சந்தர்ப்பவாதக் கொள்ளைகள் - 1

இது சீசன் டைம்

'என்னடா மாப்ள, தீபாவளிக்கு டிக்கட் போட்டியா?'

'இன்னும் இல்லடா'

'என்னடா நீயி, இன்னும் ஒரு வாரந்தான் இருக்கு. இப்படி டிக்கட் எடுக்காம இருக்க? ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டல்ல?'

'அதெல்லாம் எடுத்தாச்சு. டிக்கட்டுதான் கெடக்கல. ட்ரெயின் ரெசர்வேசன் ஓபன் பண்ண அஞ்சு நிமிசத்துலயே முடிஞ்சு போச்சாம். இப்ப வெயிட்டிங் லிஸ்ட் பாத்தா 400, 500னு எகுறுது.'

'பஸ் என்னடா ஆச்சு?'

'அத ஏண்டா கேக்குற... போன தடவ மாதிரி விட்டுறக் கூடாதுன்னு, ஒரு மாசத்துக்கு முன்னாடியே போனேன். நம்ம அஜித் ட்ராவல்ஸ்தான். இன்னும் சார்ட் ப்ரிபேர் பண்ணல, அடுத்த வாரம் வாங்கன்னான். அடுத்த வாரம் போனா, அதுக்கு அடுத்த வாரம் வாங்கன்னான். அப்பப் போனா, எல்லாம் ஃபுல்லாயிடுச்சுன்னு சொல்லிட்டாண்டா. தீபாவளி, பொங்கல்னு வந்துட்டா போதும்டா இவனுகளுக்கு, டிக்கட்ட பிலாக் பண்ணி செம கொள்ள அடிக்கிறானுக.
இருக்குற பணத்துக்கெல்லாம் வீட்டுல எல்லாத்துக்கும் துணி எடுத்தாச்சு. வருசத்துல இந்த ஒரு தடவதான் ஏதாவது காசு சேத்து, கடன ஒடன வாங்கி, வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டுப் போயி சந்தோசப்படுறேன். இதுல டிக்கட்டுக்குத் தனியா கடன வாங்கனும் போல இருக்கு...'

'சரி விடுறா, அன்னைக்கு நைட்டு பஸ் ஸ்டாண்டுல போயி ஏதாவது கெடைக்குதானு பாக்கலாம்.'

'உனக்கு போன வருசம் நடந்தது மறந்து போச்சா? பஸ் ஸ்டாண்ட் வாசல்லயே நின்னு, திருச்சி, மதுர, தின்னவேலின்னு கூவிக்கிட்டு இருப்பானுக. போய் ரேட்டு கேட்டா 400 ரூபா டிக்கட்ட 600,700னு சொல்லுவானுக. கேட்டா ஸ்பெசல் பஸ்ஸிம்பானுக. கடைசில பாத்தா நாம வழக்கமா போற பஸ்ஸா இருக்கும். பிலாக் பண்ணி வச்சிட்டு ஏமாத்துவானுக. ஒன்னும் பண்ண முடியாது. அதுக்கு, கெடைக்கிற கவர்மெண்ட் பஸ்ஸுல ஏதாவது மூலைல வொக்காந்து போயிரலாம். இதுல இன்னொரு ஸ்பெசல் பஸ் இருக்கு தெரியிமா?'

'என்ன அது? ஸ்பெசலா ஸ்பெசல் பஸ்?'

'ஸ்பேர் பஸ்ஸ எல்லாம் கூட்டம் அதிகமா இருக்குன்னு விடுவானுகளாம். டபுல் ரேட்டு, ஏன்னா ரிட்டன் சும்மா வரனுமாம். ஆட்டோ டெக்னிக்கு. எல்லாம் நம்ம வசதிக்குத்தாங்குற ரேஞ்சுக்கு பில்டப் வேற குடுப்பானுக #@$$#@$%@#. போறவனெல்லாம் ஊர்லயேவா தங்கிறப் போறான்? இல்லன்னா இவனுகதான் ரிட்டன் சும்மா வந்துறப் போறானுகளா? வரும்போதும் இதே கதைய சொல்லி டபுல் ரேட்டு வாங்கிருவானுக $#*^*^#^$%.'

'வுடுறா மாப்ள. கோயம்பேடு போயி பாக்கலாம். எதுவும் கெடைக்கலன்னா, 800 ஆனாலும் பரவாயில்ல. போயித்தான ஆகனும்? என்ன பண்றது, இத ஒரு பயலும் கேக்க மாட்டான். லைசன்ஸ் எங்க, ஆர்சி புக்கு எங்க, ஹெல்மட் எங்க, பைக்ல கண்ணாடி எங்க, நீ ஏன் கண்ணாடி போடலன்னு பிச்ச எடுக்க மட்டும் முக்குக்கு முக்கு நிப்பானுக.'
-
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன், கோயம்பேடு அரசுப் பேருந்து நிலையம். ஆளுக்கொரு பக்கம் அலைந்தோம். எனது மொபைல் சினுங்கியது...
‘மாப்ள, திர்னவேலி பஸ் ஒன்னுல எடம் கெடச்சிட்டிடா.... இந்தப் பக்கம் வா...’
சந்தோசத்தில் அலறினான். போனேன். திருநெல்வேலி - தூத்துக்குடி செல்லும் சாதாரணப் பேருந்து. கூட்டம் அதிகமான காலங்களில் இப்படி சென்னை வரை வந்து செல்லுமாம். டிக்கட் விலை மிகவும் குறைவு. புஸ்பேக் எல்லாம் கிடையாது. எனக்கெல்லாம், முன்னாலிருக்கும் சீட்டில் முட்டி தட்டும். எப்படித்தான் 14 மணி நேரம் இதுல ஒக்காந்து போகப் போறானோன்னு எனக்கு ஒரே குழப்பம். அவனோ முழு சந்தோசத்தில் கையசத்தான். சும்மாவா, பஸ்ஸுக்குள்ள நாலு பேரு தரைல ஒக்காந்திருந்தாங்க.

---

மேலே சொன்னது போன வருட தீபாவளியில் நடந்தது. இந்த வருடம் எப்படி இருக்கும்? ஏதும் மாற்றம்? முன்னேற்றம்? இருக்கும் இருக்கும். இந்தக் கதை ஆன்லைன் வரை முன்னேறியிருக்கும்.

கீழே பார்ப்பது ஆகஸ்ட் 14, கோவைக்கு டிக்கட் தேடும்போது கண்டது...


இது வழக்கமான விலை...

---

ச.கொ. அனுபங்கள் தொடரும்...
-ஏனாஓனா.

Share/Bookmark

22 ஊக்கங்கள்:

க.பாலாசி said...

சென்னையில் இருந்தபோது நானும் இதேபோல் அனுபவப்பட்டிருக்கிறேன்... நீங்களாவது ஒருவாரம்...நான் ஒரு மாதமாக தேடியும் எங்கும் சீட் கிடைக்கவில்லை...(ரிசர்வ்) படாதபாடு பட்டு ஊருக்கு வந்தேன். அதேபோல போகும் போதும் அவஸ்தை...

Anonymous said...

இப்படி தான் மனசாட்சியே இல்லாம பண்றாங்க..கேக்க ஆள் இல்லைன்னு தைரியம்..எனக்கும் இந்த அனுபவம் உண்டு..

அன்புடன்,
அம்மு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே இதுக்கு பேசாம லாஸ் ஆஃப் பேயில ரெண்டு நாள் முன்னாடி போனா நமக்கும் சந்தோசம் எந்த பிரச்சினையும் இருக்காது.. நான் முடிஞ்ச வரை லீவ் எடுக்காம இருந்து இந்த மாதிறி சமயத்தில முன்னாடி ஒரு நாள் பண்டிக்கைக்கு பின்னால் ஒரு நாள்னு இருந்திட்டு வருவோம்..ஆனா இது எல்லாருக்கும் பொருந்துமான்னு சந்தேகம் தான்!!!

☀நான் ஆதவன்☀ said...

பரவாயில்லையே ஆன்லைன்ல கூட புக் பண்ணலாமா? ஆனா கம்யூட்டர் துறையில இருக்குறவங்களுக்கு வசதியா போச்சு. ஆன சாதாரண மக்களுக்கு கஷ்டம் தான்.

ஆனா இதுல ஒரு நல்ல விசயம் எதிர்காலத்தில எல்லாரும் வேற வழியே இல்லாம கணினி கத்துப்பாங்க பாகுபாடு இல்லாம :)

Beski said...

நன்றி பாலாஜி.
நன்றி அம்மு.
சென்னையிலிருக்கும் அனைவரும் ஓவ்வொரு தடவையும் சந்திக்கும் பிரச்சனை இது. பணம் இருக்குறவன், இல்லாதவன் அனைவருமே, வழக்கத்தை விட அதிக பணம் செலவழித்து, கொஞ்சம் அல்லல்பட்டே சொந்த ஊருக்குச் செல்லவேண்டியிருக்கிறது.

Beski said...

நன்றி ராஜ்.
நல்ல யோசனைதான், நீங்க சொன்ன மாதிரி அனைவருக்கும் பொருந்தாது. பல பேரு அப்படித்தான் போறாங்க.

Beski said...

நன்றி ஆதவன்.
சொன்ன மாதிரி கணினி கத்துக்க இது ஒரு தூண்டுதலா இருக்கலாம். ஆனா பாரு, பல பேரு இத வச்சு கடைய தொறந்துட்டாங்க. ஏரியாவுக்கு கொறஞ்சது ஒன்னு இருக்கும். பஸ், ட்ரெயின் டிக்கட் புக் பண்ணி கொடுப்பாங்க. ஆனா இந்த விசேச காலங்கள்ல அவங்களாலயே ஒன்னும் உதவி செய்ய முடியாது.

jothi said...

//ஆனா இந்த விசேச காலங்கள்ல அவங்களாலயே ஒன்னும் உதவி செய்ய முடியாது.//

true

எட்டு மணிக்கு ஆரம்பிச்சு 8:04 முடிஞ்சிடும்,.

Admin said...

Ammu Madhu said...
இப்படி தான் மனசாட்சியே இல்லாம பண்றாங்க..கேக்க ஆள் இல்லைன்னு தைரியம்..எனக்கும் இந்த அனுபவம் உண்டு..

அன்புடன்,
அம்மு




இன்று மனசாட்சி மாயமாகிவிட்டது.

ஷங்கி said...

இதெல்லாம் பொது வாழ்க்கையில சகஜமாப் போய் நாளாச்சு. என்னத்தச் சொல்ல?!

கார்த்திக் said...

நண்பரே.. உங்க ஊர்காரங்க கொஞ்சபேற திரட்டுங்க.. ஒரு வேன்-ன book பன்னுங்க..

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

நானும் ஒரு முறை இவ்வாறு சிக்கி கடைசியில் கோயம்பேட்டிலிருந்து காய்கறி லாரியில் ஏறி அவர்கள் செலவிலேயே நாகர்கோவில் சென்றதெல்லாம் ஒரு தனிக்கதை

Nathanjagk said...

மாப்ள.. உனக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்! இந்த மாதிரி டிடெக்டிவ் இண்டலிஜென்ஸ் (திட்டலேப்பா, டிக்ஷனரில பாத்துக்கோ) பண்ற (எனக்குத் ​தெரிஞ்ச!) ஒரே பதிவர் நீங்கதான்! இந்த @#$%^&* மவனுங்க, @#$%^&* நாய்ங்க இப்படித்தான் பண்டிகை சமயமா பாத்து நம்ம சீட்டில துணிய வச்சு ஓசில இஸ்திரி போடுவானுங்க! நீங்க இதே மாதிரி ஏற்கனவே யுனிவர்செல் முகத்திரையை கிழி கிழின்னு கிழிச்சது இன்னும் நினைவில இருக்கு! இப்படி ​தெளிவா படத்தோட (இந்த உழைப்புக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்!!!) ரெட்பஸ்ஸோட டயரை பஞ்சராக்கீட்டிங்க!!

Nathanjagk said...

பண்டிகை சமயத்தில ஊருக்கு​போற கஷ்டம், ஊரு விட்டு ஊரு வந்து உழைக்கிறவங்களுக்குதான் தெரியும். இதில காசு பாக்கிறதும் ஒண்ணு; வாய்க்கரிசியில பொங்கல் வக்கிறதும் ஒண்ணு!

Nathanjagk said...

உங்களோட டயலாக் ​டெலிவரிய ​ரொம்ப ரசிச்சேன் மாப்பு!
//டிக்கட்டுக்குத் தனியா கடன வாங்கனும் போல இருக்கு//
// டபுல் ரேட்டு, ஏன்னா ரிட்டன் சும்மா வரனுமாம். ஆட்டோ டெக்னிக்கு. //
இதில இந்த ஆட்டோ​டெக்னிக்கு-ங்கிற வார்த்தை எத்தனை அனுபவ அலைகள் அடித்து ஒதுக்கிய கடல்நுரை என்று வியக்கிறேன்!
//லைசன்ஸ் எங்க, ஆர்சி புக்கு எங்க, ஹெல்மட் எங்க, பைக்ல கண்ணாடி எங்க, நீ ஏன் கண்ணாடி போடலன்னு பிச்ச எடுக்க மட்டும் முக்குக்கு முக்கு நிப்பானுக//
அட.. அடே.. அடடடே!! டிராபிக் போலீஸ்காரங்க டவுசரையும் கிழிச்சாச்சா!! ​கைகுடுங்க மாப்ளே! உங்களுக்கு நான் (கட்டாயம்) 'கால்' ​கொடுக்கிறேன்!!

//எப்படித்தான் 14 மணி நேரம் இதுல ஒக்காந்து போகப் போறானோன்னு எனக்கு ஒரே குழப்பம். அவனோ முழு சந்தோசத்தில் கையசத்தான். சும்மாவா, பஸ்ஸுக்குள்ள நாலு பேரு தரைல ஒக்காந்திருந்தாங்க//
கொடுமையை ​நெகிழ்ச்சியா எழுதீட்டிங்க!!
வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!! நல்லபடியா நீங்க ஊர் போயி​சேர - ஆல் தி ​பெஸ்ட்!

Beski said...

நன்றி ஜோதி.
ஆமா, 5 நிமிசந்தான். அதுக்குள்ள முடிஞ்சுடும், இதுக்கு புரோக்கர்களும் முக்கிய காரணம்.

Beski said...

நன்றி சந்ரு,
இங்கல்லாம் மனசாட்சிய வச்சிக்கிடிருந்தா வியாபாரம் பாக்க முடியாது.

Beski said...

நன்றி சங்கா அண்ணே,
பொது வாழ்க்கையில ஐக்கியமானவங்களுக்கு சரி.
பட்டணத்து ஆசையில புதுசா வந்தவங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாகவே இருக்கும். இந்த மாதிரி வெளிப்படையான களவானித்தனத்த நம்ம ஊருல பாத்துருக்க மாட்டாங்க.

Beski said...

நன்றி கார்த்திக்,
அதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியமென்று தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்கிறோம்.

Beski said...

நன்றி கிகி,
இதுக்கு தப்பிச்சவங்க யாருமே இல்லபோல இருக்கு.

Beski said...

நன்றி ஜெ மாம்ஸ்,
இதுல ரெட்பஸ் என்ன செய்யும்? பஸ் காரணுக குடுத்ததப் போட்டுட்டானுக. கோவமெல்லாம் இப்படி வெளிப்படையாவே பண்ணூறானுகளேன்னுதான்.

//இதில காசு பாக்கிறதும் ஒண்ணு; வாய்க்கரிசியில பொங்கல் வக்கிறதும் ஒண்ணு!//
என்ன சொல்லி என்னத்தப் பண்ண? அவனுங்க நல்லாத்தான இருக்குறானுக.

//இதில இந்த ஆட்டோ​டெக்னிக்கு-ங்கிற வார்த்தை எத்தனை அனுபவ அலைகள் அடித்து ஒதுக்கிய கடல்நுரை என்று வியக்கிறேன்!//
உண்மைதான். ச.கொ.வில் ஆட்டோவும் வருது...

//அட.. அடே.. அடடடே!! டிராபிக் போலீஸ்காரங்க டவுசரையும் கிழிச்சாச்சா!!//
இன்னும் கிழிக்கல, இனிமேதான்.

//கைகுடுங்க மாப்ளே! உங்களுக்கு நான் (கட்டாயம்) 'கால்' ​கொடுக்கிறேன்!!//
அப்பாடா, காலடில இருந்து ஒரு கால் உறுதி.

Nathanjagk said...

//இதுல ரெட்பஸ் என்ன செய்யும்? //
கரெக்டுதான்.. இருந்தாலும் கூட்டுக் களவாணிப் பயலாச்சேன்னு - ​ரெட்பஸ்ஸையும் ​சேத்திட்டேன்!