கூகுள் தகவல்கள்
கூகுள் க்ரோம் புதிய வசதிகளுடன் அருமையாக உள்ளது. வெற்றுப் பக்கத்தில், ஏற்கனவே திறந்த பக்கங்களின் சிறிய படங்கள் ஏற்கனவே தெரிந்ததல்லவா... இப்போது அவற்றை அருமையாக கையாளும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கூகுள் க்ரோமில் தீம்கள் இருப்பது ஏற்கனவே தெரிந்ததே. இப்போது பிரபல ஆர்ட்டிஸ்ட்டுகள் உருவாக்கிய 95 தீம்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கே சென்று மாற்றிக்கொள்ளலாம். இதில் ஒரு கவனிக்கவேண்டிய விசயம் - தீம் மாறும்போது க்ரோமை ரீஸ்டார்ட் செய்யவேண்டிய அவசியம் இல்லை.
பாதுகாப்பான பாஸ்வேர்டு வைத்துக்கொள்வது பற்றிய அருமையான வழிமுறைகளை இங்கே காணலாம் - கூகுள் டீமிலிருந்து.
---
சென்ற வார பதிவர் சந்திப்பு
படத்தில்: ஜனா, அவருடைய நண்பர் சீலன், அடலேறு, நிலாரசிகன்.
படம் எடுத்துக்கொண்டிருப்பது: ஏனாஓனா.
இடம்: பாலவாக்கம் கடற்கரை.
நம்மைத் தவிர மற்றவர் அனைவருமே இலக்கிய சிந்தனையாளர்கள் என்பதால், பேச்சு இலக்கியம் பற்றியே அதிகம் இருந்தது (கதை, கவிதை, ஹைக்கூ, எழுத்தாளர்கள் இப்படியே...). நமக்கு அந்த அளவுக்கு அறிவு பத்தாததால் வெறும் கவனிப்பு மட்டுமே. இடையிடையே வெகுஜன கலப்பும் இருந்தது, நாம் பேசியதால்.
பாலவாக்கம் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் சொல்லுங்கள், அடுத்த முறை கூடும்போது தகவல் சொல்கிறேன்.
---
இந்த வார பதிவர் சந்திப்பு
பதிவர் வலைமனை சுகுமார் திருமணம் நேற்று இனிதே நடந்தது. பதிவர்கள் சிலர் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தோம்.
படத்தில்: அகநாழிகை பொன்.வாசுதேவன், கேபிள் சங்கர், முரளி கண்ணன், வண்ணத்துப்பூச்சி சூர்யா.
படம் எடுத்துக்கொண்டிருப்பது: (வழக்கம்போல)ஏனாஓனா.
இடம்: வில்லிவாக்கம், பாபா நகர் திருமண மண்டபம் ஒன்றில்.
இந்த பாபா நகர் தேடிக் கண்டுபிடித்ததே ஒரு பெரிய கதையாக எழுதலாம். ‘பாபாவைத் தேடி ஒரு பயணம்’ என்று தலைப்பு போட்டால் ஹிட்டு கண்டிப்பாக கூடும் என்று வண்ணத்துப்பூச்சியார் சொன்னது கூடுதல் சுவாரஸ்யம்.
இது ஒரு காதல் திருமணம். பல போராட்டங்களுக்கிடையே காதலியைக் கைப்பிடித்த சுகுமாருக்கு வாழ்த்துக்கள்.
மொய்யாக 4 பின்னூட்டம் எழுதி கவரில் வைத்துக் கொடுத்துவிடலாம் என்றார் முரளி கண்ணன், நான் ஒரு பதிவே போட்டு விடுகிறேன் என்றேன் (ஐய்யா, செலவு மிச்சம்).
படத்தை மீண்டும் பாருங்கள், நால்வரும் சீனியாரிட்டிப்படி வரிசையில் இருப்பதுபோல் தெரிகிறதா? (இடப் பக்கம் இருப்பவர்கள் மன்னிக்கவும்)
---
ஒரு SMS
நேத்து ஒரு கல்யாண வீட்டுக்குப் போனேன்.
ஜோடின்னா ஜோடி அப்படி ஒரு ஜோடிய என் வாழ்க்கையில பாத்ததே இல்ல.
அப்படி ஒரு அழகு.
அப்புறம் என்ன,
கால்ல மாட்டிட்டு வந்துட்டேன்.
---
கடைசியா ஒரு சொந்த சரக்கு
பொண்ணு கிடைத்தாலும்
புதன் கிடைக்காதாம்
கிடைத்தது என்னவோ
புதன்கள் மட்டுமே.
---
-ஏனாஓனா.
26 ஊக்கங்கள்:
ஆஹா...தேன்கூடு தித்திக்க தொடங்கிவிட்டது வாழ்த்துக்கள்.
பாலவாக்கம் கடற்கரை சந்திப்பு அற்புதமானதொரு அனுபவம்.
என்னைப்போல் ஒருவன்.பெஸ்கி
ரைட்டு தொடங்கியாச்சா...
ஆரம்பத்திலேயே பதிவர்கள் பற்றிய இனிப்பான விஷயம் நிறையவே இருக்குய்யா. தொடர்ந்து கலக்கு
ரைட்டு.. ஒரு வழியா பேர் வச்சிட்டே.. அதுக்கு ஒரு பார்ட்டி கொடுத்துரு..
nalla irundhudunga enaona.. :)
kadasi varikalum nalla irundhudu :)
//பொண்ணு கிடைத்தாலும்
புதன் கிடைக்காதாம்
கிடைத்தது என்னவோ
புதன்கள் மட்டுமே.\\
சீக்கிரம் பொண்ணு கிடைக்க வாழ்த்துக்கள்
பெஸ்கி திருமணத்தில் பதிவர்கள் மட்டுமே உள்ள படத்தை போட்டு இருக்கலாம் என்பது என் கருத்து!
//பொண்ணு கிடைத்தாலும்
புதன் கிடைக்காதாம்
கிடைத்தது என்னவோ
புதன்கள் மட்டுமே.//
பாத்துருவோமா!?
//பாலவாக்கம் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் சொல்லுங்கள், அடுத்த முறை கூடும்போது தகவல் சொல்கிறேன்.//
கவுண்டர் : என்னது பாலவாக்கம் பதிவர் சந்திப்பா? விட்டா முட்டுசந்துல எல்லாம் பதிவர் சந்திப்பு நட்த்துவாங்க போல.. இந்த பதிவர்கள் இம்சை தாங்கலப்பா...
Thanks to all.
I am out of station... will reply on Monday.
Also, i want to know others opinion on GIRI's comment.
Pls reply.
எவனோ ஒருவன்
படம் எங்கே?
என்டெர்டெயினிங். நன்றாக எழுதுகிறீர்கள். பிறகென்ன ஆனாஊனா என்று.. ஏதாவது நல்ல பெயராக வைத்துக்கொள்ளுங்கள். பிற்காலத்தில் எழுத்தாளர் ரேஞ்சுக்கெல்லாம் சிந்திக்கவேண்டாம் எனினும் யாராவது கோட் செய்ய விருப்பப்பட்டால் கூட வசதியாக இருக்கும்.
என்ன சகா வீட்டுல பொண்ணு தேடுறாங்களா ??
//என்டெர்டெயினிங். நன்றாக எழுதுகிறீர்கள். பிறகென்ன ஆனாஊனா என்று.. ஏதாவது நல்ல பெயராக வைத்துக்கொள்ளுங்கள். பிற்காலத்தில் எழுத்தாளர் ரேஞ்சுக்கெல்லாம் சிந்திக்கவேண்டாம் எனினும் யாராவது கோட் செய்ய விருப்பப்பட்டால் கூட வசதியாக இருக்கும்.//
Repeat-EY!
புறங்கையை நக்கியாச்சு ஏனா ஓனா!
//மொய்யாக 4 பின்னூட்டம் எழுதி கவரில் வைத்துக் கொடுத்துவிடலாம் என்றார் முரளி கண்ணன்//
மாப்ள.. சூப்பர் கவர் ஐடியா!
உங்க வலைப்பக்கம் இப்ப நல்லா இருக்கு!
நான் இதுக்கு முன்னாடி 2, 3 தடவை வந்து பாத்துட்டு.. இது வேற ஏதோ ஸைட்டுன்னு திரும்பிட்டேன்.. ஐயே சிரிக்காதீங்க.. நிஜமாவே!
சரியாக சொல்லியிருக்க ஏனா ஓனா,
மணமகன் சுகுமாருக்கு இடப்பக்கம் இருப்பவர்கள் பாவம்.
// தேன்கூடு// கேட்பதை விட எழுத்துரு பார்க்கும் போது அழகாக இருக்கிறது, படிக்கும் போது அதை விட இனிமையாக இருக்கிறது. தேன்கூடு சிறக்க வாழ்த்துக்கள் நண்பா
அப்புறம் என்ன,
கால்ல மாட்டிட்டு வந்துட்டேன்.
மனத்தை இலகுவாக்கிய சிரிப்புக்கு நன்றி
நன்றி ஜனா.
//தண்டோரா ...... said...
என்னைப்போல் ஒருவன்.பெஸ்கி//
உங்களைப் போல ஆகத்தான் ஆசை.
நன்றி ஆதவன்.
//Cable Sankar said...
ரைட்டு.. ஒரு வழியா பேர் வச்சிட்டே.. அதுக்கு ஒரு பார்ட்டி கொடுத்துரு.//
சீக்கிரம் வாங்க. வெய்ட்டிங்...
நன்றி கனகு.
//கிறுக்கல் கிறுக்கன் said...
சீக்கிரம் பொண்ணு கிடைக்க வாழ்த்துக்கள்//
நன்றி கிகி. நீங்களும் பாருங்க.
//கிரி said...
பெஸ்கி திருமணத்தில் பதிவர்கள் மட்டுமே உள்ள படத்தை போட்டு இருக்கலாம் என்பது என் கருத்து!//
நன்றி கிரி. நீக்கிவிட்டேன். தங்களது கருத்துக்களுக்கு நன்றி.
//வால்பையன் said...
பாத்துருவோமா!?//
பாத்துருவோமே... அப்றம் பேசுறேன் தல.
//குறை ஒன்றும் இல்லை !!! said...
கவுண்டர் : என்னது பாலவாக்கம் பதிவர் சந்திப்பா? விட்டா முட்டுசந்துல எல்லாம் பதிவர் சந்திப்பு நட்த்துவாங்க போல.. இந்த பதிவர்கள் இம்சை தாங்கலப்பா...//
ராஜ்,
வாரத்துக்கு 2/3 அப்படித்தான் நடக்குது, எண்ணிக்கை குறைவாய் இருப்பதால் எழுதுவதில்லை.
அப்றம், ஒரு சோறு வரேன்னீங்க... வரவேயில்ல...
//முரளிகண்ணன் said...
எவனோ ஒருவன்
படம் எங்கே?//
போட்டாச்சு தலைவா, இப்போ பாருங்க.
//ஆதிமூலகிருஷ்ணன் said...
என்டெர்டெயினிங். நன்றாக எழுதுகிறீர்கள். //
நன்றி.
//பிறகென்ன ஆனாஊனா என்று.. ஏதாவது நல்ல பெயராக வைத்துக்கொள்ளுங்கள்.//
அப்டீன்றீங்க?
//பிற்காலத்தில் எழுத்தாளர் ரேஞ்சுக்கெல்லாம் சிந்திக்கவேண்டாம் எனினும் யாராவது கோட் செய்ய விருப்பப்பட்டால் கூட வசதியாக இருக்கும்.//
சரி அண்ணே, உங்களைப் போன்ற இன்னொரு பி.ப.கிட்ட கேட்டேன், ஒரு பேரு சொல்லியிருக்கிறார். எப்படியோ, வெளையாட்டா ஆரம்பிச்சத மாத்திவிட்ட புண்ணியம் உங்களையே சேரும்.
//Romeoboy said...
என்ன சகா வீட்டுல பொண்ணு தேடுறாங்களா ??//
ஆமா சகா, தேடுறோம்.
//வெங்கிராஜா | Venkiraja said...
Repeat-EY!//
கொலைவெறியோட ஒரு கும்பலே இருக்கு போல இருக்கே...
//ஷங்கி said...
புறங்கையை நக்கியாச்சு ஏனா ஓனா!//
நன்றி ஷங்கி, நல்லாயிருக்குன்றீங்க, ஓக்கே.
//ஜெகநாதன் said...
மாப்ள.. சூப்பர் கவர் ஐடியா!//
அனேகமா, இனி மொய் இப்படித்தான் வைப்பாங்க போல இருக்கு. சில பேரு கவிதை எழுதி பிரேம் போட்டு குடுப்பாங்கள்ல? அது மாதிரி பின்னூட்டமோ, பதிவோ எழுதி பிரேம் போட்டு குடுத்துடுவோம்.
//உங்க வலைப்பக்கம் இப்ப நல்லா இருக்கு!//
நன்றி.
//நான் இதுக்கு முன்னாடி 2, 3 தடவை வந்து பாத்துட்டு.. இது வேற ஏதோ ஸைட்டுன்னு திரும்பிட்டேன்.. ஐயே சிரிக்காதீங்க.. நிஜமாவே!//
இது உங்களுக்கே ஓவரா தெரியல... நல்லா இருக்குதான்... ஆனா இந்த அளவுக்கா?
//அகநாழிகை said...
சரியாக சொல்லியிருக்க ஏனா ஓனா,
மணமகன் சுகுமாருக்கு இடப்பக்கம் இருப்பவர்கள் பாவம்.//
ஹி ஹி ஹி... தெரியும்.
நன்றி அடலேறு, பின்னூட்டத்துல கூட கவிதை நடைதான் போலருக்கு.
நன்றி ஜோதிஜி.
தேன் கூட்டின் தேன் துளிகள்
ரசித்"தேன்"!
நன்றி நிலா.
Post a Comment