்டிடம் நியூ யோர்க்கில் கட்டி முடிக்கப்பட்டபோது, ஈபெல் கோபுரம், உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்தது.

அடொல்ப் ஹிட்லர், [[இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பாரிஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் 1792 படிகளையும், ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக, பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர். அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது, யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும், நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது. ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார்.

ஜனவரி 3, 1956 ல் தீயொன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது




1888 டிசம்பர்







1889மேய்


நான் இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போது என் மனைவி பார்த்துக்கொண்டிருந்தாள். அவங்களுக்கு ஈஃபெல் கோபுரத்தைப்பற்றி விளக்கினேன் பின் கூகுள் மேப் ஓப்பன் பண்ணி street view-ல் கோபுரத்தின் அட்டகாசமான கட்டுமானத்தைக் காட்டினேன். பின் இது போல் பிரதிகள்(மாடல்) வேறு இடங்களில் இருப்பதைக் குறித்தும் கூறினேன்.

அதுதான் பிரச்சினை ஆகிவிட்டது. எனக்கு ஒரு பிரதி கோபுரத்தையாவது காட்டித்தாருங்கள் என கேட்கத்தொடங்கினாள். வேறு வழியில்லை என்பதைத்தெரிந்து, உடனே விமானம் எதுவும் கிடைக்காததால் என்னுடைய 2 சக்கர விமானத்தில் புறப்பட்டு கோவை ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள ஈஃபெல் கோபுரத்தைக் கான்பித்தேன்.

அந்த கோபுரம் உங்கள் பார்வைக்கு


அதோடு நின்றுவிடவில்லை “இதமாதிரி ரொம்ப சின்னதா ஒண்ணு நமக்கு வாங்கினால் நல்லாயிருக்கும்” என இழுத்தாள். உடனே நான் ஒண்ணு என்ன 2-டாக கட்டி விடுவோம் எனக்கூறினேன். அப்புறம் சும்மா விடமாட்டங்களே. நச்சரிப்பு தொடர்ந்தது. வேறு வழியில்லாமல் அதற்கான தளவாடங்கள் வாங்கினேன் . மொத்தம் 0.000000001 டன் எடை இருந்த்தது. விலை 0.000000015 மில்லியன் ஆனது ,அதை வைத்து பணிகளை துவங்கினேன்.பணிகளை துவங்கியது 02.09.09 அன்று. அன்றே முடித்துவிட்டேன் தனி ஆளாக.

தளவாடங்கள்
படிப்படியாக

நேர் பார்வையில்

கட்டி முசிந்த பின்

கட்டும்போது மேல் பார்வையில்








என் வேலை முடிந்த பின் என் சகதர்மிணியை அருகில் விட்டு ஒரு போட்டோ எடுத்தேன்

அதன்பின் அவைகளை எடுத்து கையில் 2-ம் உனக்குத்தான் என கொடுத்தபோது
முகத்தில் தெரிந்த புன்சிரிப்பு ஒரு க்ளிக்






---கி.கி

பி.கு:-
இன்னும் சில ஒரிஜினல் படங்களும் சில விஷயங்களும் கைவ்சம் உள்ளன .

உபயம்:-

ஒரிஜினலுக்கு விக்கிப்பீடியா

பிரதிகளுக்கு சுட்டி விகடன்





Share/Bookmark

11 ஊக்கங்கள்:

கிரி said...

அருமைங்க ..உண்மையாவே கலக்கிட்டீங்க.

கோபுரத்தை பற்றி அதிக தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது..நன்றி

நீங்க அமைத்த கோபுரமும் சூப்பர்.... நிஜமாகவே!

உங்கள் அருமையான பதிவிற்கு என் அன்பான வாழ்த்துக்கள்


ஆமா! இந்த பதிவை போய் எதற்கு மொக்கை பிரிவில் சேர்த்து இருக்கீங்க..கிர்ர்ர்ர்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//அருமைங்க ..உண்மையாவே கலக்கிட்டீங்க.

கோபுரத்தை பற்றி அதிக தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது..நன்றி \\

எல்லாம் விக்கிபீடீயாவிலிருந்து சுட்டது.

//நீங்க அமைத்த கோபுரமும் சூப்பர்.... நிஜமாகவே!\\

நிஜமாவா?!!!



//ஆமா! இந்த பதிவை போய் எதற்கு மொக்கை பிரிவில் சேர்த்து இருக்கீங்க..கிர்ர்ர்ர்\\

இல்லலல... நான் உருவாக்கின கோபுரத்தை மொக்கையாக நினைத்தேன்.

Beski said...

அண்ணே,
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. இவ்வளவு நல்லா சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.

☀நான் ஆதவன்☀ said...

//அண்ணே,
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. இவ்வளவு நல்லா சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.//

யோவ் என்ன நக்கலா?

☀நான் ஆதவன்☀ said...

பல தகவல்களை பதிந்ததும் இல்லாமல் இரண்டு கோபுரங்களை உண்டாக்கிய கி.கி அண்ணனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

சூப்பர் கி.கி :)

Beski said...

//☀நான் ஆதவன்☀ said...
யோவ் என்ன நக்கலா?//
அய்யய்யோ... தப்பா நெனைக்காத மச்சி.
இதப் பத்தி அண்ணன் கிட்ட பேசும்போது மொக்கையா போடுற மாதிரிதான் பேசினார், இப்படி செம தகவகல்களுடன் வந்திருப்பதைக் கண்டு அசந்துவிட்டேன். அதான் இதுக்கு அர்த்தம்.

சாந்தி நேசக்கரம் said...

தகவல்களுடன் உங்கள் பகிர்வுக்கு நன்றிகள்.

சாந்தி

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//எவனோ ஒருவன் said...
அண்ணே,
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. இவ்வளவு நல்லா சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.\\

நானும் எதிர்பார்க்கவே இல்லை.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//☀நான் ஆதவன்☀ said...
பல தகவல்களை பதிந்ததும் இல்லாமல் இரண்டு கோபுரங்களை உண்டாக்கிய கி.கி அண்ணனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

சூப்பர் கி.கி :)\\

நக்கல் ஒன்றும் இல்லையே

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

சகோதரி சாந்தியின் வருகைக்கு மிகவும் நன்றி

ஜோதிஜி said...

வருகைக்கு நன்றி நண்பரே. என்னைச் சொல்லி விட்டு உள்ளே வந்தால் ஒரு சுரங்கமே என்னை வரவேற்றது. குறிப்பாக கேரளா? திருப்பூர் போன்ற இடங்களில் இது குறித்தே பத்து பதிவுகள் எழுத முடியும்? மேலும் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு, உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய பழைய பதிவான ஆங்கில மீடியமும் அரை லூஸ் பெற்றோர்களும் (அவஸ்யம் படித்து பின்னூட்டம் இடுக) என்ற பதிவை படித்துப் பாருங்கள். ஏற்றுமதியாளருக்கு அமைந்த வாழ்க்கை எப்படி இருக்கும். கணிணி மூலம் அலைபேசி தொலைபேசி முக்கியத்துவம் குறித்தும், என்னுடைய வாழ்நிலையின் அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். மேலும் தமிழ் ஆங்கிலம் தட்டெழுத்து என்பது இருபது வருடங்களுக்கு முன் ஹைஸ்பீடு என்ற நிலையில் பொழுது போகாமல் கற்றுக்கொண்டது நீங்கள் கேட்கும் அளவிற்கு வளர்த்து உள்ளது. நீங்கள் நாகரிகமாக கேட்ட கேள்வியை நேற்று வந்த பதிவுகளை பின்னூட்டத்தை படித்துப் பாருங்கள். திருப்பூர் நண்பர் சொன்னதை அதில் உள்ள பதிலை. அதன் அர்த்தமே புரிந்து கொள்ளாமல் அவஸ்த்தை பட்டவன் என்றால் என்னைப் பற்றி வேறு என்ன சொல்லமுடியும்? வாழ்த்துக்கள்.

texlords@gmail.com