யூனிவர்சலில் ஒரு ஏமாளி

கடந்த ஒரு வருடத்தில் நான்கு முறை யூனிவர்சலில் மொபைல் வாங்கியிருக்கிறேன். பெரிய கடை, மொத்த விற்பனையாளர், அங்குதான் விலை குறைவாய் இருக்கும் என்றிருந்த மூடநம்பிக்கை.

முதல்முறை, புரசைவாககத்தில் இருக்கும் கிளை. இணையத்திலேயே விபரங்கள் எல்லாம் பார்த்து, ஒரு நோக்கியா மொபைல் முடிவு செய்தாயிற்று. காண்பித்தார்கள்...
’என்ன விலை?’
’9000 ரூபாய்.’
’நெட்ல 8000 தான போட்டிருந்தது?’
’அது டாக்ஸ் இல்லாம சார்.’
இவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என வாங்கியாயிற்று. (பின்புதான் தெரிந்தது டாக்ஸ் 4%தான் என்று)

இரண்டாம் முறை, தீபாவளி சிறப்பு விற்பனை. எல்ஜி மொபைல் ஒன்று, ஏற்கனவே செய்தித்தாளில் விலை பார்த்தபடியால் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
’இது நல்லாயிருக்குமா?’
’செம டிமாண்டு சார். என் பிரண்ட் இதுதான் வேணும்னு கேட்டு வாங்கிட்டுப் போனார்’,
என கிளை மேளாலரே சொன்னார் (வாங்கிய பிறகு என்ன சொன்னாரென்பதை சொல்லவில்லை). மேளாலரே சொல்கிறாரே என நம்பி வாங்கிவிட்டேன். உபயோகித்தபிதான் தெரிந்தது அது சரியான மொக்கை என்று. அதனால்தான் 20,000 மொபைலை 10,000 ’தள்ளு’படி விலையில் தள்ளிவிட்டார்களோ என்னவோ.

மூன்றாம் முறை, திநகர் கிளையில். இந்த முறை இணையத்தில், அவர்களது தளத்தில் உள்ள விலை பார்த்து, 4% வரி உட்பட கணக்கு பார்த்தாயிற்று. 8,500 ரூபாய்.
’ரேட் என்ன சார்?’
’9500 ரூபாய்.’
’நெட்ல 8500 தான போட்டுருந்தது?’
’அது டாக்ஸ் இல்லாம சார்.’
’இல்ல, டாக்ஸ் சேத்துதான் சொல்றேன்.’
’சான்ஸே இல்ல சார்.....’
விவாதம் சிறிது நேரம் நீடித்தது. கடைசி வரை நான் பணியவே இல்லை.
’வேணும்னா, நெட்ல நீங்களே பாக்கலாமே சார்.’
’ஓக்கே, இருங்க பாத்துட்டு வரேன்.’
சிறிது நேரம் கழித்து வந்து,
’ஆமா சார், 8500 தான் வருது, அப்டேட் பண்ணிட்டாங்க போல...’,
வாங்கியாயிற்று. அடப்பாவிகளா, இப்படி தினம் தினம் எத்தனை பேரை ஏமாற்றுகிறார்களோ? சரி, இந்த சூட்சுமம் நமக்குத் தெரிந்துவிட்டது. இனிமேல் இப்படியே வாங்கலாமென முடிவு செய்தாயிற்று.

நான்காம் முறை, அதே திநகர் கிளை. தம்பிக்காக எல்ஜி தொடுதிரை மொபைல் ஒன்று வாங்கச் சென்றோம். வழக்கம் போலவே டெமோ. அது ஆட்டோபோகஸ் காமிரா என்று அவர் சொன்னார். ஆனால் அது அப்படி இல்லை என ஏற்கனவே தெரியும், சொன்னேன். இல்லை என்று சாதித்தார். பின், எனது N73 எடுத்து ஆட்டோபோகஸ் என்றால் எப்படி இருக்கும் என டெமோ காண்பிக்கவேண்டியதாயிற்று. அப்படியும் ஒத்துக்கொள்ளவில்லை (தப்பா சொன்னாலும் கடைசி வரை அதையே மெயிண்டெய்ன் பண்ண வேண்டுமென்று சொல்லிக்கொடுத்திருப்பார்கள் போலும்). அப்புறம் ஸ்டார்ட் மீசிக்...
’என்ன ரேட் சார்?’
’10500 ரூபாய்.’
’நெட்ல 9800 தான போட்டிருந்தது?’
’அது டாக்ஸ் இல்லாம சார்’(எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போல).
’இல்ல, டாக்ஸ் சேத்துதான், வேணும்னா நீங்களே நெட்ல செக் பண்ணிப் பாருங்களேன்.’
’நெட் இப்போ வொர்க் பண்ணல சார்.’
’பரவால்ல, வேற பிராஞ்சுக்கு போன் பண்ணிக் கேட்டுப் பாருங்க.’
’எனக்கு நல்லா தெரியும் சார், 10000க்கு குறஞ்சு கண்டிப்பா இருக்காது சார்.’
விவாதம் போய்க்கொண்டே இருந்தது, அவர் மசியவில்லை.
’சரி, ஆடிக்கு என்ன தருவீங்க?’
’ஆடிக்கிட்டே தருவாங்களா இருக்கும்’,
இது என் தம்பி. எனக்கோ உள்ளே கொதிக்கிறது. இவனுக்கு இந்த நேரத்தில் சோக்கு வேற.
’ஒரு கோல்ட் காயின் தருவோம் சார்.’
’அது என்ன ரேட் இருக்கும்?’
’300ரூபாய் இருக்கும் சார்.’
’அத நீங்களே வச்சுக்குங்க, அந்த ரேட்ட மைனஸ் பண்ணி குடுங்க.’
’அப்படியெல்லாம் பண்ண முடியாது சார். ரேட் எல்லாம் கம்ப்யூட்டர்ல செட் பண்ணிட்டோம், மாத்த முடியாது.’
அடங்கொய்யால! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி 10,500ன்னான். இப்ப 10,000 க்கு வந்துட்டான். இத மட்டும் எப்படி மாத்த முடியுமோ தெரியல! கம்ப்யூட்டர், அப்படி, இப்படி சொன்னா பயந்துருவோம்னு நினைப்பு போல. இல்ல, என் நெத்தியில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டியிருக்கானு தெரியல. சரி, வந்துட்டோமே, இவ்வளவு பேசிட்டோம், வாங்கிட்டுப் போறதுதான் நாகரிகம் என நினைத்தேன் (இதைத்தான் பலர் அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிறாங்க).
’பரவாயில்ல, 1000தான, ஓக்கே.’
’அதோட 250 ரூபாய் இன்சூரன்ஸ் வரும் சார்.’
’அதெல்லாம் வேணாம்.’
’இல்ல சார், இது கம்பல்சரி. இது இல்லாம குடுக்க முடியாது சார்.’
எத்தனையோ தடவ மொபைல் வாங்கிருக்கேன், இதுவரை யாரும் இப்படி சொன்னது கிடையாது. உங்க மொபைலே வேணாம் என வந்துவிட்டேன்.

வேறு கடைக்குச் சென்று வாங்கும் மனநிலையில் நான் இல்லை. என் தம்பிக்கோ அன்றே வாங்கிவிட வேண்டும் என்ற மனநிலை. சரியென்று, அதே வரிசையிலிருக்கும் பூர்விகாவிற்குச் சென்றோம். யூனிவர்சலுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய கடை. வழக்கம்போல டெமோ, அப்புறம் ஸ்டார்ட் மீசிக்...
’என்ன ரேட் சார்?’
’9600 ரூபாய்.’
’டாக்ஸ் சேத்து?’
’டாக்ஸ் சேத்துதான் சார்.’
அவ்வளவுதான் மீசிக். உடனே வாங்கியாயிற்று.

---

* இந்த யூனிவர்சலில், எத்தனை பேர் நெட்டில் போட்டிருக்கும் சரியான விலைக்கு வாங்கிச் செல்கிறார்கள்?
* எத்தனை பேர் அவர்கள் சொல்லுவதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கிப் போகிறார்களோ? (ஒருவரிடம் 500 ரூபாய் அடித்தால்... ஒரு நாளைக்கு... யப்பா கணக்கு தாறுமாறாப் போகுது)
* நெட்டில், அவர்களது தளத்தில், அப்டேட் செய்யும் அனைத்து விலைகளையும் அறிந்து வைப்பது முடியாத ஒன்றுதான். ஆனால், வாடிக்கையாளர் சொல்லும்போது நெட்டில் பார்த்து உறுதி செய்யலாமே(மூன்றாம் முறை அப்படி நடந்ததே!). அதை விட்டுவிட்டு, கற்பூரம் அடிக்காத குறையாய் இதுதான் ரேட் என அடித்துச் சொல்ல அவசியமே இல்லை.

** இதே போல, எத்தனை பேர், எத்தனை தடவை, எத்தனை இடங்களில், கடைக்காரர் சொல்வது சரியில்லை எனத் தெரிந்தும், வந்து பேசிட்டோமே என நாகரிகம் கருதி, அரைமனதோடு, தெரிந்தே ஏமாந்து போகிறார்கள்?

---

-ஏனாஓனா.

Share/Bookmark

29 ஊக்கங்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நெத்தியில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டியிருக்கானு தெரியல//

அது தெரியல.. ஆனா மருபடி மருபடி அதே கடைக்கு போனதால ... ஹி ஹி ஹி.... நீங்க அதேதான்!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்புறம் அந்த தலைப்பு.. அது கூட நல்லா பொருந்துது... இரண்டு அர்த்தமுமே!!!!

Nathanjagk said...

ரொம்ப ரசிச்சு படிச்சேன் மாப்ள! ​செல்லினத்துக்கு ஒரு அலர்ட் ​கொடுத்திருக்கீங்க. உங்களை அந்த ​செல்லாண்டியம்மன் காப்பாத்துவா. யப்பா! சரியான யுனிமெர்ஸலா இருக்கே!?

Anonymous said...

இந்த மாதிரி அனுபவ பதிவுகளை தேடிப்பிடித்து படிப்பேன்.

நன்றாக இருக்கிறது. பயனுள்ளதாக இருக்கிறது. எழுத்துகளுக்கு வண்ணங்களை நன்றாக பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

உரையாடல்களுக்கு நீல வண்ணம்.
உங்கள் மனதில் எச்சரிக்கை மணி அடித்த எண்ணங்களுக்கு சிவப்பு வண்ணம்.

ஆஹா! ஆஹா!!

Kots said...

Universal sutha Fraud party. Already i buy one mobile in ECR Road universal branch. The rates are very expensive. People very aware of this.

ஷங்கி said...

பெரிய கடை, பிராண்டு கடைன்னு பார்த்து நிறைய ஏமாறதுதான். அப்புறம் முதல் தடவை தெரிஞ்சப்பறமும் ஏன் இரண்டாவது தடவை போனீங்க?! ஏனா ஓனா ஈனா வானாவா ஆன கதை ஒரு படிப்பினைதான்! எனக்கும் ஷாப்பிங்க் வராது. நானும் ஒரு ஈனா வானாதான்.

சென்ஷி said...

:-)

நல்ல விழிப்புணர்ச்சி பதிவு..! முன்பு இதைப்பற்றி பாலபாரதியும் பதிவிட்டு இருந்ததாய் நினைவு!

தகவலுக்கு நன்றி தலைவரே...

கார்த்திக் said...

அவுங்க சொன்ன கரெக்ட்-ஆ தாங்க இருக்கும்.. அவுங்கதான் மொபைல் எக்ஸ்பெர்ட் ஆச்சே.. இப்ப தான் அந்த இணையதளத்தை பார்த்தேன்.. இதுல ப்ரீ ஹோம் டெலிவரி வேற உண்டாம்.. அடிக்கிறது கொள்ளை.. அதுவும் வீடு தேடி வந்தா.. !!!

ஜோதிஜி said...

திருந்துவாங்கன்னு நெனைக்கிறீங்களா?


மாதவன் வருமானம் கெட்டுப்போயிடாதா? போர்ச்சுக்கல்லில் இருந்து வந்த இறக்குமதியாளர் பெண்மணியை அவசர தேவையை கருத்தில் கொண்டு திருப்பூரில் ரிலையன்ஸ் அவருக்கு தேவையான லோஷன் வகைகளை வாங்குவதற்காக உள்ளே அழைத்துச்சென்றேன். என்னுடைய பார்வையில் அங்கு மட்டும் தான் சற்று பராவாயில்லை என்ற ரகம். அவர் குப்பியை பார்த்து அதில் விலையை பார்த்து புட்டி அடித்த குறையாய் அலறிக்கொண்டு வௌியே ஓடி வந்து விட்டார். காரணம் அங்கம் இங்கும் வித்யாசம் மூன்று மடங்கு. அவருக்கு தெரியாது இந்திய இறக்குமதி வருமானம்.


விழிப்புணர்ச்சி நமக்கு நாமே உருவாக்கி கொள்ளாத வகையில் விழுந்து தான் எந்திரிக்க வேண்டும். என்ன ஒன்று உங்களைப் போன்றவர்கள் பதிவு மூலம் குறைந்த பட்சம் ஒரு 500 பேர்களாவது "உணர்ந்து கொள்ள " முடியும்.




தேவியர் இல்லம். திருப்பூர்.

http://texlords.wordpress.com

texlords@aol.in

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

என்ன தம்பி அன்று யூனிவர்செல்லைப்பற்றி ஆஹா ஓஹோ என்று பாராட்டிவிட்டு இன்று இப்படி கவுத்திட்டியே!!

இருந்தாலும் யூனிவர்செல்லின் தற்போதைய விளம்பரம்.ஆடியில் 50%. ஐயஹோ, ஐயஹோ பயமாயிருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

////நெத்தியில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டியிருக்கானு தெரியல//

அது தெரியல.. ஆனா மருபடி மருபடி அதே கடைக்கு போனதால ... ஹி ஹி ஹி.... நீங்க அதேதான்!!!//

ரிப்பீட்........

Beski said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
//நெத்தியில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டியிருக்கானு தெரியல//

//அது தெரியல.. ஆனா மருபடி மருபடி அதே கடைக்கு போனதால ... ஹி ஹி ஹி.... நீங்க அதேதான்!!!//

இப்ப இல்லைல.

Beski said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்புறம் அந்த தலைப்பு.. அது கூட நல்லா பொருந்துது... இரண்டு அர்த்தமுமே!!!!//

நல்ல வேள, சரியா தலிப்புலயே சொல்லிட்டேன், இல்லன்னா பின்னூட்டத்துல போட்டுத் தாக்கிருப்பீங்க.

என்னது ரெண்டு அர்த்தமா? புரியுது, நாம தனியா டீல் பண்ணிக்குவோம்.

Beski said...

//ஜெகநாதன் said...

ரொம்ப ரசிச்சு படிச்சேன் மாப்ள!//
மாம்ஸ், இது உங்களுக்கே நியாயமா இருக்கா? கொந்தளிச்சிருக்கேன், ஆறுதல் சொல்லாம ரசிச்சிருக்கீங்க! :)

//செல்லினத்துக்கு ஒரு அலர்ட் ​கொடுத்திருக்கீங்க. உங்களை அந்த ​செல்லாண்டியம்மன் காப்பாத்துவா. யப்பா! சரியான யுனிமெர்ஸலா இருக்கே!?//
ஆனா உங்கள மாதிரி சொல்லினத்தோட நம்மலால விளையாட முடியாது.

Beski said...

//shirdi.saidasan@gmail.com said...
இந்த மாதிரி அனுபவ பதிவுகளை தேடிப்பிடித்து படிப்பேன்.//
அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எங்களுடைய முக்கிய நோக்கம். ஆனாலும் அப்பப்போ கு.த.சே., மொக்கை என்றும் மசாலா தடவுவோம்.

//நன்றாக இருக்கிறது. பயனுள்ளதாக இருக்கிறது. எழுத்துகளுக்கு வண்ணங்களை நன்றாக பயன்படுத்தி இருக்கிறீர்கள்.
உரையாடல்களுக்கு நீல வண்ணம்.
உங்கள் மனதில் எச்சரிக்கை மணி அடித்த எண்ணங்களுக்கு சிவப்பு வண்ணம்.//
க.க.க. போங்கள்.

//ஆஹா! ஆஹா!!//
நன்றி shirdi.saidasan.

Beski said...

//Kots said...
Universal sutha Fraud party. Already i buy one mobile in ECR Road universal branch. The rates are very expensive. People very aware of this.//

வாடா மாப்ள. நீயுமா ஏமாந்துட்ட? பரவால்ல, இப்பவாவது தெரிஞ்சுதேன்னு சந்தோசப்பட்டுக்க.

Beski said...

//சங்கா said...
பெரிய கடை, பிராண்டு கடைன்னு பார்த்து நிறைய ஏமாறதுதான். அப்புறம் முதல் தடவை தெரிஞ்சப்பறமும் ஏன் இரண்டாவது தடவை போனீங்க?!//
ரெண்டாவது தடவை விலை செய்தித்தாளிலேயே போட்டிருந்தது. அதனால் அதில் பிரச்சனை இல்லை. ஒரு சில விலையுயர்ந்த, விற்காத மொபைல்களை, இப்படி சில நேரம் விற்பார்கள். அதில் சில நல்லவையும் இருக்கும்.

//ஏனா ஓனா ஈனா வானாவா ஆன கதை ஒரு படிப்பினைதான்! எனக்கும் ஷாப்பிங்க் வராது. நானும் ஒரு ஈனா வானாதான்.//
ஹி ஹி ஹி...

Beski said...

//சென்ஷி said...
:-)
நல்ல விழிப்புணர்ச்சி பதிவு..! முன்பு இதைப்பற்றி பாலபாரதியும் பதிவிட்டு இருந்ததாய் நினைவு!//
நல்லது. இணைப்பு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

//தகவலுக்கு நன்றி தலைவரே...//
வருகைக்கு நன்றி அண்ணே.

Beski said...

//கார்த்திக் said...
அவுங்க சொன்ன கரெக்ட்-ஆ தாங்க இருக்கும்.. அவுங்கதான் மொபைல் எக்ஸ்பெர்ட் ஆச்சே.. //
அந்த எண்ணமெல்லாம் போயே போச்சு.

//இப்ப தான் அந்த இணையதளத்தை பார்த்தேன்.. இதுல ப்ரீ ஹோம் டெலிவரி வேற உண்டாம்.. அடிக்கிறது கொள்ளை.. அதுவும் வீடு தேடி வந்தா.. !!!//
ஆனா பாருங்க, தளத்துல இருந்து வாங்கினா, அந்த குறைந்த விலைக்கே வாங்கலாம். ஆனால் டெமோ பார்க்க முடியாது.
மற்றபடி ஹோம் டெலிவரி அனுபவம் ஏதும் இல்லை.

வருகைக்கு நன்றி கார்த்திக்.

Beski said...

//ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
திருந்துவாங்கன்னு நெனைக்கிறீங்களா?//
இதுல திருந்த என்ன இருக்கு, என்ன தப்பு செஞ்சாங்க திருந்துறதுக்கு, தப்பு எல்லாம் நமம் பேர்லதான். நாமதான் திருந்தனும்.

நீண்டதொரு கருத்துப் பகிர்தலுக்கு நன்றி.

//விழிப்புணர்ச்சி நமக்கு நாமே உருவாக்கி கொள்ளாத வகையில் விழுந்து தான் எந்திரிக்க வேண்டும். என்ன ஒன்று உங்களைப் போன்றவர்கள் பதிவு மூலம் குறைந்த பட்சம் ஒரு 500 பேர்களாவது "உணர்ந்து கொள்ள " முடியும்.//
தலைவா, 500 என்பதெல்லாம் அதிகம். ஆனால், கட்டாயம் நமது நண்பர்கள் தெரிந்துகொள்வார்கள் என்பது உறுதி.

வருகைக்கு நன்றி.

Beski said...

//கிறுக்கல் கிறுக்கன் said...
என்ன தம்பி அன்று யூனிவர்செல்லைப்பற்றி ஆஹா ஓஹோ என்று பாராட்டிவிட்டு இன்று இப்படி கவுத்திட்டியே!!//
அண்ணே, அது மூனாவது தடவைக்கு அப்புறம், நாலாவது தடவைக்கு முன்னால சொன்னது.

//இருந்தாலும் யூனிவர்செல்லின் தற்போதைய விளம்பரம்.ஆடியில் 50%. ஐயஹோ, ஐயஹோ பயமாயிருக்கு.//
அது குறிப்பிட்ட மாடலுக்கு மட்டும்தான். (விலை போகாத மொபைல்களுக்கு, கண்டிப்பா அதை வாங்க வேணாம்)

Beski said...

//பிரியமுடன்.........வசந்த் said...

//நெத்தியில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டியிருக்கானு தெரியல//

அது தெரியல.. ஆனா மருபடி மருபடி அதே கடைக்கு போனதால ... ஹி ஹி ஹி.... நீங்க அதேதான்!!!//

ரிப்பீட்........//

அதான் ஒத்துக்கிட்டேன்ல, ஆளாளுக்கு இப்படி ரிப்பீட்டுனா எப்படி? :)

jothi said...

ஏமாற்றுகிறான் என தெரிந்தும் மீண்டும் மீண்டும் அந்த கடைக்கு போவதன் காரணம் என்ன??

Beski said...

//jothi said...

ஏமாற்றுகிறான் என தெரிந்தும் மீண்டும் மீண்டும் அந்த கடைக்கு போவதன் காரணம் என்ன??//
அதான் சொன்னேனே நண்பா, எல்லாம் மூடநம்பிக்கை.

Unknown said...

மாப்பு,

உங்க பதிவுக்கு ஒரு ஆதரவுப் பதிவு ஒண்ணு சீக்கிரம் வெளியாகும்.

வெயிட் & சீ.. :)

Beski said...

//எழில். ரா said...
மாப்பு,

உங்க பதிவுக்கு ஒரு ஆதரவுப் பதிவு ஒண்ணு சீக்கிரம் வெளியாகும்.//

ஓக்கே மச்சான்... ஒன்னுதானா இருக்கு?

கிரி said...

//வந்து பேசிட்டோமே என நாகரிகம் கருதி, அரைமனதோடு, தெரிந்தே ஏமாந்து போகிறார்கள்?//

மறுக்க முடியாத உண்மை

மகா said...

unmaiyana pathivu punaiku mani kattuvathu yaro?

Beski said...

நன்றி கிரி.

நன்றி மகா.
(அவங்களா திருந்தினாத்தான் உண்டு)