மீனாட்சி பவன்
சென்ற மாதம், ஒரே இடங்களில் மதிய உணவு சாப்பிட்டு அலுத்துவிட்டது என நண்பன் கூற, கிளம்பினோம் ஒரு தேடலுக்கு. அதில் பிடித்த இடம்தான் இந்த மீனாட்சி பவன்.
மீனாட்சி பவன் - ஜி.என்.செட்டி சாலையில், ஜெமினி மேம்பாலத்திலிருந்து திநகர் செல்லும் வழியில், புதிய மேம்பாலத்திற்கு கீழே இடதுபுறம் இருக்கிறது.
View My Fav Hotels in a larger map
அளவு சாப்பாடு 40 ரூபாய். அளவான சாதம், ஒரு சப்பாத்தி, குருமா, சாம்பார், ரசம், காரக் குழம்பு, தயிர், பாயாசம், இரண்டு கூட்டு, அப்புறம் ஒரு கிழியாத அப்பளம்.
சாப்பாடு ஆஹா, ஓஹோ என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், நல்லாயிருக்கும். பிறகு எது என்னை இங்கே எழுதத் தூண்டியது?
#டோக்கன் முதலிலேயே வாங்கிவிட வேண்டும், அதனால் டிப்ஸ் பத்தி கவலையே வேணாம், அதுவா?
#டிப்ஸ் கிடையாது எனத் தெரிந்தும் நன்றாக கவனித்த சர்வர்களின் கனிவா?
#சுத்தமான, குளிரூட்டப்பட்ட, பெரிய, இடைஞ்சலில்லாத இடமா?
#நாற்றமடிக்காத கைகழுவும் இடமா?
#பெயருக்கேற்றார்போல எங்கும் நிறைந்திருக்கும் பச்சை நிறமா?
#சுவர் முழுக்க அலங்கரிக்கும், மஹாத்மாகாந்தியின் கருப்பு வெள்ளைப் படங்களா?
#வண்டிக்குச் சேதமில்லாமல் விடக் கிடைத்த பைக் பார்க்கிங்கா?
#தமிழிலேயே நிறைந்திருக்கும் (கைகழுவும் இடம், பொட்ட்லம் வாங்கும் இடம், #சுட்டிக்காட்டும் குறைகள் கொட்டிக்கொடுக்கும் பரிசு, தரமான உணவு தாயாரின் கனிவு என்பன போன்ற) பலகைகளா?
என்னவென்று தெரியவில்லை. ஆனால், சென்று வெளியே வரும்போது ஒரு நிம்மதி, திருப்தி இருந்தது. குடும்பத்துடனும், நண்பர்களுடனும், தனியாகவும் சென்று மதிய உணவு சாப்பிட அருமையான இடம் என்பது மட்டும் உறுதி.
---
-ஏனாஓனா.
13 ஊக்கங்கள்:
ஏனா ஓனா, இந்த ஹோட்டல் எப்பத்திலிருந்து இருக்கு. பார்த்த மாதிரி இருக்கு. ஒரு வேளை என் நினைவு தவறாகவும் இருக்கலாம்.
”கிழியாத அப்பளம்” - இதில எதுவும் தகவல் இருக்கா?
சில வேளைகளில் சுவையை விட அமைதியான அனுசரணையான இடம்தான் சுகமானது.
மிஸ்டர் ஏனோ ஓனோ சரியான சாப்பாட்டு ராமன் போல. ஒரே சாப்பாடு பதிவா வருது.
இந்த ஹோட்டல் சாந்தோம் அடுத்து பட்டினபாக்கத்தில கூட இருக்குன்னு நினைக்கிறேன்
எங்க ஆஃபீஸ்கு பின்னால தான் இருக்கு!! அப்புரம் ஒரு விசயம்.. இப்போ எல்லாம் நிறைய சைவ ஹோட்டல்ல முதல்லியே டோக்கன் வாங்கனும்...
//சங்கா said...
ஏனா ஓனா, இந்த ஹோட்டல் எப்பத்திலிருந்து இருக்கு. பார்த்த மாதிரி இருக்கு. ஒரு வேளை என் நினைவு தவறாகவும் இருக்கலாம்.//
ஏற்கனவே ஒன்று மைலாப்பூரில் இருக்கிறது, இது புதிய கிளையாக இருக்குமென நினைக்கிறேன்.
//”கிழியாத அப்பளம்” - இதில எதுவும் தகவல் இருக்கா?//
பல இடங்களில் அப்பளம் பொதுமிப்போய் கிழிக்கும் வண்ணம் இருக்கும். அங்கெல்லாம் வேற குடுங்கன்னு கேக்கவேண்டி இருக்கும், முக்கியமா ஏ.சி. ஹோட்டல்களில். இன்கு அப்படி இல்லை.
//சில வேளைகளில் சுவையை விட அமைதியான அனுசரணையான இடம்தான் சுகமானது.//
அதுதான் இங்கே.
நன்றி சங்கா அண்ணே.
//☀நான் ஆதவன்☀ said...
மிஸ்டர் ஏனோ ஓனோ சரியான சாப்பாட்டு ராமன் போல. ஒரே சாப்பாடு பதிவா வருது.//
நேர்ல பாத்தா அப்படி சொல்ல மாட்ட, பஞ்சத்துல அடிபட்டவன்னுதான் சொல்லுவ.
//இந்த ஹோட்டல் சாந்தோம் அடுத்து பட்டினபாக்கத்தில கூட இருக்குன்னு நினைக்கிறேன்//
அங்கேயும் இருக்கிறது.
நன்றி ஆதவன்.
//குறை ஒன்றும் இல்லை !!! said...
எங்க ஆஃபீஸ்கு பின்னால தான் இருக்கு!! அப்புரம் ஒரு விசயம்.. இப்போ எல்லாம் நிறைய சைவ ஹோட்டல்ல முதல்லியே டோக்கன் வாங்கனும்...//
அதுதான் நல்லதென்று நினைக்கிறேன்.
நன்றி ராஜ்.
அருமை மாப்ள! ஓட்டலை நல்லா வர்ணிச்சு, அனுபவிச்சு எழுதியிருக்கீங்க! எனக்குப் பிடிச்ச ச்சேனல் டிராவல் & லிவ்விங்! நெஜெல்லா செஞ்சு 'காட்டற' ஃபீஸ்ட் முதற்கொண்டு, அமெரிக்கா இன் ரைட்ஸ் வே வரைக்கும் உலகம் முழுதும் இருக்கிற ஹோட்டல், உணவு வகைகளின் அறிமுகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க டிடெக்டிவ் மட்டும்தான்னு நெனச்சேன்; இல்ல.. நீங்க செலக்டிவ், செடக்டிவ், டைஜஸ்டிவ்வும் கூட!! சாப்பிட்டுட்டு கைகழுவிட்டு போற உலகத்தில.. சாப்பிட்ட சாப்பாட்டையும் (ஐ மீன் சாப்பிடறதுக்கு மின்னாடி) ஹோட்டலையும் ஃபோட்டோ எடுத்துக்கிட்டு வந்து இடுகையும் எழுதியறீயளே.. மாப்ள அங்கதான் நீங்க நிக்கறீங்க! நின்னு ஜெயிக்கறீங்க! இப்படி மேப், ஓட்டல் போட்டோ என்று அசத்தியிருக்கீங்களே!! பாராட்டுக்கள்!
சீக்கிரமே மீனாட்சி ஓட்டலில் உங்களுக்கு ஒரு சிலை.. அட்லீஸ்ட் ஒரு போட்டோ.. அல்லது குறைஞ்சது ஒரு ஃப்ரீயா ஒரு ஃபுல் மீல்ஸ்.. அதுவும் இல்லீன்னா கிழிஞ்ச அப்பளமாவது கிடைக்கும்! கிடைக்கணும்! Jokes apart... நிச்சயம் இது ஒரு நல்ல பதிவு!
இது போன்று நீங்கள் பல ஊர்கள், ஓட்டல்கள் என்று சென்று இவைகளை ஆவணப்படுத்தி ஒரு தரமான புத்தகமாக (with photos) வெளியிடணும். கண்டிப்பா பப்ளிஷர்ஸ் கிடைப்பாங்க! அப்ப நீங்க அந்த புத்தகத்துக்கு எழுதற முன்னுரையில...... இந்த மாம்ஸை பத்தி ஒரே ஒரு வரி எழுதினீங்கனா...போதும் மாப்பு! நான் நெஜெல்லா கையால ஒரு கேக் சாப்பிட்ட திருப்தி அடைவேன்!! புத்தகத்துக்கு விளக்கவுரை, அறமுகவுரை இதுக்கெல்லாம் எங்க அண்ணன் சங்கா இருக்காரு!!
நன்றி ஜெ மாம்ஸ்,
முதல் கமண்டு ஓக்கே...
ரெண்டாவது கமண்டுல ஏன் இப்படி கொல வெறி, இது ஏதோ திருப்திக்காக இஷ்டத்துக்கு எழுதுறது.
எனக்கு மீனாட்சி பவன் பெரிதாய் கவரவில்லை. எ.ஒ
கேபிள் சங்கர்
நன்றி கேபிள் அண்ணே.
எனக்கும் சுவை அவ்வளவாகக் கவரவில்லை.
-
சாப்பாடு தொடர்பான மற்ற பதிவுகளை, நேரம் கிடக்கும்போது பார்க்கவும்.
http://www.yetho.com/search/label/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
கேபிள் அண்ணே,
தங்களுக்கு ஏற்கனவே எனது மொபைல் எண்ணை மின்னஞ்சல் செய்துள்ளேன். sankara4@gmail.com இதுதானே தங்களுடையது?
neenga oru partner pola
Post a Comment