புரோட்டா ஸ்டால்

சென்னை வந்த பிறகுதான் நம்ம ஊரு புரோட்டாவின் அருமை தெரிந்தது. வந்த புதிதில் பல இடங்களில் சாப்பிட்டிருப்பேன். ஆனால் எதிலுமே திருப்தி இல்லை. கொஞ்ச நாளில், இனி இங்கு புரோட்டா வாங்கி சாப்பிடவே கூடாது என முடிவு செய்தாயிற்று.

திருச்செந்தூரில், பள்ளி காலங்களில், ஏஒன் புரோட்டாதான் நம்ம ஃபேவரிட். அதுவும் பார்சல்தான். பிச்சுப்போட்டு சால்னா ஊத்தி வாங்கி வருவோம். வீட்டிற்கு வந்து திறந்து பார்த்தால், புரோட்டா சால்னாவுக்குள் ஊறிப்போய், பார்க்கவே அமிர்தமாய் இருக்கும். திண்றால்.... ம்ம்ம்ம்.

சிறிது வளர்ந்து வெளியூர் செல்ல ஆரம்பித்த பின், காயல்பட்டிணம், ஆறுமுகனேரி, தூத்துக்குடி என சுவை பார்க்கும் ஏரியாவின் சுற்றளவு கூடியது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அதிலும் தூத்துக்குடி சுவை மறக்க முடியாதது.

எனது காலத்தில், தூத்துக்குடியில், சத்யா ஏஜன்சி அருகிலிருக்கும் ஆழ்வார் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் ஆண்டவர் அனைவரும் அறிந்த பேமஸ் புரோட்டா கடைகள். இப்போதும் (தண்ணியடித்தால்) தேடிப்போய் சாப்பிடும் மற்றொரு கடை, ஆறுமுகனேரி ரமா ஹோட்டல்.

தூத்துக்குடியில் அடிக்கடி சாப்பிடும் இடமென்றால் அது பழைய பேருந்து நிலையம் வெளியே இருக்கும் முக்குக் கடை (இதுவரை அதன் பெயர் தெரியாது, நாங்கள் அழைப்பது அப்படித்தான்). எப்போதெல்லாம் தூத்துக்குடியைக் கடக்கிறேனோ அப்போதெல்லாம் இங்கு ஒரு விஜயம் உண்டு. ‘சுக்கா செட்டு’ என்று சொன்னால் போதும், இரு பொரித்த புரோட்டாக்களை நொருக்கிப் போட்டு, அதில் மட்டன் சுக்காவை ஊற்றி, ஓரத்தில் கொஞ்சம் நறுக்கிய பச்சை வெங்காயத்துடன் வாழை இலையில் ஒரு படையல் கிடைக்கும். இத்துடன் ஒரு அரைவேக்காடு சேர்த்தால்.... ஸ்ஸ்ஸ். இந்த முறை அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. (படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்)




இப்போது புரோட்டாவை நொருக்குவதற்கு தனி இயந்திரமே இருக்கிறது!


பின்பு, சனிக்கிழமை சிவகாசி சென்ற போது நண்பர் ஒரு புரோட்டா கடைக்கு கூட்டிச் சென்றார். இங்கு பொரிப்பதில்லை, கல்லில் போட்டு எடுத்த புரோட்டா.

படையல் ஆரம்பம்.


உச்சகட்டம்.

அங்கிருந்த கல்லூரி நாட்களில் நான் வழியல் விரும்பி சாப்பிடுவதை மறக்காத அவர், எனக்காக பிரத்யோகமாய் செய்யச் சொன்னார்.

இதுதான். வெங்காயத்தை கல்லில் நன்றாக வதக்கி, பின் அதை வைத்து ஒரு பக்க ஆம்லெட் போட்டால், அதுதான் வழியல். இதன் சுவையை வார்த்தைகளால் ஜொள்ள இயலவில்லை. (சிவகாசி தவிற வேறெங்கும் இந்த வகை முட்டை நான் கண்டதில்லை).

நீங்களும் பாத்துட்டு ஏதாவது ஜொள்ளிட்டுப் போங்க. என்ன இருந்தாலும் நம்ம ஊரு புரோட்டா கடை சுவை எங்குமே கிடைக்காது.
---

மேலும் கொஞ்சம் கொசுறு க்ளிக்குகள்...

இந்த தடவ அம்மா குடுத்த ஸ்பெசல் - ஆப்பம் வித் தேங்காப்பால்.


மஞ்சள், பச்சை நிறங்கள்.


சிவகாசி பூனை... நல்லா பாத்துக்குங்க.


தூத்துக்குடியில் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் மேம்பாலம் அடியில் - புதிய பேருந்து நிலையம் அருகே.


-ஏனாஓனா.

Share/Bookmark

20 ஊக்கங்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹும்ம்ம்ம். நல்லா இருங்க...

Nathanjagk said...

சூப்பர் புரோட்டா பதிவு! காலையில 7:42 மணிக்கு வெறும் வயித்தில ​ஜொள்றேன்.. சுவையான பதிவு! படங்களோட ஒரு கலக்கு கலக்கீட்டிங்க மாப்ளே! இனி சிவகாசி, தூத்துக்குடி பக்கம் போனேன்னா இந்த இடுகைதான் என் நாக்குக்கு கைடு!

Nathanjagk said...

பொரிச்ச புரோட்டா - தாராபுரம், பழனி, திண்டுக்கல் சைடுல முறுகல் புரோட்டான்னு ​சொல்லுவோம். இந்த புரோட்டாவை பேமஸ் ஆக்கிய ஊர் - நத்தம்! நீங்க ​சொன்ன சுக்கா-​செட் மாதிரியே ஒரு ஐட்டம் தேனீல சாப்பிட்டிருக்கேன். பார்க்க கொத்து புரோட்டா மாதிரி இருக்கும். பேர் தெரியலே.​ஹோட்டல்ல இலக்கிய நண்பர்கள் அரட்டை + தண்ணி! நா.முத்துக்குமார் ஆர்டர் பண்ணயிருந்தாரு - மப்புல நான் எடுத்து சாப்பிட்டேன். சிரிச்சுக்கிட்டே சாப்பிடுன்னு அவர் ஆசை பட்டு ஆர்டர் பண்ணினத ஒரு வாய் கூட சாப்பிடலே. நல்லாயிருக்கே கொத்து புரோட்டா-ன்னு கேட்டதுக்கு.. (அப்பதான் நான் முட்டை சாப்பிட பழகியிருந்தேன்) இது மட்டன் புரோட்டா என்று ஆப்பு வைத்தார் நா.மு.

☀நான் ஆதவன்☀ said...

யோவ் இங்க அவனவன் சப்பாத்தி சாப்பிட்டு காஞ்சு போய் கிடக்குறான். காலைங்காத்தால இப்படி ஒரு பதிவ படிக்க வச்சுட்டு நாக்குல எச்சி ஊற வச்சிட்டேயே.

ஆமா பூனை என்ன அவ்ளோ பெரிசா இருக்கு?

Beski said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
ஹும்ம்ம்ம். நல்லா இருங்க...//

ஆஹா... வொர்க்கவுட் ஆகுது. வயித்தெரிச்சல்தான?

Beski said...

//ஜெகநாதன் said...
சூப்பர் புரோட்டா பதிவு! காலையில 7:42 மணிக்கு வெறும் வயித்தில ​ஜொள்றேன்.. சுவையான பதிவு! படங்களோட ஒரு கலக்கு கலக்கீட்டிங்க மாப்ளே! இனி சிவகாசி, தூத்துக்குடி பக்கம் போனேன்னா இந்த இடுகைதான் என் நாக்குக்கு கைடு!//

அட! நா இங்க இருக்கும்போது உங்களுக்கு கைடெல்லாம் எதுக்கு?
---
கருத்துப் பகிர்தலுக்கு நன்றி மாம்ஸ்.

Beski said...

//☀நான் ஆதவன்☀ said...
யோவ் இங்க அவனவன் சப்பாத்தி சாப்பிட்டு காஞ்சு போய் கிடக்குறான். காலைங்காத்தால இப்படி ஒரு பதிவ படிக்க வச்சுட்டு நாக்குல எச்சி ஊற வச்சிட்டேயே.//
ஹி ஹி ஹி....


//ஆமா பூனை என்ன அவ்ளோ பெரிசா இருக்கு?//
அது குட்டிப் பூனை, அப்படித்தான் இருக்கும். (உனக்கெல்லாம் இப்படித்தான் பதில் சொல்லனும்)

Unknown said...

மாப்பு,

மதுர வீச்சும், முட்ட புரோட்டாவும் சாபிட்டுருக்கீயளா?

அத பத்தி ஒரு பதிவு போடுவோமா?

அன்புடன்,
எழில். ரா

அன்புடன் அருணா said...

அடடா..........மிஸ்டர் எவனோ ஒருவன் நீங்க தூத்துக்குடிக்க்காரரா? சிவகாசிககாரரா???எனக்குத் தூத்துக்குடிங்க!!

Leo Tuti said...

Nenga sonna mukku kadai Name HOTEL BALAMURUGAN,

Beski said...

//எழில். ரா said...
மாப்பு,
மதுர வீச்சும், முட்ட புரோட்டாவும் சாபிட்டுருக்கீயளா?
அத பத்தி ஒரு பதிவு போடுவோமா?//

இல்லயே மச்சா, அதப் பத்தி அடுத்த தடவ போயிட்டு வரும்போது எழுதுங்க...
ரொம்ப பிசி போல... பதிவே காணோம்?

Beski said...

//அன்புடன் அருணா said...
அடடா..........மிஸ்டர் எவனோ ஒருவன் நீங்க தூத்துக்குடிக்க்காரரா? சிவகாசிககாரரா???எனக்குத் தூத்துக்குடிங்க!!//

அடடா, இப்படி மிஸ்டர்னு எவ்வளவு மரியாதையா கூப்புடுறீய... மக்களே நல்லா பாத்துக்குங்கப்பா, இதப் பாத்தாவது (எனக்கு) எப்புடி மரியாத குடுக்குறது கத்துக்குங்க.
---
வளர்ந்தது, இளங்கலை வரை படித்தது எல்லாம் திருச்செந்தூர்தான். கல்லூரி காலங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடியில்தான் நம்ம ரவுண்ட்ஸ். அப்புறம் முதுகலை சிவகாசியில். அப்போது ரவுண்ட்ஸ் விருதுநகர் மற்றும் மதுரையில்.

வருகைக்கு நன்றி அருணா.

iniyavan said...

காலைல இந்தபதிவை பார்ப்பேனா? ஒரே பசி. படத்த வேற போட்டு. வெறுப்பேத்தறீங்க. நானும் புரோட்டா பிரியன். ஆனா, என்ன பண்ணறது? மலேசியால இதை ரொட்டி சென்னாய் அப்படினு சொல்லறாங்க. ஆனா கொஞ்சம் இனிப்பா இருக்கும். ஒவ்வொரு முறை ஊர் வரும்போஒதும் தினமும் புரோட்டா தின்பது வழக்கம்.

ம்ம்ம்ம்ம்ம் தீபாவளி வரை காத்துருக்கணும்.

Beski said...

//என். உலகநாதன் said...

காலைல இந்தபதிவை பார்ப்பேனா? ஒரே பசி. படத்த வேற போட்டு. வெறுப்பேத்தறீங்க. நானும் புரோட்டா பிரியன். ஆனா, என்ன பண்ணறது? மலேசியால இதை ரொட்டி சென்னாய் அப்படினு சொல்லறாங்க. ஆனா கொஞ்சம் இனிப்பா இருக்கும். ஒவ்வொரு முறை ஊர் வரும்போஒதும் தினமும் புரோட்டா தின்பது வழக்கம்.

ம்ம்ம்ம்ம்ம் தீபாவளி வரை காத்துருக்கணும்.//

வாங்க வாங்க...
காத்திருந்து ருசிப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

தம்பி நேக்கு நாக்குல ஜலம் ஊறிடுத்து , சீக்கிரம் என்னையும் இட்டுண்டுபோய் வாங்கி கொடுடா அம்பி

Beski said...

//கிறுக்கல் கிறுக்கன் said...
தம்பி நேக்கு நாக்குல ஜலம் ஊறிடுத்து , சீக்கிரம் என்னையும் இட்டுண்டுபோய் வாங்கி கொடுடா அம்பி//

அடுத்த தடவ பாக்கலாம்.

ஷங்கி said...

இப்பதான் இதைப் படித்தேன். புரோட்டா ம்ம் ம்ம்!, யம் யம்!!! ஊரு புரோட்டா சாப்பிட்டு ரொம்ப வருஷமாச்சு. (ஊருக்கு வந்தாத்தான சாப்பிட முடியும்!!!)

Beski said...

//சங்கா said...
இப்பதான் இதைப் படித்தேன். புரோட்டா ம்ம் ம்ம்!, யம் யம்!!! ஊரு புரோட்டா சாப்பிட்டு ரொம்ப வருஷமாச்சு.(ஊருக்கு வந்தாத்தான சாப்பிட முடியும்!!!)//
நீங்க மட்டுமில்ல, நானும் ஊருக்குப் போனாத்தான் புரோட்டா...

vadakkupatti rammachamy said...

புரோட்டா ம்ம் ம்ம் ம்ம் ம்ம் !!! ம்ம் ம்ம் ம்ம் ம்ம் !!! ம்ம் ம்ம் ம்ம் ம்ம் !!! ம்ம் ம்ம் ம்ம் ம்ம் !!! ம்ம் ம்ம் ம்ம் ம்ம் !!! ம்ம் ம்ம் ம்ம் ம்ம் !!! ம்ம் ம்ம் ம்ம் ம்ம் !!! ம்ம் ம்ம் ம்ம் ம்ம் !!! ம்ம் ம்ம் ம்ம் ம்ம் !!! ம்ம் ம்ம் ம்ம் ம்ம் !!!

Beski said...

வாங்க வடுகபட்டி...
நல்லாயிருக்கா?